Wednesday, August 27, 2014

'ஐ' -UPDATES

ஐ என்றால் என்ன அர்த்தம்? ரகசியம் உடைந்தது

What is the meaning of Ai.?!
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் பற்றி தினம்தினம் வெளிவரும் செய்திகளால் ரசிகர்கள் அதிகபட்ச ஆச்சரியத்தில் திளைக்கக்கூடும். ஐ படம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா? இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அந்த விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட திரைஉலகப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் ஐ படத்தின் ஆடியோவை அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் வெளியிட, கமல், ரஜினி இருவரும் பெற்றுக் கொள்கிறார்கள். இசை வெளியீட்டை முடித்த கையோடு ஐ படத்தை உலகமெங்கும் கிட்டத்தட்ட 20000 திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 15000 தியேட்டர்களில் மிகப்பெரிய அளவில் வெளியிடப்போவதாகவும் சொல்கிறார் ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

இதற்கிடையில், ஐ படத்திற்காக விக்ரம் போட்டிருக்கும் கெட்அப் பற்றிய செய்தி ஒன்று தற்போது கசிந்திருக்கிறது. அதாவது ஓநாய் மனிதராக ஒரு கெட்அப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். இந்தத் தோற்றத்திற்காக 70 கிலோ எடையிலிருந்து 120 கிலோ எடைக்கு அதிகரித்து, பின்னர் 50 கிலோவாக எடையைக் குறைத்து கடுமையாக உழைத்திருக்கிறாராம் விக்ரம். அதோடு, இப்படத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளர்களுமான சுபா ஐ என்ற தலைப்பு குறித்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்கள்.

ஐ என்றால் என்ன? வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன், ஆசான், தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் என பல அர்த்தங்கள் உண்டு. ஷங்கர் படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு இதில் எதைக் குறிக்கிறது என்பதை விட எவற்றைக் குறிக்கிறது என்று படம் வந்ததும் அறியலாம்! என்று சஸ்பென்ஸ் வைத்து குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவர் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போதும், ஐ படத்தின் கதையை நாம் அறிந்த வரையிலும் தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் என்ற அர்த்தத்திலேயே ஐ என்ற தலைப்பை வைத்திருக்கிறார் ஷங்கர். ஏனெனில், ஐ படத்தின் கதைப்படி கதாநாயகனான விக்ரம், வில்லனால் படு மோசமாக பழி தீர்க்கப்படுகிறான். அதாவது, விக்ரம் உடம்பில் மிக கொடிய வைரஸை ஊசி மூலம் செலுத்திவிடுகிறான் வில்லன். விக்ரம் உடம்பினுள் செலத்தப்பட்ட அந்த வைரஸ் காரணமாக விக்ரம் உடம்பு உருக்குலைந்துபோகிறது.

கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் நச்சு பாஷாணம்தான் சரின்னு தோணுது..!
 
 
 thanx - dinamalar


ஐ' இசை வெளியீடு சிறப்பு விருந்தினர்: தமிழுக்கு அர்னால்டு; தெலுங்குக்கு ஜாக்கி சான்

 
தமிழில் வெளிவரும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார். 


அதேபோல், தெலுங்குப் பதிப்புக்கான 'ஐ' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இதை, படத் தயாரிப்பு தரப்பு 'தி இந்து' தமிழ் நாளிதழிடம் உறுதி செய்தது. 


தீபாவளிக்கு திரைக்கு வரும் 'ஐ' திரைப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னையில் நடத்த உள்ளனர். 


விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவானது 'ஐ'. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 


இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் 'ஐ' திரைப்படத்திற்காக, இயக்குநர் ஷங்கர் கடினமாக உழைத்துள்ளார். விக்ரம் இப்படத்திற்காக தன் உடலமைப்பை மாற்றி, எடையை 50 கிலோ வரை குறைத்தும், 130 கிலோ வரை கூட்டியும் மெனக்கெட்டுள்ளார். படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை 15 மொழிகளில், 15,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். 


ரசிகர்கள் இப்படத்தின் வெளியீடு குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்க, இதுவரை வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் இருந்தனர். 


இப்போது இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். தீபாவளிக்கு திரைவிருந்தாக வருகிறது 'ஐ'. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். விழா, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கலாம். 


சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 thanx - thehindu , dinamalar
a
 
 
 
 
 
a
 
 
 
 • ms  
  திரு.ஷங்கர், திரு.ரவிச்சந்திரன் செய்தால் எதுவும் பிரமாண்டமாய் இருக்கும். இந்த இருவரும் சேர்ந்து அந்த இருவரையும் அழைத்து வரவில்லையெனில் பாடல் வெளியட தமிழகத்தில் வசதி இல்லை.அதே போல் நீண்ட நாள் சந்தேகம், நாம் அவர்களை பின்பற்றுகிறோமே தவிர அவர்கள் எதிலாவது நம்மை தொடர்கிறார்கள????
  Points
  5645
  about 12 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
     
 • Vatta seyallar  
  100 கோடி அப்பு 100 கோடி
  about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • Tamilan  
  இசை வெளியீடு டிக்கெட் எங்க கிடைக்கும்??
  a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
 • Prabhakar  
  தினமும் ஐ பற்றி தான். யாருக்காக மற்றும் எதற்காக? இதேபோல் எல்லா தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களுக்கும் விளம்ம்பரம் கொடுத்தால் அவர்களுக்கும் உதவியாய் இருக்கும். எல்லாமே பணத்துக்காக தான் என்று ஊடகங்கள் இருந்தால் புது முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அழிந்துபோகும். அதிக பட்ச செயர்க்கைகும், ஆடம்பரத்திற்கும் துணை போகாதிர்கள்.
  a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • raajaa  
  காசா மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலை ஹாலிவுட் நடிகர்கள் பலரும் எதிர்த்து வரும் வேளையில், சில்வெஸ்டர் ஸ்டாலோன் மற்றும் அர்னால்ட் ஆகியோர் இஸ்ரேலுக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருவேளை சென்னை வரும் அர்னால்டுக்கு எதிர்ப்பு எழ வாய்ப்பிருக்கிறது.
  Points
  9800
  a day ago ·   (6) ·   (14) ·  reply (1) · 
  • Raj  
   Raaja, why nobody talks about the thousands of killings that are done by ISISI Iraq?
   a day ago ·   (2) ·   (1) ·  reply (1) · 
   Balaji  Up Voted
   • raajaa  
    Because, the main sponsor of Mass Killings at all over world is America.
    about 24 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • R.M.Manoharan Manoharan  
  அர்னால்டும், ஜாக்கி சானும் எப்போது தமிழ் இசைப்பிரியர் ஆனார்கள்? / ஆர் எம் மனோகரன்
  Points
  3770
  a day ago ·   (8) ·   (0) ·  reply (1) · 
  • Balaji  
   தமிழ் சினிமா இயக்குனர்கள் ஹாலிவுட் பார்த்து காபி அடிக்க ஆரம்பித்த போது...
   about 5 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • Sam  
  ஆப்படியே படத்தையும் சீனா அமெரிக்கா வில் ரிலீஸ் பண்ணுங்கப்பா
  Points
  125
  a day ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
 • Shan Shan at Self-Employed 
  படம் வெளியீட்டுக்கு அமர்களமா ?அர்னால்டு வருகிறாரா ?வெற்றி விழாவுக்கு யாரை அழைக்க போகிறார்களோ ?
  Points
  18175
  a day ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
  • NS  
   வெற்றி விழாவுக்கு ஒப்பற்ற உலக நாயகன் ராமராஜன் அழைக்கப்படுவார்.
   about 23 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
   Balaji · Balaji  Up Voted
 • venkateshan  
  அற ரஹாமன்...இச் குட்...
  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • K R  
  ஐ! 100 கோடி வசூல்,படம்.
  Points
  190
  a day ago ·   (1) ·   (0) ·  reply (1) · 
  • Arjun  
   பாஸ். 100 கோடின்னு சொல்லாதிங்க பட்ஜெட் ஹே 180 கோடி.
   about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
   • K R  
    அப்போ ஐ fever இருந்தாதான் ஜெயிக்கும்.
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • marish  
  good
  2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • Sampathkumar  
  "ஐ" am waiting ..a
  'ஐ' இசை வெளியீடு: அர்னால்டுக்கு நேரில் அழைப்பு

  ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


  ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் இப்படத்தை இணைந்து தயாரிக்கும் ரமேஷ் பாபு, அமெரிக்காவில் உள்ள அர்னால்டு வீட்டில் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். 


  சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் 'ஐ' இசை வெளியீடு நிகழ்ச்சியில் தாம் கலந்துகொள்வதாக, அவரிடம் அர்னால்டு கூறியுள்ளார். 


  இதனை உறுதி செய்யும் விதமாக, சென்னையில் நடைபெறும் 'ஐ' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்துகொள்கிறார் என்று ஆஸ்கர் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  தெலுங்குப் பதிப்புக்கான 'ஐ' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம், தீபாவளிக்கு வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே நம்மிடம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. 


  அர்னால்டுடன் 'ஐ' இணை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு A  இப்படி ரொம்பவும் எதிர்பார்ப்பை உண்டாக்கும் படங்கள் பெரும்பாலும் எதிபார்தபடி இருப்பதில்லை.
  Points
  115
  about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  K R  
  அர்னால்டு ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறார் - இது 'ஐ' படத்தை விளம்பர படுதுவதர்ககவா அல்லது A R ரஹ்மானை ப்ரொமோட் பண்ணவா?

0 comments: