Monday, March 17, 2014

மறுமுகம் - சினிமா விமர்சனம்


நாயகன் களிமண் சிற்பக்கலைஞன். அவரு குடும்பப்பாங்கான பொண்ணை கல்யாணம் பண்ண தேடிட்டு இருக்காரு . ( பின்னே மத்தவங்க மட்டும் ஓடிப்போன பொண்ணையா தேடுவாங்க ? ) ??!!) ஒரு  பொண்ணு  சிக்குது. பொண்ணோட அப்பா ஒரு   இடத்தை விற்கறாரு. அந்த இடத்தை நம்மாளு தான் வாங்கறாரு. ஏதோ  ஒரு பார்ட்டில பொண்ணுக்கே தெரியாம பொண்ணு பார்க்கும் படலம் நடக்குது . ஹீரோவுக்குப்பொண்னு ஓக்கே 


 ஆனா  நாயகிக்கு ஆல்ரெடி ஒரு லவ்வர் இருக்கான்.  அவன் எப்போப்பாரு வேலை வேலைன்னு அதுல சின்சியரா இருக்கான். இது இந்தக்காலப்பொண்ணுங்களுக்குப்பிடிக்குமா? கருத்து வேற்றுமை வருது . ஆனாலும்  காதலன் கூடவே  ஓடிப்போலாம்னு பிளான் போடுது . லெட்டர் எல்லாம் எழுதி வெச்சுடுது . 

ஆனா ஹீரோ தன் வீட்டுக்குக்கூட்டிட்டுப்போய்டறாரு. பழி  காதலன் மேல . படத்தோட  ஓப்பனிங்க்லயே இயக்குநர் சொன்ன மேட்டரை இப்போ நான் ஓப்பன் பண்றேன். ஹீரோ ஒரு சைக்கோ . களி மண் சிற்பக்கலைஞன்னு சொன்னேனே  . அதுல எப்டின்னா பொண்ணுங்களைக்கொலை பண்ணி அந்த டெட் பாடில களிமண் பூசி அதை சிற்பமா காட்டிக்குவாரு . 

 ஹீரோயின் கதி என்ன? 2 நாள் அவன் கூட தங்கி இருந்தப்ப ஹீரோ ஏதாவது செஞ்சாரா> காதலன் நாயகியைக்காப்பாத்தினாரா ? என்பது மிச்ச மீதிக்கதை . 


திரைப்படக்கல்லூரி மாணவர்கள் படம் இது . ஏதோ ஹாலிவுட் படத்துல இருந்து சுட்டிருக்காங்க . லோ பட்ஜெட் என்பதாலும் ஆர்ட் டைரக்சன் வீக் என்பதாலும் காட்சி அமைப்பில் எதிர்பார்த்த அளவு பர்ஃபெக்சன் , பிரம்மாண்டம் கிடைக்கலை 


  வேட்டையாடு விளையாடு ல ஆனானப்பட்ட கமலையே மிரட்டிய வில்லன் டேனியல் பாலாஜி தான்  ஹீரோ . ஆள் வழக்கம் போல் மிரட்டலான நடிப்புதான் . ஆனா அவர் ரஜினி ஹேர் ஸ்டைலை ஒதுக்குவதைக்காப்பி அடிப்பது , 2 காதுல யும் பொண்ணுங்க மாதிரி கம்மல் போட்டுக்கறதுன்னு செம  எரிச்சல் . டூயட் காட்சியில்  சுமார் . வில்லனிச ஆக்டிங்க் பக்கா . இவரது கேரக்டரைசேசன் சரியா வடிவமைக்கப்ப்டலை . அது  இவர் தவறல்ல 


நாயகி பிரீத்தி தாஸ் . சப்போட்டாப்பழம் போல் எல்லோருக்கும் பிடித்திடாத ஆனால் அழகான வட்ட முக வடிவமைப்பு . இவரது  உதடுகள் இவருக்குப்பிளஸ். பயப்படும் காட்சிகளில்  மேக்கப் அதிகம் இருப்பதால் அவரது பய உனர்வை  ஒப்பனை விழுங்கிக்கொள்கிறது 


காதலனாக வரும் அனூப்  சுமார் நடிப்பு . இன்ஸ்பெக்டர்ஆக  வருபவர் டிராமா ஆர்ட்டிஸ்ட் போல்  செயற்கை தட்டும் நடிப்பு 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 

1. சிகப்பு ரோஜாக்கள் பாணியில் ஒரு சைக்கோ க்ரைம் த்ரில்லர் தர முயன்று 50% வெற்றி பெற்றது 


2  தமிழ்  சினிமாவுக்குப்புதிய சூழலான களிமண் சிற்பம் , அதில்  கொலையான பிணங்கள் என காட்சிகளை அமைத்தது 


3  பின் பாதி  பங்களாவில் நடக்கும் திகில் காட்சிகள் 


4  எடிட்டிங்க் , பிஜிஎம்  ஓக்கே ரகம் 

5 நாயகியின் அப்பாவா வரும் பானுச்சந்தர் நடிப்பு யதார்த்தம் 


இயக்குநரிடம்  சில கேள்விகள் 


1. ஹீரோ  யாரோ ஒரு ஃபிகரை தள்ளிட்டு  வர்றார். அவர் பங்களாவில் வெச்சு கொலை செய்யும்போது உஷ் சத்தம் போடாதே என மிரட்றார். ஆனா டப்பிங்க் ல வாய்சே வர்லை .அந்தப்பொண்னு பாட்டுக்கு  நீ என்ன வேணா என்னைப்பண்ணிக்கோ என்பது போல் அமைதியா  இருக்கு 


2 ஹீரோயின்  ஓடிப்போறேன் நு லெட்டர் எழுதி வெச்சுட்டு நேரா காதலன்  வீட்டுக்குப்போகாம ஏன் ஹீரோ கிட்டே வந்து மாட்டிக்குதுன்னு வசனத்திலோ , காட்சியிலோ சொல்லவே இல்லை . எடிட்டிங்க் கட்டா? 


3 நாயகியிடம்  செல் ஃபோனை வாங்கிக்கும்  ஹீரோ பேட்டரி வீக் சார்ஜ் போடறேன்னு சொல்றார். ஆனா 2 நாள் வ்ரை  நாயகி அவர் ஃபோனைப்பற்ரிக்கேட்கவே இல்லை . அப்பாவுக்கு ஃபோனும் பண்ணலை 


4 ஹீரோ  நாயகியோட செல் ஃபோன் ல காதலன் ஃபோன் நெம்பரை மிஸ்டர் லேட் நு நாயகி பதிவு பண்ணிய பேரை டாடி எனவும் டாடினு பதிவு பண்ணிய ஃபோன் நெம்பரை காதலன் ( மிஸ்டர் லேட்) நும் மாத்தறார். நாயகி   ஃபோன்  பண்ணும்போது மாறுது . ஓக்கே . டிஸ்ப்ளே ல நெம்பர் வருமே , ஏன் பாக்கலை. ஒரு டைம்னா மிஸ் ஆகும். ஒவ்வொரு டைமுமா ? 


5 காதலன்  ஒரு சீன் ல ஐ ஆம் ஆன் த  வே . இப்போ டிராஃபிக் ல இருக்கேன்கறார். ஆனா வீட்டுக்கு வரவே இல்லை என்ன ரீசன்னு சொல்லவே இல்லை 


6 காதலர்  ஒரு சீன் ல ஆஃபீஸ் ல ஒர்க் பண்ணிட்டு இருக்கும்போது ஹால் ல அவர் ஒருவர் மட்டும் தான் . அவ்ளவ் லோ ப\ட்ஜெட் படமா? 


7 நாயகியோட அம்மாவோட தங்கச்சி ஹீரோவுக்கு  ரூட் விடுவதும்  ஹீரோ அவரைக்கண்டுக்காததும் இந்தக்கதைக்கு எந்த வகைல உதவுது ? சீனும்  இல்லை .வேஸ்ட் 


8 நாயகியின் காதல் சரியா , திடமா இல்லை . காதலன்  கூட இருக்கும்போது அவன் சார்பாவும் . நாயகன்  கூட இருக்கும்போது  டைலம்மா வாவும்  இருக்கா. இதுக்குப்பேரு லவ் இல்லை 

9 நாயகன் ஃபிளாஸ் பேக் சொல்லும் போது அவனவன்  மிரண்டிருக்கனும் , பி ஜிஎம் நூறாவது நாள் ல இளையராஜா போட்டுக்கலக்குனா மாதிரி கலக்கி இருக்கனும். ஏனோ தானோனு இருக்கு 


10 . அந்த பங்களாவை  யாருமே கண்டுக்கலை . அத்தனை டெட் பாடி  பல மாதமா  இருக்கு என்பதும்  கூடைப்பூச்சுற்றல் 

நச் வசனம் 


1.  எல்லாக்கலைஞர்களும் நாடோடிகள்  தான் 


2  எல்லா டென்சனையும்  எல்லாரும் காதல் ல தான்  தொலைக்கறாங்க . காதலி கிட்டே தான்  கோபத்தைக்காட்டறாங்க 


3 நாம எடுக்கும்  முடிவு தப்பா இருந்தா அதை மாத்திக்குவது தப்பே  இல்லை 

 சி பி கமெண்ட் - மறுமுகம் - ஹாலிவுட் பட உல்டா ?- திரைக்கதை சொதப்பல்கள் ஏராளம் - நாயகி ,பிஜிஎம் 2 ம் ஓக்கே -


எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் =36 

குமுதம் ரேங்க் - சுமார் 

,ரேட்டிங் = 2 / 5

திரைப்படக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் டேனியல் பாலாஜி ந்டிக்கும் சைக்கோ த்ரில்லர் மூவி - மறுமுகம்.வாட்சிங் @ பட்டுக்கோட்டை அய்யா தியேட்டர்


0 comments: