Monday, August 25, 2014

ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் ரசிகர்களால் பதியப்படும் கருத்துகளும் விமர்சனங்களும் ஒரு படத்தின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

'தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூ

தமிழ் சினிமாவுக்கு 'அஞ்சான்' கற்று தரும் பாடம் என்ன?

ர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்! 


இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று, "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். 


சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டால், குறிப்பிட்ட அப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி அடைய வேண்டும்தானே? ஆனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' முதலான படங்கள் வர்த்தக வெற்றியை எட்டாதது இங்கே கேள்வியை எழுப்புகிறது. 


சரி, ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் ரசிகர்களால் பதியப்படும் கருத்துகளும் விமர்சனங்களும் ஒரு படத்தின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 


இதுபற்றி, தமிழ் சினிமாவின் வர்த்தக விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் கோடம்பாக்க பிரமுகர் ஒருவரிடம் பேசினேன். 


"சிறிய பட்ஜெட் படங்களுக்கு எப்படியோ... ஸ்டார் வேல்யூ உள்ள பிரம்மாண்ட படங்களுக்கு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். படம் நன்றாக இல்லை என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் ரசிகர்களின் செயல்தான் தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை சீரழிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 


காரணம், ஒரு பிரபல நடிகரின் படம் சுமாராக இருந்தால்கூட, தனக்குப் பிடித்த நடிகரின் போட்டியாளர் என்று அவரைக் கருதி, அந்த நடிகரின் படத்தை நையாண்டி, நக்கல், பகடி என்ற பெயரில் சீரழிப்பு வேலைகள் நடக்கின்றன. 'படம் செம மொக்கை... யாரும் போகாதீங்க' என்று முன்னெச்சரிக்கை வேறு. தனக்கு விருப்பமற்ற ஒரு நடிகரின் படம் வெற்றியடைவதை ஒரு ரசிகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை எந்த வகையான உளவியலில் சேர்ப்பது என்பது தெரியவில்லை. 


அஞ்சான் படத்துக்கு எதிராக எந்த ரசிகர் மோசமான பதிவிட்டு இருந்தாலும், அது சூர்யாவுக்குப் போட்டி நடிகராகக் கருதப்படுபவர்களுடைய ரசிகர்களின் வேலை என்று நினைத்து, அவர்களது படங்கள் வரும்போது சூர்யாவின் தீவிர ரசிகர்கள் களத்தில் இறங்குவதும் நடக்கலாம். இப்படியே மாறி மாறி செய்துகொண்டிருப்பதால், நிச்சயம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு பாதக நிலை நீடிப்பது உறுதி" என்றார் அந்த முக்கியப் புள்ளி. 


ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வெகுவாக பிரபலம் அடைவதற்கு முன்பு, ஆன்லைனில் ப்ளாக்ஸ் எனப்படும் வலைப்பதிவுகளில் வெளிவரும் சினிமா விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த விமர்சனங்களுக்குக் கிடைத்த வரவேற்பை உணர்ந்த சினிமா துறையினர், வலைப்பதிவாளர்களுக்கே தனியாக ப்ரிவியூ ஷோ நடத்தினர். 


அதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களின் முக்கியத்துவம் உணர்ந்த இளம் சினிமா படைப்பாளிகள் சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினர். அதன் மூலம், தங்கள் படைப்புகளுக்கு வலுவான விளம்பரம் கிடைக்கவும் வழிவகுத்தனர். இதற்கு, 'கற்றது தமிழ்' ராம் தனது 'தங்கமீன்கள்' படத்தை ஆன்லைனில் பிரபலப்படுத்திய அணுகுமுறையைக் குறிப்பிடலாம். 


ஆனால், இணையவாசிகளின் பலத்தை உணர்ந்து, தங்கள் படங்களின் டைட்டில் கார்டில் ஃபேஸ்புக், ட்விட்டர் நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, அவர்களை உச்சிக் குளிர வைத்ததில் முன்னோடி என்னவோ மலையாள சினிமா துறைதான். 


சரி, நம் விஷயத்துக்கு வருவோம். அஞ்சானுக்கு கிடைத்த ஆன்லைன் வரவேற்பால், முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது படங்களின் புரோமோஷன்கள் குறித்தும், சமூக வலைதளங்களை அணுகுவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறிந்தேன். 


இதனிடையே, "ரசிகர்களிடம் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவதும் தவறான அணுகுமுறை என்பது அஞ்சான் விஷயத்தில் உறுதியாகிவிட்டது. 'பாபா'வுக்கு அது நேர்ந்தபோது ஃபேஸ்புக் இல்லாதது யாரோ செய்த நற்ச்செயல். அஞ்சானுக்காக 20 லட்சம் யூடியூப் ஹிட்ஸ் கிடைத்தவுடன் சக்சஸ் மீட் வைத்தவர்கள், படம் சரியில்லை என்று கலாய்த்தால் ஏற்றுதானே ஆகவேண்டும்?" என்று என்னிடமே கேட்டார் ஒரு சினிமா ஆர்வலர். 


அதேவேளையில், சமூக வலைதளத்தை மிகவும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கின்றனர், இளம் இயக்குநர்கள். 


ஆன்லைனில் நீண்ட காலமாகவே இயங்கிவரும் இயக்குநர் வசந்தபாலனிடம் கேட்டபோது, "முன்பெல்லாம் பத்திரிகை விமர்சனம்தான் மக்களின் விமர்சனம் என்ற காலம் இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறார்கள், அவர்களது விமர்சனத்தை உடனே பதிவு செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஒரு சின்ன படம் கூட நன்றாக இருக்கிறது என தொடர்ச்சியாக விமர்சனங்கள் வரும்போது அந்தப் படத்தின் வசூல் கூடுகிறது. நமக்கு சாதகமாக இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, படம் சரிவர ஓடவில்லை என்றால், ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இயங்குபவர்களை குறைசொல்வது சரியல்ல. கொலவெறி என்ற பாடல் ஹிட்டானதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக் தானே காரணம்" என்றார். 



இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் பேசியபோது, "நான் சோஷியல் மீடியா ரியாக்‌ஷன்களை பாசிட்டிவ்வாதான் பார்க்கிறேன். பெரிய அளவில் விளம்பரங்கள் பண்ண முடியாமல், மக்களின் விமர்சனங்கள் மீதான நம்பிக்கை வைத்தே சில படங்கள் வெளியாகின்றன. ஏன்... 'பீட்சா', 'ஜிகர்தண்டா' படத்துக்குக் கூட ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்கள் மூலமாகதான் காட்சிகள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. அவ்வாறு விமர்சனங்கள் வெளியிடுவதில் எனக்கு தெரிந்து தவறு எதுவும் இல்லை. கலெக்‌ஷன் கூடும்போது கொண்டாடாமல், குறையும்போது மட்டும் திட்டினால் எப்படி?" என்றார் அவர்.
எனினும், 

"சிட்டி ஏரியால தான்பா இந்த பாதிப்பெல்லாம். அவுட்டர்ல எந்த பாதிப்பும் கிடையாது. ஃபேஸ்புக் மாஸ் ஹீரோ படங்களை என்னதான் கும்மாங்குத்து குத்தினாலும் சிட்டியை தவிர்த்த ஏரியாக்களில் பெரிய பாதிப்பு இல்லை" என்றும் தயாரிப்பு பிரிவு தரப்பைச் சேர்ந்த ஒருவர் தனது அப்சர்வேஷனைச் சொன்னதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும். 



 thanx - the hindu


எல்லாத் தமிழ் படங்களுமே கண்டனத்துக்கு உரியவயாகத் தான் படுகின்றன. யாரவது ஒருத்தர் பம்பாய் மாபியா பற்றி படம் எடுத்து நல்ல வந்து விட்டால் மற்றவரும் அப்படியே கொஞ்சம் கதையை திரிபு செய்து மற்றப் படம் எடுக்கின்றார். உலகெல்லாம் எவ்வளவோ கதைகள் உள்ளன. எத்தனையோ மொழிகளில் அழகாகப் படம் எடுக்கின்றனர். அவர்ரைஎல்லாம் தமிழில் தரலாம் அல்லவா? தமிழ் படத் தயாரிப்பாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வரும் படங்களே பார்த்ததில்லை போலும். கதை இல்லாமலே மாபியாவை வைத்தே தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பார்கள் போலும்.


  • சூர்யா நீங்க கவலபடதேங்க உங்களுக்கு அதறவன் ரசிகர்களும் இருக்காங்க அடுத்த படம் நல்ல குடுங்க.............வாழ்த்த்கள்
    about 8 hours ago ·   (6) ·   (26) ·  reply (0) · 
    Dinesh  Down Voted
  • kothai  
    அஞ்சனுக்கு அஞ்சி எக்ஷ்பண்டப்லெ3 அ ஏன் பா தள்ளி பொடீங்க....இதெல்லாம் ஒரு படம் ச்ச..............
    about 9 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • Dinesh  
    வீட்டுல வெறுப்பா இருக்குனுதான் படத்துக்கு வறோம். அங்க வந்தா அதுக்கு மேல வெறுப்பு ஏத்துறாங்க.
    Points
    380
    about 9 hours ago ·   (11) ·   (0) ·  reply (0) · 
    derick · derick  Up Voted
  • rasigan  
    தயவு செய்து படத்துக்கு தகுந்தார் போல் டிக்கெட் வாங்க சொல்லுங்க !!!
    Points
    275
    about 9 hours ago ·   (12) ·   (0) ·  reply (0) · 
    derick · derick  Up Voted
  •  
    சூர்யா தகுதிக்கு மீறிய உச்சத்தை அவரே எதிர் பாராமல் தொட்டு விட்டதால் இனி இறங்கு முகம் தான்
    Points
    425
    about 10 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
  • bharath  
    நாம் COMMERCIAL படங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.. critically acclaimed படங்கள் சரியாக ஓடாததற்கு இதுவும் ஒரு காரணம்... சசிகுமார் மிஷ்கின் பாலா சமுத்திரகனி இவர்களின் படங்களுக்கு வரவேற்ப்பு சற்று குறைவு தான்.. ஏன் என்றல் இவர்கள் அஜித் விஜய் சூர்யா போன்ற மாஸ் ஹீரோக்கள் வைத்து படம் எடுப்பதில்லை.. 3 மணி நேரம் யாரும் கருத்தை சொன்னால் அதை ஏற்றுகொள்ள மறுக்கிறோம்..
    Points
    130
    about 10 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Dinesh  
    அப்பனா நீங்க என்ன குப்ப படம் எடுத்தாலும் நாங்க பாக்கனுமா.. ச்சா இனி சூர்யா படத்துக்கே போககுடதுடா....
    Points
    380
    about 10 hours ago ·   (19) ·   (3) ·  reply (0) · 
    rasigan · rasigan · Dinesh · derick · derick  Up Voted
  • CSK Dhinesh  
    ஆமா ஆமா அசல் படம் லம் செம ஹிட் ப
    about 12 hours ago ·   (3) ·   (4) ·  reply (0) · 
  • srinivasan  
    படம் நன்றாக இல்லை அதை லிங்கு சூர்யா ஒதுக்கவேன்டும்
    about 12 hours ago ·   (12) ·   (0) ·  reply (0) · 
    derick · derick  Up Voted
  • madhan  
    சூர்யா நீங்க பிரபலமான டைரக்டர் மட்டும் பாக்காதிங்க அவங்க வச்சு இருக்கிற கதை நம்மக்கு செட் ஆகுமா ஆகாதா பாருங்க இந்த காலத்திலையும் முன்னாடி வந்த படங்கள முகத்துல மறு வச்சுட்டு மாறு வேசத்துல வந்தாங்க ஒகே..... நீங்க அதே மாதிரி இப்ப நீங்க வெறும் கண்ணாடிஎ போட்டு வந்தா யாருக்குமே தெரியாத என்னங்க நீங்க..........உங்கள எப்படி பாக்கிறோம் நீங்க என்னன்னா இப்படி பண்ணா எப்படி........அஞ்சான் இண்டெர்விஎவ்ல கூட சொன்னங்க நான் எந்த ரசிகர்களுக்காக படம் எடுதனோ அவங்கள திருப்தி படுதிடேனு சொன்னங்க அவர்களுக்காக தான் நான் படம் எடுத்தேன் சொன்ன மத்தவங்க 120 ரூபா குடுத்து போறவங்க எல்லா இ ந வா ந வா என்ன சார்..... அப்போ நாங்க உங்கள் ரசிகன் இல்லியா......மக்கள் எவளோ அட்வான்சா இருகாங்க நீங்க என்னடான .........போங்க பாஸ்......
    about 13 hours ago ·   (13) ·   (0) ·  reply (0) · 
    derick · derick · mohamed  Up Voted
  • Anand Arumugam  
    "ரசிகர்களிடம் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவதும் தவறான அணுகுமுறை என்பது அஞ்சான் விஷயத்தில் உறுதியாகிவிட்டது." அஞ்சானுக்காக 20 லட்சம் யூடியூப் ஹிட்ஸ் கிடைத்தவுடன் சக்சஸ் மீட் வைத்தவர்கள், படம் சரியில்லை என்று கலாய்த்தால் ஏற்றுதானே ஆகவேண்டும்?"
    about 13 hours ago ·   (8) ·   (0) ·  reply (0) · 
    derick · Dinesh  Up Voted
  • R.BALAKRISHNAN  
    எதோ அஞ்சான் படம் மட்டும் தான் படு மொக்கை என்பது போலவும் இதற்கு முன் வந்த மற்ற படங்களெல்லாம் சூப்பர் என்பது போலவும் பலர் பேசுவது சரியல்ல. ஆதி, குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, தலைவா, தாண்டவம், ராஜபாட்டை, கந்தசாமி, நய்யாண்டி, மரியான், 7-ம் அறிவு, மாற்றான் என பல படங்கள் மித பெரிய தோல்வியை அடைந்த போதும் கூட பெரிய நடிகர்கள் பின்னால் சுற்றும் இயக்குனர்களை என்னவென்று சொல்லுவது. ஓவர் buildup உடம்புக்கு ஆகாது என்பதை தமிழ் சினிமா உலகம் எப்போது உணருமோ தெரியவில்லை. அதே சமயம் பாபா, குசேலன் போன்ற படங்களின் படுதோல்விக்கு பிறகு தான் பல சிறிய பட்ஜெட் படங்கள் வந்து வெற்றி பெற ஆரம்பித்தன என்கிற உண்மையையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
    Points
    1270
    about 14 hours ago ·   (23) ·   (13) ·  reply (1) · 
    மதன்  Up Voted
    Dinesh  Down Voted
    • Dinesh  
      நீங்க சிலவற்றை மறந்துட்டீங்க பில்லா 2, ஏகன், அசல், ஆழ்வார், பரமசிவன், ஜி, ஜன, அன்ஞ்சநேய, ராஜா, ரெட், ஒஸ்தி.(தயவுசெய்து ஒரு சார்பா கமெண்ட் போடதீங்க)
      about 10 hours ago ·   (18) ·   (2) ·  reply (1) · 
      • R.BALAKRISHNAN  
        ஒரு சார்பாக கமெண்ட் போடவில்லை. இந்த படங்கள் என் நினைவுக்கு வரவில்லை. அதை நினையவு படுத்தியதற்கு நன்றி நண்பரே.
        about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Santhoshonline Flim Maker 
    மொக்க படத்தை எடுத்துவிட்டு , சமுக வலை தளம் , ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ,மேல் பழி போடுவது மெகா தவறு . படம் நன்றாக இருந்தால் நீங்கள் விளம்பரம் செய்ய தேவை இல்லை , ரசிகர்கள் கருத்துகளே உங்களுக்கு விளம்பரம் செய்துவிடும் . நீங்க மொக்க படம் எடுத்தா மொக்க நு தான் சொல்வார்கள். நீங்க நல்ல படத்தை தர முயற்சி செயுங்கள்
    Points
    175
    about 14 hours ago ·   (35) ·   (1) ·  reply (0) · 
    derick · derick  Up Voted
  • chandraa  
    THE OTHER SURYA LOOKS LIKE AN UNCLE WHO SEARCHES HIS TEENAGE DAUGHTER WITH SPECTACLES HE LOOKS LIKEFORTYFIVEPLUS HIS HEIGHT IS HIS PROBLEM
    Points
    1115
    about 14 hours ago ·   (3) ·   (4) ·  reply (0) · 
    மதன்  Down Voted
  • CLUTCH  
    கற்று தரும் பாடம் : "அஞ்சான்" என்று பெயர் வைத்தாலும் ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கெல்லாம் பயந்து தான் ஆக வேண்டும் .
    Points
    190
    about 14 hours ago ·   (31) ·   (1) ·  reply (0) · 
    derick  Up Voted
  • s.m.natarajan  
    தனது நடிகர் தவிர யார் நடித்த நல்ல படமானாலும் அதை நக்கல் செய்து மிக மோசமாக சித்தரிக்கும் ரசிக வெறியர்களின் போக்கு கேவலமானது.ஆனாலும் பொய்யையும் புனைசுருட்டையும் ஆபாசத்தையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் சினிமாக்கள் ஒழிந்தால் நல்லது. சிநினிமா பாடல் இசிதட்டு வெளியிடும் மேடைகளிலும் வெற்றி விழா நிகழ்சிகளிலும் முன்னால் தமிழக முதல்வர் முன்னிலையில் சிறிதும் வெட்கம் இல்லாமல் மிகக்குறைவான கேவலமான தொடைகள் தெரியும்படி ஆடையணிந்து வந்து விழாவை சிறப்பித்த நடிகைகளை யாரும் கண்டிக்காத போக்கு போன்ற நிகழ்வுகளால் சினிமா ஒழிந்தால் சாமானிய ஏழை மக்களது வாழ்க்கை தரம் உயரவும் நாட்டில் கற்பழிப்பு போன்ற நிகழ்வுகள் நடக்காமலும் இருக்கும்.
    Points
    155
    about 15 hours ago ·   (20) ·   (3) ·  reply (0) · 
    RBALAKRISHNAN  Up Voted
    derick  Down Voted
  • vel  
    நான் அஞ்சான் இன்னும் பாக்கல. பாத்துட்டு தான் கருத்த சொல்ல முடியும்.
    about 16 hours ago ·   (1) ·   (4) ·  reply (1) · 
    • shankar  
      உங்க விதி உங்கள் கையில்.
      about 13 hours ago ·   (12) ·   (2) ·  reply (1) · 
      • Amaran  
        மொக்க கத்தின்னு ஒரு படம் வரப்போகுது, அத பார்க்காமல் இருப்பதும் உங்கள் விதிக்கு நல்லது
        about 9 hours ago ·   (5) ·   (10) ·  reply (0) · 
        RBALAKRISHNAN  Up Voted
  • சூர்யா  
    ”சினிமா என்பதே முழுக்க முழுக்க கேலிப்பொருளாக மாறியதுதான் இந்த வணிக முயற்சியின் உச்சம். நொந்தசாமி”க்கும் பின்னும் திருந்தாத வணிக சினிமா இயக்குநர்கள்.தேவையற்ற பில்ட் அப்புகள், ஒப்பனிங் என்று தன்னைதானே மாய்த்துக் கொள்ளும் தமிழ் சினிமாவை மீட்டெடுக்க இனி இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை “அஞ்சான்” அலுப்பு மருந்து மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. உள்ளூர மகிழ்ச்சியாய் இருக்கிறது. கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டால் சரி. இல்லையேல் கசப்பு மருந்துதான்.
    about 20 hours ago ·   (13) ·   (0) ·  reply (0) · 
  • derick  
    Social media is reflection of its users opinions, its similar like that of letters to the 'The Hindu' section. The film was worse, too much blood, too much violence, too much repetition. They made a bad movie, let them accept it and move forward. A movie show costs 400 Rs including snacks and parking fees per person so if he or she finds the money wasted surely there will be bad opinions and reports about it. That too when you book to watch it with your friends or family, none of them find it entertaining, expect harsh reviews.
    Points
    4290
    about 21 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • sriram  
    மக்கள் என்ன முட்டாள்களா,நீங்க மொக்க படம் எடுத்தா மொக்க நு தான் சொல்வார்கள் ,இதே ரசிகர்கள் சூர்யாவின் சிங்கம் படத்தை குடும்பத்துடன் ரசித்தார்கள் ,சோசியல் மீடியாவிலும் நல்ல சப்போர்ட் செய்தார்கள் நீங்க நல்ல படத்தை தர முயற்சி செயுங்கள்
    about 21 hours ago ·   (26) ·   (1) ·  reply (0) · 
    Anand-Arumugam · Anand-Arumugam · derick · derick  Up Voted
  • Bhaskar  
    What ever may be the hero before chosen story must unique from previous stories .it must must good story and screen play drive film.surya have unique image in industry but anjaan film it spoiled his career growth.. sometimes he act as awesome sometimes he act overacting
    about 23 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
    derick  Up Voted
  • Nallarasu  
    Give the preview show to reviewers of TAMIL HINDU. That is more than enough (For the proof of their genuine, read the review of "ANJAAN" ).
    Points
    1225
    about 23 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • shankar  
    சரக்கு (அய்யோ 'அந்த' சரக்கு இல்லை ) நல்லா இருந்தால் படம் நன்றாக ஓடும்.நல்ல படங்களை பார்க்க ஒரு கூட்டம் இருக்கு.இப்பொது கூட திரு பார்த்திபன் படம் ஸ்லொவ் ஆகா பிக் உப ஆகி இருக்கிறது.அஞ்சான் நல்லா இல்லை அதனால் ஊத்திகிச்சு. அவ்ளோதான். Let us call a spade a spade.Sometimes nitizens call a spade a spear also.
    Points
    2850
    about 24 hours ago ·   (16) ·   (0) ·  reply (0) · 
    RBALAKRISHNAN · derick · derick  Up Voted
  • anbu  
    டோன்ட் வொர்ரி ... சூர்யா.... கீப் இட் up
    about 24 hours ago ·   (1) ·   (0) ·  reply (1) · 
    • shankar  
      கீப் இட் அப் ஆ ! ஐயஊஒ இன்னும் ஒரு படமா ? பயமா இருக்குங்க.
      about 13 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
      RBALAKRISHNAN · derick · derick  Up Voted
  • Vikram K  
    நல்ல கதை அம்சமுள்ள படங்கள் மட்டும் நடித்து கொண்டிருந்தபோது திரு. சூர்யாவின் பேச்சும் நடவைக்கையும் எப்படி இருந்தது? இவரை கொண்டாட வேண்டும் என்று நினைத்தவர்களில் நானும்தான் ஒருவன். அனால் இவரின் குணம் மற்றும் நடவடிக்கைகள் பணத்தை நோக்கியும், பக்கா வியாபாரியாக மாறியது மற்றும் இன்றி அவரிடம் இருந்த நடிப்புத்திறமை மற்றும் கலை தாகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துகொண்டுள்ளார். இது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம். இவரை தொடர்ந்து இவர் தம்பியும் இதைத்தான் செய்து வருகிறார். "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். - சூர்யா இதில் ஞாயம் இருக்கிறதா. இவரின் எதிரிகளே ஆனால் தெய்ட்டர்ருக்கு செல்லாமலே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடலாம். நாடகம் போதும் சூர்யா. மக்கள் மூடர்கள் அல்ல.
    Points
    190
    about 24 hours ago ·   (17) ·   (0) ·  reply (1) · 
    derick  Up Voted
    • shankar  
      I fully agree with u.In the beginning I also thought, that here is an actor who is taking up different roles etc.But slowly, I find this fellow is inclined to earn more money through this medium by concentrating on advertisement.I think Kamal and Ajith are standing examples of not being over zealous and greedy for advertisement .Now Surya has got repetitive also and I think he is going the Satyaraj way, may be he has to reinvent himself now.The warning is clear from the debacle of Anjaan.
      about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • balaji  
    ஒரு பெரிய நடிகரின் படம் என்றல் அணைத்து ரசிகர்களும் எதிர்பார்ப்பாக படத்தை போய் பார்ப்பது நியாயம் தான்.. எனவே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எதிர்பார்ப்பினை மட்டும் வளர்த்து விடு படத்தினில் ஒன்னும் இல்லாமல் வைத்தல் ரசிகர்களுக்கு கோவம் வரைதான் செயும்.. நீங்கள் குறிப்பிட்ட கதைக்கே வருகிறேன் , தனக்கு பிடிகாத நடிகரின் படமா இருந்த குறை கூறுபவர்கள் இருக்கதான் செய்கிறார்கள், ஆனா விஜய் = துப்பாக்கி , அஜித் = மங்காத்த என நல்ல படங்கள் வந்த பொது இவர்களின் விமர்சனம் எடுபட வில்லையே.. இதனை புரிந்து கொண்டு படம் எடுத்தல் போதும் ரசிகர்களை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை ...
    a day ago ·   (17) ·   (0) ·  reply (0) · 
    derick  Up Voted
  • Ramakrishnan Shanmugasundaram  
    கதை இல்லாமல் பெரிய நடிகர்களை வைத்து என்ன படம் வேண்டுமானாலும் எடுத்து விடலாம் என்ற எண்ணம் உள்ளது. அதற்கான அடி தான் மக்கள் அஞ்சான் படத்திற்கு குடுதிர்கிரர்கள் இதை தமிழ் பட தயாரிபளர்கள் மற்றும் நடிகர்கள் நன்கு உணர வேண்டும் சமூக வலைதளங்கள் மூலம் விமர்சனம் நன்றே
    a day ago ·   (12) ·   (0) ·  reply (0) · 
    derick · derick  Up Voted
  • Anthony Fernando  
    இந்த இரசிக மகா பட்டாளங்கள் இருக்கின்றனவே இவற்றின் அங்கங்கள் அனைததிலுமே தன்னையுணரா தனித்தன்மை ஓங்கிநிற்பது கவனித்தற்பாலது. இல்லையென்றால் பசிக்குக் கொடுக்காமல் பட பேனர்களுக்குப் பால் அபிசேகம் செய்கின்ற இரசிக அர்ச்சகர்கள் இருப்பார்களா? கருத்திலும் இரசனையிலும் உரையிலும் எழுத்திலும் தனது விருப்பு நடிகரை விடவும் மற்றவர் உயர்ந்தவரல்ல அல்லது உயர்ந்து விட அனுமதிப்பதே இல்லை என்ற தீவிர வைராக்கியம் இருப்பதாலும் வெறும் அரைகுறை மேதாவிகள் வாய் கூசாமல் இழித்தலைப் பொழுது போக்கான கொள்கையாய்க் கடைப்பிடிக்க முற்படுவதாலுமே இப்படி கண்டபடி செய்திகளைப் பரப்புகின்றார்கள். இரசனைகளிலுள்ள மாறுபாடுகளும் கருத்துக்களின் காட்சிகளின் சமூகம் சார்ந்து நிற்கும் நிலைப்பாடுகளும் சரியாகக் கணிக்கபடும் விமர்சனங்களை தகுதி வாய்ந்தவர்களகக் கொண்டு முன்வைக்க பத்திரிகைகள்தான் முன்வர வேண்டும். இணையத்தளத்தில் எவரும் எதையும் எழுதலாம். ஆனால் அவற்றை நம்பி முடிவெடுப்பதில் பிழை செய்தால் அதன் விளைவு நல்ல கலைஞர்களைக்குழிக்குள் தள்ளிவிடலாம். கலைஞர்களைத் தலையெடுக்கவே முடியாதபடிக்குப் பொருளாதார வீழ:ச்சிக்குள் வீழ்த்தியும் விடலாம். பரிதாபம்
    Points
    180
    a day ago ·   (5) ·   (3) ·  reply (0) · 
  • ராஜதுரை  
    இந்த பிரச்சனைக்கு இரண்டு தீர்வுகள்... தீர்வு 1:- இனி எப்பேர்ப்பட்ட மாஸ் ஹீரோ படமா இருந்தாலும் உள்ள 'சரக்கு' இல்லனா கதை 'கந்தல்' என்ற யதார்த்தம் புரிந்து இயக்குனர்கள் கதை புனைய வேண்டும் :-) தீர்வு 2 :- மாஸ் ஹீரோக்கள் இணைந்து டபுள் மற்றும் ட்ரிபிள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் நடித்தால் ரசிகர்கள் இடையே நடைபெறும் வீண் வார்த்தை சண்டைகள் கணிசமாக குறையும். இனிமேல் நல்ல, வித்தியாசமன கதைகள் வருவதையும் அவை ஹிட் அடைவதையும் எந்த கொம்பனும் தடுக்க முடியாது :-)

0 comments: