Friday, March 07, 2014

பவன்கல்யாண் VS கல்யாண பவன்

1. கட்டிப்பிடிக்க மறுத்த காதலனை அடித்து உதைத்த அமெரிக்க பெண்"- செய்தி # ஏம்மா அவன் டாக்டரா? நர்சா? உனக்கு வந்த கட்டியை அவன் ஏன் பிடிக்கனும்?====================


2, பணத்துக்காக ஓட்டல்களில் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல!- நித்யா மேனன் # கல்யாண மண்டபம் னா ஓக்கே வா மேடம்?=====================


3,பாட்ஷா 2 எடுக்க எனக்கு ஆசை.. ஆனால் ரஜினிக்கு சந்தேகம்! - சுரேஷ் கிருணா # அமைதிப்படை 2 மாதிரி ஆகிட்டா? என்ன பண்ண?===================


4.நாடு முழுவதும் மோடி பேச்சாகத்தான் உள்ளது - வைகோ.! # ஏன் ? மத்த தலைவர்ங்க எல்லாம் பேசாம அமைதியா இருக்காங்களா?


===================


5,பாஜகவின் மெகா கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ரங்கசாமி, ஈஸ்வரன், பச்சமுத்து. # அம்மா வுக்கும் அய்யாவுக்கும் சொம்பு=================


6, விஜயகாந்திடம் அரசியல் நிலவரம் பேசினேன்: ஜி.கே.வாசன் # பின்னே ஜில்லா VS வீரம் பத்தியா பேசப்போறீங்க.என்னய்யா பேசுனீங்க? அதைச்சொல்லாம =====================7.BJP உுடன் ம.தி.மு.க. கூட்டணி: வைகோ # ரைட்டு .இனி தொண்டர்கள் அன்றலர்ந்த செந் தாமரை போன்ற முகத்துடன் பம்பரம் போல் சுழன்று வேலை செய்வாங்க
======================8.,2014ல் புதிய அவதாரம் எடுக்கப் போகிறேன்... கங்குலி சூசகப் பேச்சு .# நாசர் எடுத்த அவதாரமா? ஹாலிவுட் அவதாரா?
=====================9, 2014ன் முதல் சாதனை...மின்னல் வேக ஒரு நாள் சதம்.. நி்யூசி. வீரர் ஆண்டர்சன் அபாரம் # நியூ இயர் என்பதால் மேட்சுக்கு மேட்சா நியூ சிலாந்து
=====================10, ரூபாய் நோட்டில் பேனாவில் எழுதினாலும் செல்லும், ஆனாலும் எழுதாதீங்க. ரிசர்வ் வங்கி # லவ் மேரேஜ் தப்பில்லை.ஆனா யாரும் லவ் பண்ணாதீங்க=====================11,டெல்லியில் மின்கட்டணம் 50% குறைப்பு # காங்கிரஸ் க்கு கதி கலங்கி இருக்குமே.ஆம் ஆத்மி யின் ஒவ்வொரு ஸ்டெப்பும் இடி விழுந்த மாதிரி=====================12,பாராளுமன்ற தேர்தல்: விஜயகாந்துடன், ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு #கூட்டணிக்கு ஓக்கே.ஆனா நான் தான் கேப்டன்.டன்?======================


13, பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா?: மத்திய மந்திரி திட்டவட்ட மறுப்பு# டைவர்ஸ் ஆர்டர் வரும் வரை வீட்டுக்கு வந்துட்டுதான் இருப்பேன்=================14,லாட்ஜில் அடைத்து வைத்து அடித்தார்கள். ராதா #,என்னம்மா புடக்காலி( கொல்லைப்புறம் ) க்குப்போற மாதிரி அடிக்கடி லாட்ஜ் போறீங்க?


====================


15.விஷால் உதட்டுடன் 'ரெட் ஹாட்' கூட்டணி வைத்த லட்சுமி மேனன்...! # தைரிய லட்சுமியை முத்த லட்சுமியா மாத்திட்டாங்க."
===================16,எடியூரப்பா வரவால் பாஜக முழு வலிமை பெறும்: மதுரையில் ஈஸ்வரப்பா பேட்டி: # மோடிக்கு அவர் ரொம்ப இடையூறப்பா====================


17,தேவயானி கைது பிரச்சினையில் மன்னிப்பு க்கே இடமில்லை: அமெரிக்கா திட்டவட்டம்..# ரமணா கேப்டன் மாதிரி பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு=========================


18  டெல்லியை கலக்கும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள்: ஆட்டோ ரயிலில் பயணம்்..# அம்மா ஓக்கேன்னா நம்மாளுங்க நடந்தே வந்து காவடி எடுத்துடமாட்டாங்க?====================19,பவன்கல்யாண் 3–வது திருமணம்: ரசிகர்கள் எதிர்ப்பு... # பேரை கல்யாண பவன் னு மாத்திக்குங்க.யாரும் எதிர்க்க மாட்டாங்க

====================


20 புத்தாண்டு ரூ.600 கோடிக்கு விற்பனை டாஸ்மாக் நிறுவனம் இலக்கு # அம்மா வின் ஆட்சியில் அய்யாவின் சாதனையை எல்லாம் முந்திக்கிட்டே வர்றாரே?==========================

0 comments: