Wednesday, August 15, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 17. 8..2012 ) 12 படங்கள் முன்னோட்ட பார்வை

இந்த வாரம்  ஆக்ஸ்ட் 15 க்கு அதாவது புதன் கிழமை அன்னைக்கு  8 படங்களூம் ஆகஸ்ட் 17 வெள்ளி அன்று 3 படங்களும் ரிலிஸ்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpMnLo-TytwJM-D4PI6xc9PasVMB28BmDcBLifyVPAcJR34MvdqpCzYO4246Lsrr8AaBsSoiYaZspgLa9nOerXKZgALSUIPefaaFQFrtKev3j0VVn2PRDVIWyAIYVnsjv9t_1ufKI07Jrz/s1600/attakathi_movie_posters_wallpapers_004.jpg
1.அட்டகத்தி - தமிழ் சினிமாவில் தொன்னூறு சதவீதப் படங்கள் மதுரை அல்லது தூத்துக்குடி பின்னணியில்தான் வருகின்றன. அதை மீறி வரும் படங்களில் வட சென்னை- காசிமேடு - மீனவர் வாழ்க்கை என காட்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் முதல் முறையாக மதுரை, வட சென்னை பின்னணி இல்லாமல், சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்குகளை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்துக்கு அட்டகத்தி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியிருப்பவர்கள்தான் என்பதால், கலவையான பேச்சு வழக்கு, தனித்த வாழ்க்கை முறை என இருப்பார்கள்.

இதைத்தான் அட்டகத்தியில் படம்பிடித்துள்ளாராம் இயக்குநர் பா இரஞ்சித். இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்தவர். அட்டகத்திதான் இவருக்கு முதல் படம்.

ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோ ரோலுக்கு ஆறு புதுமுகங்களை தேர்வு செய்து, அவர்களில் இறுதியாக தினேஷ் என்பவருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். புதுமுகம் ஸ்வேதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு தாய்மொழி கன்னடம். ஆனால் தமிழ் சரளமாகத் தெரியும் என்பதால் தேர்வு செய்தார்களாம்.

மானாட மயிலாட ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்னையின் புறநகர்களான பழந்தண்டலம், பூந்தண்டலம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர் என சுற்றிச் சுற்றி படமாக்கியுள்ளார்களாம். ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில், abirami - ரிலீஸ்

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

 


 http://chennaionline.com/images/articles/July2012/4c7e4492-c36b-4fa7-9026-3dbf9ca7a6e6OtherImage.jpg

2. நான் -  இசையமைப்பாளர்கள் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, மைக்கேல் ஜாக்சன், மடோனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்று பிரபல இசையமைப்பாளரும், "நான்" பட ஹீரோவுமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். "காதலில் விழுந்தேன்", "வேட்டைக்காரன்" உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் விஜய் ஆண்டனி. இவர் இப்போது "நான்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜீவா சங்கர் என்பவர் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியும் வருகிறார். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், "நான்" படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், எனது நண்பர் ஜீவா சங்கர் தான் இப்படத்தின் டைரக்டர். வித்தியாசமான கதை. எனக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அதன்படி இந்தபடத்தில் ஹீரோவாக நடித்தேன். படமும் நன்றாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. 


மைக்கேல் ஜாக்சன், மடோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல் நம்மூர் இசை மேதைகள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். நான் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் அவ்வளவு தான். "நான்" படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. எல்லா தரப்பினருக்கும் இந்தபடம் நிச்சயம் பிடிக்கும், அப்படியே என்னையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். 

ஈரோடு  தேவி அபிராமியில் ரிலீஸ்  நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEuryDn-dTJDoZQ51tBVn0IA5iDRw5Gd5zzTlHtzs6TJaMkNjlS2JeRvHEKS94kCNeVUv_i4PNyNt_d07uoUUfK3_UDJwVXNGGGfYFBChI0k6QZWOA2cx_8SZeHNvjIuK3v5RB8Ed13kY/
3. முதல்வர் மகாத்மா - சென்னை வந்துள்ள அன்னா ஹசாரே, காமராஜர் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்வர் மகாத்மா என்ற படத்தின் இந்தி பதிப்பை நுங்கம்பாக்கம் ஃபோர்பிரேம் தியேட்டரி்ல் பார்த்து ரசித்தார்.


சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று அவர் கலந்து கொண்டார். முதலில் இயக்குனர் பாலகிருஷ்ணனனின் முதல்வர் மகாத்மா படத்தின் இந்தி பதிப்பு நுங்கம்பாக்கம் ஃபோர்பிரேம் தியேட்டரி்ல் அவருக்காக விஷேசமாக திரையிடப்பட்டது. பாலகிருஷ்ணன் ஏற்கனவே காமராஜ் என்ற படத்தை இயக்கியவர். முதல்வர் மகாத்மா படத்தை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் எடுத்துள்ளார்.

இதில் இந்திப் படத்தின் விஷேச காட்சியை அன்னா ஹசாரே, கிரண்பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் பார்த்து, ரசித்து, பாராட்டினர்.தன் தாய்நாடு பின்னோக்கி செல்வதால் தான் மீண்டும் உலகிற்கு சென்று மக்களுக்கு உதவ விரும்புவதாக கடவுளிடம் கோரிக்கை விடுக்கிறார் காந்தி. அதை ஏற்ற கடவுள் காந்தியை ஒரு கிராமத்தில் துப்புரவு தொழிலாளியாகப் பிறக்க வைக்கிறார். காந்தி தான் பிறக்கும் கிராமத்தில் ஆசிரமம் துவங்கி மக்களுக்கு உதவுகிறார். இயற்கைக்கு எதிராக சத்யாகிரகம் இருந்து மழையை வரவழைக்கிறார். இதைப் பார்த்த மக்கள் அவர் பின்னால் செல்கின்றனர்.

இதனால் ஊழல்வாதிகளும், சுயநல தொழில் அதிபர்களும் காந்தியை எதிர்க்கிறார்கள். அவருக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்கின்றனர். அவற்றை எல்லாம் காநதி சகித்துக் கொண்டிருக்கும் வேளையில் சித்தார்த் என்ற குறும்பட தயாரிப்பாளர் அவரை சந்தித்து சீடராகிறார். அவரிடம் காந்தி தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மறைந்து விடுகிறார்.

இந்த படத்தில் காந்தியாக நடித்திருப்பவர் காமராஜ் படத்தில் காமராஜாக நடித்த கனகராஜ் (61). காந்தியின் சீடராக பாலிவுட் நடிகர் அனுபம்கேர் நடித்துள்ளார்.

2 மணி நேரம் ஓடும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. இப்படத்தை பார்க்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அன்னாவை அவரது சொந்த ஊருக்குச் சென்று அழைப்பு விடுத்திருந்தார் பாலகிருஷ்ணன். நிச்சயம் பார்ப்பதாக அப்போது அவருக்கு வாக்களித்திருந்தார் அன்னா. அதன்படி இன்று படத்தைப் பார்த்து தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக படமே பார்க்காமல் இருந்து வந்தவர் அன்னா. இன்றுதான் அவர் முதல் முறையாக படம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/iruvan-movie-stills-41-300x199.jpg

4. இருவன் -ஒரு படம் வந்து வெற்றி பெற்ற பிறகு அதைக் காப்பி அடித்து அதே மாதிரியான படங்கள் வருவது நடைமுறையில் உள்ளது. ஆட்டுகார அலமேலு வெற்றி பெற்ற பிறகு கழுதை, நாய், குரங்கை வைத்தெல்லாம் படம் வந்தது. சமீபத்தில் பருத்தி வீரன் ஜெயித்த பிறகு நிறைய ஹீரோக்கள் அழுக்கு லுங்கி அரிவாளுடன் வந்தார்கள். ஆனால் இப்போது ஒரு படம் வெளிவரும் முன்பே அதன் கதையை தெரிந்து கொண்டு அதே மாதிரியான படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டது.

கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பற்றியது. இதுவே ஒரு ஆங்கிலப் படத்தில் சுட்ட கதைதான். இதைப்பார்த்து கன்னடத்திலும், தமிழிலுமாக சாருலதா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் படத்தை எடுத்துவிட்டார்கள். இதில் ஹீரோயின் பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக நடித்திருக்கிறார்.

இப்போது இவர்கள் இருவரையும் மிஞ்சிவிட்டார் ஒரு சிறுபட இயக்குனர். இ.எஸ்.முருகானந்தம் என்ற இந்த புதுமுக இயக்குனர் குறுகிய காலத்தில் டிஜிட்டல் பார்மெட்டில் இருவன் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு வருகிற 15ந் தேதி வெளியீடு என்று அறிவித்தும் விட்டார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக உடல் ஒட்டிப் பிறந்தவர்களின் உண்மை கதை என்ற கேப்சனோடு. இதே போன்று இதற்கு முன்பு ஒரு கூத்து நடந்தது. ஒரு தென்கொரிய படத்தை காப்பி அடித்து அமீர் நடிக்க சுப்பிரமணிய சிவா யோகியை இயக்கினார். அதற்கு சில வாரங்கள் முன்பே அழுக்கன் என்ற படத்தை அதே கதையுடன் புதுமுகங்கள் எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

ஆங்கிலப் படத்தை காப்பி அடித்து படம் எடுப்பவர்கள். இந்தக் கதையை வேறு யாராவது உல்டா செய்து கொண்டிருக்கிறார்களா? என்பதை தீவிரமாக விசாரித்து உறுதி செய்து கொண்ட பிறகு படத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்த பிறகு யாராது தொடங்குகிறார்களா? என்று கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்சம் கதை வெளியில் தெரியாத அளவுக்காவது நடந்து கொள்ள வேண்டும். இதற்கென தனி உதவியாளர்களை வைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பலகோடியில் எடுக்கப்படும் படத்தின் எதிர்பார்ப்பை சில லட்சங்களில் எடுக்கப்பட்டும் சிறு படங்கள் காலிபண்ணிவிடும். ஈரோடு STARல் ரிலீஸ்


5.  திருமதி கஜா என் காதலி -  இது ஏதோ கில்மா படம் போல 


http://www.hindustantimes.com/Images/Popup/2012/6/katrina-ek-tha-tiger.jpg
6. ek tha tiger - சல்மான்கான் நடிப்பில் அடுத்து வெளிவரும் ஏக் தா டைகர் படம் பல்வேறு காரணங்களுக்காக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


லேட்டஸ்டாக இந்தப் படம் கிளப்பியிருக்கும் பரபரப்பு... படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டுமே ரூ 75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்பதுதான். சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம்.


இந்த செய்தி மட்டும் நிஜமாக இருக்கும்பட்சத்தில், இது ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும்.


யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இந்த ஏக் தா டைகர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சமீபத்தில்தான் விலைபேசியது சோனி என செய்தி வெளியானது.


ஆனால் இதனை மறுத்துள்ள சோனி நிறுவனம், "நாங்கள் 15 மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டோம். அப்போது இந்த விலையை கொடுத்திருப்போமா என்பதை செய்தி வெளியிட்டவர்கள் யோசிக்க வேண்டும்," என அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் சினேக ரஞ்சனி தெரிவித்தார்.


இந்தியில் வெளியான சிங்கத்துக்கு ரூ 18 கோடியும், ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 2க்கு ரூ 38 கோடியும், அக்னீபாத் ரூ 41 கோடியும் சேட்டிலைட் ரைட்ஸாக கிடைத்தது. இதுவரை எந்த நடிகரின் படத்துக்கும் ரூ 50 கோடி சேட்டிலைட் உரிமைத் தொகையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஈரோடு ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ்


EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGEW-GrEx9IYc9xoXB5WF0Cz5UatquY6kKDRibExcabP0EDroVCGGjMAUGxtmPSKNyYkmC_heipIPvgs0_mmQRu5ehdijKsNFNqwkdXaDja_RN7vEuiD4q3KvGnNNSP0GVcutCdYOh_aQ/s400/Devudu-Chesina-Manushulu-First-Look-Poster-1590.jpg

 7. Devudu Chesina Manushulu (telugu) -ரவிதேஜா, இலியானா நடிச்ச தெலுங்கு படம்

இனிமே வரும் படங்கள் எல்லாம் ஆகஸ்ட் 17 வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றன

http://kollywoodz.com/wp-content/uploads/2012/07/Pandi-Oli-Perukki-Nilayam-Movie-Posters02.jpg

8. பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் என்னும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராசுமதுரவன். சென்டிமென்டுக்கு பெயர் போன இவர் படங்களில் கவர்ச்சி என்பது கொஞ்சமும் இருக்காது. ஆனால், இப்போது இவர் இயக்கியிருக்கும் பாண்டி ஒலிப்பெருக்கி நிலையத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சுனைனா ஒரு பாடலுக்கு கவர்ச்சியில் நடனமாடியிருக்கிறார். இதில் சுனைனா செம சீனாம்.. ஈரோடு ஆனூரில் ரிலீஸ்

பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம்


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/03/etho-seithai-ennai_songs.jpg


9. ஏதோ செய்தாய் என்னை - டைரக்டர் பி.வாசுவின் மகன் சக்தி நடிப்பில், புதுமுக இயக்குநர் எல்வின் இயக்கும் படம் "ஏதோ செய்தாய் என்னை".

காதலை மையப்படுத்தி அந்த காதலில் ஜெயிக்க நான்கு வில்லன்களை சமாளித்து தன் காத‌லில் கதாநாயகன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பது தான் படத்தின் கதை. ஏற்கனவே நிறையபடங்களில் இதுபோன்ற காதல் காட்சிகள் வந்தாலும், இந்த காதலை சற்று வித்யாசமாக ஆர்ப்பாட்டம், அருவா போன்ற கலாச்சாரங்கள் ஏதும் இல்லாமல் டீசன்ட்டாக இயக்குகிறார் புதுமுகம் எல்வின்.

படத்தின் நாயகனாக ‌பிரபல டைரக்டர் பி.வாசுவின் மகன் சக்தி நடிக்க, அவருக்கு ஜோடியாக போரண்மை லியா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த், ஆனந்த்பாபு, ரகுமான், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எழில் என்பவர் தயாரித்து, படத்திற்கு ஒளிப்பதிவும் செய்கிறார்.ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் ரிலீஸ்
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/Aachariyangal-Movie-stills.jpg

10. ஆச்சரியங்கள் - இந்தப்படத்துக்கு  என்ன விசேஷம்னா பேப்பர்ல  விளம்பரம் குடுத்து புது முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 மாசத்தில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம். 11.The Expendables 2

The Expendables 2, கோலிவூட்டில் தயாராகிவரும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாகும். Lions Gate Entertainment தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இத் திரைப்படத்தை Simon West இயக்குகிறார்.


வரும் ஆகஸ்ட் 17 திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்தில் Sylvester Stallone, Jason Statham, Jet Li,Dolph Lundgren, Chuck Norris, Randy Couture, Terry Crews, Liam Hemsworth, Jean-Claude Van Damme, Bruce Willis, மற்றும் Arnold Schwarzenegger ஆகியோர் நடித்துள்ளனர்.நவீன ஆயுதங்களின் வெடிப்பு சத்தங்களோடு படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தில் ஜெட் லீ நடிப்பதால் மரபு ரீதியான உடல் சண்டைக்கும் குறைவிருக்காது.


இத் திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://www.awardscircuit.com/wp-content/uploads/2012/08/oddlifeoftimothygreen_banner.jpg

12. The Odd Life of Timothy Green (2012)

 

மேஜிக் ரியலிசம் எனப்படும் அம்புலிமா டைப் கதை.. வாரிசு இல்லாம கஷ்டப்படும் ஒரு தம்பதி தங்களூக்கு எந்த மாதிரி குழந்தை வேணும்னு ஒரு லிஸ்ட் எழுதி ஒரு பெட்டில அதை வெச்சு தோட்டத்துல புதைக்கறாங்க.. அடுத்த நாள் அவங்க எதிர்பார்த்த அதே குணநலன்களுடன்  10 வய்சுப்பையன் வர்றான். அவன் யாரு? எப்படி வந்தான்? எனப்தே திரைக்கதை.. புதுமைப்பித்தன் தமிழ்ல எழுதுன பிரம்ம ராட்சஷ் வகை கதை. ஈரோட்டில் ரிலிஸ் இல்லை

 

 http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/01/Poovampatti4.jpg

 

13. பூவம்பட்டி- எஸ்.எம்.கே.சூர்யா பிரதர்ஸ் மூவிஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் 'பூவம்பட்டி'. முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாகும் இப்படத்தை புதுகை மாரிசா, என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக சந்தீப் அறிமுகமாக, ஹீரோயின்களாக லாவண்யா, ஸ்ரீஷாலினி ஆகியோர் நடிக்கிறார்கள்.


கிடார் ஆனந்த் இசையமைக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். இப்படத்தின் பாடல்வெளியீட்டு விழா சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை பத்திரிகையாளர் அமலன் தொகுத்து வழங்கினார். மற்ற தொகுப்பாளர்களைப் போல இல்லாமல் சுறுக்கமாக சொன்னாலும் சுவாரஸ்யமாக சொல்லி நிகச்சியை தொகுத்து வழங்கும் ஆற்றல் படைத்த அமலன், ஒரு நிகழ்ச்சியில் நடிகை நமிதாவுக்கு "ஆறடி ஆல்கஹால்" என்ற பட்டத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியில் நடிகைகளுக்கு எந்த பட்டத்தையும் கொடுக்கவில்லையென்றாலும், இதில் நடித்திருக்கும் புதுமுக ஹீரோவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறார். "சூர்யாவையும், நந்தாவையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து செய்த கலவையில் உருவானவர் போல இருக்கிறார் இந்த ஹீரோ." என்பதுதான் அந்த அடையாளம்.


குறைந்த செலவில் குறிப்பிட்ட நாட்களுக்குள் இப்படத்தை முடித்திருக்கும் இப்படக் குழுவினர் அனைவரும் இளைஞர்கள் என்பது கூடுதல் செய்தி. அதிலும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என்.கே.சின்ராசுவைப் பார்த்தால் ஓட்டுப் போடும் வயதையே தாண்டியிருப்பாரா? என்ற சந்தேகமே நமக்கு வருகிறது. அந்த அளவுக்கு இளைஞர்களாக இருக்கும் இவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் 'பூவம்பட்டி' படத்தின் பாடல்களும் இளைஞர்களுக்கு ஏற்றதுபோலத்தான் இருந்தது. ...


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை