Tuesday, August 14, 2012

அட்டகத்தி

http://static.moviecrow.com/movie/attakathi/2671.jpg

தமிழ் திரையுலகில் தற்போது சின்ன பட்ஜெட் படம் 'அட்டகத்தி'  பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் இது. நாயகனாக தினேஷ், நாயகியாக ஸ்வேதா நடித்து இருக்கிறார்கள்.


சந்தோஷ் இசையமைக்க, பிரமோத் வர்மா ஒளிப்பதிவு செய்ய, விஜயகுமார் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் மொத்த உரிமையையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கி, சொந்தமாக வெளியிடுகிறது.

'அட்டகத்தி'யில் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார்கள். " நம்ம எல்லாருக்குள்ளயும் ஒரு ஹீரோ ஒளிஞ்சுகிட்டிருப்பான்.. அவன் கண்டிப்பானவாவும் இருப்பான். அதே நேரத்துல அவனுக்குள்ள ஒரு குழந்தைத்தனமும் ஒளிந்திருக்கும். அதை வெளிக்காட்டுகிற படமா அட்டகத்தி இருக்கும்" என்கிறது படக்குழு.http://www.tamilkey.com/wp-content/uploads/2012/01/Watch-AttaKathi-Movie-Online-Trailer.jpg

'அட்டகத்தி' படத்தினைப் பற்றி அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு வந்தது படத்தின் FIRST LOOK வெளியான போது தான்.  படத்தின் LOGO, FIRST LOOK என அனைத்து விதத்திலும் 'அட்டகத்தி' கவனம் ஈர்த்தது.படத்தை முடித்த பின்,  தன்னுடைய குருநாதர் வெங்கட்பிரபுவிற்கு தனது படத்தினை பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார் ரஞ்சித். இயக்குனர் ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய வெங்கட்பிரபு, தன்னுடைய சக இயக்குனர்கள் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கும் இப்படத்தினை திரையிட்டு காட்டினார்.

இப்படத்தினைப் பார்த்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தங்களது நிறுவனம் மூலம் வெளியிட தீர்மானித்து அனைத்து உரிமைகளையும் வாங்கிக் கொண்டது.

ஸ்டூடியோ கிரீன் வசம் உரிமைகள் போனதை அடுத்து 'அட்டகத்தி'யை அவர்கள் மெல்ல மெல்ல பட்டை தீட்டினார்கள்.

இயக்குனர்கள் வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பாண்டிராஜ், ராஜேஷ், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன் என அனைவருமே படத்தினை பற்றி பாராட்டி பேச, 'அட்டகத்தி' இணையத்திலும் கவனம் பெற்றது.
http://www.cinemamasti.com/wp-content/uploads/Attakathi-Movie-Stills-2.jpg

'ஆசை ஒர் புல்வெளி ,  'ஆடி போனா ஆவணி'  போன்ற பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி உறையை விட்டு வெளியே வந்து, வெள்ளித்திரை நிரப்ப வருகிறது அட்டகத்தி.!


http://timesofindia.indiatimes.com/photo/11265485.cms


படம்: அட்டகத்தி
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: பிரதீப்

வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்
என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன் உந்தன் முகம் காட்டு பெண்ணே
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்

நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கிறதே http://masscinema.in/wp-content/gallery/attakathi-movie-stills_1/attakathi-tamil-movie-stills-60.jpg


டம்: அட்டகத்தி
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: பிரதீப், கல்யாணி நாயர்

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
யார் உயிர் யாரோடு (யாரோடு )யார்
உடல் யாரோடு(யாரோடு )
போனது மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வர்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே


தியேட்டர் ட்ரெயிலர் கலக்கல் ஹிட்டான மெலோடி - ஆடி போனா ஆவணி
 அ  மனதை வருடும் ஆசை ஒரு
 நன்றி - தமிழ்ப்பாடல் வரி, விகடன்

3 comments:

Anonymous said...

அட்டை கத்தி பற்றிய டீட்டெயிலான பதிவு

”தளிர் சுரேஷ்” said...

சினிமா பகிர்வு சிறப்பு!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

அம்பாளடியாள் said...

அட்டகத்தி திரைப்பட விமர்சனம் சொல்லிவிட்டீர்கள் அவசியம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் விளைகிறது
மனதினில் மிக்க நன்றி பகிர்வுக்கு .