Tuesday, August 14, 2012

GOOLI - நான் ஈ சுதீப்-ன் கன்னட சினிமா விமர்சனம்

http://i.ytimg.com/vi/ObT2-qZZ-fw/0.jpg 

2012 ல நான் ஈ ரிலீஸ் ஆகி ஒரு கலக்கு கலக்கினாலும் கலக்குச்சு, உடனே நம்மாளுங்க அந்த பட வில்லன் சுதீப் நடிச்ச பழைய படங்களை  தூசு தட்டி டப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. போஸ்டர்ல பந்தாவா நான் ஈ சுதீப்பின் அடுத்த வெற்றிப்படம்னு ஒட்டுனதுக்கே கேஸ் போடனும், ஏன்னா இந்தபடம் 2008 ல ரிலீஸ் ஆனது....தமிழ்ல கொருக்குப்பேட்டை கூலின்னு டைட்டில் வெச்சிருக்காங்க.. இந்த கேவலமான டைட்டில் செலக்ட் பண்ண ஆளை கலைஞரின் டெசோ மாநாட்டுப்பேச்சை முழுசா கேட்கச்சொல்லியோ, மானாட மயிலாட கலா மாஸ்டர் முகத்தை க்ளோசப்ல பார்க்க வெச்சோ தண்டனை கொடுக்கனும் ராஸ்கல்ஸ்..


ஹீரோ வழக்கம் போல ரவுடி, தாதா, பேட்டைல மோசமான குடிகாரன்.. ( குடிகாரன்னாலே மோசம் தான், அது என்ன மோசமான குடிகாரன்?)..ரஜினிக்கு கூட எந்தப்படத்திலும் இவ்ளவ் பில்டப் இல்லை. இவருக்கு ஏகபட்ட பில்டப்.. இப்படிப்பட்ட ஆளை ஒரு கோடீஸ்வரி லூசு ஹீரோயின் லவ்வுது


 லூஸ்னா மனநலம் எல்லாம் பாதிக்கப்படலை.நாட்ல எத்தனையோ பேரு படிச்சுட்டு டீசண்ட்டா வேலைக்கு போய்ட்டு இருக்காங்க.. அவங்களை எல்லாம் விட்டுட்டு  இந்த சினிமா ஹீரோயின்க மட்டும் நிஜ வாழ்வுல செகண்ட். ஹேண்டா தொழில் அதிபரையும், சினிமா வாழ்வுல தலையே சீவாத பல் துலக்காத கேவலமான ரவுடியையும் தான் லவ் பண்ணி தொலைக்கறாங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxNWhgLawIryuf24SG_gxijSn7Y-QmG5vrn6Y_kYsZ9RsAqWtDNB-llBhmxLrJ7RRWcGaVlGEQwSiExWoBSQJRoPfwrzJYBbyRVeWfcaKG547OlSTtXfofNZb6bJkZtP0CJH7Pr6OpAQQ/s1600/Mamta+Mohandas+%252811%2529.jpg


ஹீரோயின் ஹீரோ கிட்டே லவ்வை சொல்றா.. அவன் ஏத்துக்கலை.. இதெல்லாம் ஒத்து வராதுங்கறான்.. வில்லன்க ஹீரோயினை கடத்தி ஹீரோவை மிரட்டும்போது  ஹீரோயினை காப்பாத்தறார். உடனே ஹீரோயின் ஐ ஜாலி என் மேல லவ் இருந்தாங்காட்டிதானே என்னை காப்பாத்துனே? என கொலம்பஸ் மாதிரி கேட்கறா.. 


 ஹீரோ போனா போகுது புடவை பறக்குது புடிச்சுக்கோ என்று  ரஜினி சொன்ன மாதிரி ஓக்கே சொல்றார்.. ஹீரோயின் அண்ணன்காரன் கருணா மாதிரி கூட இருந்தே குழி பறிக்கற ஆள்.. அவரு அடியாட்களை ஏவி விட்டு ஹீரோயினை கொலை பண்ணி  சொத்தை அடைய நினைக்கறார்.. என்ன ஆச்சு? என்ற கேவலமான சஸ்பென்சை தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க..


ஹீரோ சுதீப் ரஜினி ஸ்டைல்ல சிகரெட் பிடிக்கறாரு.. ஆர் பார்த்திபன் புதிய பாதை ஸ்டைல்ல சரக்கு அடிக்கறாரு..நம்பவே முடியாத  ஃபைட் எல்லாம் போடறாரு.. ஓவர் ஓவர் ஓவரோ ஓவர்.. இவர் வில்லன் கேரக்டர்க்குத்தான் லாயக்கு.. காதல்க்கு செட் ஆக மாட்டார்,.. ஒரு வேளை இயக்குநர் நல்லா அமைஞ்சா செட் ஆகலாம்.. ஹீரோயின்  மம்தா மோகன் தாஸ், சிவப்பதிகாரம் ஹீரோயின்.. அரக்கோணம், கும்பகோணம் க்ளோசப், லாங்க் ஷாட் என எந்த கோணத்தில் பார்த்தாலும் கிளு கிளுப்பே வர்லை.. சாதா ரசிகனுக்கே அது வர்லைன்னா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோவுக்கு எப்படி வரும்?படம் பூரா ஹீரோயின் வர்றாங்க..  பாடல் காட்சிகளில் சீன் காட்றாங்க.. ஆனா ரசிக்கற மாதிரி இல்லை..

வில்லன்க எல்லாம் படு கேவலமா இருக்காங்க..உஷ் அப்பா முடில


http://azhaki.files.wordpress.com/2010/05/mamta-mohandas-wallpapers207.jpg?w=576


ஸ்டண்ட் மாஸ்டரிடம் சில கேள்விகள்1. ஹீரோவை அடிக்க வில்லன்களோட அடியாளுங்க  திருப்பதி கோவில்ல லட்டு வாங்கவா போறாங்க? ஏன் ஒன் பை ஒன் லைன்ல வர்றாங்க? மொத்தமா 56 பேரும் அட்டர் டைம்ல போனா ஹீரோவால அடிக்க முடியாதுன்னா?


2. ஜெட்லீயை விட ரொம்ப நேரம் ஹீரோ அந்தரத்துல பறக்கறாரே?புவி ஈர்ப்புவிசைன்னு ஒண்ணு இருக்கே? என்னாச்சு?


3. வில்லன் ஒரு லோக்கல்  ரவுடி. அவன் க்ளைமாக்ஸ்ல கல்யாண மண்டப வாசல்ல இருந்து ஒரு கோடாலியை வீசறான். அது 2 பர்லாங்க் தாண்டி மணமேடைல உக்காந்திருக்கற ஹிரோயின் நெற்றில கன கச்சிதமா தாக்குது
ஒலிம்பிக்ல கூட அப்படி யாராலும் செய்ய முடியாது.


4. சூப்பர் மேக்ஸ் பிளேடு விலை 2 ரூபா.. அதனோட எடை 8 கிராம்.ஹீரோ ஒரு சீன்ல  அந்த பிளேடை வெச்சு 67 பேரை சாய்ச்சுடறார். அவங்க கைல அரிவாள், வெட்டுக்கத்தி எல்லாம் இருக்கு, ஆனா ஹீரோவை ஒண்ணும் பண்ண முடியலை. 


5. அதே சீன்ல ஹீரோ அந்த பிளேடை தூக்கி வீசறார். அது 1 பர்லாங்க் தூரம் உள்ள இடத்தில் நிற்கும் ஆள் நெற்றில பட்டு ஆள் அவுட்.. கின்னஸ்க்கு எழுதிப்போடலாம்.

http://www.bharatwaves.in/wallpapers/d/61913-4/Mamtha+mohandas_002.jpg

இயக்குநரிடம்  சில கேள்விகள்1. பொதுவா பொண்ணுங்க கிட்டே அவங்களை குறை சொன்னா பிடிக்காது.. ஆனா ஹீரோ என்ன கேவலமா திட்டினாலும் ஹீரோயின் சிரிச்சுக்கிட்டே இருக்கு லுசா?2. லோஹிப் ஜீன்ஸ், டாப் டி சர்ட் போட்ட்டுட்டு வந்த ஹீரோயினை கண்டபடி ஹீரோ திட்றாரு.. அவர் பழக்கமே இல்லாத ஆள்.. அப்படி பேசுனா பொண்ணு ஸண்டைக்கு வரனும், அல்லது கோபப்படனும், ஹீரோயின் லவ் பண்ணுது. எனக்கு பழக்கமான பெண் கிட்டே நான் ஒரு டைம் “ மிஸ், டிரஸ் ஓவர் கிளாமர். எல்லாம் தெரியுது”ன்னு சொன்னேன்.. அந்த பொண்ணு “ எனக்கும் தெரியும்” மைண்ட் யுவர் ஓன் பிஸ்னெஸ்னு சொல்லுச்சு3. கிஷோர்னு ஒரு நல்ல நடிகரை வேஸ்ட் பண்ணிட்டீங்க. அவர் படத்துல என்ன பண்றார்? ஹீரோ எது செஞ்சாலும் வேடிக்கை பார்த்துட்டு தேமேன்னு நிக்கவா போலீஸ் யூனிஃபார்ம்?


4. ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏதோ பேச போறார். அதை பார்த்து உடனே அவன் கூட இருக்கும் ஆள் எதிர்  கோஷ்டி கூட சேர்றான்கறது நம்பவே முடியலை.


5. ஹீரோ ஹீரோயின் கிட்டே பேசிட்டு இருக்கார், அப்போ வில்லன்க 18 ஜீப்ல 89 பேரு வர்றாங்க இஞ்சின் சவுண்ட், அத்தனை பேரு நடந்து வரும் சத்தம் கேட்காதா? எப்படி சத்தம் இல்லாம முதுகுல குத்த முடியும்? ஹீரோவுக்கு காது டமாரம்னு வெச்சுக்கிட்டாக்கூட ஹீரோயின் என்ன பண்றா?ஹீரோ முதுகுல குத்தும் வரை?

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mamta-mohandas-05/mamta-mohandas-01.jpg
மனம் கவர்ந்த வசனங்கள்1. சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி மீடியாக்களுக்கு இல்லை, அவங்க தேவை பரபரப்பு, பிளாஸ் நியூஸ், உடனடி புகழ்2. என்ன இது? லோ ஹிப் ஜீன்ஸ்? லோ ஹிப் தெரியற மாதிரி அரைகுறை பனியன் வேற


அய்யய்யோ


 இப்போ மூடி என்ன பண்றது? அதான் உலகமே பார்த்துடுச்சே?


3. உலகத்துலயே துரோகம் பண்ணாத, பண்ண நினைக்காத ஜீவன்கள் அம்மா அப்பா தான்


4. என்னது? உங்க பேரு நைண்ட்டியா? பேரே புதுசா இருக்கே?


குடிமகன்களுக்கு மட்டும் புரியும்5. நான் லவ் பண்றேன்


 ஹலோ நான் என்ன மாமா மாதிரி லெட்டரை கொண்டு போய்க்குடுக்கனுமா?


 ஹலோ, நான் உங்களைத்தான் லவ் பண்றேன்6. நாலு பேர் முன்னால உன்னை பார்த்து நான் சிரிக்கறதையே உன்னால தாங்கிக்க முடியலையே?நாளை ஊர் உலகம் ஒரு ரவுடியை மேரேஜ் பண்ணீக்கிட்டியேன்னு உன்னைப்பார்த்து சிரிக்கறப்போ அதை எப்படி தாங்க்கிக்குவே?


7. எவ்ளவ் புத்திசாலியா இருந்தாலும் ஒரு வீக் பாயிண்ட் அவனுக்கு இருக்கும்.. 8. ஏதோ டென்ஷன்ல உன்னை லவ் பண்றதா சொல்லிட்டேன், டோண்ட் டேக்  சீரியஸ். 


டென்ஷன்ல தான் உண்மை எல்லாம் வெளீல வரும் 9. குடிகாரனையும், கொலைகாரனையும் எப்டி வேணாலும் காப்பாத்திடலாம், ஆனா காதல்ல விழுந்தவனை மட்டும் காப்பாத்தவே முடியாது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhigsrKJLplw6h_9W1_shMw5owYIPabEe9IXJhgpGrVQbht6_Irl0aoWDepq-fAc7RjHcNrUiYmzK3oX-fKP-meZnAq4xFGY4NzpCgTCnkSkNh3zecxFyndfI08pzwrOuRBOBqv0Sx6A1c/s400/Mamatha+Mohandas7.jpg
ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன், படம் படு குப்பை. போயிடாதீங்க.

6 comments:

Unknown said...

இரசிக்கும்படியான விமர்சனம்.

மின்பதிவு.காம் (www.minpathivu.com) - தமிழ் இணைய திரட்டியில் உங்கள் பதிவுகளை இணையுங்கள். உங்கள் வலைப்பூவை பிரபலபடுத்துங்கள்.

Sathya said...

அண்ணா, இதே எல்லாம் போஸ்டர் பார்த்த போதே முடிவு பண்ணனும், படத்துக்கு போக வேண்டாமுன்னு. டைம் வேஸ்ட்! உங்க உழைப்பு வேஸ்ட்!

சக்திவேல்@ சத்யா

”தளிர் சுரேஷ்” said...

எப்படியோ ஒரு பதிவு தேத்திட்டீங்க!நன்றி! கதாநாயகி குறித்த விமர்சனம் நறுக்! உண்மைதான் நீங்க சொன்னது!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

Menaga Sathia said...

இந்த மாதிரி வீணா போன படத்தையெல்லாம் எப்படி பாக்குறீங்க??

கலாகுமரன் said...

என்னங்க எல்லாம் பெரிசு பெரிசாத் தெரியுது... எழுத்த சொன்னேன்.

scenecreator said...

கன்னட படங்களை பற்றி தெரியாது போல.சுதிப் அங்கே ஒரு பெரிய ஹீரோ.நம்ம ஊரு வாலி,ஆட்டோகிராப்,சேது போன்ற படங்களின் ஹீரோ அவர்தான்.அவரை போய் வில்லனா நடிக்கத்தான் லாயக்கி என்று சொன்ன உங்களை தான் டெசோ மாநாடு கலைஞர் பேச்சை கேட்க்க விடனும்.