Tuesday, March 04, 2014

நீ கிஸ் தர ரெடின்னா மீசையையே எடுத்துடறேன்

1 ஸார்.நீங்க பாடுன மெலோடி ல உங்க வாய்ஸ் ரொம்ப மெல்லிசா இருக்கே?


அதான் மெLOWடி ஆச்சே?2  ஹிஸ்டரி மிஸ் ஹிலாரி - வரலாறு எக்ஸாம் ல எதுவுமே எழுதலையே ,ஏன்?மிஸ்டரி மாணவன் - சரித்திரம் படைப்பவர்களுக்கு அதை எழுத நேரமிருக்காது..!"
3   டியர்.குத்தாத மீசை வளர்த்து வந்தா உன்னை முத்தமிடுகிறேன்!"நீ கிஸ் தர ரெடின்னா மீசையையே எடுத்துடறேன் # நமக்கு முத்தம் தான் முக்கியம்4  பொண்ணு பார்க்க வரும்போது பொண்ணு டீச்சர்னு சொன்னீங்க.தாலி கட்ன பின்
சத்துணவு டீச்சர்னு பிளேட்டை திருப்பிப்போட்டா எப்டிங்க?
5  டியர்.நான் டீச்சர் ஆகிடுவேனோனு பயமா இருக்கு.பயப்படாதே.அதுக்கு நல்லா படிக்கனும்.டார்ச்சர் வேணா ஆகலாம்6  எதுக்காக எல்லா டிக்கெட்சையும் பிரிட்ஜில் வைக்கறீங்க?ஜில்லா டிக்கெட்ஸ் எல்லாம் ஜில் லா இருக்கட்டும்னுதான்7  டியர். ரம்மும் தம்மும் குளிரை விரட்டும் ஆகச்சிறந்த காரணிகள்...!!!"அப்டின்னா?


அதாவது நீ தரும் ஆயி"ரம்" முத்"தம்"8   படத்தோட பரொமோ சாங்கு கேட்டீங்களா? எப்டி இருக்கு?


சங்கு தான்
1. ஒரு மரம் ஒரு உயிருக்கு சமம்னு கணக்கெடுத்துக்கிட்டா உலகிலேயே அதிக
மக்கள் தொகை உள்ள நாடு கேரளா தான் # எத்தனை!!!!2  8 மணி நேர முழுத்தூக்கத்துக்குப்பின் கிடைக்கும் புத்துணர்ச்சியை உன்
ஒரு நொடிப்பார்வை தந்து விடுகிறது.என் புத்துணர்வு முகாம் தலைவி நீ!3  திருவனந்தபுரம் ல இருந்து 25 கிமீ போனா நெடுமங்காடு.கோயிக்கல்
பேலஸ்.இங்கே இருந்து 22 கிமீ போனா நெய்யார் டேம்4  பஸ் ல ஸ்டாப்பிங் பேரெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைங்கப்பா.என்னை
மாதிரி கூச்ச சுபாவி எப்டி யார் கிட்டே விசாரிப்பான் ? # கேரளா5  தமிழ் சினிமா வின் "நடப்பு சாம்பியன்' அஜித் தான்6   நீ கோபித்துக்கொண்டால் எனக்கு என்ன சவுகர்யம் என்றால் உன்னை
சமாதானப்படுத்தும் சாக்கில் என்ன வேணா செய்ய முடிகிறது # ஜ்ஜூ ஜ்ஜு7  24 மணி நேரமும் எந்த வேலையும் செய்ய விடாமல் என் மனதை ஆக்ரமித்து
வரும் உன் மேல ஆக்ரமிப்பு வழக்குத்தொடரலாம் என்றிருக்கிறேன்8  இருப்பிடத்தால் உன்னை விட்டு விலகி ! எங்கிருந்தாலும் நீ தான் என்
மனம் கவர்ந்த அழகி !9  சம்சாரம் வாயால் "பின்னீட்டீங்க" என்ற பாராட்டுச்சொல் வாங்க ஒரே வழி
அவர் கூந்தலைப்பின்னி விடுவதே ! # இது சவுரி உள்ள கவுரி க்குப்பொருந்தாது10  ஏற்ற இறக்கமான எல்லா இடங்களும் முத்தம் தர ஏற்ற இடங்களே !11  எப்போ நாம மோதிரம் மாத்திக்கலாம் னு காதலி கேட்டுட்டே இருந்தா அது
கூட ஒரு வகைல ரிங் டோன் தான்12  ப்ரியா நீ! உன் கையால் எது சமைத்தாலும் அது எனக்கு தலப்பாக்கட்டு பிரியாணி13  அன்பே! காதலிக்கும்போது மான் போல இருந்தாய்! இப்போ இமான் போல் ஆகி
விட்டாய்! எந்த ஜில்லா விலும் உன் போல் குண்டு யாரும் இல்லை14 இணையத்தில் இருக்கும் ஆள் தன் இணையை டைவர்ஸ் பண்ணிட்டாக்கூட இணைய
பாஷைல பிளாக் பண்ணிட்டேம்பாங்ளோ?15  ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ,ஓ எல்லாம் நடக்கும். கல்லா
கட்டும்படி வெற்றி கிடைக்கும்16   புத்தகக்கண்காட்சியில் புக் பேரை நோட் பண்ணிட்டு வந்து லைப்ரரியில்
தேடி எடுத்து ஓசி யில் படிப்பவன் தான் தமிழன்17   சிவா டூ அஜித் = சார்.ஆரம்பம் படத்துல ஜீன்ஸ் டி சர்ட் போட்ட
கெட்டப் ல என்ன செஞ்சீங்களோ அதையே வேட்டி சட்டை போட்டு செய்யறீங்க # அதே
நடை.
18   நேற்று = இமான் = கமான் கமான் . இன்று = இமான் = எமன் எமன் # இமான் வேற மாதிரி19   ஹோட்டல்ல ஒரு ஆண்ட்டி 10 நிமிசமா கை கழுவிட்டு இருக்கு.10 பாத்திரம்
தேய்க்கக்கூட இவ்ளவ் நேரம் ஆகாது

0 comments: