Thursday, March 27, 2014

அபரிதமான வளர்ச்சி யில் என்னை பிரமிக்க வைத்தவர்கள் லிஸ்ட்.மியாவ்

1. பொதுவா ஆண்கள் தனக்குப்பிடிச்ச பொண்ணுக்கு அன்பனா இருக்க ஆசைப்படுவாங்க.அவளுக்குப்பிடிக்காம போச்சுன்னா அஞரின்பன் ஆவாங்க(Sadist =அஞரின்பன்)====================
சம்பந்தப்பட்ட பெண்ணே ரசிக்கும்படி கிண்டல் செய்தல் , அருகில் இருக்கும் தன்னைச்சேர்ந்த ஆண்கள் ரசிப்பதற்காக செய்தல் என கலாய்த்தல் இரு வகை

=====================
பெண் எழுத்தாளர்களின் நாவலில் வரும் ஆண் வர்ணிப்புகள் அவர்கள் கற்பனையில் ரசிக்கும் ஆதர்ச நாயகர்கள் பற்றியதாக இருக்கும், கணவனாக இருக்காது

======================
ஒரு புத்திசாலியின் பெண் கலாய்ப்புகள் மறைமுகமாக அவளைப்புகழ்வதாகவோ , சிலாகிப்பதாகவோ இருக்கும்\

=====================
5  பொண்ணுங்க  “ வெரி நைஸ்”-னு  உங்க  படைப்புக்கு கமெண்ட் சொன்னா “ அரைச்ச மாவையே அரைக்காதடா”ன்னு அர்த்தமாகவும் இருக்கலாம்

======================பயங்கரமான பங்க்சுவாலிட்டி, ரெகுலாரிட்டி பார்ப்பவன் தன் முதல் இரவில் கூட நைட் 9 மணிக்கே தூங்கிடுவானாம்
====================
இனி கேப்டன் ஸ்டெடியே இல்லைனாக்கூட “ மோடி ஸ்டெடியான ஆட்சி தருவார்”னு பிரச்சாரம் பண்ணுவார்

==========================
8  நெருக்கமான காதல் காட்சிகள் வரும்போது  சேனல் மாற்றுவதன் காரணம் தனிமையில்  இருக்கும்போது பார்க்க வேண்டியவை என்பதால் கூட இருக்கலாம்
========================
ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ ( தயவு செஞ்சு என்னை நம்பு ) எனும் வாக்கியமே காதலின் முதல் நம்பிக்கை இல்லாத்தீர்மானம்.சொல்லி வருவதில்லை நம்பிக்கை
======================
10  இன்கம்டாக்ஸ் என்றாலே காத தூரம் ஓடும் தமிழச்சிதான் நெயில் பாலீஷ் போடும்போது கூட ”வரி” டிசைன்ல நக அழகைக்கூட்டும் 
========================
11 ராத்திரி 11 மணி வரை  டி வி சீரியல் பார்த்துட்டு ஆஃபீஸ் டைம் ல மதியம் ஆனா தூக்கத்தைக்கட்டுப்படுத்தவே முடியலையே என அங்கலாய்ப்பாள் தமிழச்சி


=================================
12 ஆஃபீசில் பெண்கள் தூங்கி வழிகிறார்கள். ஆண்கள் தூங்காமல்........


==============================
13 சும்மா கேட்கனுமேன்னு ஏதாவது  ஒரு கேள்வியைக்கேட்டு மெனக்கெட்டு பதில் வந்ததும் அடடே, இதுக்கு நீங்க பதில் சொல்ல மாட்டீங்கனு நினைச்சேன்பான் தமிழன்
======================
14  நீ லேசாகப்புன்னகைத்தால் அது தூறல், வாய் விட்டுச்சிரித்தால் கொட்டும் மழை, வெட்கத்தில் கன்னம் சிவந்தால் வானவில் 

=======================
15  பார்த்தவுடன் மனதைக்கிறுகிறுக்க வைப்பவளும் கிறுக்கியே! 

========================
16 பழகப்பழக பாலும் புளிக்கும்னா அப்போ புளியம்பழம் இனிக்குமா? 

=====================
17 அன்பே! நீ ஒரு கன்னி மேரி.! வில் யூ மேரி மீ? 

=====================
18 அபரிதமான வளர்ச்சி யில் என்னை பிரமிக்க வைத்தவர்கள் 1 குஜராத் மக்கள் 2 மோடி 3 நமீதா==================


19 திருவிழாக்களில் நாதஸ்வரக்கச்சேரி நடந்தா காத தூரம் ஓடும் அதே தமிழன் தான் 1000,வது நாள் நாதஸ்வரம் சீரியல் பார்க்க டி வி முன் தவம் கிடக்கான்


================


20 நிஜத்தை தேடிட்டிருக்கேன்னு ஒரு பொண்ணு சொன்னா காதலன் பேரு நிஜாம் ஆகக்கூட இருக்கும்.செல்லமா நிஜம்


=====================

0 comments: