Friday, August 29, 2014

இரும்புக்குதிரை - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு   பைக் ஆக்சிடெண்ட்ல  தன் அப்பாவை இழந்துடறார். அதனால அவருக்கு  பைக் ஓட்டறதுனாலே  பிடிக்கறதில்லை . அவர் பீட்சா டெலிவரி பண்ணும்   கடைல பார்ட் டைம்  ஜாப் பண்ணிட்டு இருக்கார் . 

அப்போதான் அவர்  கண்ணுக்கு  ஹீரோயின்  தட்டுப்படறார் . இப்போ ஹீரோவோட மெயின் ஜாப்பே  ஹீரோயின்  பின்னால  சுத்துவதுதான். ஹீரோயினுக்கு   ஹீரோ  மேல  லவ் எல்லாம்  இல்லை . ஆனாலும்  அதும்  கூடவே  சேர்ந்து  சுத்துது . 


 பைக் ல ரைடு  உடுவது  ஹீரோயினுக்குப்பிடிக்கும் . அதனால  ஹீரோவை  ஒரு பைக் வாங்கச்சொல்லுது . பைக்  ஷோ  ரூம் ல  போய்  அட்டகாசமா  ஒரு செகண்ட்  ஹேண்ட் பைக் வாங்கறாங்க . 

 அந்த  பைக் ல   ஜாலியா  ஒரு ரைடு  போகும்போது   வில்லன்  கரெக்டா எண்ட்ரி ஆகி  ஹீரோயினை கடத்திட்டுப்போய்டறார். 

 டக்னு  இடைவேளை . 

 அடேங்கப்பா . பிரமாதமான கதையா  இருக்கேனு    யோசிச்சுட்டு   செகண்ட்  ஆஃப்  பார்த்தா   இன்னும்   பிரமாதமான  கதை


 அதாவது அந்த  செகண்ட்  ஹேண்ட்  பைக்  வில்லனோடது . வில்லனோட  தம்பி  அந்த  பைக்கை  ஒரு பந்தயத்துல  ஹீரோ   கிட்டே தோத்துடறாரு. வில்லனுக்கு அந்த  பைக்னா  உயிரு . உயிருக்கு  உயிரான  பைக்கை  தம்பி இப்டி அநாமத்தா  தொலைச்ச்ட்டாரு. பொதுவாவே  உடன் பிறப்புன்னாலே   பிரச்சனை  தான் . 

அண்ணன்  திட்டுவார்னு பயந்து   தம்பி  தற்கொலை பண்ணிக்கறார். ( அய்யோ அம்மா செண்ட்டிமெண்ட்  செம்மல் ) ஹீரோ   வில்லன்  கூட பைக் ரேஸ் ஓட்டி ஜெயிக்கறாரா? தோக்கறாரா?னு தியேட்டர்ல  போய் அதுவரை  படம்  ஓடிட்டு  இருந்தா  பார்த்து  தெரிஞ்சுக்குங்க  ஹீரோவா   அதர்வா. ஆள்  செம  ஹேண்ட்சம் .  அப்பா  முரளியை  விட செம பர்சனாலிட்டி . வாரணம் 1000  சூர்யாவுக்கு  டஃப் ஃபைட்  குடுக்கும் அளவு  சிக்ஸ் பேக் பாடி .  அவர்  சிரிக்கும்போது    ஒரு அப்;பாவிக்குழந்தை  சிரிப்பது  போல்  செம  க்யூட் . காலேஜ்  கேர்ள்ஸ்  க்ரேஸ் ஆவது  உறுதி 


ஹீரோயினாக   ப்ரியா ஆனந்த் . அழகான  அவர்  கூந்தலை அலங்கோலம் ஆக்கி கேவலமா   ஒரு  ஹேர் ஸ்டைல் . ஓப்பன் டைப் கேர்ள் என்பதால் பாப்பா  எங்கே  போனாலும்   லோ கட் டிரஸ்  போட்டுட்டுதான்  போறாப்டி. அடிக்கடி  நடக்கும்போது  ஒரு குதி  குதிச்சா மாதிரி நடக்குது . அது மேனரிசமா? ஸ்டைலா? அல்லது  பார்க்காதவங்க  எல்லாம் நல்லா பார்த்துக்குங்கனு குதிச்சு  காட்டுதா  தெரியலை . 


 சைடு  நாயகியா  அரேபியன்  ஹார்ஸ்  , திருப்பதி லட்டு  லட்சுமிராய் எனும்  ராய் லட்சுமி . ஒரே  ஒரு குட்டைப்பாவாடை ( ஸ்கர்ட்டாம் )  ஸ்லீவ்லெஸ் சர்ட் ( உலகத்திலேயே ஸ்லீவ் லெஸ் சட்டை  போட்டது இந்த பாப்பா தான் )  மட்டும்  போட்டுட்டு அசால்ட்டா வருது . ட்விட்டர்ல  ஒரு வாரமா  செம எக்சைட்மெண்ட் . ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் -னு  ஓவரா அலப்பறை பண்ணீங்களே மேடம் , இதுக்குத்தானா?  முடியல 


 வில்லனா  ஏழாம் அறிவு வில்லன் . அவர்  வரும்போது ஆடியன்ஸ்  கை  தட்றாங்க . க்ளைமாக்ஸ்     ஃபைட்  நல்லாருக்கு  . இன்னும் நல்லா  பண்ணி  இருக்கலாம்.


ஹீரோவோட  அம்மாவா  தேவதர்ஷினி . யங்கா தான்  இருக்கு . ஓப்பனிங் சீன் ல   ஜாகிங்க்  போகும்போது  கூட வரும்   ஃபிகர்  ஓக்கே


படத்துக்கு  வசனம்  நர்சிம் . பிரபல  ட்வீட்டர் . சக  ட்வீட்டரா  வரவேற்கிறேன் .ஒரு மொக்கை படத்துக்கு  இந்த அளவு  சிரத்தை எடுத்து  வசனம்  எழுதிய  அவர் ஆற்றலைக்கண்டு  வியக்கேன்


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   பாலகுமாரன் -ன்  நாவல்  டைட்டிலை அவர் கிட்டே அனுமதி வாங்காமலேயே  நைசா  எடிட் பண்ணி  யூஸ்  பண்ணிக்கிட்ட விதம் 


2 கதைக்குத்தேவை  இருக்கோ  இல்லையோ  , நாயகிகளா  2 பேரை   கம்மியான      டிரஸ் ல  உலவ விட்டது 3 பாடல்கள்  தாமரை . 2 பாட்டு  நல்லாருக்கு .ஒரு மெலோடி  . ஒரு   குத்தாட்டப்பாட்டு   செம ஹிட் ஆகும் 


4  செஸ் போர்டில்  ஹீரோ  ஹீரொயின்  ராணியை வெட்டுவதும் அதைக்கண்டு   ஹீரோயின்  சிரிக்கையில்  ஹீரோ   டமால் ஆகும்போது  ஹீரோ செஸ்  போர்டில் உள்ள  ராஜா  கீழே  விழுவதும்   குட் டச்


5   அவ்ளவ்  பெரிய  பிரச்சனை  ஓடிட்டு  இருக்கும்போது  அந்த டமார  கிழவி “ நாராயணன்  ஏன்  கோபமா  இருக்கான் ?  “ என  கேட்பது சரியான சிச்சுவேஷன்  காமெடி 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 .  அண்ணன் பைக்கை   சூதாட்டத்துல  தோத்துட்டா  யாராவது  தற்கொலை செஞ்சுக்குவாங்களா? வீட்டை  விட்டு  ஓடுனா மேட்டர்  ஓவர் . உலகத்தை  விட்டே  ஓடனும்னா  கடன்  தொல்லை  இருக்கனும், அல்லது ஏதாவது  காதலி எனும் கடன் காரி  தொல்லை  இருக்கனும் .

2  ஹீரோ , ஹீரோயின்  கூட பைக்ல  போகும்போது  7 பேர்  புடை  சூழ  வில்லன்  ஹீரொவை அட்டாக் பண்ணி  ஹீரோயினை கடத்திட்டுப்போறார். அதுக்குப்பதிலா அவர் பைக்கை எடுத்துட்டுப்போய் இருந்தா அப்பவே  படம்  ஓவர் . ஹீரோயினை கடத்தி  வெச்சு  பைக்கை  குடுத்துட்டு அவளை  கூட்டிட்டுப்போ  என  கேட்கும்போது   ஆடியன்ஸ்  சிரிக்கறாங்க பாஸ் ,. கொஞ்சம்  கூட மெச்சூரிட்டி  இல்லாத   திரைக்கதை .  (  இதை சமாளிக்க படத்தில் வரும் ஒரு கேரக்டரே இதே  கேள்வியை  வில்லன் கிட்டே கேட்பது  போலவும்  அதுக்கு  ஒரு ச்சோப்ளாங்கி பதிலை  வில்லன்  சொல்வதும்  செம் காமெடி  ) 


3  பொல்லாதவன்  படம்  கூட பைக்கை   பேஸ் பண்ணி வந்த படம்  தான் . அதில் எவ்வ்ளவு  நுணுக்கமாக  , துல்லியமாக  உணர்வுப்பூர்வமா  கதை  சொல்லி  இருப்பார்  வெற்றி மாறன் ?  இதுல  இயக்குநர்  சொதப்பிட்டார்மனம் கவர்ந்த வசனங்கள்

1. வா.எங்க கூட் ஜாகிங் 2 ரவுண்ட் . ஜெகன் = நோ.நேத்து நைட்டே 4 ரவுண்ட் முடிச்ட்டேன் # இ கு

2. உங்க பையன் லேப்டாப் ல கண்ட கண்ட இங்லீஷ் பட்ம் டவுன் லோடு பண்ணி வெச்சிருக்கான். டேய்.தமிழ்ப்படமா பாருடா # இ கு

3. அவனவன் குடிக்கறதே பீலிங்சை மறக்கத்தான்.நீ என்னடான்னா சரக்கடிச்ட்டு பிளாஸ்பேக் பீலிங் காட்றியே # இ கு

4. சார்.பால் மேல விழுந்துடுச்சா? உடம்பு னு 1 இருந்தாதானே மேல படும்? -மனோபாலா # இ கு

5. ஏன் பைக்கை நிறுத்தலை? பிரேக் பிடிக்கலை. பாத்தா புது பைக் போல் தெரியுது? ஐ மீன் நான் பிரேக் பிடிக்கல # இ கு

6. பொண்ணுங்களுக்கு காம்ப்ளிமெண்ட் பண்ணாத்தான் பிடிக்கும் ,U R cute னு sms அனுப்பு # இ கு

7. மிஸ்! நாளைக்கும் வருவீங்ளா? தெரில .வரனுமா? # இ கு

8. நாம வெச்சிருக்கும் பைக் ஊர்ல எவனும் வெச்சிருக்கக்கூடாது.ஓட்டும்போது ஊரே திரு.ம்பிப்பார்க்கனும் # இ கு

9. பொண்ணு மேல இந்தளவ்வுக்குக்கூட இன்ட்ரஸ்ட் இல்லின்னா லைf வேஸ்ட் #இ கு

10. நாம பக்கத்துல இல்லாதபோதும் ஒரு பொண்ணு நம்மைப்பத்தியே நினைச்சா அதான் லவ் # இ கு

11. உன்னைத்தான் பிடிக்கலைனு சொல்லிட்டாளே?,விட்ரு ஆனா எனக்கு அவளை ரொம்பப்பிடிக்குமே? # இ கு

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


பிரபல ட்வீட்டர் நர்சிம் தான் டயலாக் .அட்ரா விசிலை # இரும்பு குதிரை


ஓப்பனிங் சீன் ல் ஹீறோவின் அம்மா தேவதர்சினி ஜாகிங் போகுது.கூட ஒரு பக் வீட் பிகரு # இ கு

3.  அரபிக்குதிரை லட்சுமிராய் ஓப்பனிங் சீன் ல குத்தாட்டம்.செம.ஆனா பாடல் வரி ஹலோ பிரதர் னு வருது.தங்கச்சியா? # இ கு

4.  அதர்வா சிக்ஸ் பேக் காட்றாரு.ஏ சென்ட்டர் கேர்ள்ஸ் கை தட்டுதுங்க்.இந்தியா ஜொள்ளரசு ஆகிடும்டோய் # இ கு

5. பிகரு அழகா? செம அழகு. அப்போ கண்டிப்பா மூளை இருக்காது.சும்மா மொக்கை போடு# இ கு

6. மல்கோவா மாம்பழம் மாதிரி லட்சுமிராய் பக்கத்துல இருக்கு.அது தோழியாம்.ப்ளம்ஸ் பழம் போல் சின்னதா இருக்கு ப்ரியா ஆனந்த்.அது காதலியாம் # இ கு

7. ப்ரியா ஆனந்த் கழுத்து செக்கச்செவேல் னு இருக்கு.தோள் ,சோல்டர் எல்லாம் மாநிறமா இருக்கு.பவுடர் போட்டா புல்லா போடனும் # இ கு

8. லட்சுமிராய் ஒரு பிராவும் ஒரு டவுசரும் போட்டுட்டு ஆபீசுல வேலை செய்யுது.பாண்டிச்சேரில அப்டி ஒரு ஆபீச் இருக்கா? # இ கு

9. இரும்பு குதிரை = இடைவேளை.இது வரை கதை னு 1 கண்ல தட்டுப்படலை.கிளாமரை ஒப்பேத்திட்டாங்க.


சி பி கமெண்ட்  -
இரும்பு குதிரை= கதையே இல்லாத அட்டர் பிளாப் படம் = விகடன் மார்க் = 39,ரேட்டிங் = 2 / 5எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 39

குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2  /  5
   


  1. Irumbu Kuthirai is an upcoming Tamil action film written and directed by Yuvaraj Bose and produced by AGS Entertainment. The film stars Atharvaa, Priya Anand, Johnny Tri Nguyen, Raai Laxmi. 

  2. Director: Yuvaraj Bose
  3. Music composed by: G. V. Prakash Kumar
  4. Producer: Kalpathi Aghoram
  5. Production company: AGS Entertainment

0 comments: