Monday, August 18, 2014

இளையதளபதி கட்சி ஆரம்பிச்சா?

1. காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்...# ப்ரியங்கா காந்தி ,ராகுல் காந்தி,ராஜீவ் காந்தி ?


=================2 சினிமாவில் மது குடிக்கும் காட்சிகள் வைத்தால் போராட்டம் -் டாக்டர் ராமதாஸ்.# டாக்டரிடம் நான் கண்ட ஒரே நல்ல குணம் மது,புகை எதிர்ப்பு


==================


3 ஆழ்துளை கிணறு தோண்டினால்7 ஆண்டு சிறை # அதே மாதிரி ஆபீஸ்ல அடுத்தவனுக்குக்குழி தோண்டி பிரமோசன் வாங்கிக்கறவங்களுக்கும் தண்டனை தந்தா தேவல


================


4 லைக்கா ் தமிழகத்தில் இல்லாததால் அதை எதிர்க்க தேவையில்லை-சீமான் # ராஜபக்சே இலங்கையில் இருப்பதால் அவரையும் எதிர்க்கத்தேவை இல்லைம்பாரோ?


===================


5  அஞ்சான் சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் ரிலீஸ்.# அப்போ 4 வது நாளே “ வெற்றிகரமான 111 வது நாள் போஸ்டர் ஒட்டிக்கலாம்? ( 3* 37 =111)=====================6 ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, யாருமே பணம் வாங்காமல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் -ல் நடித்துள்ளனர்.# அப்போ டிக்கெட் நமக்கு ஃப்ரீயா?


======================7 ஜாக்கிரதை! கோல்கேட் பற்பசையில் புற்றுநோய் காரணியான டிரைக்ளோசன்! # இதுக்குத்தான் நாங்க எல்லாம் வேப்பங்குச்சிலயே துலக்கிடறது.


==================


8 பெண் போலீஸ் என்ன, ராணுவ வீரர்களுடன் கூடவும் தான் ஆடியிருக்கேன்: ஷாருக் கான் # ராணுவம்? என்ன ஒரு ஆணவம்?==================


9 கோலிவுட் கிசுகிசு- அஞ்சான் பாட்ஷா வின் ரீமிக்ஸ் உல்டாவாம்.நண்பனைக்கொன்றவனைப்பழி வாங்கும் கதை.2 வேடம் என்பது திசை திருப்பல்.


====================10 விஜய்யின் கத்தி படத்துக்கு சீமான், விக்ரமன் ஆதரவு # படத்துக்கே இத்தனை ஆதரவுன்னா இளையதளபதி கட்சி ஆரம்பிச்சா?போயஸ் நடு நடுங்கும் ;-)


==================


11 துணை முதல் மந்திரியை நோக்கி செருப்பு வீசிய பெண் கைது..# ஹை ஹீல்சை வீசி இருந்தாலும் லோ க்ளாஸ் ஜெயில் தான்.====================12 நான் பேராசைக்காரி இல்லை: காஜல் அகர்வால் # நல்ல பேர் எடுக்கனும்கற பேர் ஆசை கூட இல்லையா?


====================13 கமல் போல் என்னால் நடிக்க முடியாது: சூர்யா.. # அதனால தான் ரஜினி போல் ட்ரை பண்ணலாம் னு பாட்ஷா கதை யை அஞ்சான் ல உல்டா பண்றீங்க்ளா?

====================14 அஞ்சான் பஞ்ச் =,நான் ஒரு தடவை சொன்னா எங்கப்பா 100 தடவை சொன்ன மாதிரி .


====================15 சென்னையில் ஐந்தில் ஒரு பள்ளி மாணவர்கள் கல்வி கற்க சிரமப்படுகிறார்கள்: ஆய்வில் தகவல் # மீதி 4 பேரும் கட் அடிச்சுடறாங்க


=====================


16 பாத்ரூமில் “கேமரா” – பெண்களை படமெடுத்த ஹோட்டல் கண்காணிப்பாளர் கைது! # ஹோட்டலைக்கண்காணிக்கச்சொன்னா பொண்ணுங்களைக்கண்காணிச்சிருக்கு பக்கி


======================17 சொத்துக் குவிப்பு வழக்கு: காளான் வளர்த்த சசிகலா; ஜெயலலிதாவுக்கு ரூ.1.5 கோடி கடன் கொடுத்தார் # அய்யோ பாவம்.2 பேருமே ரொம்ப ஏழைங்க போல


=====================18 குரங்காட்டியை இயக்குகிறார் ராஜுமுருகன்-தனுஷ் ஹீரோ.? # டைட்டில் சைக்(கோ)கூ ஊ ஊ ??!!=====================19 பெண் போலீசுடன் நடனம் ஆடிய விவகாரம்: என் மீதான குற்றச்சாட்டு முட்டாள்தனமானது -ஷாருக்கான் # இது புத்திசாலித்தனமான சமாளிபிகேசன் இல்லீங்ளே?=====================20 எஸ். ஏ. சந்திரசேகரன் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா # அதாவது விஜய் அப்பா படத்துக்கு யுவன் சங்கர் ராஜா அப்பா மியூசிக்?========================

0 comments: