Monday, August 20, 2012

டெசோ-கலைஞரின் ஆகச்சிறந்த நாடகம் - டாக்டர் ராம் தாஸ் பேட்டி @ கல்கி

https://athikalai.files.wordpress.com/2012/03/eelam-mathi-cartoon-2.jpg 

அதிரடிப் பேட்டி!பறிபோகுது பேச்சுரிமை!- பதறுகிறார் ராமதாஸ்


ப்ரியன்


டாக்டர் ராமதாஸை நாம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தபோது, அவர் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்குப் போட்டிருப்பதாகத் தகவல் வந்தது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வரின் செயல்பாடு மீது ஆக்கபூர்வ விமர்சனம் செய்ததற்கு அவதூறு வழக்கா?" என்று கொதித்தார் டாக்டர். அவரிடம் டாஸ்மாக் விவகாரத்திலிருந்து பேட்டியை ஆரம்பித்தோம்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB0ZSyTcEMVTI3x6CvLRudt2Tdpms7ZzQ_VbUiWihWL-XcsZpZXdHC_2PY5km1Kct-5dmq7jBD43u_gVmas9QY2sqA4cDCt5hPj06POK-xs7SAM9hwt0pRFPVcELJE6GI9elAmGXK3eMRs/s1600/WR_540716.jpeg

1. டாஸ்மாக்களுக்குப் பூட்டுப் போடும் போராட்டம்?
பா.ம.க.வால் 1989-ல் தொடங்கப்பட்ட பா.ம.க. மகளிரணி மூன்றே மாதங்களில், மதுக்கடைகளுக்கு முன் போராட்டம் நடத்தியது. பிறகு, இந்த 23 வருடங்களில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். சமீபத்தில் நடத்திய பூட்டுப் போடும் போராட்டம், ஓர் அடையாளம். உண்மையிலேயே பூட்டுப் போடும் அதிரடி போராட்டம் டிசம்பரில் நடக்க இருக்கிறது. மது ஒழிப்புக்காகத் தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான்!"2. மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லையே?ஏன் இல்லை? காங்கிரஸ் மற்றும் பல்வேறு காந்திய, சமூகநல இயக்கங்கள் எங்களின் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆதரிக்க மாட்டார்கள். காரணம், டாஸ்மாக் மூலம் அரசுக்குப் பெருத்த வருமானம். தவிர, அரசியல்வாதிகளின் பாக்கெட்டுகளுக்கும் பணம் சென்று குவிகிறது. எனவே, இந்தக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை மது ஒழியாது. அந்த வருமானத்தில்தான் ‘இலவசங்களை’ அள்ளிவிட்டு வோட்டுக்களை பறிக்கிறார்கள்.


இந்தக் கட்சிகள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால்தான் மதுவை ஒழிக்க முடியும். மாற்று இல்லாத நிலையில் மாறிமாறி இவர்களே தொடர்கிறார்கள். எங்களின் இந்தப் போராட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது! ‘வளர்ச்சி அரசியலை’ முன்வைத்து எங்கள் அரசியல் பயணம் அமையும்."


3. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ம.க. செல்வாக்குப் பெற்றுவிட்டதா?‘திராவிடம்’ என்று பெயர் வைத்திருக்கும் எந்தக் கட்சிகளோடும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்; காங்கிரஸ், பா.ஜ.க.வோடும் கூட்டணி கிடையாது! நான் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளுக்குச் சவால் விடுகிறேன். நீங்கள் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயாரா? மதுவை ஒழிப்போம் என்று கூறி வாக்குக் கேட்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? ஒரு ரூபாய்கூட மக்களுக்குக் கொடுக்காமல் வோட்டுக் கேட்க முடியுமா?இவற்றை நாங்கள் கடைப்பிடிக்கப் போகிறோம். உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள், எங்களின் இந்த நோக்கத்துக்குத் தோள்கொடுக்கத் தயாராக இருக்கின்றன. மக்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது."


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTkzPBAWWGD1QcG_lBzZgQENkCH2rg7nkBYwDoRwoNKs_DS7jCwlQEIKk63kvdtoQy7FHKvStTkCuVWoW1wxCcovtFUJXbLK3HZbKKZ1RM0ysjj8Rx_RzcETzMsf9Hj5PqC2HgApyHV9QF/s1600/WR_397537.jpeg
4. பா.ம.க.விலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட விலகினார்களே?அவர்கள் விலகியதால் பா.ம.க.வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; வரவும் வராது! ஒரு பெரிய கட்சியில் சிலர் விலகுவதும் சேருவதும் நடந்துகொண்டுதான் இருக்கும். விலகுபவர்கள் சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு விலகுவார்கள். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் எங்கள் லட்சியத்தை அடைய முடியாது."5. மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் அன்பு மணி மீது சி.பி.ஐ. வழக்குப் பாய்ந்துள்ளதே?


சுதந்திர இந்தியாவில் சுகாதாரத் துறையில் அன்புமணி அமைச்சராக இருந்த போது கண்ட வளர்ச்சியை, அதற்கு முன் எப்போதும் இந்தியா கண்டதில்லை. புகையிலையை ஒழிக்க அவர் எடுத்த நடவடிக்கைகளால் கடுப்பாகிப்போன புகையிலை தொழில் சார்ந்த தொழிலதிபர்கள் அவரைப் பழி வாங்கத் துடித்தார்கள். அன்புமணி மீது போடப்பட்ட வழக்குக்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறது. சரியான சமயத்தில் அம்பலப்படுத்துவேன். நீதிமன்றத்தில் எங்கள் நியாயம் வெல்லும்."
6. ஜெ. ஆட்சி?தி.மு.க. ஆட்சிக்கு ஜீரோ மார்க் கொடுத்தேன். இந்த ஆட்சிக்கு மைனஸ் ஜீரோ கொடுக்க வேண்டியிருக்கிறது. விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது. அந்த வேலைக்கு ஆளும் கிடைக்கவில்லை; விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை. விளைநிலங்கள் வீட்டு மனைகளாக லே-அவுட் போடப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர எந்தத் திட்டமும் இல்லை. மணல் உட்பட இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.


 தி.மு.க. ஆட்சியில் போட்ட திட்டங்களை மாற்றுவதும், ரத்து செய்வதும்தான் இந்த ஆட்சியின் வேலையாக இருக்கிறது. விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டு திருத்திக் கொள்ளாமல் அவதூறு வழக்குப் போடுகிறார்கள்.
ஜெயலலிதா 1991-ல் இருந்து முதல்வராக இருந்த காலகட்டத்தில் மட்டும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது 250க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளைப் போட்டிருக்கிறார்! அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள பேச்சுரிமையைப் பறிப்பதாக இருக்கிறது தமிழக அரசின் செயல்பாடு. இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்."


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW3g-MeVTbQJoll_tKGj-g86_I7R4peM0EEuC36LrtHCCHhY6JOvImLKsyOWqMuXHqgX0e7s2Pnc_9ujXAw2b4p8-EbQMpLINLATDC76gYek4z_hJomkW8HAz98QhuY7qLMyJx3ObEkgme/s1600/WR_776373.jpeg

7. டெஸோ - கருணாநிதி?ஈழத் தமிழர்களுக்கு அவர் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு போட்ட நாடகம். அவர் எப்போதெல்லாம் எதிர்க் கட்சியாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் ஈழப் பிரச்னையைக் கையிலெடுப்பார்; ஆளும்கட்சியாக இருக்கும் போது துரோகம் செய்வார். இந்த டெஸோ பொதுக் கூட்டத்தால் எந்தப் பலனும் இல்லை. தமிழகத்தில் எந்த அரசியல் திருப்பமும் இதனால் ஏற்படாது.


என் ஆச்சர்யமெல்லாம் உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் விஷயத்தில் உளமார்ந்த ஈடுபாட்டுடன் போராடும் தொல்.திருமாவளவன், கருணாநிதியின் நாடகத்துக்கு எப்படித் துணை போனார் என்பதுதான்! காங்கிரஸைச் சங்கடப்படுத்துவதுதான் கருணாநிதியின் நோக்கம் என்றால் அதுவும் நடக்காது. இவருக்குத்தான் காங்கிரஸை அண்டியிருக்கிற நிலையிருக்கிறதே தவிர, அவர்களுக்கு இவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.


 1994-ம் வருடமே பா.ம.க. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது. அப்போது சென்னையில் திரண்ட கூட்டம் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தடுமாற்றங்களின் தாக்கம் ஏதுமில்லாமல் ஈழத் தமிழர் பிரச்னையில் ஒரே நிலைப்பாடு எடுத்து வருவது நாங்கள்தான்" - என்கிற டாக்டர் ராமதாஸின் முகம் சீரியஸாகப் பேசியதில் சிவந்திருக்கிறது!


நன்றி - கல்கி , புலவர் தருமிhttp://lh4.ggpht.com/_IEYubfMaOJM/TI47QuILB5I/AAAAAAAACGM/AM4kSmr1nyk/rahul_gandhi_farmers1%5B4%5D.jpg

0 comments: