Monday, August 25, 2014

அஞ்சான் 2 - கார்த்தி!!

1, இன்னைக்கு காவியத்தலைவன் ஆடியோ ரிலீஸ்.பாட்டே கேட்காம ஒரு கூட்டம் " பாட்டு சுமார் தான் " னு அடிச்சு விடும் பாருங்க  (18 8 14)


=================


2  காலேஜில் படிக்கும் பொண்ணுங்க ,ஐ டி ல ஒர்க் பண்ணும் பொண்ணுங்க அவங்க கழுத்தில் டேக் போட்டிருப்பதில் நமக்குப்பல அனுகூலம் இருக்கு.


==================

3  சப்பாத்தி சுட்ட பின் தோசை சுட முடியல.ஒட்டிக்குது.


 மேடம்.வாரம் ஒரு முறை லெமன் தேய்த்து துலக்கவும்


=================

4  விசேஷமான நாட்களில் மட்டும் அசைவம் தவிர்ப்பதால் புண்ணியம் சேரும் என நினைப்பதுதான் சராசரி மனிதனின் விசேஷ குணம்==================


5  அடேங்கப்பா.இங்க ஒரு மேட்சுக்கு மேட்ச் மேனகா சிவப்பு சேலை சிவப்பு ஜாக் போட்டு பூச்சரத்தைக்கூட சிவப்பு நூல்ல கட்டிட்டு வந்திருக்கு=================


6  பஸ் சில் கோபியர் சூழ் சுகந்த பயணத்தில் பல திருப்பங்களில் வளைத்து வண்டி ஓட்டும் டிரைவருக்கு - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு


==================


7  என்னதான் இளையராஜா இசை ராஜாங்கத்துக்கு அதிபதியா இருந்தாலும் வருங்கால சந்ததியினர் காவியத்தலைவன் ஏ ஆர் ஆர் னு தான் சொல்வாங்க


====================


8 வாய்ல இருந்து லிங்கத்தை எடுத்தா பிரேமானந்தா.குச்சியை எடுத்தா ராஜூபாய் அஞ்சான்


====================


9 பெண் ட்வீட்டர்களே! அதிகம் அறிமுகம் ஆகாத ,குணநலன் என்ன என முழுதாகத்தெரியாத யாரிடமும் உங்கள் அலைபேசி எண் பகிர வேண்டாம்.


======================


10  கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள் அவசியம் ஏற்பட்டால் ஒழிய மழைக்காலங்களில் வெளி வர வேண்டாம்


==================


11  சைபர் க்ரைம் சட்ட திட்டங்கள் கடுமையானவை .உங்கள் எதிர்காலத்தையே பாதிக்கும் என்பதை அத்துமீறும் ஆண்களுக்கு சொல்லி வைக்கிறேன்


============================12  யார் படம் பிளாப் ஆனாலும் ஏன்யா எங்க இளைய தளபதி படத்தோட கம்பேர் பண்றீங்க? சுறா தான் பெஞ்ச் மார்க்கா? -ஈரோடு கத்தி ரசிகர் மன்றம்======================


13  1000 நல்ல படங்கள் கவனிக்கப்படாமல் போக பல காரணங்கள் இருக்கலாம்.ஆனா ஒரே ஒரு குப்பைப்படம் கூட ஓடிடக்கூடாது.மக்கள் காசு வேஸ்ட் ஆகக்கூடாது=======================


14  . உன் உயர் அதிகாரியிடமும் ,நீ தாலி கட்டிய உன் சொந்த சம்சாரத்திடமும் அவர்களை விட முட்டாளாகக்காட்டிக்கொள்.மகிழ்ச்சி அடைவார்கள்

==============

15  மழலையின் முகச்சாயலில் அம்மாவோ அப்பாவோ இருந்தாலும் குணநலனில் அப்பாவுடையதாக இருந்தால் நல்லது.ஆனா அம்மா குணம் தான் அதிகம் ஒட்டிக்குது

===========

16  விஜய் ரசிகைகள் எல்லாரும் ஆபீஸ் ல இன்னைக்கு "கத்தி"ரிப்பூ கலர் சேலை!!,அடங்கோ! ;-))

=============

17  ஆடி 18 சன்டேவா வரனும்?
1,அநியாயமா லீவ் போச்சு
2 பிகருங்க தனியா வரமாட்டாங்க.பாதுகாப்புக்கு பெற்றோரும் வருவாங்க

=============

18 . முறைப்பொண்ணுங்க தர வரிசை ( உரிமையா பழகுதலில்)
1 அத்தை பெண் ( அப்பாவின் தங்கை மகள்)
2 மாமா பெண் ( அம்மாவின் சகோதரர் மகள்)

3 அக்கா மகள்==========

19  சொந்த டிபி வைத்திருக்கும் பெண் ட்வீட்டர்கள் தினமும் சேலை மாற்றாமல் ஒரே டிரசில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது # ஜெர்க் ஜெகன்====================


20 விட்டதைப்பிடிக்க அஞ்சான் 2 வை கார்த்தியை ஹீரோவாப்போட்டு பழநி சிஸ்டர்ஸ் திருப்பதி பிரதர்சோட இணைந்து படம் தயாரிக்கராங்களாம்.====================

0 comments: