Friday, August 10, 2012

கங்கை நதிக்காக ஒரு போராட்டம்! - உமா பாரதி பேட்டி

http://pragmaticideas.files.wordpress.com/2008/11/uma-barathi.jpg

களத்தில் உமா பாரதி



கங்கைக்காக ஒரு போராட்டம்!



எஸ்.சந்திரமெளலி



கங்கை நதி பாதுகாப்புக்கு ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி அதற்குப் பொறுப்பாளராக உமா பாரதியை நியமித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. விழிப்புணர்வு யாத்திரை, அறிவியல் ஆவரங்கம், மனிதச் சங்கிலிப் போராட்டம்... என்று பலவகையான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது இந்தக் கங்கை செயல்திட்டம்.



 முன்னதாக நாடெங்கும் இருக்கும் பன்னிரெண்டு ஜோதிர்லிங்க கோயில்களுக்கு புனித கங்கை நீரை எடுத்துக் கொண்டு சென்று, அபிஷேகம் செய்யும் பக்தி யாத்திரை ஒன்றை மேற்கொண்டிருக்கும் உமா பாரதி, ராமேஸ்வரம் வந்தபோது, சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.



முன்பு ராம ஜென்ம பூமி... இப்போ கங்கை செயல்திட்டமா?



இல்லை. நீங்கள் உங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துக் குளித்தாலும் கூட, கங்கை நீரில் குளிப்பதாகத்தான் நமது இந்திய நம்பிக்கை. அப்படிப்பட்ட புண்ணிய நதியான கங்கை மிகவும் மாசுபட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.


 அதன் நீர் வளமே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்பது ஐ.ஐ.டி. மேற்கொண்ட ஆய்வின் மூலமாகத் தெரியவந்துள்ளது. அதனால்தான் கங்கையைக் காப்பாற்றுவதற்கான செயல்திட்டம் ஒன்றை எங்கள் கட்சி உருவாக்கி உள்ளது."





கங்கை செயல்திட்டத்துக்கு, உத்தரகண்ட் மாநில எதிர்ப்பு?


http://harivarasanam.files.wordpress.com/2011/06/ganga-river.jpeg



ஒருசிலர் எதிர்த்தது உண்மைதான் என்றாலும், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும், நீர்ப்பாசன அணைகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நானே, கங்கை செயல்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களைச் சந்தித்துப் பேசி, அதன் அவசியத்தை எடுத்துச் சொன்னவுடன், அவர்கள் கங்கை செயல்திட்டத்தை வரவேற்றார்கள்."



வீசப்படும் மனித சடலங்களால் கங்கை மாசுபடுகிறதே?





தில்லியில் கங்கை செயல்திட்டம் குறித்த ஒரு கருத்தரங்கம் நடக்க இருக்கிறது. அதில் விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், கங்கை நதிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல், எந்த அளவுக்கு அணைகள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று ஆய்வு அறிக்கைகளை வழங்க இருக்கிறார்கள்.


 இன்னொரு பக்கம், இந்து மத சன்னியாசிகளும், முக்கியஸ்தர்களும், கங்கையை மாசுபடுத்தாமலும், அதன் புனிதத்தைப் பாதுகாப்பது எப்படி? என்று ஆலோசனைகள் வழங்கப் போகிறார்கள். தவிர கங்கை, கடலில் கலக்கும் கங்கா சாகரில் தொடங்கி, கங்கோத்ரி வரை ஒரு விழிப்புணர்வு யாத்திரையையும் நடத்துவதற்குத் திட்டம் உள்ளது."






சாமானிய மக்களுக்கு என்ன பயன்?



சில ஆண்டுகளுக்கு முன்பு, கங்கை நதியின் புனிதம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நான் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது, இந்துக்கள் மட்டுமின்றி ஏராளமான முஸ்லிம்களும் என் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள். காரணம், கங்கையின் இரு கரைகளிலும் ஏராளமான கிராமங்கள். அவற்றில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கிறார்கள்.


 அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதாரம் கங்கைதான். கங்கையில் மீன் பிடித்து, விற்றுப் பிழைக்கும் ஏழை மீனவர்களில் பலரும் முஸ்லிம்கள். கங்கை நதி மாசுபடுவதால், அதில் வசிக்கும் மீன்கள் இறந்துவிடுகின்றன. அது கங்கைக் கரையோரக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதாகப் பாதிக்கிறது. ஆக, எங்கள் கங்கை செயல் திட்டத்தால், சாமானிய மக்களுக்கும் நிச்சயம் பயன் உண்டு."





மத்திய அரசின் ரெஸ்பான்ஸ்?





எங்கள் கட்சித் தலைவர் நிதின் கட்கரி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் நானும் கொண்ட குழு பிரதமரைச் சந்தித்து, கங்கையின் புனிதத்தைக் காப்பாற்றும் அவசியத்தை எடுத்துச் சொன்னோம். அவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்திருக்கிறார்."


http://www.indianetzone.com/photos_gallery/39/ganga-river_14363.jpg



கர்நாடகம் - தமிழகம் காவிரிப் பிரச்னை; கேரளா - தமிழகம் முல்லைப்பெரியாறு பிரச்னை?



நதிநீரை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும். அரசியல்வாதிகள் தண்ணீரை வைத்து அரசியல் செய்கிறார்கள். அரசியலைத் தவிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் உட்கார்ந்து பேசினால் எல்லா பிரச்னைகளும் தீரும். போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும். நான் அங்கே கங்கைக் கரையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தும்போது தமிழகத்தில் நீங்கள் காவிரிக்கரையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துங்கள்."


thanx - kalki, seetha ravi, amirtham surya, pulavar tharumi




http://www.tommyschultz.com/photos/big_thumbnails/india/varanasi-ganges-river-sunrise/varanasi-ganges-river-sunrise-21.jpg

0 comments: