Saturday, August 23, 2014

நா என் வாழ்க்கையிலே அதிகமாய் சுட்டது..

1. தொலைதூரப்பேருந்துகள் நாம் சாப்பிட நிறுத்தும் இடங்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கையேந்திபவனோ ,மெஸ்சோ இருக்காது


================2 சேலம் ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் ல அஞ்சான் டிக்கெட் பிளாக் ல வித்துட்டிருக்காங்க.இன்னும் நியூஸ் பரவல போல.


================3 சேலத்துல ஒரு சாதா ஹோட்டல்ல ஒரு இட்லி 15 ரூபா.அடெய்.ஈரோட்ல 6,ரூபாய்க்கு மாவு பாக்கெட் வாங்குனா ஒரு குடும்பமே வரிசைல உக்காந்து சாப்டலாம்


=================4 பஸ் பயணத்தூக்கத்தில் கனவு.டிரைவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி.திடுக்கிட்டு எழுந்தேன்.டிரைவர் சீட்டில் இருந்தார் .என்னைக்காணவில்லை


===============


5 இந்தப்பொண்ணுங்க எல்லாம் கில்மா ட்வீட்சா போட்டுத்தள்றாங்களே? வீட்ல அம்மா அப்பா ஏதும் சொல்ல மாட்டாங்களா?


=================


6  கெஸ்ட் வீட்டுக்குப்போனேன்.இத்தனையையும் சாப்பிடவா போறான்?னு.12 ஸ்வீட் வகை,4 கார வகை வெச்சாங்க.பார்சல் பண்ணிக்குடுங்கன்ட்டேன்.யார் கிட்டே?


===============

7 நீ = தாவணி போட்ட தீபாவளி உன் தங்கை = சுடிதார் போட்டு துப்பட்டா போடாத பொங்கல்.


================


8 அஞ்சான் மெகா ஹிட்டுக்குப்பின் ராசி ஹீரோயின் சமந்தா வின் நடிப்பில் வெளி வரும் எங்கள் இளைய தளபதியின் கத்தி மாஸ் ஹிட் ஆக வாழ்த்து ;-)=================


9 நீ எனக்குத்தராம பூந்தி சுட்டது கூட வலிக்கலை.தனி ஆளா 3 எடசு பூந்தியையும் 30 நிமிஷத்துல சாப்டியே அதான் வலிக்குது


=================

10  ஏழாம் அறிவு படத்தை இப்ப ரிலீஸ் பண்ணா எபோலோ வைரஸ் பயத்துல ஓடிடுமோ?=================


11  கட்டி இருப்பது ட்ரான்ஸ்பேரன்ட் ,ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.இது ல முந்தானை யை எல்லாம் சரி செய்யுது.ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல #9*


==================


12 ஸ்கூல் டேஸ் ல டீச்சர் மேல இங்க் தெளிப்பேன் னு ஜெயம் ரவி சொன்னதும் அதுக்கு டிடி காட்ன ரீ ஆக்சன் 25 ஜோதிகா சேர்ந்தாலும் தர முடியாது#ஓவராக்ட்


=================


13  நா என் வாழ்க்கையிலே அதிகமாய் சுட்டது... வேறென்ன உன்் கைக்குட்டைகளைத் தான்.. அவ்வ்.. :))"


====================


14 படிக்கும் யாருக்கும் புரிலன்னா அதுக்கு பேர் நுட்ப ட்விட்:-))"எழுதுனவங்களுக்கே (டைப்)புரியலைன்னாஅது மதி நுட்ப ட்வீட்===============


15  டாக்டர் vs பொது மக்கள் டைட்டில் ஓக்கே.ஆனா நர்ஸ் ங்க யாரும் இல்லையே?அவனவனுக்கு அவனவன் கவலை


=================


16  பூமியை வாட்டர் வாஷ் செய்யும் இலவச சர்வீஸ் சென்ட்டர் இயற்கை அன்னையின் மழை


=============


17  மழை வந்தால் மங்கையர்க்குக்கொண்டாட்டம் வர முக்கியக்காரணம் மறு நாள் வீட்டு வாசல் தெளிக்கத்தேவை இல்லை====================


18  அதிகாலை யில் எழுந்ததும் பசி எடுத்தால் அது ஆரோக்யமான ஜீரண சக்தியின் அடையாளம் என்பதை உணராமல் டீக்கடைக்குப்போலாமா? என யோசிப்பான் தமிழன்===================


19  பேஸ்புக் ஸ்டேட்டசில் அன்மேரீடு என போட்டுக்கொள்வதை ஒரு ஸ்டேட்டசாகவே வெச்சிருக்காங்க பலர்


===================


20  டியர்! தண்ணி அடிக்கனும்னு தோணும்போது என்னை கிஸ் பண்றதா நினைச்சுக்கோ!


 ம்.ஆனா உன்னை கிஸ் பண்ணனும்னு நினைக்கறப்போ தண்ணி அடிக்கலாமா?


========================

0 comments: