Saturday, March 29, 2014

இனம் - சினிமா விமர்சனம்

 

மனித இனம் மண்ணில் வாழும்  வரை குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகும் அளவு பல கொடுமைகளைவாழ்நாளில் சந்தித்தது  ஈழத்தமிழ் இனம், அந்த இனத்தின் வலியைப்பதிவாக்கிய சந்தோஷ் சிவன்  -ன் பதிவு முழுமை அடைந்ததா? என்பதைப்பார்ப்போம். 


ஒரு  ஈழப்பெண்ணின் வாழ்க்கையைச்சொல்ல வந்தால் ஒட்டு மொத்த ஈழ மக்களின் சோகங்களை எல்லாம் பதிவாக்கி விடலாம் என மனக்கணக்கு போட்டு விட்டார் இயக்குநர். 


பொதுவாக நாம் எண்ணும் எண்ணம் நல்லதாக இருந்தாலும் அதை சொல்லும் முறை சரியாக இருந்தால் தான் வெற்றி பெறும் . பாதை மாறிய பயணம் ஆபத்துதான். 

நாயகி ஒரு ஈழப்பெண்.ஒரு வீரனைக்காதலிக்கிறாள். அவன் போருக்காக அவளைப்பிரிந்து செல்கிறான்.தன் காதலனின் சகோதரனுடன் அவள் அவனை சந்திக்கப்பயணப்படுகிறாள் . வழியில் சிங்கள ராணுவத்தால் சீரழிக்கப்படுகிறாள்.அவ்வளவு தான் கதை . 


 


நாயகியாக நடித்த பெண் அச்சு அசல் ஈழப்பெண்ணைப்போன்றே முகச்சாயல் . அவரது  முக பாவனைகள் அபாரம். வலியைக்கூட பார்வையாளர் முன்னிலை யில் வலியுடன் பதிவு செய்யும் அபார நடிப்பாற்றல் . 


சுனாமி அக்காவாக வரும் சரிதா நிறைவான நடிப்பு . தமிழ்த்திரை உலகம் அதிகம் கவனிக்கத்தவறிய அற்புத நடிகை . 


கருணாஸ்  கூட ஒரு குணச்சித்திர கேரக்டரில் மிளிர்கிறார் . 


 காதலானாக வருபவர்க்கு வாய்ப்பு கம்மி. அவருக்கு சகோதரராக வருபவர்க்கு நல்ல வாய்ப்பு . மன நலம் குன்றியவராக நல்ல நடிப்பு 


 ஒளிப்பதிவு படத்தின் மாபெரும் பலம் . பின்னணி இசை கன கச்சிதம் . 


திரைக்கதையில்  தெளிவு இல்லை . சாமான்ய ஜனங்களுக்குப்புரியாது 

 சபாஷ் சந்தோஷ்


1. ஓப்பனிங் ஷாட்டில் நாயகி ரத்தம் வந்த தன் கட்டை விரலை தடம் பதிக்கையில் அந்த கட்டை விரல் ரேகைப்பதிவு  இலங்கை வரை படம் போல் ஆவது 

2 ஃபாரீன்  லேடி  மீன் தொட்டியைப்பரிசாக அளிக்கும் காட்சி 


3   சிங்களவர்கள் தமிழ்ப்பெண்களை செக் செய்யும் காட்சி கண்ணியமாகவும் , பதைபதைப்பை ஏற்படுத்துவது போலவும்  ஒருங்கே படமாக்கிய லாவகம்

 இயக்குநரிடம் சில கேள்விகள் 1. ஈழ மக்களி வலியும் , வேதனையும் பதிவு செய்ய வேண்டிய கதையில்  தேவை இல்லாமல் நாயகியின் காதல் வாழ்க்கையைப்பதிவு செய்வது ஏன் ? அது கதையின் போக்கையே மாற்றிடுதே ? 


2 அந்த மனநலம் குன்றிய கேரக்டர்  சும்மா ஆடியன்சிடம்  அனுதாபம் பெறவா? எடுபடவே இல்லை


3 சிங்கள ராணுவம் தமிழ்ப்பெண்களை மானபங்கப்படுத்தும் காட்சியில் அவர்கள் விடுதலைப்புலிகள் யூனிஃபார்மில் இருக்காங்க .பார்க்கும் வெளிநாட்டு ஆடியன்ஸ் குழம்பக்கூடும் 


4 தனி நபரின் கதையாகச்சொல்லாமல் ஒரு சமூகத்தின் வரலாற்றைப்பதிவு செய்திருக்க வேண்டும்

5  படுக்கையில் கிடையாக க்கிடக்கும்  நபரின்  காமம் சொல்லப்படுவது  இந்தக்கதைக்குத்தேவை இல்லாத ஒன்று 


மனம் கவர்ந்த  வசனங்கள் 


1, எங்கள் தலை எழுத்து கரியால் எழுதப்பட்ட கறுப்பு சரித்திரம் # இனம்2 எல்லா நாட்டிலும் தான் குண்டு செய்யறாங்க. ஆனா எல்லா குண்டும் இலங்கையில் தானே விழுது? :-( # இனம்3 குடும்பமே இல்லாத நாங்க எல்லாம் ஒண்ணா.சேர்ந்து ஒரே குடும்பமா இருக்கோம் # இனம்4 நான் வயித்தில் இருக்கும்போது அம்மா தற்கொலை செய்ய முயற்சி செஞ்சாங்க. அதுல அவங்க ஜெயிச்ட்டாங்க.நான் தோத்துட்டேன் # இனம்


விழிகள் திறந்த நிலையில் ஒருவர் இறந்தால் அவர் மீண்டும் பிறந்து வருவார் என்பது ஐதீகம்.பிரபாகரன் இறக்கும்போது விழிகள் திறந்தேஇருந்தன#இனம்


6 இன்னைக்கோ , நாளைக்கோ நாம சாகத்தான் போறோம், ஆனா நாம இந்த மண்ணில் வாழ்ந்ததை இந்த பூமிக்குப்பதிவு செய்ய வேண்டாமா? 


7  கனியன் என்னை தனியன் ஆக்கிட்டுப்போய்ட்டானே ! 


8 எங்க சோகத்துக்கு  மூல காரணம் தெரியலை . ஆனா மூலம் எதுனு தெரியுது


9 அன்பைக்கூட அதிகாரமா வெளிப்படுத்துவாள் அம்மா 10 இந்த உலகத்துல நாமும் எப்படியாவது வாழ்ந்திடலாம்னு தான் நாமும் முயற்சி பண்ணிட்டே இருக்கோம் 

 படம் பார்க்கும்போது போட்ட ட்வீடஸ்


1, தமிழ் ஈழப்பெண்ணின் கதையைச்சொல்லும் பார்வையில் ஈழ வரலாற்றை அதன்.வலியோடும் .உணர்வோடும் சொல்லும் சந்தோஷ் சிவன் ன் இனம்


2  45 நிமிடத்தில் இடைவேளை.எடிட்டிங்கில் கூர்மையா? சென்சார் கெடுபிடியா? முழுமை ஆகாத ஓவியம் ஆகி விடும் அபாயம் # இனம்3 ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஆகும்போது திரைக்கதையை கேமரா ஓவர் டேக் கும் அபாயம் #,விதிவிலக்கு = பாலுமகேந்திரா.,கேவி ஆனந்த்,ஜீவா


4  இலங்கை அரசை கண்டிக்கும் வசனம் ,காட்சி எதுவும் இல்லாதது ஏமாற்றமான பின்னடைவு # இனம்


 


சி பி கமெண்ட் - இனம் - ஈழத்தமிழரின் கடல் அளவு கண்ணீரின் ஒரு துளி - திரைக்கதையில் அழுத்தம் குறைவு - பெண்களும் பார்க்கலாம்


ரேட்டிங் 2.75 / 5 


ஆனந்த  விகடன் மார்க் =42


குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே


சென்னிமலை அண்ணமாரில் படம் பார்த்தேன். இந்தப்படம் வசூல்  ரீதியாக வெற்றி பெறாது


0 comments: