Sunday, March 30, 2014

நெடுஞ்சாலை - சினிமா விமர்சனம்


இது ஒரு பீரியட் ஃபிலிம்.1980களில் நடக்கும் கதை .திராவிடக்கட்சிகள் தமிழ் நாட்டைக்கொள்ளை அடிக்க ஆரம்பித்த கால கட்டத்தில்  சில சாதா கொள்ளையர்கள் நெடுஞ்சாலைகளில்  லாரி , வேன்களை மடக்கி நள்ளிரவில் ஆட்டையைப்போட்டாங்களே அந்த கதைக்களம். 

நாயகன்  ஒரு நெடுஞ்சாலை க்கொள்ளைக்காரன்.நள்ளிரவில் லாரியில் சரக்குப்போனா அது பின்னால போய் நைசா சரக்கை  இவர் போகும் வண்டில கை மாத்தி விட்டுட்டு ஜஸ்ட் லைக் தட் எஸ் ஆகும்  திருடன், 

வில்லன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் .பொதுவாவே போலீஸ்னாலே பொம்பளைப்பொறுக்கிகளாத்தான் இருப்பாங்க (சில விதி விலக்குகள் அபூர்வமாய் உண்டு).நம்ம வில்லன் ஒண்ணாம் நெம்பர் லேடீஸ் கலெக்டர்


நாயகி ஒரு மலையாள பகவதி.நெடுஞ்சாலையில்   டிஃபன் செண்ட்டர் வெச்சிருக்காங்க.போற வர்ற லாரி டிரைவருங்க எல்லாம் டிஃபன் சாப்பிடும் சாக்கில் அங்கே வந்து ஜொள்ளு விட்டுட்டு இருக்காங்க. 

ஒரு டைம் வில்லன் நாயகியை ஏடாகூடமா கை வைக்க முயற்சிக்கும்போது நாயகி வில்ல ன் முழங்கால்லயே மடார்னு ஒரு அடி.வில்லன் கடுப்பாகி நாயகியை பிராத்தல் கேஸ்ல மாட்டி விடறாரு.அதுக்கு பொய் சாட்சியா நாயகனை ரெடி பண்றாரு.நாயகனுக்கு ஆல்ரெடி வில்லன் கூட பகை.கோர்ட்ல வில்லனைக்காட்டிக்குடுக்கறாரு.

டக் -னு நாயகிக்கு நாயகன் மேல லவ் வந்துடுது.நாயகன் லவ்வினாரா?வில்லன் நாயகியை என்ன செஞ்சார்?க்ளைமாக்ஸ் என்ன? என்பதை வெண் திரையில் காண்க 


நாயகனாக வரும் ஆரிக்கு பருத்தி வீரன் கார்த்தி கேரக்டர் . அசால்ட்டா நடிச்சிருக்கார் . சபாஷ்

நாயகியா வரும் ஷிவிதா நாயர் முக வெட்டு , மன வெட்டு , கை வெட்டு , கால் வெட்டு எல்லாம் அட்டகாசம் .இவரது தாராள மாப்பான்மை தமிழனைக்கவரும் .தமிழ் சினிமா இயக்குநர்கள் இவரை நல்ல முறையில் ( திரையில் ) பயன்படுத்திக்கொள்வார்கள் 

வில்லனாக வரும் பிரசாந்த் நாராயணன் கலக்கல் நடிப்பு 

தம்பி ராமய்யா , கதை சொல்லும் கேரக்டர் இருவர் நடிப்பும் கா கச்சிதம் 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1.  படத்தில்  முக்கியமாகக்குறிப்பிட வேண்டிய அம்சங்கள் நேர்த்தியான திரைக்கதை , விறுவிறுப்பான சம்பவங்கள் , அழகான ஒளிப்பதிவு ,சில பல பிஜி எம்கள் , ஆர்ட் டைரக்சன் , இயக்கம்  எல்லாமே  எபவ் ஆவரேஜ். வெரி குட் அட்டெம்ப்ட்.சபாஷ் இயக்குநர் 

2 ட்ரெய்லர் மேக்கிங்க் , மார்க்கெட்டிங்க்  உத்திகள்  கன கச்சிதம்

3  நண்டூறுது நரியூறுது பாடல் செம கலக்கலான  லோக்கல் டப்பாங்குத்து டான்ஸ் , அதுக்கான நடன அசைவுகள் , இசை எல்லாம் அருமை 

4 நானே அஞ்சாதே அஞ்சாதே பாட்டுக்கு  ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றிபடம் பிடித்த அழகு 


இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. ஹோட்டல்ல சாப்ட்டுட்டு பணம் தர்லைனு நாயகனை நாயகி   ஒரு வீட்டில் அடைச்சு வெச்சுட்டு போலீசை வர வைக்குது.நாயகன் ஒரு திருடன். அவன் 170 செமீ உயரம் . அவ அடைபட்ட வீடு மேலே கூரையில்  ஓலை வேய்ந்த சாதா வீடு. அதன் உயரம் ஜஸ்ட்  5 அடி தான். நாயகன் ஈசியா தப்பிக்காம கேப்டன் கூட்டணிக்காக காத்திருக்கும்  தேசியக்கட்சிகள் மாதிரி போலீஸ் வரட்டும்னு காத்திருப்பானா? 

2 லாரியின்  பின்னால  ஆள் ஏறி  கொக்கி போட்டு சரக்கை மாத்தும்போது லாரி ஜெர்க் ஆகுமே  எந்த  லாரி டிரைவரும் அதைக்கண்டுக்க மாட்டாங்களா? 

3 நாயகி  கற்புள்ள ஒரு அக்மார்க் கேரளாப்பெண்.யாராவது வரம்பு மீறினா கண்ணகி ஆகிடுது . வெரிகுட் கேர்ள். ஆனா டிரஸ்சிங்ல மட்டும் ஏன் தாவணிநஹி ,முண்டுநஹி ஆகிடுது. மேல அட்லீஸ்ட்  ஒரு துண்டாவது  போட்டிருக்கலாமே? 

4 ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் ஒரு மொள்ளமாரி. இவர் சர்வீசில் எத்தனை பேரைப்பார்த்திருப்பாரு? ஒரு பொண்ணு முழுங்கால்  ல அடிச்சுட்டானு உடனே பேக் அடிப்பது ஏனோ? இவர் கைல அரசாங்கம்  கொடுத்த கன் இருக்கு.  இவரோட லட்சியம் ரேப் பண்றது.இவர் ஏன் தன் லட்சியத்தை ஈசியா விட்டுத்தர்றாரு ? 
மனம் கவர்ந்த வசனங்கள்

1.  என்னது?என் மூக்குல ரத்தம் வருதா? வலிக்கவே இல்ல?

அதுதான் உள் காயம் 

2. வாடிக்கையாளரைக்கடவுள் மாதிரி நினைக்கறேன்

அப்டியா? எங்கே சாப்ட்டுட்டு இருந்த கஸ்டமரைக்காணோம்? கடவுள் மாதிரி மறைஞ்சிட்டாரா? 

3  போலீஸ் கிட்டே எப்பவும் பாலீசா நடந்துக்கனும்

4 சார், இனிமே உங்களுக்கு என்ன சாப்பிட வேணுமோ அதை ஸ்டேஷனுக்கே அனுப்பறேன்

அப்போ என்னை சாப்பிட இங்கே வர வேணாம்கறியா?

5  ஜட்ஜ் = உன் பேரென்னம்மா?

கில்மா லேடி = கண்ணகிங்க 

 பிராத்தல் பண்ணீயா?

ஆமாங்க 

 முதல்ல உன் பேரை மாத்து , இல்லை தொழிலை மாத்து 


6  யோவ் , இவ எனக்குத்தான் பிறந்தாளா?னு ஒரு டவுட்

ரொம்ப நாளா எனக்கும் அதே டவுட்

7  என்னய்யா? என்னைக்கண்டுக்கண்டுக்கவே மாட்டேங்கறே? நானே தான் லவ் பண்ணனும் போல இருக்கே? 

சரி , சரி , சீக்கிரம் லவ் பண்ணிட்டுக்கிளம்பு 

8 மண்ணுக்குள்ளே போனவன் கூட திரும்பி வந்துடுவான்.  ஆனா பெண்ணுக்குள்ளே போனவன் ,,, # நெடுஞ்சாலை

9  சாகறதுக்கு முன்  யாரும் யாரால தான் செத்தோம்னு தெரிஞ்சுக்காமயே போய்டக்கூடாது படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1 அந்தக்காலத்தில் நடந்த  ஹை வே ராபரி பற்றி மிக விஸ்தீரணமான படம் #,நெடுஞ்சாலை.பிரமாதமான ஓப்பனிங்

2 வி நெக் ஜாக்கெட் கேரளா நாயகி  இன்ட்ரோ .தாவணி போடாத ராவடி


3 பீரியட் பிலிம் ன் முதுகெலும்பு ஆர்ட் டைரக்சன் . அபார உழைப்பு .கலை இயக்குநர் ராக்கிங்


4 நேர்த்தியான திரைக்கதை  ,ஆர்ட் டைரக்சன் ,சில துள்ளல் பிஜிஎம் @ நெடுஞ்சாலை இடைவேளை

 5  சில்லுனு ஒரு காதல் மூலம் ஏ சென்டர் ரசிகர்களைக்கவர்ந்த் இயக்குநர் இதில் பி ,சி சென்ட்டர் ரசிகர்களைக்கவர்கிறார் #,நெடுஞ்சாலை

6  ஒளிப்பதிவு ஜால வித்தை 84 கட்ஷாட் . அடியே பாட்டு கலக்கல் # நெடுஞ்சாலை
சி பி கமெண்ட் - நெடுஞ்சாலை - புதிய கதைக்களம் ,நேர்த்தியான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,இசை நச்.- விறுவிறுப்பான லவ் த்ரில்லர் 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =44 ,


குமுதம் ரேட்டிங்க் = நன்று


 ரேட்டிங் = 3 / 5

ஈரோடு விஎஸ் பி ல படம் பார்த்தேன். பி , சி செட்டர்களில் செம வசூலை அள்ளிக்கிவிக்கும் . ஏ செண்ட்டரில்  3 மடங்கு லாபமும் , பி சி யில்  5 மடங்கு லாபமும் சம்பாதிச்சுகுடுக்கும். இது ஒரு கமர்ஷியல்  ஹிட் ஆஃப் 2014 

1 comments:

Saravanan S said...

Thanks for posting this review. I like your way of giving some political references in appropriate places in all your reviews. It makes your review very interesting.