Wednesday, August 13, 2014

பொண்ணுங்களை கிள்ளுக்கீரையா நினைக்கறவரா நீங்க?

1.  டியர்.இது நான் 12ம் வகுப்பு படிக்கும் போது வரைஞ்சது ;-)


நம்பவே முடியல.


நான் வரைஞ்சேன் என்பதையா?


12 வது படிச்சேன்னு சொன்னதை

==================


2 நான் நல்லாப்படிக்கலை.படிச்சிருந்தா வாழ்க்கை போர் அடிச்சிருக்கும்படிக்காதங்காட்டி உங்கப்பா ,வாத்தியார் எல்லாரும் அடிச்சிருப்பாங்களே?


====================


3 கடைக்குள் அத்து மீறி நுழைஞ்சதால உங்க மேல டிரஸ் பாஸ்ஸிங் வழக்கு போட்டிருக்கோம்.எப்டியோ.நான் பாஸ் ஆனா சரி.எப்போ பாரு பெயில்தான்


=====================4 டாக்டர்.பகல் ல தூங்குனா தொப்பை வருமா?முதல்ல தூக்கம் வரும்.அப்புறம் குறட்டை வரும்


===================


5 போக்கிரி (மாண்புமிகு) மாணவன்= நீ அடிச்ச பீஸ்,நான் அடிச்சா மாஸ்!

எக்சாம் ஹால் சூப்பர்வைசர் = அடிக்கறது அட்டக்காப்பி.இதுல பஞ்ச் எதுக்கு மாப்பி?


======================


6 ஜட்ஜ் = பெண் எஸ் ஐ கிட்டே சில்மிஷம் செஞ்சியா? கைதி =,யூனிபார்ம் ல வராதது அவர் தப்புங்க.நான் அப்போ ரொம்ப மப்புங்க


=======================


7 லேடி S I கிட்டே சில்மிஷம் செஞ்ச வழக்கு ல உன் சார்பா வாதாட வக்கீல் வெச்சிருக்கியா?நான் ஒரு வக்கீலை வெச்சிருக்கறது் உங்களுகெப்டி தெரியும்?


======================


8 இன்ஸ்பெக்டர்.நம்ம லேடி எஸ் ஐ கிட்டே ஒரு கைதி சில்மிஷம் பண்ணிட்டான்.


ஏண்டா டேய்! நாங்க எல்லாம் எதுக்குடா இருக்கோம்?,ராஸ்கல்


====================


9 டாக்டர்.அடிக்கடி ஜிலேபி சாப்ட்டா ஜீரணம் ஆகிடுமா?


 அது ஜீரணம் ஆகிடும்.ஜீரா மட்டும் நேரா தங்கி சுகர் வரும்


===================


10 லட்சியத்தை அடையும் வரை குழந்தை பெத்துக்க மாட்டோம். உங்க லட்சியம் என்ன? கடைசி வரை வேலை வெட்டிக்கே போகாம புருசன் சம்பாத்யத்துலயே வாழனும்


=====================11 மாடர்ன் கேர்ள் 1 = குழந்தை பெத்துக்கிட்டா ஷேப் போய்டும்.அதான் அதை தள்ளிப்போட்டுட்டேன்

மா கே 2 = மேரேஜ் பண்ணிக்கிட்டா என் கற்பு போய்டும்


======================


12 நேர்முகத்தேர்வில் # நீங்க இதுவரை செஞ்ச சாதனைகள் என்ன? ட்விட்டர்ல 18 டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கி இருக்கேன்.

=====================


13 ஐ ஏ எஸ் ஆபீசரான நீங்க ஏன் ரிசைன் பண்ணீட்டீங்க?ஈரோடு கலெக்டர்- சென்னை அமிர்தா ல சேர்ந்தா கை நிறையா சம்பாதிக்கலாம்னு சித்தி சொல்ச்சு


==================14 என் காதலுக்குக்குறுக்கே நந்தி மாதிரி வந்துடாதீங்க.வில்லன் = வந்தா?நந்தா மாதிரி கட் பண்ணிடுவேன்


=================

15 இலியானா = டாக்டர்.எனக்கு லோ ஹிப் சேலை கட்ட பிடிக்கலை.சின்னதா இருக்குனு கிண்டல் பண்றாங்கநோ பிராப்ளம்.குறுnavel னு சொல்லிக்கலாம்

=================16 ஜட்ஜ் = தாலி கட்ன புருசனுக்கு துரோகம் பண்றொம்னு மனசாட்சி உறுத்தலை?


கள்ளக்காதலி கங்கா கவுரி = உறுத்துச்சு.தாலியைக்கழட்டி வெச்ட்டு..


================

17 ஜட்ஜ் = இது போலி பிட்டு னு எப்டி சொல்றிங்க?நடிகை = இது ஒரிஜினல்.3 டி & டிடிஎஸ் பிரிண்ட்.பாத்துட்டு சொல்லுங்க.


====================


18 பொண்ணுங்களை கிள்ளுக்கீரையா நினைக்கறவரு அவரு.ஓ.மதிக்கவே மாட்டாரா?


 கன்னத்தில் கிள்ளுவாரு


=======================


19 ஜட்ஜ் = நீ தான் சீரியல் கில்லரா? கைதி = ஆமாங்க எஜமான்.டி வி சீரியல் தயாரிப்பாளர் ,டைரக்டர்களை கொலை செய்வேன்


====================


20 நாளைக்கு ஒரு சிக்கல் வந்துடக்கூடாதுனு இன்னைக்கே பிளான் பண்ணி மூவ் பண்ணிட்டேன். சாதா சிக்கல் இப்போ இடியாப்பச்சிக்கல் ஆகிடாம இருந்தா சரி

=======================

0 comments: