Sunday, August 24, 2014

விமர்சனம் செய்து அடுத்தவரை போய் பார்க்கவிடாமல் செய்வது ஆரோக்யமற்ற செயல் -விவேக்

1. காவியத்தலைவன் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் # ஏ ஆர் ஆர் ன் வானவில் ஹிட் என்பதன் சிம்பாலிக் சுருக் தான் 7 பாட்டா?


=================


2 நான் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்யனும் - ரஜினி. # லிங்கா ஓப்பனிங் பர பரப்பா இருக்கனும்னு அடிச்சு விடறாரு போல


==================


3  அஞ்சான்...சேது படம் மாதிரி லேட்டா ரீச் ஆகும்! - லிங்குசாமி # நாட் ரீச்சபிள் ஏரியாவுல கதையை கோட்டை விட்டுட்டு வந்து வியாக்யானம்!


================


4  எதிர்க்கட்சிகளை ஜெ மதித்து நடக்க வேண்டும்! - விஜயகாந்த் # ஆளுங்கட்சி ஆளுங்களையே அம்மா மதிக்க மாட்டாங்க.


==================

5 2016 ஆம் ஆண்டு நாம் கோட்டையில் கொடி ஏற்ற வேண்டும்! - விஜயகாந்த் # இப்போவே ஏத்திக்கிட்டு தான் பேசுறார் போல


=================


6 2016 தமிழக தேர்தலில் BJPஒரு முக்கிய கட்சியாக இருக்கும் - தமிழிசை செளந்தரராஜன் # விலைவாசியை இப்டியே ஏத்திட்டு இருங்க.தேசிய அளவில் வுடுஜூட்====================


7  பாஜக துணைத் தலைவர் பதவி திருப்தியளிக்கிறது! - எடியூரப்பா # எண்ட குருவாயூரப்பா! என்ன சோதனை இது?


==================


8  கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வரலாம்! - ரஜினிகாந்த் # கடவுள் எதுக்கு அரசியலுக்கு வரனும்?


===============


9  விடுதலை சிறுத்தைகள் மாநாடு நடத்தினால் நாட்டில் கலவரம் வெடிக்கும்! - பாமக அருள் # வெடி போடறதே இவங்க ஆளுங்களாத்தான் இருக்கும்


===============


10  மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும்! - ரஜினிகாந்த் # இன்னும் 7 வருசம் அம்மா தான் சிஎம்.அப்புறம் ஸ்டாலின் ,கேப்டன்.

=============


11 : தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பேற்கமுடியாது! - ஏ.கே.அந்தோணி # பொறுப்பற்ற பேச்சு.


===================

 12  சென்னை ஹாஸ்பிடலில் Xரே எடுக்கும்போது குறும்பு செய்த வாலிபர்.்பிலிப்பைன்ஸ் பெண் புகார் # அப்போக்கூட அவன் இந்தியநாட்டுக்கு துரோகம் பண்ணலை==================


13  கோவை- இன்ஸ்பெக்டர் மனைவியுடன் S I சல்லாபம்.கைது # வீட்ல எப்பவும் போலீஸ் நடமாட்டம் இருந்துட்டே இருந்தா பாதுகாப்பு னு நினைச்சாரோ


==================

14  அமெரிக்க பெண்ணிடம் அத்துமீறல்: மூவர் கைது # கடல் தாண்டி வந்த பெண்ணிடம் எல்லை தாண்டுதல் முறையா?===================


15 பிரான்ஸ் நாட்டு பெண்ணிடம் 'சில்மிஷம்': 3 பேர் கைது # "பிரா"ப்ளம் ஏதும் வராது ,பாரீன் பிகர் தானே னு தெனாவெட்டா இருந்திருப்பாங்க==================


16  2016ன் முதல்வர் வேட்பாளர் அன்புமணி -ராமதாஸ் # இப்ப எதுக்கு எச்சரிக்கை மணி அடிக்கறீங்க?=======================


17  காங்கிரஸ்சின் சாதனைகளை மக்களுக்கு சொல்ல தவறிவிட்டோம் -ஈவிகேஎஸ் # சோதனைகளை வேதனைகளை சாதனை என உளறிவிட்டீர்கள்==================


18 அஞ்சான் படம் ட்ரிம் செய்யப்பட்டது - செய்தி # சமந்தா டூ பீஸ் ல ஓடி வர்ற சீனை கட் பண்ணி இருப்பாங்க.படத்துல "உருப்படி"யான சீனே அதான்


======================

 
19   கத்தி' இசையில் விஜய் ரசிகர்களுக்கு நிறைய 'சர்பிரைஸ்' உண்டு: ஆவலைத் தூண்டும் -அனிருத் #முதல் சர்ப்பரைஸ் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?


=====================


20   விமர்சனம் செய்து அடுத்தவரை போய் பார்க்கவிடாமல் செய்வது ஆரோக்யமற்ற செயல் -விவேக் # ஏழைங்க காசு வீணாகலாம்.கோடீஸ்வரன் காசு குட்டி போடனும்


==========================

0 comments: