Wednesday, August 29, 2012

ஓணம் பண்டிகை @ கேரளா - ஒரு பார்வை

http://www.result.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_81919062138.jpg 

ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .


கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளிது வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

http://tamil.sudarnila.com/wp-content/uploads/2012/08/sabari-300x204.jpg

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.



மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN7oSt3cE4RS5GjalTbD9xj7-XKxtnpxBldBYvRJT04u67tJvJJMS6hATOzUtesKQSFiGTEVsVQbOFGecVzKp06w1fFVXmiS8fn0MFiPkrlp-Xhpow3MPlmAuRXoZ9-HiSnhkFEbG9BdM/s1600/Onam_Festival_9834_medium.jpg

அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர்.



 பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

http://moonramkonam.com/wp-content/uploads/2012/08/oanam-elephant.jpg

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது.


புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.


"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.




ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்க்ளைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.




ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும்




ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.


http://www.vikatan.com/news/images/onam.jpg
கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.



நாகர்கோவில்: ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் களைகட்டியுள்ளது.


கேரள மக்கள்  திருவோணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். ஓணம் அன்று அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இதனால் ஓணம் என்றாலே பூ விற்பனை சூடுபிடிக்கும். அதிலும் குமரி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து பூ வாங்கிச் செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.



ஓணம் பண்டிகை கொண்டாடவிருப்பதையடுத்து  காலை முதலே தோவாளை பூ மார்க்கெட்டில் திரும்பும் திசையெல்லாம் கேரள வியாபாரிகள் கூட்டம் தான். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்காமல் இருக்க தர்மபுரி, சத்தியமங்கலம், ஒசூர் பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகளில் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் இருந்தது.\

http://tamil.boldsky.com/img/2012/08/28-ela-ada-recipe-300.jpg

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ரூ.2000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிச்சிப்பூவின் இன்றைய விலை ரூ.750 ஆகும்.



தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய விலை(1 கிலோ)



மல்லிகைப் பூ - ரூ.700
வாடாமல்லி - ரூ. 50
கேந்தி - ரூ.30
சம்பங்கி - ரூ.200
கோழிப்பூ - ரூ. 25



ஓணம் என்றால் அத்தப்பூக்கோலம் தவிர அறுசுவை விருந்தும் உண்டு. விருந்துக்கு தேவையான காய்கறிகளை கேரள வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கிச் செல்கின்றனர்.



ஓணம் வ்ந்தாலே நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனக மூலம் சந்தை, பஞ்சலிங்கபுரம் சந்தை, மார்த்தாண்டம் காய்கறி சந்தை, தக்கலை வாழைத்தார் சந்தை,குலசேகரம் காய்கறி சந்தை ஆகியவற்றில் வியாபாரம் சூடுபிடித்துவிடும். நேற்று காலை முதல் இந்த சந்தைகளுக்கும் கேரள வியாபாரிகள் படையெடுத்தனர்.
http://suriyantv.com/wp-content/uploads/2012/04/4-6-2012-5-the-10-day-annual-festival-of.jpg


கதளி, ரஸ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை பழத்தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. ஆனால் வாழை இலைக்கு தான் கடும் தட்டுப்பாடாக இருந்தது. அதனால் ஒரு வாழை இலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது. பண்டிகை அன்று வாழை இலையில் விருந்து உண்பது தான் சிறப்பு என்பதால் அதிக விலை கொடுத்து வாழை இலைகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.



மேலும் வெள்ளரிக்காய், சேனை, பூசணிக்காய், தடியங்காய், சீனி அவரைக்காய், முள்ளங்கி, முட்டைக் கோஸ், காலி பிளவர், உருளைக்கிழங்கு போன்றவையும் இன்று அதிக விலைக்கு விற்கப்பட்டன.


நன்றி - விக்கி பீடியா, கூகுள், அமஸ் மேடம்

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஓணம் பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

Menaga Sathia said...

ஒணம் பற்றிய சிறப்பு பதிவுக்கு ஒரு சல்யூட்...