Saturday, August 16, 2014

விஜய் அரசியலுக்கு வந்து தமிழகத்தை ஆள வேண்டும்! -சீமான்

1. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா-ராகுல் நாளை நேரில் ஆஜராக தேவையில்லை: ஐகோர்ட்..# டீலிங் நல்ல படியா முடிஞ்சுதா யுவர் ஆனர்?


================2 பார்லிமென்ட் பக்கம் தலைகாட்ட மறுக்கும் சச்சின்-கடும் விமர்சனம் #கெட்டு குட்டிச்சுவரா இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கிரிக்"கெட்டு"


====================3 இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பா இருப்பதுதமிழகத்தில்தான் - ஜெ # எந்த வழக்கா இருந்தாலும் இழுத்தடிச்சு ஜெயிலுக்கே போகாம பாதுகாப்பா இருக்காங்


==================


4    4 5வது பிறந்தநாளுக்கு 4 கிலோ எடையுள்ள தங்க சட்டை வாங்கிய தொழில் அதிபர்: விலை ரூ.1.30 கோடி மட்டுமே # இதை எல்லாம் நாம சட்டை பண்ணிக்கக்கூடாது


======================


5 இன்னும் ரஜினியோட நடிக்க வேண்டியிருக்கு.அதுக்குள்ள கல்யாணமா? - த்ரிஷா # லீடிங் பார்ட்டியா இருக்கும்போதே நடிக்கவும்.பாட்டி ஆகிட்டா சிரமம்


=====================


6 இனி 16 வயதில் குற்றம் செய்தாலும் கடும் தண்டனைதான்-் சட்டத்தில் திருத்தம் #நீதி- தப்பு பண்றவங்க எல்லாம் 15 3/4 வயசுக்குள் செஞ்சுடுங்க


=====================


7 ஒரு மகானைப் போன்றவர் ரஜினிகாந்த்! - சோனாக்ஷி சின்ஹா # ஆனா நான் மகான் அல்ல னு குழப்புவாரு


=================


8 என் மேனேஜர் என்று சொல்லி ஏமாற்றும் நபர்! - ஹன்சிகா புகார் # காதலர் னு சொல்லி ஏமாத்துன பார்ட்டிக்கும் சூட்டோட சூட்டா ஆப்பு வைங்க மேடம்


====================நம் ட்வீட்டை யாராவது " இது தவறான கருத்து" னு சொல்லிட்டா அதை நியாயப்படுத்த புதுசா யோசிச்சு சப்பைக்கட்டு கட்ட வேண்டி இருக்கு# சத்யசோதனை


==================


10 நானும் என்னைப் பற்றிய கிசுகிசுக்களும்... மனம் திறக்கிறார் ப்ரியாஆனந்த் # டைட்டில் சூப்பரா இருக்கே.புக் போடுங்க.செம சேல்ஸ் ஆகும்


==================11 என்னைப் போலவே விஜய்யும் போராளிதான் - சீமான். # போராளி ன்னா உள்ளே வெச்சுடுவாங்களாம்.பரவால்லியா?====================


12 விவசாய வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்; ஜெஅறிவிப்பு # மேடம்.கடலை சாகுபடிக்கு ஊக்கத்தொகை உண்டா?கடலை போடுவதில் இங்கே ஏராள அனக்கோண்டா


=====================

13 கயிறு உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு 2–வது இடம் சட்டசபையில் அமைச்சர் தகவல். # கயிறு திரிக்காதீங்க னு யாரும் சொல்ல முடியாது


=====================14 கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது # அந்த 3 பேரில் இருவர் ஒர்க்கிங்க் பார்ட்னராம்.ஒருவர் ஸ்லீப்பிங் பார்ட்னராம்


=====================


15 கோவாவில் பொது இடங்களில் பிகினிக் உடைகளுக்கு தடை;கோவா பொதுபணித்துறை அமைச்சர் தகவல் # போட்டிருக்கும் பிகினி உடையையும் கழட்டிடப்போறாங்க.

======================


16 விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் ”அம்மா விதைகள்” சட்டசபையில் ஜெ # நல்ல வேளை.தமிழ் நாட்டை அம்மா நாடு ன்னு இன்னும் மாத்தலை


=====================17 சிதமபரம் போலீஸ் S I கொலை வழக்கில் கைதான கள்ளக்காதலி வனிதா சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர். # ஜட்ஜ்=ஏன் கொலை செஞ்சே? சாரி.அது சிதம்பர ரகசியம்


=====================

18 நிர்வாண படங்களை காட்டி ராணுவ ரகசியங்களை பெற்றார் பாகிஸ்தான் பெண் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் # ஓஹோ.நம்ப முடியலையே.ஆதாரத்தை காட்டுங்க பார்ப்போம்்


======================


19 சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர் தலைமறைவு # "பலா"த்காரம் செஞ்சவரு பண்ருட்டி ல தான் பதுங்கி இருப்பாரு


====================


20 விஜய் அரசியலுக்கு வந்து தமிழகத்தை ஆள வேண்டும்! -சீமான் # நாளைய சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கே இன்னும் விடை தெரியல.அதுக்குள்ள நாளைய CM் ?

============================

0 comments: