Sunday, August 05, 2012

சூன்யக்காரிக்கு ஒரு டெஃபெனிஷன் கண்டு பிடிச்சுட்டேன் ஜீ பூம்பா1. மிஸ், நீங்க ஐ டி ல ஒர்க் பண்ற கேர்ளா இருக்கலாம், 24 மணி நேரமும்  கம்ப்யூட்டர்லயே  குடி இருக்கலாம், அதுக்காக கீ போர்டு டிசைன் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு வந்தா எவன் ஒழுங்கா வேலை செய்வான்?


---------------------------------2.டியர்,வழக்கமா லவ்வர்னா சாக்லெட் தருவாங்க, நீ இஞ்சு மொரப்பா தர்றியே?

 இப்போ நான் 1 சொல்வேன், அதைக்கேட்டு என்னால இதை ஜீரணிக்கவே முடியலைன்னு  நீங்க சொல்லிடக்கூடாதே?----------------------------------


3. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

பசியே எடுக்க மேட்டேங்குதுன்னு சொன்னா கரும்பு ஜூஸ் சாப்பிட்டு பாருங்க அப்டிங்கறாரே?


------------------------------


4.  ஜோசியர் - உங்களுக்கு ஜாதக்கட்டம் சரி இல்லை..

 அப்டியா? சரி, அதை ரவுண்ட் பண்ணிடுங்க -----------------------------------5. என் கனவு இல்லம் இதுதான்

 எங்கே? காணோமே?

 யோவ் லூசாய்யா நீ? என் கனவு எனக்கு மட்டும் தானே தெரியும்?---------------------------
6. நிருபர் - மேடம், திடீர்னு 20 கிலோ வெயிட் எப்படி உங்களால குறைக்க முடிஞ்சுது?

நடிகை - நீங்க வேற , என் படம் எதுவும்  ஓடலைங்கற கவலைல இளைச்சுட்டேன்


----------------------------


7. தலைவர் எதுக்காக சட்டசபைக்கு  தன் சம்சாரத்தையும் கூட்டிட்டு போறார்?

மழைக்கால  கூட்ட தொடர் ஆச்சே? குளிருக்கு இதமா கட்டிப்பிடிக்கத்தான்


------------------------------


8. ஜட்ஜ் - மேட்ச் ஃபிக்சிங்க்ல உங்களுக்கு தொடர்பு இருக்கா?

கைதி - கடுப்பைக்கிளபாதீங்க யுவர் ஆனர்,  மேட்ச் காலைல 10 மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம்னு டைம் ஃபிக்ஸ் பண்ணேன், அவ்ளவ் தான்


-----------------------------


9. தலைவருக்கு பொது அறிவு கம்மி

 எப்டி சொல்றே?

செண்ட்ரல் பரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்னா  (CBI)  சென்னை  செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல  இருக்கற ஆஃபீசா?ன்னு கேட்கறாரே?-----------------------


10. சின்ன வயசுல  நான் செரி “லாக்ஸ்” தான் சாப்பிடுவேன்

ஓஹோ! லாக்ஸ் கணக்குல சம்பாதிக்க அதுதான் காரணமா?

---------------------------------------I want every image to be the beginning of an unseen image...


11. டீச்சர் - நியூட்டனின் 3 ஆம் விதி பற்றி சொல்லு
 மாணவன் - அவருக்கு 3 சம்சாரம்கற மேட்டரே இப்போதான் தெரியும் மிஸ்


----------------------------12. வள்ளுவர் - தன் மனைவி வாசுகியை ரொமான்ஸ்க்கு அழைக்கும்போது வாசுகி  . வா சுகி என்றிருப்பாரோ?---------------------------


13. ஆட்டோ டிரைவரின் லொள் வாசகம் - கர்ப்பிணிப்பெண்களுக்கும்.அப்படி ஆக நினைக்கும் பெண்களுக்கும் இலவசம் 
--------------------------------


14. அத்தான் நமக்கு சிறந்த தம்பதி விருது கிடைச்சிருக்கு .அட நிஜமாவா? யார் அந்த லூஸ் செலக்டர்? -----------------------------


15. மிஸ்டர் வள்ளுவர்! உங்க மேலே ஒரு குற்றச்சாட்டு.ஹிட்ஸ்க்காகவும் பிரபலத்துக்கும் ஆசைபட்டுத்தான் காமத்துப்பால் எழுதுனீங்களாமே? 
-------------------------------மங்காத்தா எங்காத்தா கைமாத்தா பத்துரூபா
உங்காத்தா கைலேர்ந்து சுட்டுகிட்டு வந்தாக்கா
செங்காத்தா பாய்ஞ்சு செமஆட்டம் போட்டுநாம
மங்காம தங்காம மாலைநேரம் தெம்பாக
நங்கைசெங் காயினு நல்லதொரு பாட்டுபாடி
பொங்கி பொழுதெலாம் போக்கி மகிழ்ந்திட்டு
தங்கமாய் மின்னலாம் வா16. அத்தான் லவ் பண்றப்ப வீனஸ் சிலை மாதிரி இருக்கறதால என்னை உங்க வாழ்வின் விடி "வெள்ளி"ம்பீங்களே.இப்போ? மேரேஜ் ஆகிட்டாலே சனிதான் 
------------------------------


17. மிஸ் லிப்ட் ப்ளீஸ். இது லேடீஸ் காலேஜ் பஸ்.  தெரிஞ்சுதான் கேட்டேன் ------------------------------


18. காலனோட காலக்கணக்கையும் , இன்செப்ஷன் புகழ் கிறிஸ்டோபர் நோலனோட திரைக்கதை முடிச்சையும் புரிஞ்சுக்கறது கஷ்டம்.ஆனாலும் சுவராஸ்யமே் 
---------------------


19. எங்க வீட்ல வாட்ச் இல்லை டி வி செல் ஏதும் இல்லை டைம் ப்ளீஸ் என தினமும் பக்கத்து  வீட்டுப் பெண்ணிடம் கேட்டால் நீயும் கடலை மன்னனே!
----------------------------


20. வர மிளகா ஸாப்பிட்டா கடவுள் வரம் கிடைக்குமா? கொட மொளகா சாப்ட்டா கொட கிடைக்குமா? பை அல்சர் வந்தாக்கூட விடாம பல்சரில் போய் டாக்டரை பார்த்து வருவோர் சங்கம்
-------------------------------- 

21. எவரெஸ்ட் சிகரம் போய் குங்குமம் படிச்சா அது ஹையர் எஜுகேஷனா? ------------------------------


22. காலேஜ் போகும் டீன் ஏஜ் பெண்ணே! ஐஸ் ஏஜ் 4 சினிமா போலாமா? ம் உன் ஐஸ் 2ம் டேமேஜ் ஆகிடும் பீ கேர்புல் ----------------------


23. இண்ட்டர்வியூவில் -டேக் யுவ்ர் சீட். தாங்க்ஸ் ஸார் போறப்ப எடுத்துக்கறேன் -----------------------------


24. உங்க பேசிக் சேலரி 15000 ரூபா.
 ஓக்கே அப்போ கோபால் ,சி ,போர்ட்்ரான , டிபேஸ் சேலரி எல்லாம் எவ்ளவ்?்
-------------------------


25. டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னே கம்பெனியை சுத்தி பார்த்திடுங்க. ஆல்ரெடி பார்த்தாச்சு.34 பெண்கள் 12 டீன் ஏஜ் கேர்ள்ஸ் இருக்காங்க -------------------------------

26.சம்பளம் எவ்ளவ் எதிர்பார்க்கறீங்க? குடுக்கறதைக்குடுங்க.கிடைச்ச வரை லாபம்.எப்படியும் வெட்டியாத்தான் இருப்பேன்--------------------------


27. ஸ்கூல்ல எல்லா சப்ஜெக்ட்லயும் ஒரு பொண்ணு பூஜ்யம் (சூன்யம்)வாங்கி இருந்தா அவங்க சூன்யக்காரியா? # எம் பி ஏ கேள்வி ---------------------------

2 comments:

Arunvetrivel said...

வழக்கம்போல் சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்துள்ளீர்கள், அனைத்தும் அட்டகாசமாக உள்ளது சார்.

wsh u hapy frndshp day .

”தளிர் சுரேஷ்” said...

குட் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!