Sunday, August 03, 2014

ஆயிரங்கால் ஜடை!!!!

1.டியர்.ஆயிரங்கால் ஜடை போட்டுக்கிட்டா எனக்கு நல்லாருக்குமா?ஒருக்கால் நல்லாருக்குமோ என்னமோ ட்ரை பண்ணிப்பாரு


=====================


2 டியர்.உங்களுக்கு ரொமான்டிக்கா பேசவே தெரியல.என்னை கடனுக்கு லவ் பண்றீங்களோனு தோணுது.ச்சே.நோ நோ.5000 ரூபா கடன் கேட்டு 5 நாள் ஆச்சு.தர்ல நீ


====================


3 டியர்.டைனிங் டேபிள் இருந்தும் ஏன் நின்ன வாக்லயே சாப்டறீங்க?மாமனார் வீட்ல உக்காந்து சாப்ட்டான் னு இந்த சமூகம் சொல்லிடுச்சுனா?


==================4 பொண்ணை பாடச்சொல்லுங்க.கேட்போம்.


சாரி மாப்ளை.அவ ஒரு பாத்ரூம் சிங்கர். சவுகர்யமாப்போச்சு.சரி பாடச்சொல்லுங்க.பார்ப்போம்.
====================5 டேமேஜர் = ரிப்போர்ட்டை மெயில் ல அனுப்பிடுனு சொன்னேன்.இன்னும் வர்லயே?


 சாரி.சார்.கொஞ்சம் லேட் ஆகும்.பேசஞ்சர் ட்ரெய்ன் ல அனுப்பிடவா?


=================6 DR! 5 வருசமாப்பொண்ணு பார்த்தும் எதுவும் செட் ஆகல.அந்த ஏக்கத்துலயே என் கன்னம்வீங்கிடுச்சு.வித்தியாசமான பொண்ணுக்கு வீங்கி நோயா இருக்கே?==========================7 ஒல்லி லில்லி = டாக்டர்.இலந்தைப்பழம் சாப்டா மூளை வளர்ச்சி கம்மி ஆகிடுமாமே?அதெல்லாம் புரளிம்மா.அப்போ பலாப்பழம் சாப்ட்டா அதிகமாகுமா?


===================


8 சார்.இந்த ஏரியாவில் ஒரே இருட்டா இருக்கு.திருடங்க நடமாட்டம் இருக்குமா?ச்சே!ச்சே! போலீஸ் நடமாட்டம் தான் ஜாஸ்தி.ஜாக்ரதை


====================


9 மோகினிப்பேய் கல்யாணம் ஆகாத கன்னிப்பையனைக்கண்டாதான் பிடிச்சுக்கும்.நீங்க பயப்படத்தேவை இல்ல.அதுக்கு எப்டி அதெல்லாம் தெரியும்.?


=======================

10 சார்.நீங்க கோயிலுக்குத்தானே போறீங்க.?பேய் எதும் செய்யாது!அது எப்டி? நம்ம 2 பேருக்குத்தானே அது தெரியும்? பேய்க்கு எப்டி தெரியும்?


=====================


11 மிஸ்! மேரேஜ்க்குப்பின்பும் நீங்க மாறாம இப்டியே இருப்பீங்களா?ஸாரி.லைட்டா மாற்றம் வரும்.உண்டாவேன்.பின் குண்டாவேன்


====================12 டாக்டர்.உங்க பைக் மட்டும் 200 கிமீ மைலேஜ் தருதே எப்டி?
நர்ஸ் கூட போகும்போது மட்டும் ஸ்டார்ட் பண்ணி போவேன்.தனியா போறப்ப உருட்டிட்டேபோவேன்======================13 ஜட்ஜ் = தொகுதிமேம்பாட்டு நிதி ல மக்களுக்கு 20% கூட ஏன் செலவு பண்ணல?தயாநிதி அழகிரி = எனக்கு 80 மக்களுக்கு 20 னு நினைச்ட்டேன்


====================14  மிஸ்! உங்களுக்கு கோலம் போடத்தெரியுமா? 


கோலம்? அப்டின்னா என்ன? ஹூம்.எல்லாம் காலத்தின் கோலம் # பெண் பார்க்கும் படலம்


======================


15 டாக்டர்.இரும்புக்குதிரைகள் நாவல் படிச்சேன். . காலைலேந்து எந்த வேலையும் ஓடல


 ஏம்மா! வேலையைச்செய்யாம கதை புக் படிச்சா வேலை எப்டி ஓடும்? 


====================


16 மிஸ்! நீங்க சூர்யா ரசிகையா இருக்கறதால ஏகப்பட்ட பாய் பிரன்ட்சா? ஏன்? அஞ்சான் ரிலீஸ் ஆகும்போது எனக்கு அஞ்சு ஆள(அஞ்சாள்)மேட்ச்க்கு மேட்ச்் 


======================


17 மாமா.நாங்க ரொம்ப ஹை க்ளாஸ் பேமிலி. 


அதுக்காக அட்சதைக்கு போடும் அரிசி கூட வெஜ்டபிள் பிரைடு ரைஸ் தான் வேணும்னா எப்டி?மாப்ளே ! 


========================

18 டாக்டர்.காலை ல என்னால சீக்கிரமே எந்திரிக்க முடியல. யோவ்.சேலம் டாக்டர் சிவராஜைப்பாருய்யா. 


=======================


19 மேடம்.உங்க உள்ளங்கைல அட்சதை ரேகை பிரமாதமா ஓடுது. 
ஜோசியரே.சும்மா அடிச்சு விடாதீங்க.இப்பதான் அட்சதை தூவினேன்.அரிசி ஒட்டிக்கிச்சு 


====================


20 டாக்டர்.நீங்க டிவி ,சினிமா எதுவும் பார்க்க மாட்டீங்களா? ஏன் அப்டி கேட்கறீங்க? 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும்னு போர்டுஇருக்கே? 


==========================

0 comments: