Sunday, March 16, 2014

M சசிகுமார் இயக்கத்தில் விஜய் -டைட்டில் பிரம்மன் என் நண்பன்

1. அம்மா பிறந்த நாளுக்காக மதுரையில் கபடிப் போட்டி.! # காலை வாரி விடும் விளையாட்டில் தமிழன் என்னைக்கும் சளைக்கவோ ,சலிக்கவோ மாட்டான்=====================2 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: ஏ.கே.அந்தோணி பேச்சு..#,ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறும் னு சொல்ல வந்தாரா?
====================3 பா.ஜ.க. கூட்டணியில் கொ.ம.தே.க. 4 இடங்களில் போட்டியிட முடிவு: ஈஸ்வரன் பேட்டி.# கொப்பரைத்தேங்காயில் மட்டையத்தேடுபவர் கழகம் = கொ ம தே க?
==================4 ராஜீவ் கொலையாளிகள் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முன்னுக்குபின் முரணாக உள்ளது: நாராயணசாமி.#15 நாளில் புதுத்தீர்ப்பு வருதாம்================


5 திறமையான மேடைப்பேச்சாளர்கள் இருந்தும் குஷ்பு பேச்சை தி.மு.க.வினர் கைதட்டி ரசிக்கலாமா?: சிங்கமுத்து தாக்கு.# பேச்சை ரசிச்சம்னு சொன்னோமா?======================6 பொருளாதார தன்னிறைவு பெற்ற பெண் கணவனிடம் ஜீவனாம்சம் கோர முடியாது: மும்பை ஐகோர்ட் அதிரடி தீ ர்ப்பு# தப்பிச்சாண்டா சேகரு.எஸ்கேப் ஏழுமலை========================7 கூட்டணி இழுபறி: பா.ஜனதா–காங்கிரசை அலைக்கழிக்கும் விஜயகாந்த்..# தெளிவான முடிவு சொல்லும் வரை நோ குவாட்டர் னா முடிஞ்சிடும் மேட்டர்=======================8 ரூ.6500 கோடி செலவிட்டும் கங்கையின் மாசு நீங்கவில்லையே: பாராளுமன்ற நிலைக்குழு கவலை..# பர்சனல் செலவு பண்ணிக்கிட்டாங்ளோ என்னவோ?======================9 பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்: அன்புமணி ராமதாஸ் # பூரணா ,மதுபாலா எல்லாருக்கும் ஆல்ரெடி மார்க்கெட் அவுட்

=======================
10 விஜயகாந்த் இன்று சிங்கப்பூர் பயணம்! # சிங்கை செல்லும் வேங்கையே! தங்கி விடாதே அங்கேயே!னு யாரும் கட் அவுட் வைக்கல?
======================11 ராகுல் "பால் பூத் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டது! # மக்கள் காங்கிரஸக்கு் ் பால் ஊத்திட்டம்
===================12 திருமாவளவன் இருக்கும் அணிக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது! - அன்புமணி # அபாண்டம்.அவர் குடும்பத்துல இருக்கறவங்க கூட ஓட்டு போட மாட்டாங்களா
=================
13 மனித வெடிகுண்டாக மாறுவோம்-ஈ.வி.கே.எஸ்# நாம எல்லாரும் மனுசனா மாறுனாலே நாடு சுபிட்சம் ஆகிடும்ணா
==============14  மதகஜராஜா மார்ச்-7 ரிலீசாம் # 7 3 2014 கூட்டுத்தொகை 8 வருது.அஷ்டமத்துல சனி்=================15 சுனந்தாவை இன்னமும் காதலிக்கிறேன் -சசிதரூர்# இன்னும் 6 மாசத்துக்குள்ள இன்னொரு சமந்தாவை பிடிக்கலைன்னா நம்பறோம்


=================16 விடுதலைப்புலிகள் அந்தமானில் பதுங்கி இருக்கலாம் -உள்துறைக்கு தகவல் # அடிச்சாச்சு லக்கி பிரைஸ் .கிளம்பியாச்சு அந்தமான் டூர்ஸ்==================17 சிறையில் தருண் தேஜ்பாலிடமிருந்து செல்போன்கள் பறிமுதல்..# அண்ணன் கிட்டே செல்போனும் சிங்குலர்ல இல்ல போல================


18 கம்ப்யூட்டர் நிறுவனங்களில் இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் உத்தரவு ு.# ம்க்கும்.ஆபத்தே இனி போலீசாலதான்=============


19 காங்கிரஸ் பல தோல்விகளை சந்தித்துள்ளது.வெற்றி,தோல்வியைப் பற்றி கவலைப்படவில்லை-ஞானதேசிகன் # திருட்டு சரக்கை விற்பவருக்கு வந்த வரை லாபம்=================


20 விரைவில் சசிகுமார் இயக்கத்தில் விஜய் # சபாஷ் , டைட்டில் பிரம்மன் என் நண்பன் ?=====================

0 comments: