Sunday, August 31, 2014

ஷங்கர் படம் vs முருகதாஸ் படம்

1. 10 பாக்கெட் கொண்ட பேமிலி பேக்கேஜ் 1000 ரூபா


 ஸார் லூஸ் ல தருவீங்களா?


 காசு குடுத்தா லூசா இருந்தாலும் தருவோம் # ரீமிக்ஸ்


=========================


2  டாக்டர்.அடிக்கடி மருதாணி வெச்சுக்கிட்டா மரு சரி ஆகிடுமா?


விட்டா ஆணிவேரை அரைச்சு சாப்ட்டா கால் ல ஆணி சரி ஆகிடுமா?னு கேட்பே போல


========================


3  டாக்டர்.அடிக்கடி சினிமாவுக்குப்போனா கண்ணுக்குக்கெடுதலா? போனா தனியாப்போய்க்கோ.நர்சைக்கூட்டிட்டுப்போய்ட்டா நான் என்ன பண்ண?===============


4
எதுக்காக டாக்டர் டேபிள் ல இருந்த டேப்லட்டை எடுத்துட்டு வந்தே?


 மறக்காம டேப்லட் எடுத்துக்கனும்னு அவர் தான் சொன்னார்


===============


5 உயர் தர அசைவ உணவகம் னு போர்டு இருக்கே அசைவத்துல என்ன உயர் தரம்? 


தரமான சைவ உணவான அருகம்புல்லை மட்டும் சாப்பிட்ட ஆட்டை வெட்டி சமைப்போம்

====================


6
டாக்டர்.அடிக்கடி யாரையாவது திட்டணும் போலவே இருக்கு.என்ன பண்ண? 


ஏம்மா.வீட்ல புருசன் எதுக்கு இருக்காரு? திட்டு வாஙகத்தானே? ஸ்டார்ட் ம்யூசிக்


===================


7 சின்னதா பிஸ்நஸ் பன்னனும் எதாவது ஐடியா இருந்தா குடுங்கப்பா...."
ஒரு ஐடியா வுக்கு 500 ரூபா சார்ஜ்


=================


8 பிசிக்ஸ் மிஸ் பிந்துமாதவி = ஆப்பிள் கீழே விழுந்ததும் நியூட்டன் என்ன செஞ்சார்? 


லொள் மாணவன் = புது ஐ போன் வாங்கிட்டு ஆப்பிள வித்திருப்பார்
=================

9
DRஉங்க அட்வைஸ் படி டெய்லி பேக் பைப்பர் விஸ்கி ஒரு குவாட்டர் குடிச்சேன்.


யோவ்.நான் எப்போ அப்டி சொன்னேன்?


BP கம்மியா இருக்குன்னீங்ளே ?


================

10  நேர்முகத்தேர்வில்


 வணக்கம் சார்.

 வாங்க.உங்க பேர் என்ன?


 வணங்கா முடி சார்


இப்பதான் வணக்கம் வெச்சீங்க?


==================


11  கவுண்டமணி = டேய்.நான் ஒரு சிற்பி மாதிரிடா


செந்தில் = அண்ணே.நான் எஸ் ஏ ராஜ்குமார் மாதிரி


================


12  படத்தோட கதை என்ன?


பல ஹிட்ஸ் கொடுத்த என் கிட்டயே கதை கேட்டா எப்டி? "


WIN"ணைத்தாண்டி வருவாயா?


=============

13  சார்.ஸ்டாக் இருக்கும் வரை தான் இந்த அல்வா சேல்ஸ்


சும்மா அடிச்சு விடாதீங்க.ஸ்டொமக் இருக்கும் வரை சேல்ஸ் இருக்கும்


=============


14  டாக்டர்.குக்கர் ல சாப்பாடு வெச்சு சாப்ட்டா இதய நோய் வருமாமே?


 அப்போ குக்கர் ல இருந்து சாப்பாட்டை எடுத்து பிளேட்ல வெச்சு சாப்டுங்க


===============


15 ரஜினி, விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு?


 குஷ்பு பதில் # அவர் ஆதரவு என்னைக்கும் சுந்தர் சி க்குத்தான்


================


16 டவுன் பஸ்சில=் ஏப்பா.மரம் மாதிரி நிக்கறியே?நகர்ந்து வழி விடேன்.


மிஸ்! ஏன் மரங்கொத்திப்பறவை மாதிரி இந்த வெட்டு வெட்றீங்க?


=================

17
பொண்ணு சமந்தா மாதிரி இருக்கும்.


 அய்யய்யோ.டவுசரோட சுத்துமா? இது ஆவறதில்லைங்க


==============


18 முருகதாஸ் = தீபாவளிக்கு ஷங்கர் படம் வருதே.கத்தியை போஸ்ட்போன் பண்ணிடலாமா?


விஜய் = இணைய வாசிகள் நம்மை போஸ்ட் மார்ட்டம் பண்ணிடுவாங்க்ளே?


==================

19 விஜய் = மலையோட ஏன் மோதனும்? ஐ க்கு வழி விட்டு பொங்கலுக்கு கத்தி ரிலீஸ் பண்ணிடலாமே?


முருகதாஸ் = அது இன்னமும் டேஞ்சர்.தல யோட மோதனும்


=================


20 முத ரீல் ல வில்லன் ஹீரோவை மிரட்றான்.அடுத்த ரீல் ல ஹீரோ வில்லனை மிரட்றாரு


விஜய் = நேத்து லைக்கா நிறுவனம் நம்மை மிரட்டுச்சே அந்த மாதிரியா?


==================

0 comments: