Thursday, August 14, 2014

மை இர்ரெகுலர் டைரி -MY IRREGULAR DIARY

1. என்னை எல்லாம் அவ்வளவு ஈஸியாக யாராலும் வீழ்த்திவிட முடியாது: ஹன்சிகா # சிம்பு மாதிரி கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா வீழ்த்திடலாம்ங்களா மேடம்?


====================


2 அரைகுறை ஆடை, கையில் மதுவுடன் பெண்: சென்னைல் வைக்கப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை # இப்ப பிரச்னை மதுவுடன் இருந்த மாது ன்னா? டிரஸ் கம்மின்னா?


=================3 இன்னும் பத்து வருடத்தில் வேற்று கிரக வாசிகளை கண்டு பிடித்து விடுவோம்- நாசா # ஐடி கார்டு இருக்கா? லைசன்ஸ் இருக்கா? னு கேட்ருவாங்களோ?


====================


4 பாலியல் தொல்லையை விசாரித்து வந்தவருக்கே பாலியல் தொல்லை# தொந்தரவு கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா என்ன பதவி னு கூடபார்க்க மாட்டாங்க

===============


5 காமன்வெல்த் போட்டிக்கு சென்ற இந்திய அதிகாரி ‘செக்ஸ்’ புகாரில் கைது""# காமனா எல்லாப்பக்கமும் நடப்பதுதானே?


================


6 நெட்டில் வெளியான நிர்வாணப்படம் என்னுடையது அல்ல.போலி - அஞ்சலி த்வேதி # ஒரிஜினலை நீங்க வெளியிட்டுடுங்க.அப்பதான் இவனுங்க கொட்டம் அடங்கும்

==================


7 அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையில் பெண்களுக்கு 33 %இட ஒதுக்கீடு: மத்திய அரசு கடிதம # ஐ ஜாலி.ஸ்டேஷன் ல 3 க்கு 1 லேடி போலீசா இருக்கும்்


=====================


8 : 2,850 அடி மலையை விலைபேசிய லட்சுமி மிட்டல்.... இங்கிலாந்தில் எதிர்ப்பு வலுக்கிறது # மலைமுழுங்கி மகாதேவன் கள் எல்லா ஊர்லயும் உண்டு போல

====================


9  பேஸ்புக்கில் சென்னை போலீசார்; பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்..# எங்க ஊர் ஸ்டேஷன் ல லேடி போலீசே இல்லைங்கோ.


==================


10 பெண் நீதிபதியை கவர்ச்சி நடனம் ஆடச்சொன்ன ஐகோர்ட்டு நீதிபதி #மானாட மயிலாட ,ஜட்ஜ் ஆட அடடே


==================11 சிண்டிகேட் வங்கித் தலைவர் இடைநீக்கம் # 50 லட்சம் ரூ லஞ்ச குற்றச்சாட்டுக்கு எதுக்கு இடுப்பையே கட் பண்ணிட்டாங்க?==================

12 அரிசிகெரே அருகே பயங்கரம் இளம்பெண் கற்பழித்துக் கொலை; காதலன் கைது # அண்ணனுக்கு இனி அரிசிசாதமே கிடையாது.ஜெயில் களிதான்


=================


13 பனப்பாக்கம் அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது # மைனரோட பொண்ணை கடத்துனாலும் பிடிக்கறீங்க.மேஜரோட பொண்ணைக்கடத்துனாலும் கைது.


====================14 மயிலாடுதுறை - பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின்படி பேராசிரியர் கிருஷ்ணராஜ் கைது # கிருஷ்ண லீலையை காட்டிட்டாரா?


=====================
 15 மோகான்லாலுடன் நடிக்க சூர்யா ஆசை...! # அரே அல்லா! இன்னொரு  ஜில்லா?====================


16 மை இர்ரெகுலர் டைரி:அடுத்த புத்தகம் எழுதுகிறார் நட்வர் சிங்  # பர்சனல் கில்மா மேட்டர்சும் இருக்குமா?மிஸ்டர் நைட் வர் சிங்?====================17 ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை காவேரி மரணம்..! # அம்மா கிட்டே மோதுனா என்ன கதி?னு வார்னிங்கா?
=================


18 . நாட்டு மக்களுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவிக்காதது ஏன்? - எதிர்கட்சிகள் # கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி ப்ரோ.பதில் சொல்றது கஷ்டம்


================19  சிறை செல்ல வேண்டியவர்கள் தலைவர்களாக உள்ளனர்: கவிக்கோ அப்துல் ரகுமான் வேதனை # கோபாலபுரம் தலைவரையா சொல்றீங்க?


=====================20 பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை: சட்ட திருத்தம் செய்யும் மத்திய அரசு # பால் ல தண்ணீர் கலந்தா தானே தப்பு? தண்ணீர் ல பால் கலந்தா?


==========================

0 comments: