Friday, August 29, 2014

டியர்.அழகான பொய் னா என்ன?

1. இண்ட்டர்வ்யூவில் லேடிMD= கேட்ட கேள்விக்கு என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்லுங்க


 மேடம்.நான் என்ன ஐ லவ் யூ வா சொல்லப்போறேன்?


================

2  ஹலோ! வேந்தர் டிவி ங்களா? எல்லாம் 3 , மூணா தெரியுதுங்க.


அப்டிங்களா?,சரி.மூவேந்தர் டிவி னு பேர மாத்திடறோம்

================


3  டியர்.இன்னைக்கு கால் பண்ணு.


ஏதாவது முக்கியமான விஷயமா ?

நாம என்னைக்கு அப்டி பழகி இருக்கோம்? சும்மா கடலை போடத்தான்


================

4 டாக்டர்.மர்ர்க்கோபோலோ பீர் சாப்ட்டா எபோலோ வருமா?


நல்லவேளை.எக்சாம்ல நல்ல மார்க் வருமானு கேட்கலை


====================

5 டியர்.ஹேப்பி பர்த் டே.எப்பவும் நீ சிரஞ்சீவியா இருக்கனும்


அதுக்கு நான் ஆந்திரா தான் போகனும்


==============

6 டாக்டர்.தலைக்கு எண்ணெயே போடமாட்டீங்களா?


கத்திக்குத்து காஞ்சனா = ஆயில் சேர்க்கக்கூடாது னு டாக்டர் சொல்லிட்டாரு.


==============


7 ஜட்ஜ் = 50 லட்சம் ரூபா செக் ஏன் ரிட்டர்ன் ஆச்சு?


 சரண் = இது என்ன கேள்வி? பேங்க் அக்கவுண்ட் ல பணம் கட்டலை.அதான் ரிட்டர்ன் ஆச்சு?


=================


8 டியர்.அழகான பொய் னா என்ன?


நீ அழகா இருக்கே னு சொல்ற எல்லாப்பொய்யும் அழகான பொய் தான்


=================


7 என் புருசன் என்னை ரொம்ப தாங்கறார்.


ஓ.அவ்ளவ் செல்லமா?


ம்க்கும்.அடமானம் வைக்க செயின் தா ங்கறார்.நெக்லஸ் தா ங்கறார்
8  எம் டி = மெயில் அனுப்பி ஒரு வாரம் ஆச்சு.இன்னும் ரிப்ளை வர்ல


 இருங்க சார்.டிக்சனரி வெச்சு அர்த்தம் கண்டுபிடி  க்கவே 10 நாள் ஆகிடும்.


================


டேமேஜர் = ஏதாவது ஒர்க் சொன்னா முடிச்சுடறேன்னு சொல்லனும்.ட்ரை பண்றேன் னு சொல்லக்கூடாது.


 ஓக்கே சார்.ட்ரை பண்றேன் சார்'


===============


10 5 நிமிசம் ஆபீசுக்கு லேட்டா வந்தாலும் லெட்ஜர் ல டைம் போட்டுட்டு வாங்க. 


சரி சார்.நேத்து நைட் 1 மணி நேரம் எக்ஸ்ட்ரா ஒர்க் வாங்குனீங்ளே? அதை?


=================


11 டாக்டர். குண்டா இருக்கிறவங்க மேல சீக்கிரம் போயிடுறாங்களாமே? அதெப்டி முடியும்.இளைப்பு வாங்கும்.மாடி மேல போக லேட் ஆகும் 


=====================


12 சார்.கீழே விழுந்துட்டேன்.பேன்ட் கிழிஞ்சிடுச்சு.1/2 மணி நேரம் பர்மிசன் குடுத்தா வேற பேண்ட் மாத்திட்டு வந்துடுவேன். 


கத்தி SPL லுக் னுசமாளி 


================


13  டாக்டர்.இந்த க்ளினிக் வாஸ்து சரி இல்லை.வடக்கில் சூலம். 


ஜோசியரே.அது பரவால்ல.உங்க உடம்புல மூலம். 


===============


14  மனோஜ் = டாடி.ஹீரோவா நான்தான் நடிப்பேன்

 பாரதிராஜா = நான் மட்டும் தான் பார்ப்பேன்.பரவால்லியா? # சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்


===============

15 ஷங்கர் = இந்தப்படத்துல 2 கெட்டப் ல நடிக்கனும்


 விஜய் = 1 , ரெண்டு கெட்டப்பா? 2 நடிக்கனுமா? இம்ப்பாசிபிள் # எந்தரன் 2 


====================
16 லோலிட்டா = லவ் பெயிலியர் ்ல இருந்து எப்படி மீண்டு வரதுன்னு கிளாஸ் எடுக்கறேன் 


மிஸ்! எனக்கு மாசா மாசம் ஒரு நேசம் வந்து மோசம் பண்ணிடுது 

=================


17  நிறைய இனிப்பு சாப்டா டயாபடீஸ் வருமா #டவுட்டு"


யா .ஸ்வீட் கேர்ள் கூட பேசுனா வராது

==============

18
மேடம்.உங்களுக்கு பிபி ஜாஸ்தி.ஆயில் பதார்த்தம் சேத்திக்கவே கூடாது.தள்ளி வெச்சுடுங்க
 டாக்டர்.என் புருசன் பேரு ஆயில்யன்.அவரை சேத்துக்கலாமா?

=====================

19  திருப்பதி express திருவள்ளூரில் நிற்குமா சார் ?"

செயினைப்பிடிச்சு இழுத்தா நிக்கும்.500 ரூபா பைன்


================================================
20   பேசி பழகுன 7 நாள் லயே டியர் போட்டு பேசக்கூடாத

14 வது நாள் டார்லிங் டியர் னு கூப்டலாமா?

0 comments: