Friday, August 31, 2012

முகமூடி -சினிமா விமர்சனம்

http://reviews.in.88db.com/images/Mugamoodi-first-look/Mugamoodi-Jiiva-Narain-First-look-posters.jpga

நாட்ல முகமூடி போடாத கொள்ளைக்காரர்கள் நிறைய பேர் இருக்காங்க, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் ,பிரதமர்கள், என் நீளும் பட்டியல்கள். ஆனா பாருங்க அவங்க கிட்ட அதிகாரம், அரசியல் செல்வாக்கு, அரசாங்க பாதுகாப்பு, ஒத்துழைப்பு இதெல்லாம் இருக்கு.. சோ அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. போலீசோட வேலை என்ன?  அஞ்சு பத்து திருடுனவன், பேங்க்ல கொஞ்சமா கொள்ளை அடிக்கறவன் இவங்களைத்தானே பிடிக்க முடியும்? கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்க வாய்தா ராணிகளாகவும், நம்ம குடும்பத்தை தவிர வேற யாருக்கும் தமிழ் நாட்டின் சொத்து போயிடக்கூடாதுன்னு நினைக்கும் மனசும், , மற்றவர்கள்க்கு வாய்ப்புத்தராத தலைவர்கள் இருக்கும் தேசம் இது..


கமிங்க் டூ த பாயிண்ட், பணக்கார வீடுகள்ல கொள்ளை அடிக்கும் முகமூடிக்கொள்ளைக்காரர்களை பிடிக்க ஒரு போலீஸ் ஸ்பெஷல் டீம்.. நாசர் தான் அதுக்கு லீடர்.. அவர் பொண்ணு தான் ஹீரோயின். ஒரு வேலையும் செய்யாம தறுதலையா இருக்கும் ஹீரோ ஜீவா அந்த டொக்கு ஃபிகரை பார்த்ததுமே ஒரு தலையா லவ்வறாரு.. 


http://tamil.cinesnacks.net/photos/movies/Mugamoodi/mugamoodi-movie-stills-016.jpg

பால் வடியும் முகமா இருக்கும் ஹீரோ எப்படி இப்படி ஃபைட் போடறார்னு எந்த நாயும் கேள்வி கேட்டுடக்கூடாதே.... அதனால அவர் குங்க்ஃபூ மாஸ்டர்ட்ட  ஃபைட் கத்துக்கிட்ட ஆளா ஓப்பனிங்க்லயே காட்டிடறாங்க.. 


வில்லன்களை பிடிக்கும் முயற்சில நாசர் கிட்டத்தட்ட கொலை செய்யப்படறார்... அதாவது கொலை முயற்சில ஆள் எஸ்.. ஆனா ஹீரோதான் கொலை செஞ்சதா ஹீரோயின் நம்பற மாதிரி ஒரு சிச்சுவேஷன்..  இடைவேளை ( பயங்கர டர்னிங்க் பாயிண்ட் )


அதுக்குப்பின் எல்லா பட ஹீரோ மாதிரி ஹீரோ தான் கொலையாளி இல்ல..  அப்டினு நிரூபிக்க ஒரிஜினல் கொலையாளியை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைப்பதே இந்த டப்பா படத்தின் கேவலமான கதை. ஹீரோ ஜீவா நல்ல அர்ப்பணிப்போட உழைச்சிருக்கார்.. குங்க்ஃபூ ஃபைட் நிஜமாவே கத்திட்டு வந்திருப்பார் போல .. ஓக்கே.. ஆனா  அடுத்த  கவுதம் படத்து கெட்டப்பே இதுக்கும் போட்டது எடுபடலை.. அந்த பிஞ்சு மூஞ்சி எப்படி ஆக்‌ஷன் ஹீரோவுக்கு செட் ஆகும்? மீசை இல்லாமல் மழு மழு முகம் இருந்தா தமிழ் சினிமால ஆக்‌ஷன் ஹீரோவா காட்ட முடியாது.. ( குருதிப்புனல் கமல் விதி விலக்கு )கோ படத்துக்குப்பின் வந்தான் வென்றான் , ரவுத்திரம் போல  ஜீவாவுக்கு இதுவும் ஒரு சறுக்குப்படமே.


 ஹீரோயின் பூஜா ஹெக்டே..தானா வந்து அவர் நம்மை ஹக் பண்ணாக்கூட வேணாம் விலகம்மா என சொல்ல வைக்கும் சுமார் அழகுதான்..  பாடல் காட்சில ஃபுல் முதுகை காட்டறார்..  ஒரு சோகக்காட்சில  லோ ஹிப் காட்றார்..  ஒரு காதல் சீன்ல லோ கட் காட்டறார்.. ஆனா நடிப்பை மட்டும் கடைசி வரை காட்டவே இல்லை.. எல்லாத்தையும் இப்பவே காட்டிட்டா எப்படி? அடுத்த படத்துல நடிப்பைக்காட்டலாம்னு பெண்டிங்க் வெச்சிருக்காராம்.. 60 மார்க் போடலாம்.. லிப்ஸ். கண் எல்லாம் நல்லாருக்கு.. கனகாம்பரப்பூ கலர்ல அவர் உதடுகள் வசீகரிக்கிறது.. தொப்பை போடாத அவர் இடை அழகு.. மற்றபடி  அவர் வந்து போகும் 13 காட்சிகளில் இயக்குநர் சொல்லிக்குடுத்ததை செய்கிறார்.. 


 வில்லனாக நரேன்.. இயக்குநருக்கு என்ன கோபமோ தெரில .. நல்லா பழி வாங்கிட்டார்..  இவர் வரும் ஆரம்ப காட்சிகள் நல்லா இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் படு சொதப்பல். என்னமோ கார்பெண்டர் மாதிரி சுத்தியலோட அவர் சுத்துவதும், ஹீரோவை நக்கல் அடிப்பதாக நினைத்து இவரே கேவலப்படுவதும் சகிக்கல.. 


நாசர் கனகச்சிதமான நடிப்பு.. 


http://mimg.sulekha.com/tamil/mugamoodi/stills/mugamoodi-movie-012.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்1. முதல் குங்க் ஃபூ ஃபைட் சீன் ஷார்ப் அண்ட் கலக்கல்..  ஹாலிவுட் படம் போல் காட்சி அமைப்பு.. 


2. எஃப் எம்மில் செம ஹிட் ஆன வாயைப்பொத்தி சும்மா இரு பாட்டு படப்பிடிப்பு அம்சம்.. ஒளிப்பதிவு, கேமரா ஆங்கிள் எல்லாம் ரசிக்கும் விதத்தில் 


3. ஹீரோயின் ஹீரோவை துப்பு சுல்தானி மாதிரி கேவலமா துப்பியதை நினைத்து புலம்பும் ஹீரோ  தன் தாத்தா எதார்த்தமா துப்பும் போது  ஜெர்க் ஆவது கலக்கல்.. 


4. ஹீரோ வில்லன் சேசிங்க் சீனில் நள்ளிரவில் ஒரு கள்ளக்காதல் ஜோடி கொஞ்சுவதும்.. கண் மூடி சொக்கிய நிலையில் இருக்கும் அந்த ஜிகிடியின் கன்னத்தில் ஹீரோ ஒரு தட்டு தட்டி செல்லும்போது அது தன் கள்ளக்காதலன் தான் என அந்த கற்புக்கரசி நினைத்து புளகாங்கிதம் அடைவதும் செம காமெடி சீன். 


5. படு மொக்கை படத்தை என்னமோ பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் மாதிரி போஸ்டர் டிசைன், ட்ரெயிலர் எல்லாவற்றிலும் கலக்கலான ஓப்பனிங்க் கொடுத்த மிஸ்கினின் திறமை.. 


 6. டைட்டில் டிசைன் மார்வெல் பிக்சர்ஸின் ஸ்டைலை சுட்டிருந்தாலும்
 ரசிக்கும்படி இருப்பதுhttp://tamil.cinesnacks.net/photos/events/Mugamoodi-Press-Meet-02/mugamoodi-meet-stills-051.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,1. யுத்தம் செய் படத்தில் ஃபைட் சீன்க்கு பேக்கிரவுண்ட் மியூசிக் நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க.. ஓக்கே அதுக்காக அதே இசையை எடுத்து இதுக்கும் போடனுமா? 


2. தமிழ் நாடே கொண்டாடும் ஹீரோ முகமூடியை பார்க்கனும்னு வில்லன் போலீஸ்ட்ட கோரிக்கை வைக்கறான்.. எப்போ தமிழ் நாடு கொண்டாடுச்சு? அவர் இருக்கும் தெருவுக்குக்கூட தெரியாது.. அபப்டி ஒரு சீனே வைக்கலையே? 


3. வில்லன் ஆசாரியா? கார்பெண்டரா? ஏன் லூஸ் மாதிரி கைல ஒரு சுத்தியை வெச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கான்?


4. ஸ்பைடர் மேன், பேட் மேன், அயர்ன்மேன், சூப்பர்மேன் என்று வில்லன் ஹீரோவை  நக்கல் அடிப்பது படு கேவலம். அதுவும் 5 முறை அப்படி பண்றார்.. க்ளைமாக்ஸ் சீரியஸா இருக்க வேண்டாமா?  கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?


5. ஹீரோயின்க்கு ஹீரோவை 6 டைம் நேருக்கு நேர் பார்த்தப்ப வர்லை.. முக மூடி போட்டுட்டு வேன் கிட்டே யூரின் போறப்ப எதார்த்தமா ஹீரோயின் ஹீரோவை அந்த கேவலமான கோலத்துல பார்த்த பின் காதல் பொங்கிட்டு வருது.. யோவ்,, இது என்ன கில்மா படமா? 


6.  க்ளைமாக்ஸ்ல வில்லன் ஸ்கூல் குழந்தைங்க இருக்கும் வேன்ல உள்ளே போக நினைச்சா கதவைத்திறந்து போக மாட்டாரா? ஏன் லூஸ் மாதிரி டாப்பை சுத்தியால அடிச்சுட்டு இருக்கார்? அவருக்கும் டாப் அதாவது மேல் மாடி காலியா?


7. ஹீரோயின் ஹீரோகிட்டே லவ்வை வெளிப்படுத்த பல வழி இருந்தும் ஏன் கேனம் மாதிரி ஹீரோ  நெஞ்சை தடவி தடவிப்பார்க்கறாரு? ஆண்ட்டி மாதிரி.. 

( நல்ல வேளை.. )


8. குங்க் ஃபூ மாஸ்டர்  ஹீரோவுக்கு  எல்லாத்தையும் கத்துக்குடுக்காம  இன்ஸ்டால்மெண்ட்ல வித்தைகள் கத்து தர்றாரே, அது ஏன்? 


9. க்ளைமாக்ஸ் ஃபைட் சீன் தான் பொதுவா இந்த மாதிரி ஆக்‌ஷன் படத்துக்கு முக்கியம்.. ஆனா ஏன் சொதப்பல் ஃபைட்?


 10. ஹீரோ அந்த குழந்தைங்க முன்னால பல்டி, குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சு டாக்டர் ராமதாசை விட  பெரிய காமெடியன் ஆக ட்ரை பண்றது  படு கேவலமா இருக்கு.. ஆக்‌ஷன் ஹீரோ இமேஜையே அது உடைக்குது.. 11. ஹீரோவுக்கு அந்த ப்ளூ கலர் பனியன் லெக்கின்ஸ் டிரஸ் படு கேவலமா இருக்கு.. பார்த்தா சிரிப்பு தான் வருது.. அதுக்கு மேல சிவப்பு கலர் ஜட்டி வேற .. அவ்வ்வ்வ்.. ராமராஜன் நடிச்சிருக்கனும் 
http://3.bp.blogspot.com/-awG8r-wdTKI/UD5CP548PZI/AAAAAAAA72Q/IVZ3RitUtUE/s1600/Mugamoodi-Movie-Stills-%2B(1).jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. யாரையும் நம்பாதீங்க.. கமிஷனர் உட்பட.. எப்பவும் சிவில் டிரஸ்ல வாங்க.. யூனிஃபார்ம் வேண்டாம்.. , இந்த ஃபார்மாலிட்டி சார்.. மோர் எல்லாம் கட் பண்ணுங்க , டியூட்டியை பாருங்க.. 


2.  அதென்ன மாப்ளை 18 வயசுல இருந்து 81 வயசு வரை எல்லாரும் டாஸ்மாக் வந்துடறாங்க?


3. அதெப்பிடிடா தண்ணி அடிக்க உன் கிட்டே மட்டும் காசு வந்துடுது?4. புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக
நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு
நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’


5. எங்கேடா போறே?


 அவளைப்பார்க்கனும்


 பார்த்து?


 கன்னத்துல அறையனும். 

 அவ கமிஷனர் பொண்ணுடா.. 

 அப்போ 2 டைம் அறையனும்.. 6. இப்போதான் சாமி மலை ஏறி இருக்கு..  திரும்பவும் ஏற வெச்சுடாதீங்க.. 7. அங்கே என்னடா பண்றே?


 டாடி, பைக்கை ரிப்பேருக்கு குடுத்திருக்கேன்.. மெக்கானிக் பார்த்திட்டு இருக்கான்.. ( பில்டப் ஹீரோயின் முன்) உன்கிட்டே சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லையேடா.. சரி சரி.. நைட் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.. சரக்கு அடிச்சு வாமிட் எடுத்துட்டு இருக்காதே.. 8.  ஏண்டா மூடு அவுட்டா இருக்கே? 


 என்னால முடியல.. 

 அப்போ நல்ல டாக்டராப்பாரு


 அய்யோ தாத்தா.. அதில்லை.. அந்த முடியல அல்ல.. இது வேற.. சோகம்.. 


 9. லவ் ஒரு டெஸ்ட் மாதிரி டா.. 

 ம்க்கும், நான் ஸ்கூல் டெஸ்ட்டே பாஸ் பண்ணலை.. 10. குனிஞ்சு நடக்காத.. என்னை மாதிரி ஆகிடுவே.. 

 உன்னை மாதிரி இருந்தா நான் அவளை பார்க்காமயே இருந்திருப்பேன்.. 

http://www.koodal.com/cinema/gallery/events/2011/771/mugamoodi-movie-launch-stills_23_190750123.jpg


11. தாத்தா.. ஏதாவது ஐடியா குடு ப்ளீஸ்;. 

 எல்லாத்தையும் நானே சொல்ற மாதிரி இருந்தா நானே அந்தப்பொண்ணை லவ் பண்ணிடலாமே? நீ எதுக்கு ? 


12.  நீ என்னமோ தப்பு பண்றே? உனக்கு என்னமோ நடக்கப்போகுது.. 


13. டேய்.. இப்போ நீ என்ன பண்ணப்போறியோ.. எனக்கு வயிற்றை கலக்குது.. 


 எனக்கும் தான்.. 


14. வில்லன் - என் நிழல் கூட என் பின்னால் வராது.. ஆனா நீ வந்துட்டே..  எனக்கு போலீஸ் வாசனை பிடிக்காது, ஆனா சாவு வாசனை பிடிக்கும்.. 


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( 37 தான் போடனும் நியாயப்படி பார்த்தா, ஆனா விகடன்ல மிஸ்கின்னா ஒரு சாஃப்ட் கார்னர், அள்ளி வீசுவாங்க )

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேலை வெட்டி இல்லாதவங்க, பொழுது போகாதவங்க யாரா இருந்தாலும் டி வில அடுத்த வாரம் போட்டுடுவாங்க.. அது வரை வெயிட் பண்ணவும் . இந்த டப்பாவை . ஈரோடு அபிராமியில் பார்த்தேன்


http://kollywoodgalatta.com/wp-content/uploads/2012/08/tamil-movie-mugamoodi-photos.jpg a


26 comments:

கோவை நேரம் said...

சித்தப்பு...அவளோ மொக்கையா

கோவை நேரம் said...

வில்லன் ஆசாரியா? கார்பெண்டரா?..ரெண்டும் ஒண்ணுதானே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லவேளை நான் தப்பிச்சேன்...

இன்னைக்கு காலையில் படத்துக்கு போயிட்டு விமர்சனம் எழுலான்னு நினைச்சேன்...


அவ்வளவு மொக்கையா...?

சேகர் said...

அண்ணே, வேலை வெட்டி இல்லாதவுங்க பாருங்கன்னு சொல்லி இருக்கீங்களே. அப்ப, நம்ம ரெண்டு பெரும் வெட்டி பாய்ஸ் அஹ???

Unknown said...

Good review

Unknown said...

You saved our money ; your writing skill has improved a lot

இந்திரா said...

ஒரு சிலர் நல்லாயிருக்குனு சொல்றாங்க.
சிலர் மொக்கைனு..
படம் பார்க்கலாமா வேணாமானு ஒரே குழப்பமாயிருக்கு.
:-(

செங்கோவி said...

அண்ணே, நான் அப்பவே சொன்னேன்..நீங்க நம்பலை!

maithriim said...

இந்த மொக்க படத்தை எங்களுக்காக பொறுமையா பார்த்து நகைச்சுவையாய் விமர்சனம் எழுதிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்! படத்தைப் பார்ப்பதை விட உங்கள் விமர்சனத்தில் entertainment அதிகம் :-)

amas32

mohan baroda said...

Your review seems to be apt for this movie. Every director, after directing 2-3 films successfully, gives unwanted and unwarranted publicity well before the commencement of the shooting creating a sort of hype in the minds of the viewers. It is better if he directs the next movie amicably and let the public gives the required publicity after viewing it.

”தளிர் சுரேஷ்” said...

ஓவரா பில்ட் அப் பண்றப்பவே நினைச்சேன் படம் ஊத்திக்கும்னு! நல்ல காமெடியான விமர்சனம்!

இன்று என் தளத்தில்
ருத்திராட்சம் சில தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

Unknown said...

ஏன் சார்? மொக்கையான காவலன் படத்தை நல்ல படம் மாதிரி பில்டப் பண்ணிட்டு, தமிழ்ல்ல அத்தி பூத்தாற்போல் வெளிவரும் இந்த சினிமாவை குறை சொல்றீங்க. மக்களே இதெல்லாம் டுபாக்கூர். சூப்பர் படம். மிஷ் பண்ணாதீங்க. நான் நல்லா enjoy பண்ணேன்.

MaduraiGovindaraj said...

நான் தப்பிச்சேன்.

Doha Talkies said...

அண்ணன் நீங்க சொல்லிட்டீங்க எஸ்கேப் ஆகிட வேண்டியது தான்.

M.G.ரவிக்குமார்™..., said...

ஹீரோயின் எல்லாத்தையும் காட்டினாங்களாம் நடிப்ப மட்டும் காட்டலியாம்#இவரேன்னமோ நடிப்பப் பாக்குறதுக்குப் போன மாதிரியே..

sharavanaa said...

சரியான விமர்சனம்.. ஹலோ யார் பாஸ் அது படத்த enjoy பண்ணுணேன்னு சொன்னது. படத்துல 10 சீன்தான் வெளிச்சமாவே இருக்கு,மீதி எல்லா சீனும் மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு மாதிரி இருட்டாதான் இருக்கு..தமிழக மக்களே படம் படுமொக்க, அப்படியே போனாலும் 2nd half அப்பீட்டாகிக்குங்க..

sharavanaa said...

நம்ம நரேன் பத்தி நினைச்சாதான் பாவமாயிருக்கு..

Tirupurvalu said...

செந்தில் தறூதலைகு மட்டும் ஜெ போடுவிக.ஜிவா என்ன பண்ணீனார்

rushanth bose said...

மிஷ்கின் மேல உள்ள காழ்புனர்ச்சியில் விமர்சனத்தை எழுதாதீர்.

benjamin david said...

இது டப்பாதான் போலிருக்
கிறது ......இன்னும் சிலரும் மொக்கைன்னே சொல்றாங்க ...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே, நாளைக்கு இந்தப் படத்தை பார்க்கணும்னு நினைச்சிருந்தேன், கொய்யால உன்னால ஒன்னரை தினார் மிச்சம்டா அண்ணே ஹி ஹி...!

Yoga.S. said...

செங்கோவி விமர்சனம் படிச்சிட்டும்,படம் பாத்திருக்கீங்கன்னா,என்ன ஒரு அசட்டுத் துணிச்சல் உங்களுக்கு!

SELECTED ME said...

நல்லவேளை டிக்கெட் புக் பண்ணுவதற்கு முன்பு விமர்சனம் படித்தேன்! :-)

Unknown said...

நேற்று இரவு முகமூடி திரைப்படம் பார்த்தேன்.கடந்த 15 ஆண்டுகளாக மாதம் 2 படமாவது தியேட்டருக்கு சென்று பார்க்கும் என்னுடைய திரையரங்க அனுபவத்தில், என்னை அசந்து போக வைத்த இரண்டாவது படம்.

அசந்து போக வைத்த முதல் படம் அணில் விஜய் நடித்த ''சுறா''. ...அந்த படத்திற்கு பிறகு நான் அசந்து தூங்கிய படம் முகமூடி தான்..!

கதை,திரைகதை,வசனம்,இசை,ஒளிபதிவு,ஹீரோயின்,வில்லன், காமெடி எதுவுமே உருப்படியாக இல்லாமலும் படம் எடுக்கமுடியும் என நிரூபித்திருக்கிறார் மிஷ்கின். இதற்காக அவரை பாராட்டுவோம்.

படம் சூப்பர் என எழுதி , கொஞ்சம் பேரை சிக்க வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் அவ்வளவு பெரிய பாவம் செய்ய மனம் வரவில்லை.
VIKATAN MARK 33/100

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

ammu said...

unga comment kumutham book pathu apdiye ezhuthi irukkinga. vimarsanam enbathu ungloda ennangala apdiye velipaduthnum. ipdi aduthavanga karpanaya copie adikka koodathu. irunthalum intha vimarsanam nerhiyana oru nadayil irunthathu.arumai. vazthukkal!