Monday, March 03, 2014

சாணக்கியர்கள் தோக்கறவங்களோட சேர மாட்டாங்க

1. பேஸ்புக் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது - இல.கணேசன் # ஆமாங்க்ணா.கண்ட கண்ட அரசியல் கட்சிங்க கூட FB வந்துடுது2  காங்கிரஸ், பாஜக 2 கூட்டணியும் வேண்டாம் - திமுக பொதுக்குழு முடிவு# ராஜ தந்திரி ஏதோ செக் வைக்கறாரு போல.எப்டியும் செக்மேட் அவருக்குத்தான்"


3 நயன்தாராவுடன் ஜோடிசேர துடிக்கும் சிவகார்த்திகேயன் -செய்தி # தனுஷ் உடைய நண்பர் சிம்பு வின் தோழிக்கு தோழர்


4 நான் ஒரு நேர்மையான அரசு ஊழியன் - சகாயம் ஐ.ஏ.எஸ். #,நேர்மையா இருக்கும் அரசின் ஊழியன் னு அர்த்தம் வருது.அரசின்் நேர்மையான ஊழியன் ok


5  படங்களின் தோல்வி என்னை பாதிக்காது : காஜல் அகர்வால்# யாரோ பணம் போட்டு எடுக்கறாங்க.நமக்கு என்ன போச்சு?6 இன்னும் 3மாதத்தில் மின்வெட்டு சரி செய்யப்படும்-நத்தம் விஸ்வநாதான்# அடுத்த லைன் நாங்க சொல்றோம்.மின் மிகை மாநிலம் ஆகும்.சரியா


7  ஹைதராபாத்தில் திருப்பதி கோவில் - தேவஸ்தானம் முடிவு # வெங்கடேசப்பெருமாளுக்கு டூயல் ரோல்?8  ஏற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிப்பு -செய்தி # இனி ஏற்காடு தீக்காடு?்9  மோடி பிரதமர் ஆவதற்கு கோத்ரா கலவரம் தடையாக இருக்காது : இன்போசிஸ் தலைவர் பேச்சு"# மத்தவங்க மறந்தாலும் இவர் நினைவுபடுத்திடுவார் போல
10  எந்த அணி என்று இப்போது கேட்காதீர்கள், அது பிணியாகி விடும்."-மு க # இப்பவே சொல்லிட்டா கட்சி தனி ஆகிடும்.அதானே தலைவா?11 பாலில் மிக மோசமான கலப்படம் செய்யபடுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு# மினரல் வாட்டர் கலக்காம கிணத்துத்தண்ணி கலந்துட்டாங்களா?..12  ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி முன் உதாரணமாக உள்ளது சீமான் பேட்டி:# பக்கத்து வீட்ல பாயாசம் வாசம் வந்தா நமக்கும் நாக்குலு நீர் ஊர்றது சகஜம்13  பெண்ணிடம் நகை பறித்த போலிஸ்: பொதுமக்கள் பிடித்து தர்மஅடி!: திண்டுக்கல்:லில் # இதுதாண்டா போலி ஸ்.


14 காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்டம்: # அரசியல் கூட்டணி வாழ்க்கை ஒரு வட்டம்.சுத்திச்சுத்தி அங்கேயே தான் வந்தாகனும்15  கங்குலியை வளைக்க காங்., - கம்யூ., தீவிரம்:  #  வளைச்சுப்போட அவர் ரியல் எஸ்டேட்டா? பொறம்போக்கு நிலமா? எவ்ளவ் கூலி கொடுப்பாங்களோ கங்கூலி16  பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து  # நமக்கு இருந்த ஒரே ஒரு பேரு , ரேஷன் கார்டில் பேருக்காவது தலைவர் அந்தஸ்து, அதுவும் போச்சா
=


17 தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 19,600 வழக்குகள் தேக்கம்  #  கூட்டுத்தொகை 7 வருது , லேடீஸ்க்கு ஏழரை தான்18 பள்ளிகளில் கம்ப்யூட்டர் இருக்குது! மின்சாரம் இல்லே!  - செய்தி # எஸ் ஜே  சூர்யாவின் “ இருக்கு , ஆனா இல்லை “ வசனம் ஜெ ஆட்சிக்கு பொருத்தம்19  காங்கிரஸுடன் மீண்டும் சேராதது ஏன்?- கருணாநிதி விளக்க்ம் #  சுருக்கமா சொல்லனும்னா  சாணக்கியர்கள் தோக்கறவங்களோட சேர மாட்டாங்க20   மெரினாவில் பொதுமக்களை மிரளவைத்த பைக் ரேஸ்: 6 மாணவர்கள் கைது # ஆளாளுக்கு அஜித் ஆகனும்னு ஆசை ப்பட்டா எப்படி? பப்ளிக்லயா வீரம் காட்டறது/

0 comments: