Thursday, August 02, 2012

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv9OUgDYnhJAT9mlfZ9F8XV2CSmK41mmQnL8yqzmrUftZldYIfKdmZ-7X1mmqyoaqDgxtuJsGfS6NsXHeh5G5rnZu0SJcgXW0itZDadclxGdeJwjuY6XWoZvocI3G11z1fOCsgfDjo-JjF/s1600/Madhubaanakadai.jpgஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  பெத்தாம்பாளையம் தான் கதைக்களன்.. ஈரோடு கமலக்கண்ணன் தான் இயக்குநர்.. முழு படமும் ஒரே ஒரு டாஸ்மாக்கில் நடக்கும் சம்பவக்கோர்வைகள் தான் .. வித்தியாசமான முயற்சிதான்.. ஆனாலும் இன்னும் மெனெக்கெட்டிருக்கலாம்.. பெண்கள் பார்க்கவே முடியாது என்பது பெரும் குறை. அதை இயக்குநரும் உணர்ந்தே இருக்கிறார்.. 

 படத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னே  தமிழ் இலக்கியத்துல கேரக்டர்ஸ்  புத்தகம் பற்றி பார்ப்போம்.. ஆரம்பத்துல நாவல் தான் தமிழனை இலக்கிய உலகில்  புக வெச்சுது.. ( பிரதாப முதலியார் சரித்திரம்) அப்புறம் சிறுகதை.. பயணக்கட்டுரை.. கவிதை என அதன் எல்லைகள் விரிஞ்சுக்கிட்டே போனாலும் கேரக்டரஸ்க்கு மக்கள் ஆதரவு கம்மிதான்.. அமரர் சாவி எழுதுன கேரக்டர்ஸ் தொடர்  சுவராஸ்யமா இருந்தாலும் அது புத்தகமா வந்தும் கூட பெரிய வரவேற்பு பெறலை.. 



http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/05_2012/2805-mbk-p-l.jpg



1. டாஸ்மாக் பார் ஓனர் - கள்ளச்சாராயம், போலி மது இவற்றை அப்பப்ப கலந்து கட்டி சேல்ஸ் பண்றவர்.. எந்த பிரச்சனையும் வராம பாரை நடத்தனுமேன்னு எச்சரிக்கை உணர்வோட எல்லார் கிட்டேயும் கண்டிஷனா நடப்பவர்


2. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 1... இவன் எப்போ பாரு செல்ஃபோனும் கையுமா பேசிட்டே இருப்பான்.. யார் கிட்டே?டாஸ்மாக் பார் ஓனர் பொண்ணு கிட்டே.. செம கடலை... பாலைவனத்துல இளநீர் குடிச்ச மாதிரி ஒரே  சரக்கும் சலம்பலுமா போகும் திரைக்கதையில் இவர் போர்ஷன் தான் கொஞ்சம் ஆறுதல்.. 

3. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 2.. ஓனர் பொண்ணு கிட்டே காதல் வெச்சுக்கிட்டா அபாயம்னு எச்சரிப்பவன். அதுக்காக கைகலப்பு வரை போனாலும் சக பணியாளருக்கு ஓனரால் ஆபத்து எனும்போது கை கொடுத்து கை தட்டலை அள்ளிக்கொள்ளூபவர்


4.ஓனர் பொண்ணு.. மாநிறத்து மல்கோவா மா.. ஊர்ல எத்தனையோ பசங்க இருந்தும் போயும் போயும் தாடியும் , அழுக்கும் உள்ள ஆ:ளை லவ் பண்ணுவது முரண்பாடு என்றாலும் காதலே  முரண் உள்ள இரு துருவங்களிடையே தோன்றவும் வாய்ப்பு உள்ளதுதானே.. இவர் ஹீரோவுடன் நெருக்கமாக உரசும் கட்டங்கள் , லிப் கிஸ் என செம கிளு கிளு.. வரம்பு மீறாமல்.. 


5. எங்க ஊரு பாட்டுக்காரன் மாதிரி.. ஓ சி சரக்கு வாங்க பாட்டு பாடி கஸ்டமர்ஸை கரெக்ட் பண்ணி கவர் பண்றவர்,, இவர் மாதிரி கேரக்டர் ஊருக்கு 2 பேராவது இருப்பாங்க.. 


6. போலீஸ், பார் ஓனர் உட்பட அனைவரும் பார்த்து மிரளும்  பெட்டிஷன் மணி.. குடிச்சே சலமபல் பண்ணும் ஆள்.. ஆன்னா ஊன்னா எல்லார் கால்லயும் விழும் ஆள்.. தன் அப்பாவிடம் இவர் சரக்கடித்து புலம்பும் காட்சிகள் இன்னும் கண்ணுக்குள் நிக்குது


7. காதல் தோல்வியால் முதன் முதலாக சரக்கு அடிக்க வரும் இளைஞன் பெண்களை பற்றி கோபமாக பேசும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது.. எல்லாரும் பயந்து நடுங்கும் அறுவை பெட்டிஷன் மணியே இவனை பார்த்து பயந்து போவது காமெடி. 


8. இங்கிலீஷ்ல “ சார்.. பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் 35 ரூபா வேணும் என கவுரவ பிச்சை எடுத்து அதில் சரக்கு அடிக்கும் கேரக்டர்.. 


9. ராமன் - அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுக்கும் நபர்கள் அங்கே வந்து சரக்கு அடிப்பதும் பேசும்  வாழ்க்கைத்தத்துவங்கள்.. 


10. மகிழ்ச்சியைக்கொண்டாட அல்லது சோகத்தை மறைக்க குடிப்பவர் மத்தியில் செய்யும் வேலையில் வரும் நாற்றத்தை மறைக்க, மறக்க குடிக்கும் சாக்கடைத்தொழிலாளர்கள்.. அவர்கள் பேசும் வசனத்தில் பொறி பறக்கிறது.. அபாரம்.,. 

11. திருநங்கைகள்


12. பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்


13. இந்த கேவலமான பிழைப்பான டாஸ்மாக் பாரில் கூட வந்து கேவலமாக பிச்சை எடுக்கும் ஐ மீன் லஞ்சம் வாங்கும் போலீஸ் கான்ஸ்டபிள்.. 



http://tamil.cinesnacks.net/photos/movies/Madhubaanakadai/madhubaanakadai-movie-stills-002.jpg


மேலே சொன்ன கேரக்டர்கள் போக சின்ன சின்ன கேரக்டர்களும் உண்டு.. எல்லாரும் வாழ்க்கையில் நாம் தினம் சந்திக்கும் நபர்களே.. 


நடிப்புல முதல் இடம் பார்  ஓனர்க்கு.. அடுத்து அந்த ஹீரோயினுக்கு.. செம அழகு.,. கிராமத்துக்குயில்.. மேக்கப்பே இல்லாத அழகு முகம்,.,. அல்லது மேக்கப் போட்டிருப்பதே தெரியாத இயற்கை முகம்.. 


பெட்டிஷன் மணிக்கு க்ளோசப் காட்சிகள் அதிகம்.. தவிர்த்திருக்கலாம்.. குமட்டுது.. பாட்டுப்பாடும் கேரக்டர் கலக்கி விட்டார் மனிதர்

 4 பாடல்களில் 2 பாடல்கள் சூப்பர் ஹிட்..

1. மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே என்னுடைய தேவதை செம கலக்கு கலக்குது.. 

2. கள்ளம் இல்லாத 

3. சமரசம் உலாவும் இடம்


பாடல்களில் டச்சிங்க் வரிகள்-


குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்


“கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்
ஆதிக் குடியில தான்.
அப்பனும் மவனும் கோயிலில் சாமியும் சேர்ந்து குடிச்சோமடா
ஒழுக்கங்கெட்டவன்னு நம்மாளச் சொன்னது மேட்டுக் குடிகளடா
 http://moviegalleri.net/wp-content/gallery/madhubaanakadai-shooting-spot-stills/madhubaanakadai_movie_shooting_spot_stills_2234.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  போய்யா..  தகராறு பண்ணாம கிளம்பு.. 



உள்ளிருப்புப்போராட்டம் நடத்தப்படும்


2. டைம் ஆச்சு.. கடை சாத்தனும், கிள்மபலை?

ஏன்? அவன் மட்டும் இருக்கான்?

 அவன் ஒரு லூசுப்பையன்.. நீயுமா? கிளம்புடா.


3. டெயிலி இப்டி கழநீர்த்தண்ணி டீ வாங்கிட்டு வற்றியே, ஒரு நாளாவது ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்தா என்ன? 


நாளைக்கு சாகப்போற. உனக்கு  ஹார்லிக்ஸ் கேட்குதா?



4. ஹீரோயின் - யார் நீ?

 உன்னை வெச்சு குடும்பம் நடத்தப்போறவன்


 அதை நீ முடிவு பண்ண வேணாம். பண்னவும் கூடாது, எங்கப்பா....


5. இன்னுமா கடை திறக்கலை?


ஆறு மணி ஆக வேணாமா? 


 ஈசியா சொல்லிட்டே. நாங்க எல்லாம் குடிச்சு பழக்கப்பட்ட ஆள்ங்க, டைம்க்கு குடிச்சே ஆகனும்..



6. குடிகாரன்னா உனக்கு எளக்காரமா? 5 ஆந்தேதி வர வேண்டிய சம்பளம்  7 தேதி ஆகியும் வர்லைன்னா விதிர் விதிர்த்துப்போகமாட்டே?10 மணிக்கு ஏன் சரியா டாஸ்மாக் திறக்கலைன்னு கேட்க எங்களுக்கும் உரிமை உண்டு.. 



7. ஸ்கூல் வாத்தியார் - ஏண்டா.. குடிக்கறதே  தப்பு... அதிலும் நான் குடிக்கற அதே டாஸ்மாக்ல தான் நீங்களும் குடிக்க வரனுமா?



8. சார், நான் தெரியாமத்தான் கேட்கறேன்.. பாடம் நடத்தற நீங்க சரக்கு அடிச்சுட்டு போய் பாடம் நடத்தும்போது பாடம் படிக்கும் அவங்க சரக்கு அடிச்சுட்டு க்ளாஸ் போனா என்ன தப்பு?


9. நீ வேணா பாரு  மண்ணோட மண் ஆகப்போறே.. 

 நீ மட்டும் என்ன இளையராஜாவா ஆகப்போறே?



10. அக்டோபர் 1 - நல்ல வேளை நீ இன்னைக்கு பொறந்தே.. நாளை பிறந்திருந்தா கடை லீவ்.. 



http://mimg.sulekha.com/tamil/madhubaanakadai/stills/madhubaanakadai-tamil-movie-pictures-015.jpg


11 ஹாய்.. நான் எம் ஏ  டிபார்ட்மெண்ட்.. நீங்க?

 நான் கெமிக்கல் டிபார்ட்மெண்ட்.. 


 எல்லாரும் குடிகார டிபார்ட்மெண்ட்.. தானே.. 


12. சார்.. குடிகாரர்களை பற்றி குறைச்சு எடை போட்டுடாதீங்க.. எது ஒரிஜினல்? எது போலி ( டூப்ளிகெட்)? ன்னு இப்ப இருக்கற குடிகாரங்க எல்லாம் ஈசியா கண்டு பிடிச்சுடறாங்க.. 


13. ஒரு குவாட்டர் பாட்டில் ஒரிஜினல் விலை 10 ரூபா தான்.. ஆனா நீங்க 80 ரூபாவுக்கு விக்கறீங்க.. பிராண்ட் நேம் சொல்லி வாங்குன காலம் எல்லாம் போச்சு.. 80 ரூபா சரக்கு.. 100 ரூபா சரக்குன்னு விக்கறீங்க.. கம்ப்பெனி நேமே சொல்றதில்லை



14.  குடிகாரங்க எல்லாரும் குழந்தை மாதிரிடா.. 



15. ஹீரோயின் - என்னை வாயாடிப்பொண்ணுன்னு தெரியாம பழகிட்டே.. 

 வாயாடியா ? பார்த்தா அப்டி  தெரியலையே?  ( பார்த்தா எப்டி தம்பி தெரியும்? கொஞ்சம் பேச்சுக்குடுத்து பாரு )



16. நீ என்ன வெள்ளைகாரனுக்கா பிறந்தே? தமிழ்ல பேசுடா.. இங்க்லீஷ்ல சைலண்ட்டா கெட்டவார்த்தை பேசுனா  நீ பெரிய ஆளா? 


17.  பொண்ணுங்களையே நம்பக்கூடாது,.,. இளிச்சு இளிச்சு பேசுவாளுங்க, உருகி உருகி காதலிப்பாளுங்க, கடைசில் கழட்டி விட்டுருவாளுங்க


18. இறந்து விடு என்று சொல்.. மீண்டும் பிறந்து வருவேன், ஆனால் மறந்து விடு என்று சொல்லாதே இறந்து விடுவேன்.. 


19. ஆஞ்சநேயா! ஒரே ஒரு வரம் வேணும்

 ஆஞ்சநேயர் வேடம் பூண்டவர் - யா

கண்ட கண்ட கருமாந்திரம்  புடிச்ச நாய்ங்களூக்கு எல்லம் நல்ல ஃபிகர் செட் ஆகுது.. வாழ்க்கைல இப்படி சும்மா கட்டிப்பிடிக்கவாவது ஒரு பொண்ணு வேணும்// 



20. கஞ்சிக்கே வழி இல்லாதப்ப குவாட்டர் குடுக்குமாம்.. அதான் கடவுள்



http://www.kollytalk.com/wp-content/gallery/madhubaanakadai-movie-stills/madhubaanakadai-movie-stills-15.jpg


21. நயன் தாராவையும், கேத்ரினா கைஃபையும் மிக்சில போட்டு அரைச்ச மாதிரி ஒரு ஷேப் ,கலர்.. அந்த ஃபிகரு



22. நாங்க எல்லாம் வேலைக்குப்போனாத்தான் சோறு, இல்லைன்னா குடும்பமே பட்டினிதான்


23. யோவ் ஆஞ்ச நேயா! உன் வாலை சுருட்டிக்கிட்டு உக்காருய்யா 


நாசமா நீ போ!


24. உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா? சந்தேகப்படறதுக்குன்னே பிறந்திருக்கும் ஆள் ஆச்சே நீ ( ராமர் வேஷம் பூண்டவர் )


25. நீங்க எல்லாம் சரக்கு அடிக்கறதை வீடியோ எடுத்து யூ டியூப்ல போட்டு உங்கப்பாவை பார்க்க வைக்கனும்.. அப்போதாண்டா புத்தி வரும்.. 



26. குடிப்பது தனி மனித உரிமை அல்ல .. அது  ஒரு சமூகம்.. அசைச்சுக்க முடியாது


27. ஆலயமணி அடிச்சா சத்தம், ஆல்ஹஹால் மணி குடிச்சா யுத்தம்


28. நாம தள்லாடி நிக்கறவரை இந்த கவர்மெண்ட் ஸ்டடியா நிக்கும்.. நாம ஸ்டடியா நிக்க ஆரம்பிச்சுட்டா இந்த கவர்மெண்ட் தள்ளாடிடும்


29. டாஸ்மாக் வருமானம் தான் இந்த அரசுக்கு பெரிய ஆதாயம், அது மட்டும் இல்லைன்னா ஆட்டம் கண்டுடும்.. 


30. போலீஸ் மாமாவை - குடுத்து வெச்ச ஆள் மாதிரி கேட்கறான் பாரு.. கந்து வட்டியா வாங்கறே? எச்ச சோத்துக்கு பிச்சைஎடுக்கும் நாயே.. ( தியேட்டரில் அப்ளாஸ்)


31.  போலீஸ் - எப்படி போகுது வியாபாரம்?

வர்றவனுங்க எல்லாம் புடுங்கறதுலயே இருக்கானுங்க கடன்காரப்பசங்க



32. சாராயம்கறது எங்க குல சாமி.. ஆனா அதை விட்டு விலக வெச்சுட்டீங்க.. இந்த சரக்குக்கு எங்களை பழக வெச்சுட்டீங்க.. நீங்க எல்லாம் சந்தோஷத்தை கொண்டாட, துக்கத்தை மறக்க குடிக்கறீங்க.. ஆனா நாங்க வேலைக்காக குடிக்கறோம்.. அந்த நாற்றத்தை சகிச்சுக்க குடிக்கறோம்


http://haihoi.com/Channels/cine_gallery/madhubaanakadai_movie_shooting_spot_stills_0311_S_144.jpg


  இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஒரு சீனில் கூட மது குடிப்பது தவறு குடிக்காதிங்க என்ற பிரச்சார நெடி இல்லை. ஆனா குடிக்காத ஒரு ஆள் இந்தபப்டத்தை பார்த்தா  குடி மேல வெறுப்பு வர்ற மாதிரி எடுத்து இருக்காரு.. இன்னொரு விஷயம் இவரோட நோக்கம் டாஸ்மாக் சம்பவங்களை பதிவு செய்வதே


2.  டிஜிட்டல் படமாக எடுக்கப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை விட இந்தப்படத்தில் மேக்கிங்க், அவுட் புட் நல்லாருக்கு.. கேனான்  செவன் டி யில் எடுக்கபப்ட்ட படமாம்.. சபாஷ்


3. படத்தில் வாய்ப்பு இருந்தும் டூயட்டை சேர்த்தாது, காதல் காட்சிகளை தேவை இன்றி புகுத்தாது.. ஹீரோயின் வருவதே 4 காட்சிகள் தான் 16 நிமிடங்கள் தான்


4. அனைவர் நடிப்பும் கலக்கல்.. இயற்கையாக இருக்கு.. குறிப்பா அந்த பொண்ணு, பாட்டுக்காரர், பெட்டிஷன் மணி


5. இசை.. பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ்.. 


6. டைட்டில் போடும்போதே இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று நக்கல் அடித்தது


7. டாஸ்மாக்கில் வேலை செய்தாலும் ஹீரோவும் , நண்பரும் குடிப்பது போல் காட்சிகள் வைக்காதது ( மேலே உள்ல ஸ்டில்லில் அப்படி ஒரு காட்சி இருந்தாலும் படத்தில் அது இல்லை )


http://123tamilforum.com/imgcache2/2012/01/MadhubaanakadaiTamilMovieStills2300x233-1.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பார் ஓனருக்கு தன் மகளை  ஒரு சப்ளையர் லவ் பண்றது தெரிஞ்சுடுது..  அவர் சத்தம் இல்லாம அவனை தனியா ஒரு இடத்துக்கு வர வெச்சு அடியாளுங்க மூலமா போட்டுத்தள்ளாம  டாஸ்மாக் பார்லயே அதை செய்ய நினைப்பது எப்படி?அடிக்கடி டாஸ்மாக்ல யாராவது தகறாரு பண்றப்போ “ எந்த பிரச்சனையா இருந்தாலும் வெளீல போய் அடிச்சுக்குங்க. கடையை மூட விட்டுடாதீங்க என எச்சரிக்கையாக இருப்பவர் தன் சொந்தப்பிரச்சனை வரும்போது அதே எச்சரிக்கயை ஏன் ஃபாலோ பண்ணலை?


2. பிளான் பண்ணி கொலை பண்றது வேற கேட்டகிரி.. தன் பொண்ணை வேலைக்காரன் லவ்வறான்னு தெரிஞ்ச உடனே கோபத்துல அப்பவே போடுவாங்களா? ஆற அமர யோசிச்சு அவ்ளவ் டைம் எடுத்துக்குவாங்களா?


3. பொதுவா குடும்பப்பொண்ணுங்க டாஸ்மாக் பக்கமே வர மாட்டாங்க.. ஏதாவது வேணும்னா ஃபோன்ல சொன்னா வேலை முடிஞ்சது..  ஆனா பார் ஓனர் தன் மக பாருக்கு வர்றதை எப்படி அலோ பண்றாரு?


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


சி.பி, கமெண்ட் - சரக்கு அடிக்கும்சங்கர லிங்கங்கள் பார்க்கலாம்..


ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் படம் பார்த்தேன்


டிஸ்கி - மிரட்டல் - சந்தானம் காமெடிக்காக - விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

 

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 





http://www.cineulagam.com/photos/full/movies/madhupana_kadai_001.jpg

9 comments:

சனாதனன் said...

விமர்சனத்துல பிச்சு உதற்றீங்க பாஸ்...

Unknown said...

ஹ்ம்ம்

நாய் நக்ஸ் said...

Nee..
Eppadi....
Food...
Sir...
Perai....
Use..
Pannalam...????

Unknown said...

சார் கலக்கலான விமர்சனம்....அதுவும் சரக்கடிக்கற ஆளுங்க பாக்கலாம்னு சொல்லிட்டீங்க...பாத்துப்புடுறேன்....நன்றிங்க!

Unknown said...

Ethir paartha allovukku illai

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் விமர்சனம்!

Muthu Kumar said...

sir vimarsanam arumai nammau ooru director nalla varattum sir...

thanks for uploding

Muthu Kumar said...

sir arumayana vimarsanam,

namma ooru director nalla varattum sir..

thanks for uploding

Unknown said...

- ஒரு மது பானக்கடையின் நிகழ்வுகளை சமூக உணர்வுடன் - இயல்பாக யதார்த்தமாக - நகைச்சுவையுடன் காட்டியிருக்கும் மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படம் "மது பானக் கடை". ஒரு சிறந்த - இயல்பான சிறு கதை போன்ற படம். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல். இந்தப் படத்தை பெண்கள் பார்க்க முடியாது என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை. பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இல்லையே. ஒரு மதுபானக் கடை நிகழ்வுகளின் அவலத்தை பெண்களால் பார்க்க முடியாதா என்ன? இன்னும் சொல்லப் போனால் ஆண்களின் மதுப் பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் - பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆண் - பெண் இரு பாலாரும் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை இயக்குனர் கமலக் கண்ணன் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.