Thursday, August 14, 2014

அஞ்சான்

அஞ்சான்- லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று டைட்டில் வைத்துள்ளனர். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். லிங்குசாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.

லிங்குசாமி டைரக்ஷனில் ஆனந்தம், சண்டக்கோழி படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது அது தவறி இப்போதுதான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

அஞ்சானில் சூர்யாவுக்கு இரண்டு கெட்அப் இருக்கிறது. இதற்காக 300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள்.

மும்பை ஷூட்டிங்கின்போது சமந்தாவுக்கு சரும நோய் பிரச்னையால் ஷூட்டிங் தடைபட்டது. அவர் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. அவர்தான் நடிக்கிறார் என்பதை லிங்குசாமி உறுதியாக கூறியிருக்கிறார்.

அஞ்சான் என்றால் அஞ்சாதவன், எதற்கும் அஞ்சாதவன் என்று பொருள். சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, வேலை நிமித்தமாக மும்பைக்குச் செல்லும்போது அங்கு ஒருவருக்கு நல்லது செய்வதற்காக ஒரு காரியத்தை செய்து விடுகிறார். அவர் செய்த காரியம், மும்பை நிழல் உலக தாதாக்களையே அதிர வைக்கிறது. தான் செய்த காரியத்தின் முக்கியத்தும் தெரியாமலேயே சென்னை திரும்புகிறார். சூர்யாவைத் தேடி அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பல்வேறு வடிவங்களில் சென்னை வருகிறார்கள். அவர்கள் சூர்யாவை கண்டுபிடித்தார்களா, சூர்யா செய்த காரியம் என்ன என்பதுதான் கதை என்று இப்போதைக்கு கசிந்திருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ்.

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் ‘அஞ்சான்’.


லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துளார். சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராகியுள்ளது. வரும் 15ஆம் தேதி அஞ்சான் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்கு தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சூர்யா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே இந்த படம் தான் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சென்னையில் மட்டும் 37 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சென்னையில் இப்படத்தின் விநியோகஸ்த உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இந்நிலையில் நீண்ட காலமாகவே பட தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் திருட்டு DVD-களுக்கு அஞ்சான் படம் மூலம் ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது.


முழுக்க முழுக்க ரெட் டிராகனில் பதிவாகியுள்ள இப்படத்தை உலகம் முழுவதும் டிஜிட்டல் திரைகளில் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இது படத்தின் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் திருட்டு DVD-கள் வடிவெடுக்கும் விதத்தையும் அதில் இருக்கும் ‘கோட்’களை கொண்டு தயாரிப்பாளருக்கு காட்டிக் கொடுத்து விடுமாம். தென்-இந்தியாவில் இம்முறையில் வெளியாகும் முதல் படம் அஞ்சான் என்பது குறிப்பிடத்தக்கது.


அஞ்சான் 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் தமிழ் திரைப்படமாகும். இது அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயரிக்கிறது. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், விவேக், மனோஜ் பாஜ்பாய் நடிகின்றனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 15, 2014 வெளியிட திட்டமிட்டுள்ளனர். இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் வெளியாகவுள்ளாது

#‎அஞ்சான்‬ புதிய டிரைலர்: யூடியூப்பில் 3 நாளில் 10 ஆயிரம் பேர் பார்த்தனர்
‪#‎சூர்யா‬ - ‪#‎சமந்தா‬ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஞ்சான்’. லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது. 


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்தின் புதிய டிரைலர் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 10 லட்சத்துக்கு அதிகமானோர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 


இந்த டிரைலர் வெளியான மூன்று நாட்களிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்றுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இப்படமும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


சிங்கம் படத்திற்கு சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.


சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அஞ்சான் படம் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கிறது. காக்க காக்க, சிங்கம், சிங்கம்2 படங்களின் வரிசையில் சூர்யாவின் ஆக்ஷ்ன் இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படுமாம். சூர்யா, இதில் ராஜூபாய், கிருஷ்ணா என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவேடம் தாதா கேரக்டர்.


படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் நீளம் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். அஞ்சான் படம் மொத்தம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடும் வகையில் தயாராகிவுள்ளதாம். தற்போதெல்லாம் படத்தின் நீளம் அதிகம் இருப்பதை ரசிகர்கள் விரும்புவதில்லை. அதனால், படத்தின் நீளத்தை சராசரியாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.


சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் நீளம் 170 நிமிடங்கள்தான். ஆனால் இந்தப் படத்தையே நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்தார்கள். அந்த வரிசையில் அஞ்சான் படமும் இணைந்திருப்பதால் படத்தின் நீளத்தை தற்போதே குறைப்பார்களா, அல்லது ரிலீஸானப் பிறகு வரும் ரிப்போர்ட்டை வைத்து குறைப்பார்களா என்பது தெரியவில்லை.


சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தான் வெயிட்டிங். அஞ்சானை எப்படியாவது திரையில் பார்த்து விடவேண்டும் என்று ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் இரண்டு சூர்யா இல்லை, ஒரே சூர்யா தானாம். தன் நண்பர் வித்யூ ஜம்வாலை கொலை செய்ததற்காக, டானாக இருந்த ராஜு பாய் சாதுவாக மாறி எதிரிகளை பலி வாங்குவது தான் கதை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இச்செய்தி வெளியே தெரிந்ததால் படக்குழு அதிர்ச்சி மட்டுமில்லாமல் யார் இதை வெளியே சொன்னது என்று கோபத்தில் இருக்கிறது. மேலும் நாம் முன்பே சொன்னது போல் பாஷா படத்தின் சாயலில் தான் படமும் வந்துள்ளது, இதை லிங்குசாமியே ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/107293/#sthash.Uy7dSprf.dpuf

சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தான் வெயிட்டிங். அஞ்சானை எப்படியாவது திரையில் பார்த்து விடவேண்டும் என்று ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.


இந்நிலையில் படத்தில் இரண்டு சூர்யா இல்லை, ஒரே சூர்யா தானாம். தன் நண்பர் வித்யூ ஜம்வாலை கொலை செய்ததற்காக, டானாக இருந்த ராஜு பாய் சாதுவாக மாறி எதிரிகளை பலி வாங்குவது தான் கதை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


இச்செய்தி வெளியே தெரிந்ததால் படக்குழு அதிர்ச்சி மட்டுமில்லாமல் யார் இதை வெளியே சொன்னது என்று கோபத்தில் இருக்கிறது. மேலும் நாம் முன்பே சொன்னது போல் பாஷா படத்தின் சாயலில் தான் படமும் வந்துள்ளது, இதை லிங்குசாமியே ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: