Friday, March 21, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (21 3 .2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை


1குக்கூ'  -.ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நடித்திருக்கும் 'குக்கூ' படம் மார்ச் 21ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அடுத்து தயாரித்திருக்கும் படம் 'குக்கூ'. 'அட்டகத்தி' தினேஷ், மாளவிகா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தினை ராஜுமுருகன் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசையை பிப்ரவரி 18ம் தேதி கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
'ராஜா ராணி' படத்தினைப் போலவே, இசை வெளியீடு அன்று இரவு 7 மணிக்கு அனைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பட்டது. இசை மற்றும் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தற்போது, 'குக்கூ' திரைப்படம் மார்ச் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடையே மலரும் காதலை மையப்படுத்தி 'குக்கூ' திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார் ராஜுமுருகன்.

2  கேரள நாட்டிளம்பெண்களுடனே =
டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் இயக்கி வரும் புதிய படம் தேநீர் விடுதி. டீக்கடை இல்லாத ஊர்களே இருக்காது; எனவேதான் என் படத்துக்கு தேநீர் விடுதி என பெயரிட்டுள்ளேன் என்ற வித்தியாசமான விளக்கத்தை ‌கொடுத்த குமரன், முழுக்க முழுக்க கிராமத்தில் சூட்டிங்கை நடத்தி வருகிறார். இயக்குனர் ஆசையில் திரையுலகில் நுழைந்த குமரனுக்கு முதலில் கிடைத்தது இசையமைப்பாளர் வாய்ப்புதான். பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வெற்றி இசையமைப்பாளராக வலம் வந்தார். சினிமாவுக்கு வந்த நோக்கம் நிறைவேறாத சூழ்நிலையில் இயக்குனர் அவதாரம் எடுக்க தயாரானார். தேநீர் விடுதி என பெயர் சூட்டி படமாக்கி வரும் குமரன், அந்த படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார்.
ஒருபுறம் தேநீர் விடுதி பணிகள் நடந்து வரும் நேரத்தில், இன்னொரு பக்கம் தனது அடுத்த படத்துக்கான பணிகளில் இறங்கி விட்டார். ஆம்! தேநீர் விடுதிக்கு பிறகு இயக்கும் புதிய படத்திற்கு கேரள நாட்டு பெண்களுடனே என ‌பெயர் சூட்டியிருக்கிறார் குமரன். சும்மாவே ஹீரோயின் வேட்டைக்கு கேரளா செல்லும் கோலிவுட்டில், கேரள நாட்டு பெண்களுடனே என்று தலைப்பிட்டிருக்கும் குமரன், தமிழ்நாட்டில் கதாநாயகியை தேர்வு செய்வாரா என்ன? இந்த படத்திற்காக இரண்டு கேளர புதுமுகங்களை தேடி வருகிறாராம் எஸ்.எஸ்.குமரன்.
புதிய படம் குறித்து குமரன் கூறுகையில், கேரள நாட்டிளம் பெண்களுடனே புதுமையான களம் கொண்ட படம். இது எல்லோராலும் விரும்பக்கூடிய படமாக இருக்கும். டைரக்ஷன் எப்போதுமே என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. இருந்தாலும், இசையமைப்பதுதான் எனது தொழில். அதனால் நான் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டுத்தான் இருப்பேன், என்றார். யாசகன்.டைரக்டர் அமீரின் உதவியாளர் துரைவாணன் இயக்கும் படம் ‌யாசகன். இதில் ஹீரோவாக அங்காடித்தெரு படத்தில் நடித்த மகேஷ் நடிக்கிறார். நிரஞ்சனா என்ற புதுமுகம் ஜோடி. மதுரையில் நடக்கும் கதை. மதுரையில் உள்ள குடிசைப்பகுதியில் வாழும் மகேஷ் அந்த பகுதிக்கே நல்ல பிள்ளை. யார் எது சொன்னாலும் கேட்குற பிள்ளை. அவருக்கும் நிரஞ்சனாவுக்கும் காதல் வருகிறது. அது கூடவே பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. ஊருக்கு நல்ல பிள்ளையாக திரிந்தவன், காதலால் ஊரே ஒதுக்கி வைக்கும் யாசகன் ஆகிறான். காதல் அப்படி என்ன செய்தது என்று ஆராய்ச்சி செய்வதுதான் திரைக்கதையாம். படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 
விரட்டு படத்தின் ஆடியோ சென்னையில் வெளியிடப்பட்டது. டி.குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அவரது மகன் சு‌ஜிவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இசை தரண் குமார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யாவும், ஆர்.பி.சௌத்‌ரியும் குமாருடனான தங்களின் நட்பை பற்றி பேசினர். எ‌ஸ்.ஜே.சூர்யா ஒருபடி மேலே சென்று, என்னுடைய திரைவாழ்க்கைக்கு எப்படி அ‌‌ஜீத் காரணமோ அதேபோல் குமாரும் ஒரு காரணம் என்றார்.

5 பனிவிழும் நிலவு கௌசிக் இயக்கியிருக்கும் படம். சி.ஹெச்.நாக ஸ்ரீனிவாஸ் படத்தை தயாரிக்க எல்.வி.கணேசன் இசையமைத்துள்ளார்.

ஒரு ஜோடி, அவர்களுக்கு நான்கு நண்பர்கள் என வழக்கமான காஸ்டிங். புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
+

SINISTER - True-crime writer Ellison Oswalt moves himself and his family into a house where a horrific crime took place earlier, but his family doesn't know. He is trying to find out more about the crime so he can write a new book about it to help his flailing career. He uses some "snuff" film footage he finds in the house to help in his research, but he soon finds more than he bargained for. There is a figure in each of the films, but who or what is it? As a result, his family start to suffer (as does he), and things take a turn for the worse. Will they survive?Written by Michael Hallows Eve

0 comments: