Saturday, March 01, 2014

காஞ்சிபுரம் இஞ்சினியர் உமா மகேஸ்வரியை கொலை செய்த கொலையாளி வாக்குமூலம்

பெண் இன்ஜினீயரை 3 முறை கத்தியால் குத்தினேன்': கொல்கத்தாவில் கைதான உஜ்ஜல் மண்டல் வாக்குமூலம்

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட உஜ்ஜல் மண்டல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட உஜ்ஜல் மண்டல் தான்தான் பெண் இன்ஜினீயரை 3 முறை கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.



காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கடந்த 13-ம் தேதி கொலை செய்யப்பட்டார். சிப்காட் வளாகத்துக்குள்ளேயே அவரது உடல் 22-ம் தேதி மீட்கப்பட்டது. அவரைக் கொலை செய்ததாக மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் உள்ளனர்.


கொலையாளிகளில் ஒருவரான உஜ்ஜல் மண்டல் கொல்கத்தா தப்பிச் சென்றார். அவரை காவல் துறை அதிகாரிகள் விமானத்தில் கொல்கத்தா சென்று 26-ம் தேதி கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலையில் உஜ்ஜல் மண்டலை ஆஜர்படுத்தினர். அவரிடம் 6 நாள் போலீஸ் விசாரணை நடத்த நீதிபதி சிட்டிபாபு உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ள மூன்று பேரின் போலீஸ் காவலும் மார்ச் 4-ம் தேதி முடிகிறது.


இந்நிலையில் உஜ்ஜல் மண்டல் அளித்த வாக்குமூலத்தில் உமா மகேஸ்வரி தன் மீது எச்சில் துப்பியதால் ஆத்திரமடைந்து தான்தான் 3 முறை அவரை கத்தியால் வயிற்றில் குத்தியதாகவும், அப்படியும் அவர் இறக்காததால் கழுத்தில் குத்தியதாகவும் கூறியதாக தெரியவந்துள்ளது. கொலை செய்ய அவர் பயன்படுத்திய கத்தியை போலீஸார் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளனர்.


உமா மகேஸ்வரி கொலையைத் தொடர்ந்து சிப்காட் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களின் கைரேகைகளை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களின் முழு விவரங்களையும் காவல் நிலையத்தில் வந்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தொடர்புடைய இந்திரஜித் மண்டல் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வைத்துள்ளனர்.




  •  Narayanan  from Dubai
    ஐடி கம்பெனிகளில் மனித உறவு எப்போதும் இருப்பதாக தெரியவில்லை.அவர்களுக்கு லாபம்தான் முக்கியம். தங்கள் கம்பெனிக்கு வேலை செய்வோர்கள் எல்லாம் நிரந்தரமற்ற பணியாளர்கள். நிச்சயம் தொழிற் சங்கங்கள் வேண்டும்.இவர்கள் அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு சலுகை பெறுகிறார் கள் அதில் பத்தில்ஒரு பங்கு தங்கள் ஊழியர்கள் நலத்திற்கு செலவிட்டாலே மனித உறவுகள் ஏற்படும்.அலட்சிய போக்கே காரணம்.

    a day ago ·   (8) ·   (0) ·  reply (0)


    •  jegadeesanAB Balu at Agrie from Erode
      மானமிக்க அந்த இளம் பெண் பொறியாளர் ஆத்மா சாந்தி பெறட்டும். போன உயிர் போனது தானே? இப்படிப்பட்ட கொடூரப்பெர்வழிகள் செயல்களைப் பார்க்கும் பொது தூக்குத்தண்டனைப் பிரிவு அவசியமானது என எண்ணத்தோன்றுகிறது. மற்ற குற்றவாளிகளுடன் மத்திய சிறைகளில் அடைக்கக்கூடாது. 24 மணி நேரமும் பூட்டிய அறைக்குள் அடைத்து வைக்கும் வகையில் தண்டனை அவசியம்.

      about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)


      •  ramesh  

        வட மாநில தொழிலாளர்களின் கணக்கற்ற வருகையும் ,அவர்களை பற்றிய முறையான பதிவுகளற்ற நிலைமையும் நம்மை இத்தகைய நிலைமைக்கு இட்டு சென்றுள்ளது ..வறுமையின் காரணமாக குடும்பத்தை ,உறவுகளை பிரிந்து வாழும் அவர்கள் கட்டுப்பாடற்ற நிலையில் மிருகங்களாக மாறியுள்ள நிலைமையின் வெளிப்பாடே இந்த சம்பவம் ..

        about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)


        •  muthamil  

          வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், இன்று வந்தவேரெல்லாம் நம் வாழ்கையை அளித்து கொண்டு இருக்கிறார்கள்., மானமுள்ள இத்தமிலச்சி, இக்கயவர்கள் உயிரோடு விட்டு சென்றிருந்தாலும், தன் உயிரை மாய்த்து கொண்டிருப்பாள்., எப்போது தான் திருந்துவார்கள் இப்படி பட்ட கயவர்கள், நாடு முழுவதும் தினமும் இப்படி பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அரசாங்கத்தால் 100% பாதுகாப்பு கொடுக்க இயலாது தான். ஆனால், 100% பயத்தை கடுமையான தண்டனையின் மூலமாக உருவாக்க முடியும் இப்படி பட்ட கயவர்கள் மத்தியில்... தயவு செய்து, இவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளித்து , இனி இப்படி பட்ட செயல்களை செய்ய அனைவரும் பயப்படும் படியான சூழலை உருவாக்க வேண்டும். மரண தண்டனை யை ஆதரிக்க கூடாது தான். ஆனால், இப்படி ஒரு கொடூர சம்பவத்தை செய்தவர்களை தண்டித்தே ஆக வேண்டும். அப்போது தான், இது போன்று பிற் காலத்தில் நடக்காமல் குறைந்தபட்சம் ஆவது தடுக்க முடியும்.

          about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)


          •  SAK  from Suri
            ஏன் "பெண் இன்ஜினீயர்", "பெண் பொறியாளர்" என்று அழைக்க வேண்டும்? இன்ஜினீயர் அல்லது பொறியாளர் என்றே சொல்லலாமே! மாறலாமே தி இந்து!
          thanx - the hindu

          0 comments: