Tuesday, March 25, 2014

உதட்டைக்கைவிடேல்

1. நேற்று = இமான் = கமான் கமான் . இன்று = இமான் = எமன் எமன் # இமான் வேற மாதிரி2 சிவா டூ அஜித் = சார்.ஆரம்பம் படத்துல ஜீன்ஸ் டி சர்ட் போட்ட கெட்டப் ல என்ன செஞ்சீங்களோ அதையே வேட்டி சட்டை போட்டு செய்யறீங்க # அதே நடை.


3   புத்தகக்கண்காட்சியில் புக் பேரை நோட் பண்ணிட்டு வந்து லைப்ரரியில் தேடி எடுத்து ஓசி யில் படிப்பவன் தான் தமிழன்4  இணையத்தில் இருக்கும் ஆள் தன் இணையை டைவர்ஸ் பண்ணிட்டாக்கூட இணைய பாஷைல பிளாக் பண்ணிட்டேம்பாங்ளோ?
5  ப்ரியா நீ! உன் கையால் எது சமைத்தாலும் அது எனக்கு தலப்பாக்கட்டு பிரியாணி
6  எப்போ நாம மோதிரம் மாத்திக்கலாம் னு காதலி கேட்டுட்டே இருந்தா அது கூட ஒரு வகைல ரிங் டோன் தான்
7  சம்சாரம் வாயால் "பின்னீட்டீங்க" என்ற பாராட்டுச்சொல் வாங்க ஒரே வழி அவர் கூந்தலைப்பின்னி விடுவதே ! # இது சவுரி உள்ள கவுரி க்குப்பொருந்தாது
8  இருப்பிடத்தால் உன்னை விட்டு விலகி ! எங்கிருந்தாலும் நீ தான் என் மனம் கவர்ந்த அழகி !
9  24 மணி நேரமும் எந்த வேலையும் செய்ய விடாமல் என் மனதை ஆக்ரமித்து வரும் உன் மேல ஆக்ரமிப்பு வழக்குத்தொடரலாம் என்றிருக்கிறேன்10 நீ கோபித்துக்கொண்டால் எனக்கு என்ன சவுகர்யம் என்றால் உன்னை சமாதானப்படுத்தும் சாக்கில் என்ன வேணா செய்ய முடிகிறது # ஜ்ஜூ ஜ்ஜு
11 பஸ் ல ஸ்டாப்பிங் பேரெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைங்கப்பா.என்னை மாதிரி கூச்ச சுபாவி எப்டி யார் கிட்டே விசாரிப்பான் ? # கேரளா12 திருவனந்தபுரம் ல இருந்து 25 கிமீ போனா நெடுமங்காடு.கோயிக்கல் பேலஸ்.இங்கே இருந்து 22 கிமீ போனா நெய்யார் டேம்13 8 மணி நேர முழுத்தூக்கத்துக்குப்பின் கிடைக்கும் புத்துணர்ச்சியை உன் ஒரு நொடிப்பார்வை தந்து விடுகிறது.என் புத்துணர்வு முகாம் தலைவி நீ!
14  ஒரு மரம் ஒரு உயிருக்கு சமம்னு கணக்கெடுத்துக்கிட்டா உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நாடு கேரளா தான் # எத்தனை!!!!
15   திருவனந்தபுரம் அருகே.3 கிமீ தொலைவில் பாளையம் எனும் ஊரில் கல்லூரிப்பாடப்புத்தகங்கள் ,ஆங்கில நாவல்கள் பாதி விலையில் கிடைக்குது # புதுசு போல்16   கார்த்தி ஹாட்ரிக் அடிப்பாரா? # அலெக்ஸ்பாண்டியன் ,ஆல் இன் ஆல் அழகுராஜா ,பிரியாணி - இவண் தமனா ரசிகர் மன்றம்17 யுவன் சங்கர் ராஜா - இது வரைக்கும் நான் இசை அமைச்சு ஒரு படம் கூட அட்டர் பிளாப் ஆனதில்லை .


 கார்த்தி - கண்ணா! பிரியாணி வரும் வரை காத்திரு18   நேற்று வரை மணி மேகலை .இன்று கூட்டணியைக்கலை
19  சாப்பாடு டைட்டிலில் வந்தால் படம் அடி # 1 சோறு 2 கல்யாண சமையல் சாதம் 3 பிரியாணி
20    விஜய் - லேட்டா வந்தாலும் என் படம் லேட்டஸ்ட்டா இருக்கும்.அஜித் - லேட்டஸ்ட்டா இருக்கறது முக்கியம் இல்லை.கிரேட்டஸ்ட் எது? னு பார்ப்போம்21  எவ்ளவ் பெரிய ஸ்டன்ட் மாஸ்டரா இருந்தாலும் அவன் பொண்ணுங்க கிட்டே மட்டும் சண்டை போடமாட்டான்
22   அன்பே! உன் இரு புருவங்களும் வான வில் # 7 கலர் கொடுத்திருக்கே பியூட்டி பார்லர் போய்.ராஸ்கல்23   டிசம்பர் ,ஜனவரி என இரு மாதங்களின் காலைப்பொழுதுகள் எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் ஜில் லா மார்னிங் தான்
24  விஜய் ரசிகரா இருக்கும் வக்கீல் சட்டப்புத்தகத்தை பிரிட்ஜ் ல தான் வைப்பார்.ஏன்னா அப்போ தான் அது ஜில்LAW
25   கோவில் பிரகாரத்தைச்சுற்றும்போது பக்தி மனத்தை வசீகரித்து விடுகிறது பிரசாதத்தின் நெய் மணம்
26   கடவுளை வசீகரிப்பதற்காக தங்களை அலங்கரித்து வரும் தேவதைகளைக்கோயிலில் பார்ப்பவர்கள் எல்லாம் கடவுள் ஆகின்றனர்
27   சனீஸ்வர பகவானை நீ சுற்றி வருகையில் என் மனதில் தோன்றிய வரி = ஒரு சனியே சனியைச்சுற்றுதே அடடே!28  லேடி ரேடி யோ ஜாக்கிகள் பெயர் எல்லாம் கடைசி ல ஆ னு தான் முடியுது #,உதா - தன்யா ,விமலா - இப்படிக்கு வெட்டி ஆராய்ச்சி வேட்டிஸ்வரன்


29 ஒவ்வொரு சின்ன வீட்டுக்குப்பின்னாலும் தாழ்ப்போடாத கொல்லைப்புறக்கதவு இருக்கும் # மேஸ்திரி யின் டைரியிலிருந்து


30  பொண்ணுங்க பேர் எல்லாம் A ,E ,I,O,U ல் தான் முடியும் - விதியைத்தகர்த்தெறிந்த தாரகைகள் = சிம்ரன், காஜல் அகர்வால் ,ரீமா கல்லிங்கல் , ஆண்டாள்31   விஜய் - கூகுள் ல என்னைத்தான் அதிகமா தேடி இருக்காங்க.எப்பூடி?அஜித் - அது இருக்கட்டும்.நீங்க ஏன் ஒளிஞ்சுக்கிட்டீங்க?32  நீ வள்ளல் பரம்பரை என நான் உனை வாயாரா வாழ்த்த முத்தத்தை வாரி வழங்கிடுக.காலை வாரி விடாதே! உதட்டைக்கைவிடேல்

0 comments: