Saturday, August 18, 2012

ஏதோ செய்தாய் என்னை - சினிமா விமர்சனம்

http://tamilasia.com/wp-content/uploads/2012/03/Etho-Seithai-Ennai-Tamil-songs-mp3.jpgஹீரோயின் காலேஜ்ல மொத வருசம், ஹீரோ சீனியர்.. ராகிங்க்-ங்கற பேர்ல அப்பப்ப கலாட்டா பண்றார்..டெயிலி ஒரு ரோஸ் தர்றார்..ஹீரோ  ரோசாப்பூ விக்கற வாதியா? அல்லது ஹீரோயின் ரோசாப்பூ தலைல வைக்கற வாதியா? 2 ம் இல்லை. கொழுப்பு , அலும்பு தான்.. 


 ஹீரோயின் கண்டுக்கவே இல்லை.. படு கேவலமா திட்டறா.. இந்த தத்திக்கு அதெல்லாம் உறைச்சாத்தானே? ஹீரொயின் மாமா , அழகிரி மாதிரி ஒரு தாதா.. அவன் கிட்டே புகார் பண்றா.. 


இப்போ பயங்கரமான சஸ்பென்ஸ் காட்சி.. ஹீரோவும் மொத வருசம் தான் , 3 வது வருஷம்னு பொய் சொல்லி இருக்கான் ராஸ்கல். 

ஒரு தடவை ஹீரோவுக்கு கை விரல்ல அடிபட்டுடுது.. ஸ்பூன்ல சாப்பிடலாம்.. அந்த சாதாரண மேட்டர் கூட அந்த தத்தி ஹீரோயினுக்கு தெரியல.. ஊட்டி விடறா.. பதிலுக்கு ஹீரோ கொடைக்கானல்ல விடலை... ஏன்னா அவன் ஒரு விடலை.. கேனம் மாதிரி கெக்கே க்கே பிக்கேக்கேனு சிரிக்கறான். 2 பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகிடுது.. ( அதென்ன டவுன் பஸ்சா? மோட்டாரா? ஸ்டார்ட் ஆக ? )


ஹீரோயின் மாமா பெரிய தாதாவா இருந்தும் காதலை  ஏத்துக்கறார்... சஸ்பென்சாம் அடேய்.. அப்புறம் பார்த்தா அவரோட தொழில் முறை வில்லனை ஏமாத்தவாம்.ங்க்கொய்யால.. ஹீரோயினோட அண்ணனோட தொழில் எதிரி கேனம் மாதிரி ஹீரோவை கடத்தி “ உன் மாப்ளையை கடத்திட்டேன் ஹே ஹே ஹேய்” அப்டினு இளிக்கறான்.. 12 மணிக்குள்ள வந்தா  அவனை விட்டுடறேன்கறான்.. ( அவன் என்ன நடு நிசி நாயா ? பேயா?) http://i.ytimg.com/vi/IErQEd9UaLI/0.jpg


 இவர் போகலை.. இப்போதான் மாமாவோட  சுய ரூபம்  ஹீரோயினுக்கு தெரிது.. ஹீரோ க்ளைமேக்ஸ் ஃபைட் போட்டு படத்தையும் ஆடியன்சையும் ( 18 பேர்தான் ) முடிச்சு வைக்கறார்.. 

 பி வாசுவின் பையன் ஷக்தி தான் ஹீரோ. ஆள் இப்போ அஜித் மாதிரி வெயிட் போட்டுட்டார்.. எதுக்கு இவர் மீசைக்கும், மூக்குக்கும் ஓவர் க்ளோசப் வைக்கறாங்களோ? இவர் என்ன ஹீரோயினா?அவ்ளவ் க்ளோசப் ஷாட்ஸ் எதுக்கு? ஹீரொயின் கிட்டே வழியும் காட்சிகள் எல்லாம் ஓக்கே.., ஆனா வில்லன் கிட்டே பஞ்ச் டயலாக் பேசறது, ஃபைட் போடறது, 87 பேரை அடிக்கறது எல்லாம் ஓவர் ,ஓவரோ ஓவர்.. 


ஹீரோயின் புது முகம் லியா.. பொட்டே வைக்காத 50 மார்க் ஃபிகர்.. பல சீன்கள்ல இவர் கோபமா முகத்தை வெச்சுக்கவே ரொம்ப கஷ்டப்படறார்.. நல்லா கொழுக் மொழுக்னு தான் இருக்கார்.. ஓக்கே.. வில்லன்களா பூந்தோட்டக்காவல்காரன் ஆனந்த், பாடும் வானம்பாடி ஆனந்த் பாபுவும்.. ஆனந்த் ஓக்கே.. ஆனந்த் பாபு மொட்டை எல்லாம் அடிச்சு  5 உள் பனியன் போட்டு அதுக்கு மேல 2 டி சர்ட் போட்டு அப்புறமா ஒரு சட்டை போட்டிருப்பார் போல ( வில்லன்னா ஜை ஜாண்டிக்கா காட்டனும் இல்லை? )


http://www.top10cinema.com/dataimages/16320/13-08-2012-16320-1-6.jpg

42, 38, 36,38 ( மார்க்ங்க ஹி ஹி )

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. ஹீரோயின் பேக் ( நிஜமான லெதர் பேக்யா- பேடு பாய்ஸ்) உயரமான ஷெல்ப்ல இருக்கு.. ஹீரோயினால எடுக்க முடியல.. எட்டலை.. (  ஒரு அலை 2 அலை , 3 அலை ,4அலை , 5 அலை , 6 அலை, 7 அலை, 8அலை = எட்டலை)ஆனா ஹீரோ கிட்டே கேட்க கூச்சம், ஈகோ வேற.. ஆல்ரெடி சண்டை போட்டிருக்கு வேற.. ஹீரோவே வாலண்ட்ரியா மே ஐ ஹெல்ப் யூ?ன்னு கேட்கறாரு ( முறைப்படி ஆகஸ்ட் ஐ ஹெல்ப் யூன்னு தான் கேட்டிருக்கனும்? )அவர் பேக்கைத்தான் எடுத்து தர்றாருன்னு நம்பி ஏமாந்துடுச்சு பொண்ணு.. ஹீரோ ஹீரோயின் இடுப்பை பிடிச்சு தூக்கி விடறார்.. செம கிளு கிளு சீன் இது.. ( ஐடியா - நோட் பண்ணிக்குங்கப்பா)


2. ஹீரோயின் மாமாவோட அடியாள் கிட்டே “ நான் அவனை அடையாளம் காட்டறேன், நீ அவனை அடிச்சு உதச்சு ஜட்டியோட துரத்தனும்” என சொல்ல அந்த நேரம் பார்த்து ஹீரோ வெறும் ஜட்டியோட வர ஹீரோயின் தோழிகள் எல்லாம் முகத்தை திருப்பிக்கொள்ள , வில்லன் அடியாள் “ ஹலோ ஆல்ரெடி அவர் ஜட்டியோட தான் இருக்கார்.. இப்போ நான் என்ன செய்ய? என தம்பி மாதவன் மாதிரி கேட்பது செம காமெடி கலாட்டா காட்சி


3. காதலில் சொதப்புவது எப்படி  படத்தில் அடி வாங்கும் ஸ்பெஷலிஸ்ட் காமெடியன் இதிலும் அதே போல் பொண்ணுங்களிடம் அடி வாங்குவது ஜாலியாத்தான் இருக்கு 


4. ரிங்க் டைட்டா இருக்கு, கழட்ட முடியலைன்னு ஹீரோ பண்ற அட்டூழியங்கள் புரியாம லூஸ் ஹீரோயின் அவருக்கு பணி விடை செய்வதும் பின் அது காதலாக மாறுவதும்


5.  ஹலோ! யார் பேசறது? வசன நடையில் கலந்த பாட்டு சீன் 


6. ஹீரோயின் மோதிரம் காணாம போயிடுது.. ஹீரோ அந்த மோதிரம் கிடைச்சதா சொல்லி ஒரு மோதிரம் தர்றார்.ஹீரோயினுக்கு அது அவ மோதரம் இல்லைங்கறது 4 மாசம் கழிச்சு தெரிய வருது.. ஹீரோ கிட்டே போறார். மோதிரத்தை தர்றார். அப்போ ஹீரோ என்னமோ ஐ ஏ எஸ் எக்சாம் ரிசல்ட் என்னாச்சுன்னு கேட்கற மாதிரி “ என் லவ் மேட்டர் என்னாச்சு?”ன்னு கேட்கறப்ப இப்போ நான் கொடுத்திருப்பது உன்னோட மோதிரம் அல்ல, என்னோடது  என்கிறார் ( என்னுது உன்னுது, உன்னுது என்னுது  கான்செப்ட் )நல்ல கவிதையான காட்சி

 http://moviegalleri.net/wp-content/gallery/etho-seithai-ennai-movie-stills/etho_seithai_ennai_movie_stills_sakthi_vasu_liya_sree_5ea2aea.jpg
 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன் ஹாலிவுட் படம் சுடற மாதிரி இருந்தா ஒரே டி விடியை 9 பேர் சுடாதீங்க..  ஒரே விதமான காட்சி அமைப்புகள் எத்தனை படத்துல பார்ப்பது?2. தாதா,  ரவுடி யாரா இருந்தாலும் சரி பகையை தீர்க்க அவனவனைத்தான் கொல்வான்.. இப்படி லூஸ்மாதிரி தங்கச்சி மாப்ளை, மாமா பொண்ணோட மச்சான் இப்படி எல்லாம் கடத்திட்டு இருக்க மாட்டான்.. கேனத்தனமா திரைக்கதை எழுதறதை நிறுத்துங்க.. பெஞ்ச்  ரசிகர்கள் எல்லாம் படு கேவலமா நக்கல் அடிக்கறாங்க..


3. ஹீரோயினால உயரமான ஷெல்ஃப்ல இருக்கும் அவரோட காலேஜ் பேக்கை எடுக்க முடியலை, ஹீரோ அதை எடுத்துத்தர உதவி பண்ற மாதிரி ஒரு சீன். அப்போ அந்த இடத்துலயே ஒரு பெஞ்ச் இருக்கு.. அதை ஆடியன்ஸ் கண்ல காட்டாம அக்கட்ட தூக்கிப்போட்டிருக்க வேணாமா? ஒரு ஆள் கேட்கறான் - அந்த பொண்ணு என்ன  கபோதியா? பெஞ்ச் மேல ஏறி நின்னு எடுக்காதா?”


4. ஹீரோவுக்கு வலது கைல ஒரு விரல் அடிபட்டிருக்கு, 2 நாளா சாப்பிடலைன்னு ரீல் விடறப்போ ஒரு காதலியா, தோழியா இருந்தாக்கூட  அதை நம்பி ஊட்டி விட்டா ஓக்கே, ஆனா ஆல்ரெடி 2 பேருக்கும் வாய்க்கா தகராறு இருக்கு,.,. அப்படி இருக்க அந்த லூஸ் அதை நம்பி ஊட்டி விட்டுட்டு இருக்கே, ஏன்?5,. ஹீரோயின் ஒரு கேட்பரீஸ் பைத்தியம்.. 2 பேரும் லவ்வறாங்க.. ஹீரோவுக்கு அந்த லூஸ் ஒரு சாக்லெட்  பைத்தியம்னு தெரியும் தானே?எப்பவும்  சாக்லெட் வாங்கி ஸ்டாக் வெச்சுக்க மாட்டான்? ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போறாங்க..  என்னனெமோ ஹீரோ ஆர்டர் பண்றார். ஹீரோயின் எனகு சாக்லெட் தான் வேணும்கறா.. உடனே ஹீரோ என்ன பண்ணனும்? பேரர் கிட்டே 10 ரூபா குடுத்து சாக்லெட் வாங்கிடு வான்னு அனுப்பி இங்கே அவன் கடலை பிஸ்னசை நடத்தனும், அதை விட்டுட்டு தொங்கா தொங்கான்னு 2 கிமீ ஓடறான்.. அப்போ வில்லன் வர ஹீரோயின் தனியா மாட்டிக்கறா.. உஷ் அப்பா முடியல.. 


6. ஹீரோவை வில்லன் ஆளுங்க 30 பேர் 45 இரும்புக்கழியால அடிக்கறாங்க.. ஹீரோ சாக இருக்காரு, ஆனா ஹீரோயின் கிட்டே வந்து சேர்ந்துடறாரு.. உனக்கு ஏதும் ஆகலையேன்னு ஹீரோயின் பதற ஹீரோ கேனம் மாதிரி  சாக்லெட் எடுத்து தர்றார்... அடேய் அது ரொம்ப முக்கியமா இப்போ?7. படத்துக்கு சம்பந்தம் இல்லாம சைடு வில்லன் அவன் சைடுல படுத்திருக்கும் தன் சம்சாரத்துக்கு  மெட்டி மாட்டி விட்டு, பொட்டை சரி செஞ்சு என்னென்னெமோ பண்றான், அவனை போலீஸ் பிடிச்சுட்டு போனதும் அந்த பத்தினி வந்து வில்லன் வீட்டு கேட் முன்னால நின்னு சாபம் தர்றா, 2 ரீல் வேஸ்ட்,, படத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? ( அந்த பில்டப் பார்த்து சைடு வில்லனோட சம்சாரத்துக்கும், மெயின் வில்லன் க்கும் ஏதோ கில்மா சீன் இருக்குன்னு நம்பி ஏமாந்துட்டோம் )

http://chennai365.com/wp-content/uploads/movies/Etho-Seithai-Ennai/Etho-Seithai-Ennai-Stills0953Ff04326.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்த ரோஸ் வாங்குன காசுக்கு குவாட்டர் வாங்கி இருந்தா எனக்காவது யூஸ் ஆகி இருக்கும்.. 2. இந்த கிளாஸ்ல 36 பசங்க இருக்காங்க, ஆனா 6 பொண்ணுங்க தான் இருக்காங்க,..  3:1 என்ற குறைந்த பட்ச விகிதம் கூட இல்லை.. என்னடா காலேஜ் இது?பலாப்பழத்தை ஈ மொய்க்கறது மாதிரி இனி எல்லாம் அட்டு ஃபிகர மொய்ப்பானுங்களே?


3. பாடம் நடத்த வந்தானா? சுண்ணாம்பு அடிக்க வந்தானா? இந்த  காட்டு காட்ரான் லெக்சரர்? இங்கே படிச்சா நாம உருப்பட்டுடுவோம் போல.. அது நடக்கக்கூடாது4. முதல்ல ரெட் ரோஸ் தந்தேன், அப்புறம் ஒயிட் ரோஸ் தந்தேன், இப்போ எனக்குப்பிடிச்ச  யெல்லோ  ரோஸ் தர்றேன்.. எனக்கு பிடிச்சது இந்த ரோஸ் மட்டும் இல்லை, உன்னையும் தான் 


5. காலேஜையே கலக்கனும்னு நினைச்சேன், இப்போ காலேஜ் வரனும்னு நினைச்சாலே அடி வயிறு கலங்குது

 ஏன் பெண்ட் பண்ணி பண்ணி நடக்கறீங்க?

 வாங்குன அடி அப்படி, அலைன்மெண்ட்டை மாத்திட்டானுங்க.. 6. இந்த பசங்களே இப்படித்தாண்டி, இப்படித்தான் ஒரு நாள் ஒருத்தன் என்னையே நாய் மாதிரி மோப்பம் பிடிச்சுட்டு பின்னாடியே வந்தான்.. நான் என்ன செஞ்சேன் தெரியுமா?


 உன் சர்ட்டை கழட்டி அவன் கிட்டே கொடுத்துட்டியாக்கும்?7. நான் சொல்ற மாதிரி செய்.. அவன் சட்டையை கழட்டி, பேண்ட்டை கழட்டி.. 

 அய்யோ

 அவ்ளவ் தான்..  அதுக்கு மேல வேணாம்.. 
8. XQS மீ சார்.. 


 அடிபட்ட பிறகு தமிழே சரியா புரிய மாட்டேங்குது, இதுல இங்கிலீஷ் வேறயா? 


 9.  சார், வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா போய்ட்டு வந்துடுவேன்

 நோ, நான் ரொம்ப கண்டிஷன்உவ்வே

 சரி சரி போ 10. வாமிட் பண்றேன்னு போனவன் அந்த பொண்ணை வாமிட் எடுக்க வெச்சுடுவான் போல இருக்கே?


11. என் ஃபிரண்ட் ரொம்ப நல்லவன், மானம், வெட்கம், ரோஷம் எதும் அவனுக்கு கிடையாது

 அய்யய்யோ, நீங்க சொன்னது அவனுகு கேட்டுட்டுச்சு போல, போறார்

 போகட்டும், அதுக்குத்தான் சொன்னதே


12. கணக்கு வாத்தியார்னு நினைச்சு வந்தோம், கராத்தே வாத்தியார் போல 


http://cdn3.supergoodmovies.com/FilesFive/0786ff977c5847f0aaae43c7cd4130f4.jpg
 சி .பி கமெண்ட் -  டி வி ல போட்டா பர்க்கலாம், இல்லை பார்த்தே ஆகனும்னு அடம் பிடிக்கறவங்க இடைவேளையோட எந்திரிச்சு ஓடி வந்துடுங்க ஏதோ செய்தாய் என்னை - படத்துல கடைசி வரை யாரும் எதையும் செய்யலை, அப்புறம் எப்படிய்யா படம் ஓடும்?

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்


 ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்

ஈரோடு அன்னபூரணி டி டி எஸ் தியேட்டரில் டிக்கெட் பிரிண்ட் பண்ணக்கூட காசு இல்லாததால் இதைக்கொடுத்தனர்#அய்யோ பாவம் ஏழை


டிஸ்கி -

1. பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/blog-post_17.html

 

2. . EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம் 

3. அட்டகத்தி - சினிமா விமர்சனம்

4. நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrF0S3zmfZba1xd2UqxpGGot571qKOOb2OjWeCDsP4Ajdsm369MuwNaoPyCEt8VJpNtMEhSCXZtpLFigOSl03e8R3q8Ypq4BSPDs2EPofoxwhD0KLqdz3CEsAlFYhhMFedD-XgOBJSUIA/s1600/Etho+Seithai+Ennai+%25282012%2529+Tamil+Mp3+Songs+Free+Download.jpg

 

5 comments:

கார்த்திக் சரவணன் said...

நான் பார்க்க மாட்டேன்பா

Admin said...

விமர்சனம் சிறப்பு..

பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு

காப்பிகாரன் said...

விமர்சனத்தையே படிக்க முடியலையே நீர் எப்படி படத்த வுக்கந்து பாதிர் ஆனாலும் உமக்கு தைரியம் ஜாஸ்தி வோய்

”தளிர் சுரேஷ்” said...

மொக்க படத்தையும் விடாமல் பாத்து பதிவு தேத்தும் உம்ம தைரியம் பாராட்டுக்குறியது!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

ratna said...

indha kodumaikku than review parthuttu padathukku poradhu!!!