Monday, August 11, 2014

காதலனை கழட்டி விட பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.

1.ஆபீசுக்கு வந்ததும் கூந்தலில் சூடிய பூ வை வாழை இலையில் சுற்றி கேன்ட்டீன் பிரிட்ஜில் வைத்து விடும் பெண்களை மென்மையாகக்கண்டிக்கீறேன்

==================


2 ஷங்கரின் ஐ படம் வாங்கும் தியேட்டர் ஓனர்கள் " ஐ க்யூ " ஜாஸ்தி னு பெருமையா சொல்லிக்கலாம்

==================


3 சில பொண்ணுங்க நெத்தில திருநீறு ,சந்தனம் ,குங்குமம் ,ஆஞ்சநேய கோயில் சாந்து எல்லாம் வரிசையா இட்டு கோலம் போட்ட வாசல் மாதிரி அழகாக்கிக்கறாங்க


======================4 இந்த டிபி முகத்தை வெச்சுக்கிட்டு எப்டி இந்த வாரம் நீயா? நானா ? கோபிநாத்தை கலாய்ப்பேன்?


==================5  வாலிப வயோதிக அன்பர்களே! எல்லோரும் நல்லாருக்கீங்களா? நான் நலம் இல்லை. நேத்து மட்டும் 8 பெண் ட்வீட்டர்கள் அன்ஃபாலோடு ;-(


====================== 


6 அலைச்சல் வேலை என மார்க்கெட்டிங் ஆட்கள் கவலைப்படேல்.8 மணி நேரமும் சேரில் அமர்ந்து பார்க்கும் வேலை உடல் ஆரோக்யத்துக்கு உகந்தது அல்ல


=================


7 முரண்னா என்ன?"


அஜித் நடப்பதை கிண்டல் செய்யும்விஜய் ரசிகர்கள் வாக்கிங் போனா அது


====================8  நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அஜித்-விஜய் ரசிகர்கள் ,இளையராஜா- ரஹ்மான் ரசிகர்கள் கை கோர்த்தால் மகிழ்வேன் - நால்வர்க்கும் நான் ரசிகன்


===============9 இன்று ஆடிப்பெருக்கு.வாசல் பெருக்குவதுன்னா என்னன்னே தெரியாத மாடர்ன் பிகர்கள் இன்று ஒரு நாளாவது வாசலை பெருக்கவும்.அதுவும் ஒரு எக்சசைசே!


====================10 தமிழ் சினிமா ஹீரோக்களில் விஜய் அழகானவர் தான்.ஆனால் அவர் மட்டும் தான் அழகு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது


=================


11 நண்பர்கள் = விஜய் அம்மா ஷோபா சந்தரசேகர் தயாரிப்பு படம் பிரண்ட்ஸ் ,நண்பன் = விஜய் நடிச்ச படங்கள் # நண்பர் தின தகவல்


====================


12 நட்புக்கும் ,கொடைக்கும் இலக்கணமாகத்திகழும் கர்ணன் போல் நாம் கொடையில் சிறந்து விட முடியாது.ஆனால் நண்பர்க்கு உண்மையாய் இருக்கமுடியும்


====================13 காதலனை கழட்டி விட பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.சாரி.நான் பிரண்டாத்தான் பழகுனேன்.நீ தான் கற்பனையை வளர்த்திக்கிட்டே.வீட்ல மாப்ளை பார்க்கறாங்க


==================


14 ஆடி பெருக்கு = ஜாலியா டான்ஸ் ஆடிட்டே வீட்டு வாசலை விளக்குமாற்றால் பெருக்கு # சபாஷ் துபாஷ்


=================15 மோசமான அரசியல்வாதிக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு


================16 கல்யாணப்பத்திரிக்கை வெச்சு அழைக்கும்போதே மொய்ப்பணத்தை முன் கூட்டியே வாங்கிக்குவான் எதிர் கால முன் எச்சரிக்கைத்தமிழன்


==========================17 கூகுள் = உருட்டி விழி .கண் இமைக்காமல் உற்றுப்பார் # அறிவோம் அர்த்தம்


===================
18 வறுமையும் ,துன்பமும் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் பரிபூரணமான அன்பு உங்களிடமிருந்து வற்றாத சுனை நீராய் பொங்கிக்கொண்டே இருக்கும்


=====================19 பள்ளியில் படிக்கும்போது ஏற்படும் நட்புக்கு நீண்ட ஆயுள் உண்டு


==================20 என்ன டைட்டில் என்பது முக்கியம் இல்லை.யார் அதை வைத்தது என்பதைத்தான் உலகம் உற்று நோக்கும் # கமல் ன் சண்டியர் க்கு தடை.இப்ப ஒரு சண்டியர்


========================

0 comments: