Saturday, August 02, 2014

தலைக்கு மேல "கத்தி" காத்திருக்கு

1. உபி மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் பலாத்கார சம்பவங்கள் கம்மி-முலாயம் # எதெதுல பர்சண்ட்டேஜ் பார்க்கனும்னு விவஸ்தை இல்லாம  போச்சு


================


2 முல்லை பெரியாறு அணை வெற்றியில் திமுகவிற்கும் பங்கு உண்டு-கருணாநிதி # நமக்குத்தான் திரும்புன பக்கம் எல்லாம் சொத்து ,பங்கு் இருக்கே தலைவா!=================

3 ரசிகர்களை திரட்டி அரசியலில் களமிறங்க விஜய் முடிவு # ரைட்டு.தலைக்கு மேல "கத்தி" காத்திருக்கு


================4 தமிழ்நாட்டில் பிறமொழிகளை படிக்க கட்டாயப்படுத்தக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் # கனிமொழி ,தேன் மொழி யை சைட் கூட அடிக்கக்கூடாது


===============


5 சர்க்கரை என்ற பெயரில் மெல்லக் கொல்லும் ‘வெள்ளை விஷம்’: பகீர் தகவல்..- ஆய்வு முடிவு # அஸ்கா உடலுக்கு பாதகம்.அனுஷ்கா உள்ளத்துக்கு இதம்


==================


6 நல்ல கதை அமைந்தால் இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கிறேன்:-லட்சுமி ராய் # வாய்ப்பில்லாதபோது லோபட்ஜெட்வாலா க்கும் கால்ஷீட் தரப்படும்


==================


7  கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஷீலா தீட்சித். # கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ரீ மேக் ல நடிங்க


================


8   பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி- டாக்டர் ராமதாஸ் # இது  கூட சி எம் ஒரு பெண் என்பதால் வரும் குற்றச்சாட்டே
=================


9  ஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை # அதுல பாதிப்பேரு ஷகீலானு தப்பா படிச்சவங்களா இருக்கும்
=================


10  நீதித்துறையின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தலையிட்டதில்லை: நீதிபதி மார்கண்டேய கட்ஜு # ஓஹோ! இது  நீங்களா சொல்வதா? ஜெ அப்டி சொல்லச்சொன்னாரா?
==================
11 ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரிகளில்GPS கருவி: உணவுத் துறை அமைச்சர் காமராஜ் # அந்த GPS பத்திரம்,நம்மாளு அதையும் கடத்திடுவான்


===================
12  ஆடிக்கு முன்பு குழந்தை பெற ஆசை: ஒரே நாளில் 10 பேருக்கு சிசேரியன்: சென்னை   GH ல் சாதனை#  டாக்டர்ங்க எல்லாம் “ஆடி”ப்போய் இருப்பாங்களே?
==================


13 'கத்தி' படத்தில் எனக்கு சராசரி வில்லன் ரோல் கிடையாது: நீல் நிதின் முகேஷ் # சராசரியா எல்லாப்பட வில்லன்களும் இப்டித்தான் சொல்லிக்கறாங்க
==================
14 தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை: ராமதாஸ் வேதனை# சனி பிணமும் ,அரசியல்கட்சியும் 1,தனியாப்போகாது.யாரையாவது கூட சேத்திக்கும்====================


15 எனக்கும் அனிருத் க்கும் மூர்த்தி சிறுசு ,கீர்த்தி பெருசு - தனுஷ்@கல்கி # அப்புறம் என்ன? நாளை மறுநாள் சூப்பர் ஸ்டார் பதவி ,விருது தான்


====================16  இனி என் மனைவியின் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் - தனுஷ் # 3 ஹிட் ஆகி இருந்தா இதே வாய் எப்டி மாத்தி பேசி இருக்கும் ?


==================17 கேப்டன் என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்துக்காட்ட தயாரா?-தமிழருவி மணியன் # அருவிகள் எல்லாத்துக்கும் அழிவு காலம் தொடங்கிடுச்சு


=====================


18 உத்தரபிரதேசத்தில் பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 போலீசார் இடைநீக்கம் # இது போதாது.குற்றவாளிகளின் "இடை" நீக்கம் வேண்டும்====================19 நான் முன் மொழிவதையே மற்ற தலைவர்கள் வழிமொழிகிறார்கள்-ராமதாஸ்.# மத்தவங்க எதை வழிமொழியறாங்க்ளோ அதை நீங்க முன் மொழியறீங்க்ளோ என்னவோ?


====================


20 பாராளுமன்றத்தில்MPக்கள் இருக்கைகளை மாற்ற சபாநாயகர் முடிவு..#ஆண் ,பெண் என வரிசையா உக்கார வைங்க.ஒரு பய தூங்க மாட்டான்.ஆக்டிவா இருப்பாங்க


=============================

0 comments: