Wednesday, March 26, 2014

A R முருகதா ஸ் + விஜய் = கத்தி

துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருக்கும் படத்திற்கும் 'கத்தி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வரும் படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ’வாள்’ என்று பெயரிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு 'கத்தி' என்று தலைப்பிட்டு இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கிறார். இத்தலைப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.



1. A R முருகதா ஸ் + விஜய் = கத்தி # படம் நல்லாருந்தா ஷார்ப் னு கமென்ட்.இல்லைனா சதக் சதக் னு கமென்ட்



=================


2 மிஸ்! இத்தனை நாளா அமைதியா பேசுன நீங்க ஏன் " கத்தி' ப்பேசறீங்க ? 


நான் விஜய் ரசிகை ஆகிட்டேன்


================


3 துப்பாக்கி ,கத்தி வரிசையில் அடுத்த படம் கடப்பாறை?


=================


4 பெண்கள் ராத்திரி டைம் ல வெளில போனா பாதுகாப்புக்கு கத்தி வெச்சுக்கலாம்.ஆனா கத்தி பட டிவிடி வெச்சிருந்தா அபாயம் தான்


================


5 தாலி கட்ன சொந்த சம்சாரமா இருந்தாலும் விஜய் ரசிகையா இருந்தா அடி பாத"கத்தி"னு கூப்பிடக்கூடாது


==================


6 விஜய் - இனி நான் பேச மாட்டேன்.என் கத்தி தான் பேசும் ,


வில்லன் - ண்ணா.கத்தியால குத்து.ஆனா பஞ்ச் டயலாக் மட்டும் பேசிடாதீங்ணா # கத்தி


================


7 எம் ஜி ஆர் டூ விஜய் = கத்தி யைத்தீட்டாதே தம்பி ! உன் புத்தியைத்தீட்டு # சும்மா


==================


8 கத்தி எடுத்தவருக்கு ,கத்தி பார்த்தவருக்கு கத்தியாலதான் சாவு


================

9 கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஐடியா =


ஹீரோ = ஆஆஆஆஆஆஆஆஆ

ஹீரொயின் =ஏஏஏஏஏஏஏஏஏஎய்

வில்லன் =ஊஊஊஊஊஊஊஊ



=====================

10 பாஸ்! எதிரி துப்பாக்கி ,கத்தி யோட வர்றாரு .  


தன்னம்பிக்கை இருப்பவன் தன் கையை நம்புவான்.இல்லாதவங்க ஆயுதத்தை நம்புவாங்க


===================


0 comments: