Monday, March 17, 2014

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் = ஜாக்கிசான் ??? !!

1. தூக்கு தண்டணை ரத்து ஏமாற்றமளிக்குறது! - ஞானதேசிகன் # இன்னும் 4 மாசம் பொறுங்க.இதை விடப்பெரிய அதிர்ச்சி ஏமாற்றம் காத்திருக்கு=================


2 திருப்பதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்! - ராமதாஸ் # ஒரே ஒரு லட்டுக்கு ஆசைப்பட்டா ஏகப்பட்ட வெட்டு காத்திருக்கு அய்யா===============3 சென்னை ரகசிய இடத்தில் பாஜக,தேமுதிக கூட்டணி பேச்சு! # அதான் தெரிஞ்சிடுச்சே.எப்டி அது ரகசியம் ஆகும்?================


4 7பேரை விடுதலை செய்தால் காங்கிரசார் தீவிரவாதிகளாக மாறுவார்கள்! - EVKS இளங்கோவன் # ரொம்ப சவுகரியம்.அவங்க வெளியே.நீங்க உள்ளே==================


5 மூவர் விடுதலையைக் கண்டித்து இளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம்! # காலை 9 டூ 1 மாலை 3 டூ 7?==================6 சூர்யாவுக்கு நான் அண்ணன்.. சித்தப்பா... இரட்டை ரோல்!- கமல் பேச்சு # சினிமால எப்படியோ ,மேடைல அவர் டபுள் கமல்=================


7
பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் # பரவால்ல.காங்கிரஸ்காரரா இருந்தும் நியாயமா பேசறாரு


====================


8 :மீண்டும் பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை- விரைவில் கூட்டணி அறிவிப்பு! # தெளிவாக விரைவாக முடிவெடுத்துட்டாரு கேப்டன்.சபாஷ்==================

9 இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்! - கருணாநிதி #தலைவர் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னார்==================

10 2004 முதல் 2014 வரை மத்திய அரசு இமாலய சாதனை படைத்துள்ளது - நாராயண சாமி # மலை அளவு ஊழல்?===================

11 அதெப்படி 7 பேரை விடுதலை செய்யலாம்: இது அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி # இவர் எதுக்கு புதுசா ஏழரையைக்கூட்றாரு?=====================

12 ஊழலுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..# ஊழல் ஆளுங்கட்சி செஞ்சுதா? எதிர்க்கட்சியா?=================


13 திருப்பதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்! - ராமதாஸ் # திருப்பதி ,திரும்லை 2ம் புவியியல் படி 1 தான்.ஆனா சினிமா படி எதிர் எதிர் துருவம்==================

14 இரண்டு வருடம் கழித்து எங்கள் ஆட்டம் தான்-அன்புமணி # ஓஹோ.மானாட மயிலாட வுல கலந்துக்கப்போறீங்களா?=============================


15 விஜயகாந்த்துடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்.அப்பவே அவர் ரொம்ப பிடிவாதம் பிடிப்பார்-ராதிகா.# ஆமா.26 படங்கள் ல ராதிகாதான் ஜோடியா வேணும்னார்======================


16 எம்.ஜி.ஆரும், சிவாஜியும் 5.7 உயரம்தான்! -சொல்கிறார் வி.சி.குகநாதன் # ஜாக்கிசான் அவங்களை விட கம்மி,அடைஞ்ச உயரத்தைப்பாருங்க


=====================
17 காங்கிரசை விட அதிக வளர்ச்சியை மோடியால் தர முடியாது : ப.சிதம்பரம் # தளர்ச்சி அடைஞ்ச கை யை வளர்ச்சினு பொய் சொல்லி புரட்சி பண்றார் போல
=====================18 பிரஸ்க்கு நான் உரிய மரியாதை கொடுப்பேன், #விஜயகாந்த் # மரியாதை குடுக்காட்டிப்பாரவாயில்லை.உதை குடுக்காம இருந்தா சரி்
=======================19 இந்துக்கள் ஒவ்வொருவரும் 5குழந்தைகள் பெறவேண்டும்! - அசோக்சிங்கால் # இந்து முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக!னு கோஷம் போடவா?===================20 ஹன்சிகாவுக்காக குரல் கொடுத்த ஸ்ருதி ஹாஸன் - செய்தி # சிம்பு வின் இந்நாள் தோழிக்கு தனுஷ் ன் முன்னாள் தோழி டப்பிங் வாய்ஸ் .இப்டி இருக்கனும்===========================

0 comments: