Thursday, August 28, 2014

சலீம்

சலீம், நான் படத்தின் 2ம் பாகமா? மழுப்பும் விஜய் ஆண்டனி!
1

Vijay Antony not reply is Salim movie is sequel of Naan
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சலீம். அவருக்கு ஜோடியாக அக்ஷா பர்தாஸ்னி நடிக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளர் என்.வி.நிர்மல்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் பாடல்களும், டிரைலரும் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அவைகள் அச்சு அசலாக விஜய் ஆண்டனியின் முந்தைய படமான நான் போலவே இருந்தது.

நான் படத்தை போலவே இந்தப்படத்திலும் பாடல்கள் அமைந்துள்ளது. குறிப்பாக மாக்காயல மாக்கயால பாட்டுபோல இதிலும் ஒரு கிளப் டான்ஸ் வருகிறது. அந்த பாட்டின் ஊடே விஜய் ஆண்டனி முறைத்தபடி நடந்து செல்கிறார். நான் படத்தில் விஜய் ஆண்டனியின் கேரக்டர் பெயர் சலீம். இந்தப் படத்திலும் அவர் பெயர் சலீம். அதில் டாக்டருக்கு படிப்பார், இதில் டாக்டர். மூன்று நிமிட டிரைய்லரிலேயே இரண்டு படத்துக்கும் இத்தனை ஒற்றுமை. அப்படி என்றால் இரண்டு மணி நேர படத்தில் எத்தனை இருக்கும் என்பதுதான் கேள்வி. இதை அவரிடம் கேட்டால் இப்படிச் சொல்கிறார்.

" சலீம் நான் படத்தின் இரண்டாம் பாகமா, தொடர்ச்சியா என்று கேட்டால் ஆமாம் என்றும் சொல்ல முடியாது. இல்லவே இல்லை என்றும் சொல்ல முடியாது. இரண்டு படத்துக்கும் சில விஷயங்கள் ஒத்துப்போகலாம். ஆனால் இதன் கதை களமே வேறு. அதுபற்றி இப்போது விளக்கமாக சொல்ல முடியாது படம் வந்ததும் தெரியும் என்று மழுப்பலாகவே சொன்னார்.
 
 
 

சலீம் படத்தில் சர்ச்சை உருவாக்கும் விசயங்கள் இல்லை! -விஜய் ஆண்டனி ஓப்பன் டாக்

There is no controversy issues in Salim Movie says Vijay Antony
நான் படத்தில் நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அதையடுத்து சலீம் என்ற படத்தில் நடித்துள்ளார். நான் படத்தின் தொடர்ச்சியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் போல் இப்படத்தின் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நான் படத்தை பார்த்தவர்களுக்கு இது அதன் இரண்டாம் பாகம் போல் இருக்கும். பார்க்காதவர்களுக்கு வேறு படம் மாதிரி இருக்கும் என்கிறார் விஜய் ஆண்டனி.

மேலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். என்னை ஒரு பெரிய ஹீரோவாக உயர்த்த வேண்டும் என்ற அவர்களின் உழைப்பு பிரமிக்கத்தக்கது என்று கூறிய அவர், இந்த சினிமா உலகைப்பொறுத்தவரை கடினமாக உழைப்பவர்களுக்குத்தான் போதிய வருமானம் கிடைப்பதில்லை. நடிகர்-நடிகைகளைப் பொறுத்தவரை உடம்பில் வெயில் படாதவாறு உதவியாளர் குடை பிடிப்பார். இல்லையேல் கேரவனுககுள் சென்று அமர்ந்து கொள்வோம். ஆனால், இயக்குனர் மற்றும் கேமரா உள்பட திரைக்குப்பின்னால் இருக்கும் அனைத்து டெக்னீஷியன்களும் கொளுத்தும் வெயிலிலும் நின்று வேலை செய்கிறார்கள். இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் இரவு வரை படப்பிடிப்பு தொடர்ந்தால்கூட அக்கம் பக்கம் அசைய முடியாமல் வேலை செய்கிறார்கள். இருப்பினும் சினிமாவில் கடுமையாக உழைக்கும் அவர்களுக்குத்தான் மிகக்குறைவான சம்பளம். ஆனால், எந்த கஷ்டமும் படாமல் ஈசியாக உழைப்பவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் தரப்படுகிறது என்று தன் மனதில் பட்டதை சொன்னார் விஜய் ஆண்டனி.

அதோடு, இந்த சலீம் படத்தில் முஸ்லீம் இளைஞர் சம்பந்தப்பட்ட கதை என்பதால் படம் திரைககு வரும்போது சிக்கல் வரும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். ஆனால், என் படத்தைப்பொறுத்தவரை மதத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. என்னைப்பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என்று வாழ்பவன். மேலும், கதைக்களம்தான் ஒரு முஸ்லீம் இளைஞன் சம்பந்தப்பட்டது. மற்றபடி ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில், மனதில் தோன்றும் விசயங்கள்தான் இந்த படம். அதனால், இந்த படத்தின் சர்ச்சைக்குரிய விசயங்கள் எதுவும் இல்லை. அதனால், என் படம் வெளிவர எந்த சிக்கலும ஏற்படாது என்கிறார் விஜய்ஆண்டனி.
 
 

கொலைகார டாக்டரா விஜய் ஆண்டனி? சலீம் பட சஸ்பென்ஸ்!

Salim movie Suspence
2012 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த படம் நான். இந்தப் படம் வணிக ரீதியில் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது சலீம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. நான் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சலீம். வெற்றி செண்ட்டிமெண்ட் காரணமாகவோ என்னவோ சலீம் என்பதையே தன் இரண்டாவது படத்தின் தலைப்பாக்கிய விஜய் ஆண்டனி, இசையமைப்பதை மறந்து முழு கவனத்தையும் செலுத்தி சலீம் படத்தில் நடித்து வந்தார்.

சலீம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், இன்று அப்படத்தின் இசைவெளியீடு சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசைவெளியீட்டு விழாவின் மேடையில் பிரம்மாண்டமான அளவில் ஒரு துப்பாக்கியை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த துப்பாக்கியின் மீது டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெத்தஸ்கோப்பை தொங்கவிட்டிருந்தனர். இதன் மூலம் சலீம் படத்தின் கதை பற்றிய சஸ்பென்ஸ் உடைந்துவிட்டது. என்ன சஸ்பென்ஸ்? கொலைகார டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. நான் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து, அது வொர்க்அவுட்டானதால் இரண்டாவது படத்திலும் நெகட்டிவ் கேரக்டரையே தேர்வு செய்துவிட்டார் போலிருக்கிறது.
 
 

விஜய் ஆண்டனியின் நான் படத்தின் இரண்டாம் பாகம் தான் சலீம்!

Salim movie is part 2 of Naan
ஜீவா ஷங்கர் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த படம் நான். இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும், அவருக்கு நல்லதொரு அடையாளமாக அமைந்தது. அதனால் மீண்டும் சலீம் என்ற படத்தை ஆரம்பித்து நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே தற்போது இந்தியா-பாகிஸ்தான் என்ற படத்தையும் தொடங்கியுள்ளார்.

மேலும், தற்போது சலீம் படத்தில் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதால் விரைவில் ஆடியோ வெளியீட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்தில், ஒரு நல்லவனை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காத ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் கதையாம்.

ஏற்கனவே நான் படத்தில் பெயரை சலீம் என்று மாற்றிக்கொள்ளும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம், அதிலிருந்தே இந்த படத்தின் கதை தொடர்கிறதாம். சலீம் என்ற டாக்டராக நடிக்கும் விஜய் ஆண்டனி, நான் படத்தை விடவும இதில் கூடுதல் ஆக்சன் காட்சிகளில் நடித்திருப்பதோடு, ஒரு நல்லவன் சமூக விரோதிகளால் உருவான பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறான் அதிலிருந்து எப்படி வெளிவருகிறான் என்ற கேரக்டரின் தன்மையை உணர்ந்து மிக அற்புதமாக நடித்திருக்கிறாராம்.

அந்த வகையில், நான் படத்தின் இரண்டாம் பாகமான இந்த சலீம் படம் விஜய் ஆண்டனியின் திறமைக்கு இன்னொரு பலப்பரீட்சையாக அமைந்துள்ளதாம்.
 
 
 
thanx - dinamalar
 
 
 

0 comments: