Wednesday, March 12, 2014

கேப்டனைப்பழி வாங்கும் நடவடிக்கையை அரசு எடுத்தது தப்பு

1. அதிமுக.வில் இணைந்தார் பண்ருட்டி # இன்று முதல் நீவிர் கவரி மான் ருட்டி என அழைக்கப்படுவீராக!
=============2 நளினி மகள் அரித்ரா சென்னை வருகிறார்.. தாய், தந்தையை சந்திக்கத் திட்டம் # சத்தம் இல்லாம வந்துட்டு போறது நல்லது=====================3  7 பேரை விடுதலை செய்வது நீதித்துறையின் அனைத்து மாண்புகளுக்கும் மாறானது-PM # சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு சொல்லிட்டா PM கூட எதிர்க்கக்கூடாது======================4 7 பேர் விடுதலை: பா.ஜ.க. மேலிடம் எதிர்ப்பு, தமிழக பா.ஜ. ஆதரவு!#,எதுக்கு இந்த டபுள் கேம்? ஓட்டு வாங்கவா?=================5  பேரறிவாளன் உள்பட 3 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தடை! # தடங்கல் பண்றதுக்குன்னே தயார் நிலையில் இருப்பாங்க போல=====================


6  டுவிட்டரில் நடிகைகளின் ஆபாசங்கள் - சர்ச்சையில் சிக்கும் பிரபலம்..! # நம்ம கண்ணுக்கு சிக்கலையே?===================7  மோடி பிரதமர் ஆகக்கூடாது - தம்பி துரை அதிமுக MP# அண்ணா துரை சொன்னதையே தமிழன் கேட்கலை.ஆப்டர் ஆல் இந்த் தம்பிதுரை சொல்லியா கேட்கப்போறாங்க?================


8   குடி போதையில் வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து – அரசு உத்தரவு # கேப்டனைப்பழி வாங்கும் நடவடிக்கையை அரசு எடுத்தது தப்பு=================
9  ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி # கார்த்தி யின் கீர்த்தி உலகம் பூரா பரவப்போகுது . என் பேரு பாண்டியன், அLUCKS பாண்டியன்====================10 நான் தனித்து தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிக்க மாட்டேன்: -ஒ பி எஸ் # அப்படி வேற ஒரு நப்பாசை அண்ணனுக்கு உள்ளுக்குள்ளே இருக்குபோல?


====================


11   முருகதாஸ்-விஜய் படத் தலைப்பு வாள் இல்லை தீரன் # என்னைக்கேட்டா தீ”ரன்” பெஸ்ட் சாய்ஸ் , நல்லா ஓடும் , செண்டிமெண்ட்டா விஜய், தீரன் =3
===================


12  கேட்காமலே கொடுத்த பதவியை கேட்காமலே எடுத்துக்கொண்டனர்: அழகிரி வேதனை # கொடுத்தவரே எடுத்துக்கொண்டாரடி மானே வளர்த்தவரே தூக்கி எறிஞ்சாரடி=======================13  அம்மா உணவகத்தை அடுத்து வருகிறது 'அம்மா தியேட்டர்ஸ்' # அய்யய்யோ, அப்போ ஒரு பயலும் உக்காந்து சினிமா பாக்க முடியாதே, 2 மணி நேரம் நின்னுட்டே==================14 7 தமிழர் விடுதலை: ஜெ. முடிவுக்கு ராகுல் கடும் எதிர்ப்பு # தண்ணியைக்குடி தண்ணியைக்குடி , ரா கூல் ( cool)


=====================


15   மோடி கூட்டங்களுக்கு சேவை வரி: -பா.ஜ., கடும் கண்டனம் # விட்டா காங்கிரஸ் அரசு இனி டீக்கடைகளுக்குக்கூட தடை விதிக்கும் பாருங்க=====================


16   "ஹன்ஷிகா உடனான என் காதல் முடிவை காலம்தான் தீர்மானிக்கும்-சிம்பு # ஒவ்வொரு படத்துலயும் கமல் கெட்டப்பை மாத்தற மாதிரி சிம்பு லைஃப்ல ஜோடியை======================17  இளைஞர்கள், நாவலை படமாக்க முன் வரவேண்டும்-கமல் # பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இளைஞரா இருந்தப்போ படமாக்க முயற்சி செஞ்சாரு.முடியல====================18   கெஜ்ரிவாலை ஆதரிக்கவும் மாட்டேன், எதிர்க்கவும் மாட்டேன் : ஹசாரே பேட்டி # இதுக்கு நீங்க வாயைத்திறக்க மாட்டேன் அப்டின்னே சொல்லி இருக்கலாம்
====================19  சினேகாவின் காதலர்களை சினேகாவுக்கு காட்டுவேன்-: இயக்குனர் முத்துராமலிங்கன் # அவங்க 4 பேரும் வெவ்வேற ஊராச்சே? எப்டி ஒருங்கிணைப்பீங்க?
=================


20 சிவகார்த்திகேயனின் ஆசானாக மாறிய தனுஷ்! # ரைட்டு , அது இது எது எல்லாம் சைக்கோ மயம் தான்===================

0 comments: