Friday, August 10, 2012

எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfnLZNMlyx6LdDXqt65xxoFyeznHKHTcST0vT-XFYFe9TWWnZv2m4suWQAPgmTRdAKz4mKfGkKgo0SZsKvmoXNf3ru4FzEu9dIx1C4_3m_JSgWEJYerNGlnTSmaCODkz2dHGRwuCmtR8/s1600/eppadi_manasukkul_vandhai_movie_posters1.jpg 

சன் டி வில ஒரு காலத்துல கொலையா கொன்னாங்களே காதலில் விழுந்தேன் பட விளம்பரம் மூலமா.. 10 நிமிஷத்துக்கு ஒரு டைம்.. ( படம் ரிலீஸ் ஆகி ஈரோட்டுல 10 நாள்தான் ஓடுச்சு அது வேற விஷயம்)அந்தப்பட டைரக்டர் எடுத்த படம்.. டாப்ஸியோட டாப்ல ( ஐ மீன் தலைல) அடிச்சு சத்தியம் பண்றேன்.. இது ஏதோ ஹாலிவுட் படத்தோட உல்டாதான்... என்ன படம்னு தான் நினைவில்லை.


வழக்கம் போல ஹீரோ ஒரு ஏழை.. ஹீரோயின் பணக்காரி.. ஒரே காலேஜ்ல படிக்கறாங்க.. அதாவது வேணும்னே ஹீரோ அவ இருக்கற காலேஜ்லயே சேர்ந்துக்கறான்.. ஹீரோயினை இம்ப்ரஸ் பண்ண அப்பப்ப சில கிறுக்கு வேலை எல்லாம் ஹீரோ பண்றான்... 


 ஹீரோயின் தன் பால்ய சினேகிதன் கூட ஒரே வீட்டுல தங்கி இருக்கா? ப்ளீஸ் க்ளீன் யுவர் டர்ட்டி மைண்ட்..  அவங்க 2 பேரும் தூய நண்பர்கள் தான்.. ஒரு டைம் ஹீரோவும், ஹீரோயின் ஃபிரண்டும் வீட்ல சரக்கு அடிச்சுட்டு இருக்கறப்போ நைட் 9 மணி குளிர்ல ஹீரோயின் தாழ்ப்பாள் போடாம குளிக்கறா.. அதை ஹீரோ பார்த்துடறான்.. ஹீரோ பார்த்ததை ஃபிரண்ட் பார்த்துடறான், ஆனா அவன் ஹீரோயின் குளிக்கறதை பார்க்கலை.. சபாஷ். தமிழ் சினிமா../ 


 2 பேருக்கும் கைகலப்பு.. தற்காப்புக்காக ஹீரோ  ஹீரோயினோட ஃபிரண்டை கொலை பண்ணிடறான்.. டெட் பாடியை அதே வீட்ல  நூறாவது நாள் படத்துல வர்ற மாதிரி புதைச்சுடறான்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/eppadi-manasukkul-vandhai-movie-stills/eppadi_manasukkul_vandhai_movie_stills_vishwa_tanvi_vyas_3806.jpg


 போலீஸ் அந்த கொலையை கண்டு பிடிச்சுடுது.. ஆனா இன்ஸ்பெக்டர் கேப்டன் மாதிரி நியாயமான ஆள் இல்லை.. தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் மாதிரி ஒரு சந்தர்ப்பவாதி..  நித்தி- ஜிஞ்சிதா கில்மா டி விடி கைக்கு கிடைச்சதும் முதல்ல எ ப்படி சன் டி வி 300 கோடிக்கு  நித்தி கிட்டே பேரம் பேசுச்சோ அந்த மாதிரி இன்ஸ்பெக்டர் 50 லட்சம் கேட்கறார்.. 


அதுக்கப்புறம் என்ன ஆச்சு? ஏது ஆச்சுன்னு ஓரளவு விறுவிறுப்பாவே சொல்லி இருக்காங்க.. 


ஹீரோ விஸ்வா  பத்தோட 11 அத்தோட இதுவும் ஒண்ணு அப்டி சொல்லி விட முடியாதபடி ஓரளவு நடிச்சிருக்கார்.. இப்போ அவர் நமக்கு முக்கியம் இல்லை.. நம்ம டார்கெட் ஹீரோயின் தான்.. வாங்க ஒரு பேரா வர்ணிச்சு தள்ளுவோம்.


ஹீரோயின் பேரு தன்வி வியாஸ்..  இனிமே சுருக்கமா தன்ஸ்.. முலாம்பழ ஜூஸ் குடிச்சா மாதிரி பாப்பா அப்படி ஒரு ஃபிரஸ்..  மாசு மருவற்ற முகம்னு  சொல்லிட முடியாது, ஏன்னா அவரோட வலது கன்னத்துல மரு, மங்கு, மச்சம் , பரு எல்லாம் இருக்கு... கேமரா மேன் என்ன பண்ணனும்னா க்ளோசப்  சீன்ல இடது பக்கமாவே காட்டனும்.. ஆனா அவர் அசால்ட்டா விட்டுடார் போல.. ஆல்ரெடி சிவப்பா இருக்கற ஹீரோயின் ஏன் அவ்வளவு அடர்த்தியா மேக்கப் போடனும்.. டான்ஸ் மாஸ்டர் கலாவே மிரள்ற அளவு ஃபுல் மேக்கப்..  வர்ற சீன் எல்லாம் கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே வருது.. லைலா மாதிரி..ஆனா 36 முறை தொடர்ந்து பார்த்தாலும் போர் அடிக்காத முகம்


லாண்டரி பையன் டிரஸ் அயர்ன் பண்ணுனதை கொடுக்க வர்றான்,.. என்னமோ வெளீநாட்டுத்தூதரை ஜனாதிபதி வரவேற்கற மாதிரி ஓவர் எக்ஸ்பிரஷன் காட்டுது. அவரோட உதடு பீட்ரூட் அல்வா மாதிரி இருக்கு.. ஆனா ஓவர் ரெட்டிஸ் லிப்ஸ்டில் போட்டு அழகை கெடுத்துக்குது.. ஒரு குளிக்கற சீன் இருக்கு.. செம கிளு கிளு.. 


இன்ஸ்பெக்டரா வர்றவர்  நடிப்பு ஓக்கே.. ஆனா அவர் க்ளைமாக்ஸ்ல காமெடி பீஸ் மாதிரி ஏன் காட்டிக்கறார்னு தெரியலை.. 

http://i.indiglamour.com/photogallery/tamil/movies/2012/August09/Eppadi-Manasukkul-Vandhai/normal/Eppadi-Manasukkul-Vandhai_12058rs.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1.  மனிதனுக்கு நல்ல காலம் வந்தா அது அவன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுடும்.. 


2.பத்தாவதுல வாங்க வேண்டிய 420 மார்க்கை பிளஸ் டூல வாங்குனா  உனக்கு எந்த காலேஜ்ல  இடம்  கிடைக்கும்? செத்த காலேஜ்ல தான்  சீட்  கிடைக்கும்.


3. ஒரே வீட்ல 2 பேரும் இருக்காங்க, ஒரே கேம் விளையாடறாங்க, ஒரே காலேஜ்ல படிக்கறாங்க, லிவ்விங்க் டுகெதரா இருக்காங்களோ?


4.  நீங்க  எங்கே போகனும்?


 நீங்க எங்கே போறீங்களோ அதுக்கு முன்னாடியே இறங்கிக்கறேன், ஹி ஹி 


5. சார்... 


 என்ன? சரக்கு வேணாம்னு சொல்ல வர்றீங்களா?


 இல்லை, தண்ணி மிக்ஸ் பண்ணுனா பிடிக்காது

 குளிச்சா கடல்ல தான் குளிப்பேன்னு சொல்ல வர்றீங்க? ( குளிச்சா குத்தாலத்துலதான் குளிப்பிங்களோ?ன்னு வசனம் வெச்சிருக்கலாம்)



6. அவங்கப்பா யார் தெரியுமா? டெக்ஸ்டைல் ஓனர்.. ஊருக்கெல்லாம் டிரஸ் தெச்சு தர்றவர்.. உங்கப்பா? நீ ஊரான் சட்டையை போட்டுட்டு திரியறவன்


7. சார், பெங்களூர்ல நல்ல மழையாமே?


 ஏன்? விவசாயம் பண்ணப்போறியா?


8. கவர்மெண்ட்க்கு டாக்ஸ் கட்டறதில்லையா? அந்த மாதிரி இந்த 50 லட்சத்தை நினைச்சுக்கோ


9. நான் கேட்டதும் என்ன ஏதுன்னு கேட்காம 50 லட்சம் தந்துட்டியே?

 ஒருத்தரை நம்பிட்டா  வாழ்ந்து செத்துடனும்



`10. நாட்ல 100 கொலை நடந்தா அதுல ஒரு கொலைகாரன் அகப்படறது இல்லையாம்.. அந்த அகப்படாத கொலைகாரன் நானா இருந்துட்டுப்போறேன்


http://moviegalleri.net/wp-content/gallery/eppadi-manasukkul-vandhai-movie-stills/eppadi_manasukkul_vandhai_movie_stills_vishwa_tanvi_vyas_4693.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஹீரோ சலவைக்கு வந்த டிரஸ்சை போட்டுட்டு பந்தாவா ஹீரோயின் கூட ஷாப்பிங்க் வர்றப்போ அவன் போட்ட்டிருக்கும் டிரஸ் ஓனர் அவனை அங்கேயே எல்லா டிரசையும் பிடுங்கிவிட ஹீரோ கூனிக்குறுகி பாத்ரூம்ல ஒளிய ஹீரோயின் பதறிப்போய் கடைல வேற டிரஸ் வாங்கித்தரும் சீன்.. 


2.  விஜய் மில்டன் பாடல்களில் 2 ஹிட் ஆகும்..  ஓப்பனிங்க் டப்பாங்குத்து, க்ளைமாக்ஸ் டூயட்.. 


3. ஹீரோயின் செலக்‌ஷன், திரைக்கதை அமைப்பு  2ம் ஓக்கே 


4. ஹீரோயின் சுடிதார் துவைக்க கைக்கு கிடைத்ததும் ஹீரோ அதை கொண்டாடும் அழகு ஆஹா/ துணி துவைக்கும் கல்லில் பட்டுச்சேலை போட்டு பின் அதில் சுடியை துவைப்பதும், பின் காய வைக்க தேசியக்கொடி மாதிரி கம்பத்தில் ஏற்றி காய வைப்பதும் கொள்ளை அழகு.. ( இதை சம்சாரங்க பார்த்தா புருஷன்க தொலைஞ்சாங்க.. )





 http://www.abimani.com/wp-content/gallery/eppadi-manasukkul-vandhai-tamil-movie-stills/eppadi-manasukkul-vandhai-tamil-movie-stills-20.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. music AJ Daniel ( assistant of Harris Jayaraj) நல்ல இசைதான் அதுக்காக டொம்டொம்டொம்முன்னு எப்போ பாரு தட்டிட்டே இருக்கனுமா? மெலோடி சாங்க்ல கூட அண்ணன் பேஸ்ல ரிப்பேர் ஆன டேப் ரிக்கார்டர் மாதிரி சவுண்ட் மிக்ஸிங்க்.. தொம் தொம்னு நெஞ்சு அதிருது.. சொல்ல முடியாது. இதய பலஹீனம் உள்ள்வர்கள் இவர் இசையை கேட்டா டொப்னு உயிரை விட்டாலும் விடலாம் ( இதையே சாக்கா வெச்சு யாரும் கொலை பண்ண அவர் மியூசிக்கை யூஸ் பண்ணிடாதீங்கப்பா)


2. ஹீரோயின் ஆட்டோ மேல தன் காரை மோதிடறா.. அப்படியே எஸ் ஆகி இருக்கலாம்.. ஆனா ஹீரோ அவரை இறங்க சொல்லி இவர் டிரைவர் ஆகி பப்ளிக்ல அடி வாங்கறது சிம்ப்பதியை வரவைக்க என்றாலும் நம்பமுடியாத சீன்


3. ஹீரோ ஒரு பாட்டில் மாதிரி சமாச்சாரத்தை ஃபிரண்ட் தலைல ஓங்கி அடிக்கறான்.. ஃபிரண்ட் ஆள் அவுட்.. அப்போ அந்த பாட்டிலுக்கு எதும் ஆகலை.. பின் ஹீரோ சுவர்ல சாய்ஞ்சு விரக்தியா அதை உருட்டி விடறான், அப்போ அது சுவத்துல பட்டு உடையுது.. ஓங்கி மண்டைல போடறப்போ உடையாதது இப்போ மட்டும் எப்படி உடையுது?



4.   வீட்ல தடி மாடுங்க மாதிரி 2 பசங்க சரக்கு அடிச்சுட்டு மப்புல இருக்காங்க.. கதவை தாள் போடாம ஹீரோயின் பெப்பரப்பேன்னு எல்லாம் திறந்து போட்டுட்டு குளிக்கப்போகுது.. சரி அது அப்பாவியா இருக்கட்டும்.. பெண்ணுக்கு உள்ளுணர்வுன்னு ஒண்ணு இருக்கும்.. ஹீரோ 2 அடி தொலைவில் நின்னு ஹீரோயின் குளிக்கறதை பார்க்கறான்.. அவன் அப்போதான் சரக்கு அடிச்சிருக்கான்;.. அந்த வாசம் அல்லது நாற்றம் கூடவா அந்த லூஸ்க்கு தெரியாது.. ?


5. வீடு பெட்ரூம்ல ஒரு பெட்ஷீட்ல தீ பற்றிடுச்சு. ஒரு குடம் தண்ணீர் ஊத்துனா அப்பவே அணைஞ்சிடும் ஹீரோவுக்கு ஃபோன் பண்ணுதே? அதுவரை அக்னி பகவான் வெயிட் பண்ணிட்டு இருப்பாரா?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156_009.jpg


6. ஹீரோ நெம்பர் ஸ்டோர் பண்ணீ வைக்காதா. ஒவ்வொரு டைம் ஃபோன் பண்றப்பவும் நெம்பர் டைப் பண்ணீ  பண்ணி பண்ணுதே? அப்பா , அம்மா கூட இருந்தாலாவது அப்பா செல் ஃபோனை செக் பண்ணுவார்னு சால்ஜாப் சொல்லலாம்.. தனியாத்தானே இருக்கு. ?


7. ஏதோ மாட்டுக்கு போடற ஊசியை ஹீரோ தன்னை ஃபாலோ பண்ணி உண்மையை கண்டு பிடிச்சவனுக்கு போடறார்.. அவன் சாகற வரை பார்த்துட்டு போக மாட்டாரா? பறக்காவெட்டி போல் அரை குறையா அட்டாக் பண்ணிட்டு ஓடறது ஏன்?


8. இந்த காலத்துல கட்டிய சம்சாரம் கிட்டே 1000 ரூபா பணம் கேட்டாலே ஏன்? எதுக்கு?ன்னு 1008 கேள்வி கேட்குது.. ஆனா ஹீரோ 50 லட்சம் கேட்டதும் உடனே 2 வது நிமிஷம் கேஷ் ரெடி.. எப்படி? அதுக்கு புத்திசாலித்தனமா ஒரு வசனம் வெச்சிருக்காரு. ஆனா என் கேள்வி ஹீரோயின் ஹீரோவை நம்பறார் ஓக்கே ஆனா ஒரு  வாய் வார்த்தையா எதுக்கு இவ்ளவ் பணம்?னு கேட்கமாட்டாரா? ( இதை செக் பண்ண என் சம்சாரத்துகிட்டே 750 ரூபா பணம் கேட்டேன் . அக்கவுண்ட் பேயி செக் போட்டு தருது அவ்வ் . அப்போதான் நான் வாங்குனேன்னு அத்தாட்சியாம் )


 9. போலீஸ் ஆஃபீசர் கிட்டே எவிடன்ஸ் ஒரு பேக்ல, ஹீரோ கிட்டே 50 லட்சம் பணம்.. 2 பேரும் பேக் மாத்திக்கும்போது பரஸ்பரம் திறந்து செக் பண்ண மாட்டாங்களா? எவ்ளவ் முக்கியமான டீலிங்க்.. பப்பரப்பான்ன்னு ஹீரோ ஏமாறுவது எப்படி?


10. ஹீரோ கிட்டே செத்துப்போன ஃபிரண்ட் மாதிரி பேசி போலீஸ் ஆழம் பார்ப்பதும், அந்த ஐடியாவும் சூப்பர்.. ஆனா அந்த நேரம் அந்த ஹால்ல பிரைவசியா லாக் பண்ணிக்க மாட்டாங்களா? அப்படியா ஃபோன் பேசிக்கிட்டே வந்து ஒரு ஆஃபீசர் சொதப்புவார்?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156/eppadi_manasukkul_vandhai_tamil_movie_stills_0406121156_063.jpg



சி.பி கமெண்ட் - முதல் படம்  மாதிரி இது மொக்கை இல்லை.. த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கலாம்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

 குமுதம்  ரேங்க் எதிர்பார்ப்பு - ஓக்கே 


 டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5


 டெக்கான் கிரானிக்கல் - 6/10


 ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி -

JULAYI - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/08/julayi.html
 




http://cdn2.supergoodmovies.com/FilesFive/eppadi-manasukkul-vandhai-movie-stills-0b9c9ff6.jpg

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

ரொம்ப நல்லாவே வர்ணிக்கிறீங்க! ஹீரோயினை!

garth said...

உங்களோட விமர்சிக்கும் திறன் சூப்பர் அப்பு.
அதுவும் இயக்குனரிடம் சில கேள்விகள் டக்கர்.

Chennai boy said...

எப்படி பாத்தாலும் 50லட்சம் லாஜிக் நல்லாவே உதைக்கிறது. இந்த காலத்தில் யார் 50 லட்சம் அப்படி துக்கி கொடுப்பா அதுவும் சில நிமிட கேப்பில் எப்படி தயார் செய்தார். ஹீரோயின் ஹீரோவை நம்பிட்டார் ஆனால் அவருடைய அப்பாவிற்கு தெரியாமல் 50லட்சம் எப்படி தூக்கி கொடுக்க முடிந்தது. எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் இவ்வளவு பணத்தை மகளிடம் கொடுத்து வைத்திர்ப்பாரா? தூக்கி கொடுத்து விட்டு சில நொடிகளில் இடத்தை காலி செய்கிறார். காதில் ஒரு பெரிய பூச்செண்டை சொருகி இருக்கிறார் இயக்குனர். அதற்கு முன் இந்த இன்ஸ்பெக்டருக்கு கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லை 50லட்சம் புரட்டுவார்னு எப்படி புத்திசாலித்தனமாக யோசித்தார். ஒரு இன்ஸ்பெக்டரை கொலை செய்து விட்டு 100பேத்து ஒருத்தர தப்பிக்கிறது என்பது சொத்த பேத்தல் விசாரணைக்கு முன்பு அவனை அடித்து துவைத்த ஒரு போலீஸ்காரங்க கூட இந்த இன்ஸ்பெக்டரை கொலை செஞ்சது யார்னு தெரியாது. இது தான் மெகா பேத்தல். ஆஹ மொத்தத்துல காதலுக்காக கொலைகள் செஞ்சாலும் தப்பு இல்லைன்னு இன்றைய இளைஞ்ர்களுக்கு பொறுப்பா கருத்து சொல்லியிருக்கார் இந்த இயக்குனர். பாக்குறவன் கேனயனாக இருந்தா வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குதுன்னு சொன்னாலும் சொல்வார் போலிருக்கு இந்த இயக்குனர்.