Sunday, March 23, 2014

விழுப்புரம் vs அந்தப்புரம் ?

1. சென்னையில் தெருநாய்களுக்கு சரணாலயம்-மேயர்# நாயர்களுக்கு அடைக்கலம் அளித்த மேயர் அடடே!"==================
2 காங். தொண்டர்கள் வருங்காலம் வசந்தகாலமாக அமையும்: ஜி.கே.வாசன் # இப்படிக்கு கிளி ஜோசியர் கிள்ளி வளவன்
=================
3 ஐ படத்தையடுத்து சரித்திரம் படம் இயக்குகிறாராம் ஷங்கர்!- செய்தி # தயாரிப்பாளர் அவரா  இருக்க மாட்டாரே? 

====================
பரமஎதிரிகளும்நண்பர்களாக முடியுமானால்அதுநானும், தனுஷும்தான்- சிம்பு  # 2 பேருக்கும் பல விஷயத்துல ஒத்துமை இருக்கே? குறிப்பா காதலி விஷயத்துல

====================
உத்தம வில்லன் ப்ரெஞ்ச் காரர் படத்தை காப்பியடித்தாரா கமல்? -செய்தி # விட்டா கமல் சொந்தமா அடிச்ச கிஸ்சைக்கூட ஃபிரெஞ்ச் கிஸ் காபிம்பாங்களோ?

---------------------======================
காஷ்மீரிகள் "மிகப் பெரும் திருடர்கள்".மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா # அரசியல்வாதிகள் எல்லாருமே CASH கை மீறிப்போன CASHமீறிகள் தானே?
==================
7  இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள்: நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி  # இவர் மீது திடீர்னு எந்த நடிகைக்காவது தெய்வீகக்காதல் வரனுமே?

=====================
எங்களுக்கும் ஒரு சீட் ஒதுக்க வேண்டும்: அதிமுகவுக்கு பார்வர்டு பிளாக் கோரிக்கை # அம்மா,தாயே! ரொம்ப கெஞ்சிக்கேட்கறோம், ஒரு சீட் தானே?

=====================

மாணவியுடன் காணாமல் போன சேலம் தமிழ் ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு # தப்பு. தமிழ் சொல்லித்தர்றதுக்காக தனி இடம் கூட்டிட்டுப்போனாராம்

======================
10 விழுப்புரம் -சமையல் எண்ணெய் லாரி கவிழ்ந்தது- பக்கெட்டில் பிடிக்க  போட்டி # லாரியைக்காபாத்தாம ஆயிலைக்காப்பாத்திய இவன் தான்யா தமிழன்


=================
11 நான் போன் செய்தால் பில்கேட்ஸ் என்னிடம் பேசுவார்-ராமதாஸ்# பேச்சு வர்ற எல்லாரும் போன் வந்தா எடுத்து ஹலோ ம்பாங்க பாஸ்.தொடர்ந்து பேசுவாரா?


=================


12 ரூ.15 கோடியில் கோச்சடையான் விளம்பரம்.. # விளம்பரக்காசாவது கைக்கு வருமா பாஸ்?நஷ்ட ஈடு வேற குடுக்கனும்


================

13 காங்கிரஸ் தொண்டர்களுக்கு வருங்காலம் வசந்தகாலமாக அமையும்! : GKவாசன் # இலை உதிர் காலம் வந்தாத்தானே அடுத்து வசந்த காலம் வரும்? இலை பலமா !

==================


14 தமிழக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கு ராகுல் வருகை ரத்து! # நடக்காத விஷயத்துக்கு ( காங்க் ஆட்சி) நாம ஏன் ( வெட்டியா) நடக்கனும்?


====================15 ரிக்‌ஷாவண்டிக்காரரின் கஷ்டத்தை அறிய ரிக்‌ஷாக்காரராக பணிபுரிய நினைத்தேன்! - ராகுல் # பேச்சில் தேன் இருக்கு.செயலில் தேள் இருக்கு


=================


16 கருணாநிதி சுட்டிக்காட்டும் நபர்தான் பிரதமராகமுடியும்! - காதர் மொய்தீன் # அவரைக்கேட்டா மு க ஸ்டாலினைத்தான் காட்டுவார்.அப்போ அழகிரி CM?


=====================


17 விழுப்புரத்தில் பெண் குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர் # இப்டி ஆபத்தெல்லாம் இருக்குன்னு தான் நான் குளிக்கறதே இல்லை


==============


18 தமிழ்ப் படத்துக்காக ஹாலிவுட் பட வாய்ப்பை இழந்தேன்! - ஏ ஆர் ரஹ்மான் # ஆத்ம திருப்தி தான் சார் முக்கியம்


================


19 காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பாத யாத்திரை நடத்தப்படும்-ஞானதேசிகன்#  அவ்ளவ் தூரம் நடந்தா கால் பலமாகும், “கை” எப்படிண்ணே பலம் ஆகும் ? கிகி====================


20 டானா படத்தில்  சிவகார்த்திகேயன் போலீஸாக நடிக்கறார் - செய்தி # இவருக்கு தொப்பை இல்லை. லீன் பாடி ஆச்சே? செட் ஆகுமா? ========================0 comments: