Friday, March 14, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (14 3 .2014 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை1. ஆதியும் அந்தமும்' - சின்ன படங்களுக்கு திரை கிடைப்பதில்லை என்ற பொதுவான புகாருக்கு முற்றிலும் எதிர் மாறான கருத்தை சொல்கிறார் 'ஆதியும் அந்தமும்' படத்தின் கதாநாயகன் அஜய். சின்ன திரையில் மிக பிரபலமான கோலங்கள் ஆதி என்று அழைக்கப்படும் அஜய் 'ஆதியும் அந்தமும்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 


கௌஷிக் இயக்கத்தில் , எல்.வீ.கணேசன் இசை அமைப்பில், வாசன் ஒளிபதிவில், என் கே கிராப்ட் மற்றும் ஆர் எஸ் ஆர் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து திரையிட தயாராக உள்ளது.


திரை உலக பிரமுகர்களால் பெரிதும் பாராட்ட பட்ட இந்த முற்றிலும் மாறுபட்ட த்ரில்லெர் படத்துக்கு திரை அரங்கு உரிமையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை சொல்லி பூரிப்பு அடைகிறார் நாயகன் அஜய். எனக்கு கிடைத்த ஊக்கம் தரும் வார்த்தைகளும், திரை அரங்கு குறித்த உத்திரவாதமும் என்னை மிகவும் பெருமைக்குரியவன் ஆக்குகிறது.


திரை அரங்கு உரிமையாளர்கள் தான் முதல் ரசிகர்கள். அவர்களின் சினிமா குறித்த அனுபவம் என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் தேவை என்று கூறினார்.

ஈரோடு ஆனூர் , சீனிவாசாவில்  ரிலீஸ்
2  NON -STOP -  நான்-ஸ்டாப் 2014ம் ஆண்டு வெளியாகவுள்ள பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாட்டு அதிரடி திரைப்படம். ஜாமே காலெட்-செர்ரா இயக்கத்தில் லயம் நீசன், ஜூலியானா மூரே, நேட் பார்க்கர், மைக்கேல் டாக்கேரி, லினஸ் ரோச்சே, சிட்டி McNairy மற்றும் கோரே ஸ்டோல் நடித்திருக்கின்றார்கள்.

 
மறுமுகம் - எண்டர்டெய்ண்மெண்ட் அன் லிமிட்டெட் சார்பில், புதுமுகம் கமல் இயக்கி வரும் படம் மறுமுகம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இன்னொரு முகம் தான் மறுமுகம் படத்தின் கதை.

இன்றைய நாகரீக உலகில் அன்புக்கு ஏங்கும் பணக்கார இளைஞர்கள் நிறைய பேர் உண்டு. தன்னை யாராவது நேசிக்கமாட்டார்களா...? என ஒரு பணக்கார இளைஞன் ஏங்கும்போது, ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். ஆனால் அந்தப்பெண்ணோ, வாழ்க்கையில் முன்னுக்கு வரத்‌துடிக்கும் வேறு ஒரு பையனிடம் மனதை பறிகொடுக்கிறாள். உள்ளுக்குள்ளே காதலை வைத்துக் கொண்டு, அதை அடைவதற்காக காய் நகர்த்தும் உச்சக்கட்ட த்ரில்லரை சொல்கிறது ‘மறுமுகம்’.

இதில் பணக்கார பையனாக டேனியல் பாலாஜியும், அவருடன் இன்னொரு நாயகராக சிக்கு புக்கு அனுப்பும், நாயகியாக மும்பை இறக்குமதி ரன்யாவும் நடிக்கின்றனர். மலேசியாவில் வெளிவந்த 12-ஹவர்ஸ் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய கமல், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

திரைப்படக்கல்லூரி மாணவனான கனகராஜ் (மலேசிய தமிழ்படம் ‘12-ஹவர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே). ஒளிப்பதிவு செய்ய, அகஸ்தியா இசையமைக்கிறார். எண்டர்டெய்ண்மெண்ட் அன் லிமிட்டெட் சார்பில் சீனுவும், நிர்மலும் கவனிக்க, இணைந்து தயாரிக்கிறார் சங்கீதா ரெபெக்கா. சென்னை கடற்கரை மற்றும் அதன் சுற்று பகுதிகளிலும், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்தது .


ஈரோடு சண்டிகாவில்  ரிலீஸ் 


4 காதல் சொல்ல ஆசை -முருகா படத்தில் நடித்த அஷோக் நடித்திருக்கும் படம் ‘காதல் சொல்ல ஆசை’ இப்படத்திற்கு எஸ்.லேகா இசையமைத்திருக்காங்க. இவங்க ஏற்கனவே விஜய் நடித்த ஒரு படத்திற்கு இசையமைத்திருக்காங்க. இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். பார்க்கலாம் பாடல்கள் எப்படி வந்திருக்கு என.

01) என் உயிரே நீ.. – யாசின்
ஒரு கவிதையுடன் தொடங்கும் பாடல்… என் உயிரே என் ஸ்வாசமே… என மிக சாதாரண வார்த்தைகள்.பாடல் பீட் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் பாடலில் கேட்டது போல் இருக்கே மேடம்… யாசின் குரலும் விஜய் ஆண்டனி குரல் போல தான் இருக்கிறது. பாடலுக்கு நடுவே வரும் புல்லாங்குழல் இசை மாத்திரம் மயக்குகிறது.  குட் ஒன்.

02) என்ன மாயம்.. – சின்மயி
என்ன மாயம் செய்தாய்.. எனை பெண்ணன உணர வைத்தாய்… என காதல் வந்த ஒரு பெண் பாடும் பாடல்… இப்பாடலை பாடுவதற்கு சின்மயியை தெரிவு செய்ததற்கு முதல்ல ஒரு மினி பொக்கே!  பாடல் சின்மயி குரல் மேலாக இருக்க இசை கூட சேர்ந்துகொள்கிறது. நிச்சயம் ரேடியோ ஹிட். விஷுவல் நல்லா இருந்தா மியூஸிக் சானல்கள்லயும் ஹிட் ஆகும்.

03) மடை திறந்து.. – சுராஜ்
மடை திறந்தது நெஞ்சம்.. மனம் கெஞ்சும் மழை கொஞ்சும்…. என பாடல் தொடங்குகிறது. இசையும், சுராஜின் குரலும் ஓகே ரகம். ஹிட் மெலோடி!

04) ராமய்யா வஸ்தாவஸய்யா… – வேல் முருகன், செந்தில் தாஸ், எம்.கே.பாலாஜி
ராமய்யா வஸ்தாவய்யா.. அந்த பொண்ணு தெலுகாவய்யா… என கலகல வரிகளோடு தொடங்குகிறது பாடல். ஆனிய நம்பு ஆவனிய நம்பு தாவணிய நம்பாதே.., கோழிய நம்பு.. குருவிய நம்பு குமரிய நம்பாதே… என வரிகள் ஏகத்துக்கும் பொண்ணே வாணாம் என சொல்லுகிறது.  பாடல் பீட் பழைய ப்ளாக் அண்டு ஒயிட் காலத்தில் இருந்து உருவியதால் கவனம் ஈர்க்கிறது.

05) தமிழச்சி.. – அச்சு
காதலி எப்படி இருப்பான்னு என கற்பனையில் பாடும் ஒரு பாடல். (கேட்பதற்கு அப்படித்தான் இருக்கிறது) நீ எங்க இருக்க, எப்படி இருக்க.. எப்போ வருவ.. என வரிகள் சுமார் தான்… எந்த எந்த ஊரில் இருந்தால் எப்படி எப்படி இருப்பாள் என்பதோடு கடக்கிறது பாடல்… இடையில் வரும் ராப்பில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்.

06) காதல் சொல்ல ஆசை தீம் – எஸ்.லேகா, + இன்ஸ்ட்ருமெண்டல்.
பீல் குட் லவ் பி.ஜி.எம். குட்.

வித்தியாசமா பண்ணியிருக்கேன்…, எல்லாரும் பாராட்டுறாங்கன்னு எல்லா மேடையிலும் சொல்லுறாங்க லேகா. ஏன்னு தெரியல ஆடியோ வெளியீட்டு விழாவிலும், ஹல்லோ எஃப் எம் ஷோவிலும் இதையே சொன்னாங்க… ஒரு ஆல்பம் பெஸ்ட்டா வந்திருக்கு என கூட இருப்பவங்க சொல்லுவதால் அது பெஸ்ட் ஆல்பம் என ஆகிடாது. ரசிகர்கள் சொல்லனும். இது நிச்சயம் சூப்பர் ஹிட் ஆல்பம் என சொல்வதற்கில்லை. ஓகே ரகம். ஆனாலும் வாழ்த்துக்கள் லேகா.
காதல் சொல்ல ஆசை – ஜஸ்ட் பாஸ்.
ரேட்டிங் : 3.2/5


நன்றி - தமிழ்.காம்


ஈரோடு சீனிவாசாவில் ரிலீஸ் 

 
5 ஒரு மோதல் ஒரு காதல் -புதிய கதைக்களங்களுடன் வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் ரசிகர்களை பிரமிக்கசெய்து வருபவர்கள் புதிய இளம் இயக்குனர்கள் தான்! அந்த வரிசையில் விரைவில் சேர்ந்து கொள்ளவிருக்கிறார் கீர்த்திகுமார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே படமாக்க துணிந்துள்ளார்.

படத்தின் பெயர் 'ஒரு மோதல் ஒரு காதல்'. பஞ்சாபி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இவரின் திருமண வாழ்க்கைக்கு முன் இரண்டு பெண்கள் வருகிறார்கள். ஒருவருடன் காதலிலும் மற்றொருவருடன் மோதலிலும் முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியத்துடன் சொல்லியுள்ளேன் என்கிறார் இயக்குனர்.

புதிய இளைஞர்கள் பட்டாளத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு நகைச்சுவையாக, இளமை ததும்பும் இளைய தலைமுறையினருக்கே உள்ள குறும்புடன் கதை சொல்லியிருக்கிறாராம்! இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த 'ஒரு மோதல் ஒரு காதல்' இசை வெளியீட்டின்போது திரையிடபட்ட பாடல் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அத்துடன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

 Neighbors (2014) Poster

6 NEIBHORS -
A couple with a newborn baby face unexpected difficulties after they are forced to live next to a fraternity house.

 ஆயிரத்தில் ஒருவன் குறித்த அரசியல் சர்ச்சை
7 ஆயிரத்தில் ஒருவன்'  - அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் 1965 இல் வெளியாகிய 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை மறுவெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு அரசியல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், இந்தியாவில் இந்த ஏப்ரலில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ''மாதிரி நன்னடத்தை விதி மீறல்'' என கூறி அவற்றை அகற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை குறித்த செய்தியின் ஒலி வடிவம்

தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகிய இரு அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை கொண்ட இந்தச் சுவரொட்டிகள், திரைப்படங்களுக்கான விளம்பரம் தான் என்ற போதிலும், இவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சை குறித்து விமர்சகர் வாமனன்

ஆனால் இந்தத் திரைப்படத்தின் விளம்பரங்களை திரையரங்கு வளாகங்களுக்குள் அமைத்துக் கொள்ள முடியும் என்றும், திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப்படாது என்றும் அவர் அப்போது தெரிவித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பானர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து போராடும் இளைஞனின் கதையை கொண்டு 1965 இல் வெளியாகிய இந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், அப்போதே மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம். கருப்பு வெள்ளை திரைப்படமாக இல்லாமல் கலரில் உருவாகிய இந்த படத்திற்கு கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுதினார்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த இந்த படத்தை பந்துலு டைரக்ட் செய்தார்.
ஆழமான கருத்துக்களை கொண்ட பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. திரைப்படத்துக்காக அந்தக் காலக்கட்டத்தில் கப்பலில் அமைக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாக அப்போது விமர்சனங்கள் வெளியாயின. தற்போதும் இந்தத் திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட பிறகு இன்னமும் பிரமாண்டமாக காட்சியளிப்பதாக, இப்போது இப்படத்தை வெளியிடும் திரைப்பட விநியோகிஸ்தர் சொக்கலிங்கம் பிபிசியிடம் தெரிவித்தார்.


மக்களவை தேர்தலுக்கான மாதிரி நன்னடத்தை விதி மீறல் என கூறி இந்தப் படத்தின் விளம்பர சுவரொட்டிகள் அகற்றப்படுவது குறித்து விநியோகிஸ்தர் சொக்கலிங்கத்திடம் கேட்டதற்கு, அரசியல் நோக்கத்திற்காக இந்த திரைப்படத்தை வெளியிட முற்படவில்லை என்றும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே தற்போது இந்த வெளியீடு திட்டமிடப்பட்டதாகவும் கூறினார். விளம்பரம் இல்லாமல் திரைப்படத்தை வெற்றியடைய செய்வது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இந்த நடவடிக்கை தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்தில் இது தொடர்பான சர்ச்சைகள் அனைத்து தரப்பிலும் விவாதமாக தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அபிராமியில்  ரிலீஸ் 

நன்றி - பிபிசி  தமிழ் , மாலை மலர் , தினமலர் 1 comments:

'பரிவை' சே.குமார் said...

எது வெற்றி பெறுகிறது என்று பார்க்கலாம்.