Saturday, August 11, 2012

ஜெவை நக்கல் அடித்த கேப்டன் - தஞ்சை விழாவில் பேச்சு

http://www.hindu.com/2006/09/13/images/2006091317580601.jpg

தஞ்சை: முதலமைச்சர் ஜெயலலிதா செல்போன் மாதிரி... அவங்க, எப்பவுமே
தொடர்பு எல்லைக்கு அப்பால்லதான் இருப்பாங்க” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிண்டலாக கூறினார்.தஞ்சையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:“ நான் கோபக்காரன்னு சொல்றாங்க, சட்டசபையில் என் கட்சியை பத்தி தப்பா பேசினதை எதிர்த்து கேட்டா கோபக்காரன் னு சொல்றதா? இதே நான் அன்னைக்கு அமைதியா இருந்திருந்தா மத்த கட்சிக்காரங்கள்லாம் என்னை தப்பா பேசியிருப்பாங்க, நாய் மனுசனைக் கடிச்சா நியூஸ் இல்ல, மனுசன் நாயை கடிச்சா அது நியூஸ், அதுமாதிரிதான் இதுவும்.நான் சின்ன வயசுல பார்த்த தஞ்சாவூர் இப்ப இல்லை, எங்கப் பார்த்தாலும் வயலும் வாய்க்காலுமா இருக்கும்.அப்படிப்பட்ட தஞ்சாவூர் இன்னைக்கு காய்ஞ்சுபோய் கிடக்கு. காரணம் இந்த அரசு. 12 மணி நேரம் மின்சாரம்னு சொன்னாங்க, மின்சாரம் வருது, ஆனா ஃபுல்லா லோ வோல்டேஜ், மோட்டார்களெல்லாம் ‘டப்’ ‘டுப்’னு வெடிக்குது.ஜூன் ல தண்ணி வந்துடும், ஜூலையில் தண்ணி வந்துடும்னு சொன்னாங்க, ஜூன் போய்,ஜூலைப் போய் ஆகஸ்டும் வந்துடுச்சு, ஆனால் இன்னும் தண்ணி வந்தபாடில்லை. எல்லாத்துக்கும் இவங்களோட (முதல்வர்) வீண் கவுரவம், இவங்க மட்டும் கவுரம் பார்க்காமல் கேரள, கர்நாடக முதல்வர்களை சந்திச்சு பேசியிருந்தாங்கன்னா இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5a6HI2NI-K-UkMIzSzH-N8Ohxfy9PVhdTtGa8a0a4ZPmKe0GwPAC-6q4_seAGJAN5bCSJKKi_4IUrmdzADew9Fxdo8NqzhPL_DftYWiKJUFi-ZQfDuAVbD9r1m03xAVK-RVWT8sbNkH_d/s640/9-11-11a.jpg
மாடு ‘மே’ னு கத்தும், சேவல் ‘கொக்கரக்கோ’ னு கத்தும், ஆனால் அந்த அம்மா பக்கத்துல இருக்குற காக்கா கூட்டங்கள்லாம் ‘கா கா’ னு கத்துறதுக்கு பதிலா மாத்தி ‘அம்மா’ ‘அம்மா’ னு கத்துறாங்க.என் மக்களை நீங்க நல்லபடியாக வாழவைங்க, நானும் உங்ககூட சேர்ந்துகிட்ட ‘ஜால்ரா’ அடிக்கிறேன்.என்கிட்ட ஒரு அதிமுககாரன் ஒருத்தன் சொன்னான், “அம்மா கொடநாடுபோயிருக்காங்க” னு,அதுக்கு நான் கேட்டேன், “அவங்க போயஸ் கார்டன்ல இருந்தா என்ன,கொடநாட்டுல இருந்தா என்ன? இப்ப உன்னால போய் பார்க்கமுடியுமா?”னு கேட்டேன், செல்ஃபோன் மாதிரி அவங்க, எப்பவுமே தொடர்பு எல்லைக்கு அப்பால்லதான் இருப்பாங்க.


ஓராண்டு சாதனைன்னு சொல்றாங்களே, என்ன சாதனை,எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், பேங்க்ல லோன் கேட்டு போறவங்ககிட்ட ‘அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வைச்சிருக்கியா னு கேட்குறான்’.இப்படியெல்லாம் கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை.175 குவாரிகள்ல முறைகேடுகள் நடந்திருக்கு. ஆனால் அது சம்பந்தப்பட்ட அமைச்சர் போய் அதையெல்லாம் இன்னும் பார்க்கலை.ஏன் இன்னும் விசாரிச்சு வெள்ளை அறிக்கை வெளியிடலை.
இவங்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கு, அதனாலதான் கண்டுக்காமல் இருக்காங்க.இவங்க மக்கள் மேல அக்கறைப்படுறதேயில்லை,நாங்க ஏதாவது நல்லது செஞ்சோம்னா “விஜயகாந்த் மேல கேஸ் போடு”ன்னு சொல்றது, காலரா பத்தி ஸ்டாலின் பேசுனார்னா, அவர் மேல வழக்கு, கலைஞர் மேல வழக்கு, முரசொலி பத்திரிக்கை மேல வழக்கு,அப்படி பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு இந்த வாரம் ‘வழக்கு வாரம்’.நான் எந்த வழக்குகளுக்கும் பயப்படமாட்டேன்,நான் பழைய சோறு,வெங்காயம் சாப்பிட்டு வளர்ந்தவன்,வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளை பார்த்தவன்,இந்த பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயந்திடமாட்டேன்.
நான் 2005 ல் "லஞ்சம்,ஊழலை ஒழிப்பேன்" னு சொன்னேன், அப்ப “இதெல்லாம் ஒரு கொள்கையா? “ னு சொன்னாங்க, ஆனால் இன்னைக்கு நாடே ஊழலை எதிர்த்து பத்தி எறிஞ்சுக்கிட்டுருக்கு.
http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpgநான் அந்த அம்மாவோட கூட்டணி வைச்சிருந்தப்பகூட நான் அவங்களை பார்த்ததும்,இந்த அமைச்சர்கள் மாதிரி குனிஞ்சு தரையை கூட்டலை, நீங்க சொல்லுங்க மக்களே, உங்களுக்கு ஒரு கி.மீ தூரம் வரைக்கும்கூட நான் உருண்டுக்கிட்டே வர்றேன், ஆனால் அவங்ககிட்ட நான் பம்ம மாட்டேன்.ஒரு குருவும்,நாலைந்து சீடர்களும் இருந்தாங்க,அப்போ அந்த குரு,அந்த சீடர்கள்கிட்ட ஆளுக்கொரு மாம்பழத்தை கொடுத்து,“இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு சாப்பிடுங்க”னு சொன்னாராம்.எல்லாரும் ஒரு ஒரு இடத்துல ஒளிஞ்சு நின்னு சாப்பிட்டாங்களாம். ஆனால் ஒரே ஒரு சீடன் மட்டும் அந்த பழத்தை சாப்பிட போகாமலே நின்னுக்கிட்டுருந்திருக்கான், அதைப் பார்த்த குரு, “ஏன் நீ அந்த வீட்டுக்குளே போய் ஒளிஞ்சு நின்னு சாபிட வேண்டியதுதானே, அங்க யாரும் பார்க்காமாட்டாங்க” னு சொன்னாராம்.

அதுக்கு அந்த சீடனோ, “அங்க யாரும் பார்க்கமாட்டாங்கன்னு சொல்றீங்களே? ஆனால் மேல இருந்துஒருத்தன் நம்மளையெல்லாம் பார்த்துக்கிட்டுருக்கானே, என்ன பண்றது?”னு கேட்டானாம்..அதுமாதிரிதான் இந்த அதிகாரிகளும் காவல்துறையினரும்யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு நடந்துகிட்டுருக்காங்க, உங்க திமிரையெல்லாம் எங்ககிட்ட காட்டாதீங்க, தேமுதிக தொண்டர்களை உங்களால பிரிக்க முடியாது, ஏன்னா எங்க பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கு”என்றார் விஜயகாந்த்


http://1.bp.blogspot.com/-yVusvZPxk1k/T9tBNAxUMAI/AAAAAAAABmk/2Kfwnn61kas/s1600/vijayakanth_20110307.jpg
நன்றி - விகடன்

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்!

இன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

http://thalirssb.blogspot.in

காப்பிகாரன் said...

தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை ஜெ ஜெ அவ்வ்வவ்வ்வ்வ்