Sunday, August 31, 2014

காதல் 2014 - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்


தமிழ்சினிமாவில், இதுநாள் வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக நான்கைந்து இளைஞர்களில் ஒருவராக நடித்து வந்த ஹரீஷ், ஸோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம், ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்த மணிகண்டன், வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், 4-பேரால் பலாத்காரம் செய்யப்படும் கதாநாயகி நேகா, 4-பேர் பாராட்டும்படி வெற்றி வீராங்கனையாக மாறிடும் திரைப்படம்... என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''காதல் 2014''

கதைப்படி, நட்பாக இருக்கும் இரண்டு குடும்பத்தில் பிறந்த இளைஞனும், இளைஞியும் சிறுவயது முதலே நட்பாக இருக்கின்றனர். ஓட்டப்பந்தய வீராங்கனையாக துடிக்கும் நாயகிக்கு எல்லா விதத்திலும் உதவுகிறார் நாயகன். நாயகனும், நாயகியும் கல்லூரி பருவத்தில் தங்களை அறியாமல் காதலில் விழ, காதலில் ஒளிந்திருக்கும் காமம், இருவரையும் ஆள்அரவமற்ற காட்டிற்கு அழைத்து செல்கிறது. அங்கு எதிர்பாராத சூழலில் 'பாய்ஸ்' மணிகண்டன் உள்ளிட்ட 4 போதை ரவுடிகள், நாயகனின் கண்முன்பே நாயகியை கற்பழிக்கின்றனர். அதில் அப்செட்டாகும் நாயகனின் உதவி இல்லாமலே நாயகி அந்த நால்வரையும் எப்படி பழிதீர்த்து தன் வீராங்கனை லட்சியத்தை அடைகிறாள் என்பது தான் ''காதல் 2014'' படத்தின் கதை மொத்தமும்!

ஹரீஷ், நேகா, 'பாய்ஸ்' மணிகண்டன், அப்புக்குட்டி, 'பசங்க' சிவக்குமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜாபாண்டி, ஷிவானி, சின்ன கருப்பு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அதில் நாயகர் ஹரீஷ் உயிரை கொடுத்து நடித்திருப்பது புரிகிறது.

நாயகி நேகா, சின்ன சிநேகா எனும் அளவிற்கு நடிப்பிலும், இளமை துடிப்பிலும் பிச்சி பெடலெடுத்திருக்கிறார்.

பைசலின் இசை, ரித்தீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், புதியவர் சுகந்தனின் எழுத்தில் இருக்கும் நெளிவும், சுழிவும் இயக்கத்தில் சற்றே கம்மியாக இருப்பதால் ''காதல் 2014'' - ''காதல் 2004'' ஆக சற்றே பழமையாக தெரிகிறது!
 
 
thanx - dinamalar

0 comments: