Monday, August 20, 2012

Bicentennial Man (1999) -ஷங்கர்-ன் எந்திரன் -ன் மூலம்- ஒரு பார்வை

http://ecx.images-amazon.com/images/I/51PBTXBTSFL._SL500_AA300_.jpg

ரோபோ, ஒரு பெண்ணை உருகி உருகிக் காதலித்தால்? பஸ்களைக் கவிழ்த்து அட்டகாசம் செய்யாமல் உணர்ச்சிகளால் நிரம்பிய சாந்தமான மனிதனாக வாழ்ந்தால்? அப்படியொரு ரோபோ படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது! க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியிருந்த அந்தப் படத்தின் பெயர் Bicentennial Man.தமது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ‘ஆண்ட்ரு’ என்கிற ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். சுட்டியாகவும் அறிவாளியாகவும் இருக்கும் ஆண்ட்ருவை, மார்ட்டினின் மூத்த மகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கே உரிய வெறுப்பின் காரணமாக ரோபோவை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறாள். ஆனால், முயற்சிகள் தோல்வியடைகின்றன. வெறுப்பின் உச்சகட்டமாக வீட்டு மாடியில் இருந்து குதிக்கும்படி ரோபோவுக்கு உத்தரவிடுகிறாள். ஆண்ட்ரு, எஜமானியின் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறது. ஆண்ட்ருவின் பெரும்பகுதிகள் நொறுங்கிப் போகின்றன.கோபமடையும் மார்ட்டின், ரோபோவை நமது குடும்ப உறுப்பினரைப் போலவே நடத்த வேண்டும் என மகள்களிடம் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். ‘ரிப்பேர்’ செய்யப்பட்டு வீடு திரும்பும் ஆண்ட்ரு அந்த வீட்டின் ஒரு செல்லப்பிராணி ஆகிறது. ஒரு கட்டத்தில் இன்னொரு உறுப்பினராகவே மாறுகிறது. தவிர, மகள்களின் உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது.


http://images5.fanpop.com/image/photos/25300000/Bicentennial-Man-robin-williams-25340319-2126-1433.jpg

ஒரு நாள் மார்ட்டினின் இளைய மகள் ‘லிட்டில் மிஸ்’ஸின் கைவினைப்பொருள் ஒன்றை உடைத்துவிடும் ஆண்ட்ரு, அதே போன்ற பொம்மையை, தத்ரூபமாக வடிவமைக்கிறது. ஆண்ட்ரு, சுயமாகச் சிந்திப்பதையும் அதன் க்ரியேட்டிவிட்டியையும் அறிந்துகொண்ட மார்ட்டின் ரோபோ தயாரிப்பாளர்களிடம் கொண்டு செல்கிறார். மற்ற ரோபோக்களும் ஆண்ட்ருவைப் போலத்தானா என்பதை அறிந்து கொள்வதுதான் அவரின் நோக்கம். ஆனால் ஆண்ட்ரு சிந்திப்பதை அறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரோபோ சுயமாக சிந்திக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் விளைவுகள் விபரீதமாகிவிடும். எனவே, ஆண்ட்ருவை அழித்துவிடுவதுதான் நல்லது என்று வாதிடுகிறார்.

ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்ட்டின் அதைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அதோடு நில்லாமல் மனித உணர்ச்சிகளைப் பற்றிய பாடத்தை நடத்துகிறார். ஆண்ட்ரு, உணர்வுகளால் நிறைந்த மனிதனாக மாறுகிறது. மார்ட்டினிடம் இருந்து கற்றுக் கொண்ட மர வேலைகளின் மூலமாக ஆண்ட்ரு சுயமாகச் சம்பாதிக்கிறது. வங்கிக் கணக்கு தேவைப்படும் அளவுக்குக் கொட்டுகிறது வருமானம். இந்நிலையில் தமக்கு உத்தரவிடும் எஜமானர்களிடம் இருந்து விடுதலை தேவை என்பதை விரும்பும் ஆண்ட்ரு, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மார்ட்டினிடம் அனுமதி கோருகிறது. மார்ட்டின் வேதனையுடன் அனுமதியளிக்கிறார்.தம்மைப் போலவே வேறு ஏதேனும் ரோபோக்கள் இருக்கின்றனவா என்பதைத் தேடி அலையும் ஆண்ட்ரு, கெலேட்டி என்னும் ஒரு பெண் ரோபோவை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்த ரோபோவுக்கு ஆண்ட்ருவைப் போல திறமைகள் இல்லை. கெலேட்டியை டெவலப் செய்வதற்கு அதன் உரிமையாளருக்கு ஆண்ட்ரு நிதியுதவி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ட்டினின் இளையமகள் ‘லிட்டில் மிஸ்’ மரணப்படுக் கையில் இருக்கும்போது அவளைக் காண வருகிறது ஆண்ட்ரு.அவளுக்காக, சிறு வயதில் ஆண்ட்ரு செய்து கொடுத்த பொம்மை அங்கே இருப்பதை மிகுந்த காதலுடன் பார்க்கிறது. அப்போது லிட்டில் மிஸ் கண்ணை மூடுகிறாள். இந்தச் சமயத்தில் ‘லிட்டில் மிஸ்’ஸின் பேத்தி போர்ஷியா ஆண்ட்ருவுக்கு அறிமுகமாகிறாள். அச்சு அசலாக தன் பாட்டியைப் போலவே இருக்கும் அவளிடம் ஆண்ட்ருவுக்குக் காதல் பூக்கிறது. போர்ஷியா மிகுந்த குழப்பமடைகிறாள். ஆனால் அவளின் இதயத்தை தமது காதல் மிகுந்த சொற்களால் வென்றெடுக்கிறது ஆண்ட்ரு. போர்ஷியாவும் ஆண்ட்ருவை காதலிக்கிறாள்.அவர்களின் காதலை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மை மனிதனாக அறிவிக்கும்படி உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறது ஆண்ட்ரு ரோபோ. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்ட்ருவுக்குச் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டு முழு மனிதனாகிறது. பிறகு ஆண்ட்ரு மூப்படையத் தொடங்குகிறார். தமக்கும் மூப்பும் மரணமும் வரும் என்று மீண்டும் உலக அறிவியல் கழகத்திடம் விண்ணப்பிக்கிறார் ஆண்ட்ரு. மனித வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சந்தித்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கும் போது ரோபோவை மனிதனாக ஏற்பதாக உலக அறிவியல் கழகம் அறிவிக்கிறது. இந்த அறிவிப்பைப் பார்த்தபடி ஆண்ட்ரு மரணிக்கிறார்; போர்ஷியாவும் ஆண்ட்ருவுடன் இறந்து போவதாக இந்தக் காதல்காவியம் முடிவடைகிறது.

http://movie2s.com/aimages/BicentennialMan.jpgஐசக் அஸிமவ்வின் நாவலைத் தழுவிய இந்தப் படம் ‘ரோபோ என்பது வெறும் இயந்திரம்’ என்ற பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியது. ஆசை, காதல், கோபம்... என அத்தனை மனித உணர்ச்சிகளையும் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் இன்னொரு உயிர்தான் ரோபோ என்று சினிமாவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி க்ளாஸிக்காக வெளிப்படுத்தியது. இந்தப் படத்தின் தழுவல்தான் ரஜினியின் ‘எந்திரன்’ என்ற பேச்சுக்கூடக் கிளம்பியது. அது இருக்கட்டும். இந்தப் படத்தின் கதை உண்மையாக நடப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? நடந்துவிடக்கூடும். அறிவியலில் எதுவுமே சாத்தியம்தான். சாத்தியமாக்குவதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. அவ்வளவுதான்.ரோபோ டான்ஸர்!


ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சில செய்தி சேனல்களில் சீனாவில் ஃப்யுஜின் என்ற இடத்தில் நடைபெற்ற ரோபோவின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஸோலோ, க்ரூப் டான்ஸ் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள் ரோபோ டான்ஸர்கள். இதை எப்படி வடிவமைத்திருப்பார்கள்?முதல் ரோபோ வலது கையை உயர்த்தும்போது மற்ற ரோபோக்களும் வலது கையை உயர்த்தினால்தான் அது க்ரூப் டான்ஸ். இல்லையேல் அது டுமீல் டான்ஸ். முதல் ரோபோ வலது கையை உயர்த்தப் போகிறதா அல்லது தலையை அசைக்கப் போகிறதா என்பதை மற்ற ரோபோக்கள் அறிந்துகொள்ள அவற்றுக்கு இடையே தொடர்பியல் (communication) மிக முக்கியம். இந்தத் துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் ரோபோக்கள் ஃப்ரொபஷனல் டான்ஸர்களாக இன்னும் சில வருடங்கள் ஆகக் கூடும். அதுவரை ஸ்ரேயாவுக்கும், தமன்னாவுக்கும் பதிலாக ரோபோவை ஆட வைத்து விடுவார்களோ என்ற கவலை தேவையில்லை.
http://all-movie-goofs.info/wp-content/uploads/bicentennial-man-movie-still-9.jpgநன்றி - கல்கி , புலவர் தருமி

2 comments:

நம்பள்கி said...

ஆனந்த விகடன் உங்கள் பத்திரிக்கையா? அது என்ன சங்கர்-ன்-எந்திரன் மூலம்? சுஜாதாவின்-எந்திரன மூலம் என்று போட என்ன தயக்கம்??

படத்தின் வெற்றிக்கு நல்லதுக்கு சுஜாதா!
தோல்வி காப்பி ஆபாசம் என்றால் சங்கர்!

சங்கரும் சாதாரண ஆள் இல்லை---அவரும் நல்லா -ஈஷிக்கிர-வர் தான்!

Doha Talkies said...

அருமையான அலசல்.
நானும் ஒரு காப்பி படத்தை பற்றி எழுதியுள்ளேன்,
சமயம் கிடைக்கும் போது பாருங்களேன்.
http://dohatalkies.blogspot.com/2012/08/leon-professional.html