Friday, August 10, 2012

நான் ஈமு
1. கொஞ்ச நாள் தானே ரகு கூட பழகுனே, எப்படி காதல் வந்தது?

எல்லா நாளையும் கொஞ்சற நாளா மாத்திட்டார், ஈசியா என்னை தேத்திட்டார்.


------------------------------2.சொத்துக்குவிப்பு வழக்குல தலைவர் ரிலீஸ் ஆகிட்டாரே? எங்கே?

 குவிச்ச சொத்துக்களை பதுக்க போயிருக்கார்.


-----------------------------------


3. தலைவரே, ஜெயிலுக்கு போனா பதவி உண்டுன்னீங்க, ஒரே ஒரு டர்க்கி டவல் மட்டும் தர்றீங்க?

 பதவியை தோள்ல கிடக்கற துண்டு மதிரி  நினைக்கனும்னு சொன்னேனே, இப்போ இந்த துண்டை பதவியா நினைச்சுக்குங்க ..


-------------------------------4. தலைவரே! திருமண மோசடிக்கான ஆதாரங்கள் இல்லாததால உங்களை விடுதலை பண்ணிட்டாங்க, என்ன பண்ணப்போறீங்க?

 என் ஆறு தாரங்களையும் பார்க்கப்போறேன்-----------------------------


5. டாடி, என் காதலுக்கு குறுக்கே நிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ்,,

 ஆனா ஒரு கண்டிஷன், பொண்ணு நம்ம சாதி சனமா இருக்கனும்---------------------------

6. சாமியார் டெஸ்ட் மேட்ச்ல கலந்துக்கறாரா?அவருக்குத்தான் கிரிக்கெட்டே தெரியாதே?

அட நீ வேற , அவரு ஆணா? பெண்ணா? என டெஸ்ட் பண்ணப்போறாங்களாம்---------------------------------


7.இளைய தலைமுறைக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்  என்ன வித்தியாசம்?

காங்கிரஸ் ராகுலை நம்பி இருக்கு, இளைய தலைமுறை  கூகுளை  நம்பி இருக்கு-------------------------------------


8. இன்ஸ்பெக்டர், கொலையாளியை கண்டு பிடிக்கறதா  ஸ்டேஷன்ல சொல்லிட்டு பிரவுசிங்க் செண்ட்டர்  எதுக்கு வந்தீங்க?

இண்ட்டர் நெட்ல வலை வீசி கூகுள்ல தேடறேன் சார்-----------------------------


9.  மேனேஜருக்கும், எம் டி க்கும் என்ன வித்தியாசம்?

முடிஞ்சா இந்த வேலையை செஞ்சு முடிச்சுடுங்கன்னு சொன்னா அது எம் டி ,  இந்த வேலையை செஞ்சு முடிக்கலைன்னா நீ முடிஞ்சேன்னு மிரட்னா அது மேனேஜர் ------------------------------


10.  , மேனேஜர் சார், நீங்க தானே லீவே கேட்காதீங்கன்னு சொன்னீங்க?

அதுக்காக 24 மணி நேரம் பர்மிஷன் கேட்டா எப்படி?------------------------------------11. அவரு அநியாயத்துக்கு பயந்த  சுபாவமா இருக்காரு.

ஏன்?

காலார நடந்தாக்கூட காலரா வருமா?ன்னு கேட்கறாரு.--------------------------------


12 ஹீரோவுக்கு ஏன் பொங்கி அண்ணன்னு பேர் வெச்சிருக்கீங்க?

 அவர் அநியாயம் எங்கே நடந்தாலும் பொங்கி எழுவாரு, எல்லா பொண்ணுங்களையும் அக்கா தங்கையா நினைப்பாரு--------------------------------


13.நான் இதயத்திடம்  கேட்டேன்

“ லவ்வுக்கும் , ஃபிரண்ட்ஷிப்புக்கும் என்ன வித்தியாசம்?”

இதயம் சொன்னது

“ ஏண்டா என்னைக்கொல்றிங்க? என் வேலை பிளட் சப்ளை தான், அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?”----------------------------------


14. நம்பிக்கை ஒன்றிருந்தால் போதும், எவ்ளவ் கூட்டம் கோயில்ல இருந்தாலும் அடிச்சு பிடிச்சு சுண்டல் வாங்கிடலாம் # தன்னம்பிக்கை தான் முக்கியம்---------------------------------


15. மனசைத்தொடற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு

 பிரா

 நீ எல்லாம் படிக்கற பையனாடா

 எஸ் மிஸ் , சரோஜா தேவி, இந்து நேசன், திரைச்சித்ரா படிக்கற பையன்------------------------------------------16. உலக அளவில் இந்தியன் தான் பெஸ்ட்

 நிஜமாவா?

 ஆமா, ஆனா என்ன பிரச்சனைன்னா  இந்தியாவுல  அவன் பெஸ்ட்டா இருப்பதில்லை-------------------------------


17. ட்ரிபிள்ஸ் போற பைக்கை கை காட்டி வழி மறிச்ச டிராஃபிக் சார்ஜெண்ட் கிட்டே பைக்வாலா -

சார், சாரி, ஆல்ரெடி 3 பேர் இருக்கோம், இப்போ போய் லிஃப்ட் கேட்டா எப்டி?---------------------------------


18. காதல், நட்பு என்ன வித்தியாசம்?

 காதல்ங்கறது  சிக்ஸ் பேக் மாதிரி, மெயிண்ட்டென் பண்றது ரொம்ப சிரமம், ஃபிரன்ட்ஷிப் என்பது தொப்பை போல ஒரு டைம் வந்துட்டா நம்மை விட்டு பிரியவே பிரியாது


--------------------------19. வீட்டோட மாப்ளையா இருப்பதும் , ஈமு கோழி வளர்ப்பதும் ஒண்ணுதான்

 எப்படி?

 ஆரம்பத்துல ஜாலியா இருக்கும், அப்புறம் அவமானம் தான் மிஞ்சும்


---------------------------------


20. நல்ல வேளை  ஈ படத்தை தெலுங்குல எடுத்தாங்க

 ஏன்?

 தமிழ்ல எடுத்திருந்தா  நான் ஈ(மு)ன்னு டைட்டில் வெச்சிருப்பாங்க---------------------------------


You can't depend on your eyes when your imagination is out of focus.
Mark Twain

2 comments:

கோவை நேரம் said...

வணக்கம்...சித்தப்பு

”தளிர் சுரேஷ்” said...

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்!நன்றி!

இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in