Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 1

24.8.2012 வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல நானும் ஈரோடு பதிவர் லாயர் நண்டு நொரண்டும்  கிளம்புனோம். இவர் ஒரு லாயர், ஜட்ஜைத்தவிர எல்லார்ட்டயும் இவர் நொரண்டாதான் பேசுவார்.. ( ஜட்ஜ் கிட்டே பேசுனா  வெளில அனுப்பிடுவாங்களே?).பேரு ராஜசேகரன். சனிக்கிழமை காலைல 4 மணிக்கு ரயில் சென்னை செண்ட்ரல்ல நின்னுது. நாங்க இறங்கி பார்க் ஸ்டேஷன்ல ரயில் ஏறி மாம்பலம் போய் அங்கே இருந்து வாக்கிங்க்ல ரோஹினி இண்ட்டெர்நேஷனல் ஹோட்டல், ஜி என் செட்டி தெரு அட்ரஸ்க்கு போய்ட்டோம், அங்கே ஆல்ரெடி ரூம் புக் பண்ணி இருந்தாங்க.போய் 2 மணி நேரம் குட்டித்தூக்கம் ( நோ இமேஜினேஷன் ப்ளீஸ்.. சிறிய தூக்கம்). ஆரூர் மூனா செந்தில் தான் வெளியூர்ப்பதிவர்கள் தங்க ஏற்பாடு.அவர் மத்தியானம் வர்றேன்னார், ஆஃபீஸ்ல டியூட்டி அவருக்கு.நான் கிஷ்கிந்தா போலாம்னேன், லாயர்க்கு வேற ஏதோ எங்கேஜ்மெண்ட் போல, யாரையோ வரச்சொல்லி இருக்கார்.. வெயிட்டிங்க். யார் வந்தாங்க? என்ன நடந்தது என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத மேட்டர் என்பதாலும் ஒரு பதிவரின் பர்சனல் மேட்டர்ஸை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது சபை நாகரீகம் இல்லை என்பதாலும் ( இப்போ இதுக்குப்பேரென்ன?) அதை அப்படியே விட்ருவோம். 


நான் கிஷ்கிந்தா போன அனுபவம், கட்டுரை, படங்கள் தனிப்பதிவாய் பின் ஒரு நாளில்.. மாலை 4 மணிக்கு நான் ரிட்டர்ன். மதுமதி ரூமுக்கு வந்து எங்களை வரவேற்றார்.. எத்தனை ஃபிகர் எனக்கு செட் ஆனாலும் சரி என் தாடியை மட்டும் எடுக்கவே மாட்டேன்னு 12 வருஷமா பதிவுலகில் டி ஆராய் வலம் வந்தவர் என்ன காரணத்துக்காகவோ தாடி எல்லாம் எடுத்து மாப்ளை கெட்டப்ல வந்த மர்மம் என்னன்னு இன்னைக்கு வரை விடை தெரியல. அவர் கிட்டே கொ ஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.


அப்புறம் ஆரூர் மூனா செந்தில், மின்னல் வரிகள் கணேஷ், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன்,புது மாப்ளை கோகுல் எல்லாரும் வந்தாங்க. பேசிட்டு இருந்தோம். 26.8.2012 ஞாயிறு..காலை 5 மணிக்கே வானம் மழையை அனுப்பி தன் வருகையை சென்னை பதிவர் சந்திப்புக்கு பதிவு செய்தது. நான் 6 மணிக்கு குளிச்சு ரெடி ஆகி வாக்கிங்க்லயே பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு போய்ட்டேன். மண்டப முகப்பே அட்டகாசமா பேனர் எல்லாம் வெச்சு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ட்விட்டர்  உலகின் ஜேம்ஸ் பாண்ட், கூலிங்க் கிளாஸ் கூல் டாக்கர் அய்யா சென்னை பித்தன் அவர்கள், நம்ம தமிழ் வாத்தியார் மாதிரியே தோற்றம் உள்ள புலவர் ராமானுசம் அய்யா இருவரும் அருமையான உரை ஆற்றினார்கள்.. வலைச்சரம் சீனா அய்யாவும் சிறப்பாக பேசினார்


அப்புறம்  வந்த பதிவர்கள் அறிமுகம்.. அதுக்கு  கலகலப்பு உதவி வசனகர்த்தாவும் கொத்து புரோட்டாக்காரருமான கேபிள் சங்கர், சித்தார்ல வீடு, பூர்வீகம் எல்லாம் இருந்தும் கோவையில் பணி ஆற்றும் ஒரே காரணத்துக்காக கோவை பதிவர் ஆகி விட்ட சங்கவி சதீஷ் ( நிறைய பேரு சங்கவின்னா பெண் பதிவர்னு இன்னும் அவர் கிட்டே  சேட் பண்ணிட்டு இருக்காங்க , ஹி ஹி ) ,  ,பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் , கடைசியா நான் 4 பேரும் ஒவ்வொருவரா பதிவரை மேடைக்கு அழைத்து உரை ஆற்ற வைத்தோம். 


விழாவின் ஹை லைட்ஸ்


1. அதுல அதிகமா கை தட்டல் வாங்குனது பதிவே அதிகம் போடாத, மிட் நைட்ல பல பதிவர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தே  கொலையாய் கொல்லும் அன்பு உள்ளம், டாஸ்மாக்கே இல்லம் என இருக்கும் நாய் நக்ஸ் பிளாக் ஓனர் நக்கீரன் தான்.. இவரும், விபரீதமான மனிதாபிமானி பிளாக் ஓனரும் பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முன் சிம்பு , தனுஷ் போல நட்பு பாராட்டியதும், மண்டபத்தில் கட்டிப்பிடித்து பயங்கர பாசத்தை பகிர்ந்து கொண்டதைப்பார்க்கையில் தேர்தல் நேரத்தில் பகையாளியுடன் கூட கூட்டணி வைக்கும் கலைஞர் - ராம்தாஸ் நடிப்பு போல தத்ரூபமாக இருந்தது.. விழா ஃபுல்லா இந்த நாயம் தான் அன்னைக்கு 2. அடுத்து பதிவுன்னு வந்துட்டா எல்லாரையும் கண்டபடி கிழிக்கும் பிளாக் உலகின் சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் ஒயின் ஷாப் ஓனர் ஃபிலாசபி பிரபாகரன் நல்ல பிள்ளை மாதிரி இந்தப்பூனையும் அமலாபாலை சைட் அடிக்குமா? என்பது போல் கையை கட்டி அடக்கம் காட்டி நடித்தது  நடிகர் சூர்யா மேடைகளில் காட்டும் போலி பவ்யத்தை தூக்கி சாப்பிட்டது3. அடுத்த அதிரடி அண்ணன் சேட்டைக்காரன் - இதுவரை டி பி யில் பிளாக்கில் நாகேஷ் படத்தையும் , ட்விட்டரில் கவுண்டமணி படத்தையும் வைத்தவர் இந்த முறை தன் நிஜ முகத்தை காட்ட வேண்டிய கட்டாயம், ஏன்னா விழா ஏற்பாட்டாளர்கள் புத்தக வெளியீட்டை பெற்றுக்கொள்பவர் சேட்டைக்காரன் என பத்திரிக்கையில் போட்டு விட்டனர்.. இவர் 4 நிமிட நறுக் சுருக் உரை ஆற்றினார். அது விரிவாக பின்னர்.. இவர் 30 வயசுக்காரராக இருப்பார் என்றே இவர் எழுத்தை வைத்து அனைவரும் கணித்தனர்.ஆனால் நயன் தாரா வயசைப்போல் டபுள் மடங்கு வயசுள்ள இவர் இனியாவது நடிகை ஸ்ரேயாவிடம் டைம் லைனில் ட்விட்டரில்  கடலை போடாமல் கண்ணியம் காப்பார் என எதிர்பார்க்கிறேன்4. அடுத்து மிக இளம் பெண் பதிவர் தூயா. கலைஞர் குடும்பமே எப்படி அரசியலிலும், ஊழலிலும் தங்கள் பங்கை சிறப்பா ஆற்றி வருகிறார்களோ அதே போல்  இவங்க குடும்பமே ஒரு பிளாக் குடும்பம். தமிழ் மணத்தில் இவங்க எப்போ போஸ்ட் போட்டாலும் உடனே 7 ஓட்டுக்கள் வாங்கி 10 நிமிஷத்தில் ஹிட் ஆவதை கவனித்து நான் மிரண்டு போனேன். பின் கழுகார், குருவியார் மூலம் விசாரித்தபோது அவங்க ஃபேமிலில 7 பேர் பிளாக்கர்ஸ் என்ற தங்கமலை ரகசியம் தெரிய வந்தது.. இவரை மேடையில் கலாய்த்தோம்5. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தன் தமிழ் மிஸ்க்கு லவ் லெட்டர் கொடுத்து ஏரியாவையே கதி கலக்கிய தமிழ்வாசி பிரகாஷ் ( தமிழ் மிஸ் வீட்லயே தான் எந்நேரமும் குடி இருப்பாராம்) என்னமோ டிஸ்கொத்தே கிளப்புக்கு டான்ஸ் ஆட வந்தவர் மாதிரி  கசாமுசா காலேஜ் ஸ்டூடண்ட் டிரஸ் அணிந்து வந்து கலக்கி இருந்தார்.. யூத்தாம். யோவ்.. 


6. மாமூல் வாங்காத போலீஸ் கவிதை வீதி சவுந்தர்,டீசண்ட் ரவுடி வேடந்தாங்கல் கருண்  மதிய உணவு பரி மாறும் வேலை இருக்கு முன் கூட்டியே பேசிட்டு போறோம்னு சொல்லிட்டு எங்கியோ எஸ் ஆகிட்டாங்க


7. பிறவிக்கலைஞன் கமலின்  குணா ரசிகை மன்றத்தலைவி கண்மணி அன்போடு பிளாக் ஓனரை கிண்டல் செய்து மேடைக்கு அழைத்தோம், அவங்க அப்பாவும் வந்திருக்காராம், அவரும் பிளாக்கராம். அவ்வ்வ்வ் ( இனிமே பொண்ணுங்களை கலாய்க்கறப்போ அப்பா வந்திருக்காரா?ன்னு செக் பண்ணிக்கனும்)8. கோவை சரளா அப்டினு ஒரு பெண் பதிவர்.. இப்படி ஒருவர் இருப்பதே எனக்கு அங்கே தான் தெரியும்.. பயங்கரமா கவிதை எல்லாம் எழிதி இருக்காராம், அவரே சொன்னார்.. இனி தான் பார்க்கனும்.. 9. வசந்த மண்டபம்’ மகேந்திரன் விழாவுக்காகவே புது வெள்ளை கதர் சட்டை, பேண்ட் , திருப்பூர் பனியன் எல்லாம் புதுசா போட்டு வந்து அசத்தினார்.. சூப்பர் ரின் விளம்பரத்துல கூட அப்படி ஒரு வெள்ளையை நான் பார்க்கலை. 


10. ஊக்குவிக்கும் சமீரா மேடம்.. அவர் எல்லார் பிளாக்கும் போய் அவங்களை ஊக்கி விப்பாராம்.. இதுவரை அட்ராசக்கவை ஊக்கு வித்ததில்லை.. ஏன்னு தெரியலை


11. பொதுவா லேடீஸ் தான் கல்யாணம் , காட்சின்னா காலைல ஒரு புடவை, மாலை ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க.,. ஆனா உலகத்துலயே முதல் முறையா கோவை நேரம் ஜீவானந்தம் காலை ஒரு சட்டை , மதியம் ஒரு ஜிப்பா, மாலை ஜீன்ஸ் என 3 வெவ்வேறு டிரஸ் அணிந்து  வந்து கலக்கினார். மனசுக்குள்ள கமலஹாசன்னு நினைப்பு , யோவ்.. 


12. சாதிகா, ஆதிரா இரண்டு பெண் பதிவர்கள் “ ஏன் எங்க பிளாக் எல்லாம் வர்றதே இல்லை? என கேட்க “ எங்கேங்க, இப்பவெல்லாம் அதிகம் கரண்ட் இல்லாததால்  எந்த பிளாக்கும் போக முடியறதே இல்லை, இருக்கற கொஞ்ச நஞ்ச நேரத்துல போஸ்ட்  ரெடி பண்ணவே நேரம் சரியா இருக்கு “ என்று சமாளித்தேன்.. அதற்கு அவர் சசிகா மேனகா பிளாக் மட்டும் போயிடறீங்க? என மடக்கினார்.. அவ்வ் பல்பு பல்பு.. 

13.  நம்ம ட்விட்டர் ஃபிரண்ட் சுரேகா ஹீரோ கணக்கா , கணக்கா 10 மணிக்கு ஆஜர் ஆனார். . அவர் பியூட்டி பார்லர் எல்லாம் போய் மிகச்சிரத்தையாக மேக்கப் போட்டு வந்தது  பதிவர் சந்திப்பில் அவர் காட்டிய ஈடுபாட்டை பறை சாற்றியது. மதியத்துக்குப்பின் இவர் ஆட்சிதான்..


1.30 மணிக்கு லஞ்ச், பின் கவியரங்கம், தென்றல் புத்தக வெளீயீட்டு விழா, பி கே பியின் அட்டகாசமான உரை போன்ற விபரங்கள் அடுத்த பதிவில்வலம் இருந்து இடமாக கோவை நேரம் ஜீவா, சங்கவி சதீஷ், கோவை சரளா,சசிகலா, அவர் நண்பர், மின்னல் வரிகள் கணேஷ் ( மக்கள் டி வி பேட்டி)
தஞ்சை குமணன், மோகன்குமார். சீனு மற்றும் சிராஜுதீன்          மைக் மோகன் = ஆரூர் மூனா செந்தில்அகநாழிகை வாசுதேவன், மணிஜி, சிவகுமார்  
சேட்டைக்காரன் அண்ணன்

பட்டர்பிளை சூரியா, சுகுமார் சாமிநாதன்,  மணிஜி , ஜாக்கி,மோகன்குமார், உண்மை தமிழன், ரோஸ்விக்   


 வீடு திரும்பல் மோகன், ரேகா ராகவன்அ
துவக்க விழா .. ராமானுசம் ஐயா, சீனா  ஐயா,  சென்னைப்பித்தன்  ஐயா
துவக்க உரை ஆற்றுகிறார் மதுமதி 
வரவேற்புரை மற்றும் விழா குழுவை அறிமுகம் செய்கிறார் வீடுதிரும்பல் மோகன்குமார் 
வரவேற்பு/ Registration  குழு   -  சீனு மற்றும் நண்பர்கள் 
புதிய தலைமுறை டிவி குழுவிற்கு பேட்டி தருகிறார்  முக்கிய பொறுப்பாளர் மதுமதி 
ப்ளாகில்  பெண்களின் பங்கு பற்றி  புதிய தலைமுறை டிவி க்கு   பேசுகிறார் தென்றல் சசிகலா 

புதிய தலைமுறை டிவி குழு வீடுதிரும்பல் மோகன்குமாரிடம் பேசுகிறது 
***கரை சேரா அலை அரசன் அறிமுகம் செய்து கொள்கிறார் 

இளம் ஆளுமை மெட்ராஸ் பவன் சிவகுமார் 

மூத்த பதிவர் வல்லிசிம்ஹன் .... 
கேட்டால் கிடைக்கும்னு நாங்க இயக்கமே வச்சிருக்கோம் ; நான் கேட்டும் கூட எனக்கு ரெண்டாவது சுவீட் தர மாட்டீங்களா? - இப்படி கேட்கிறாரோ  கவிஞர் கேபிள் சங்கர் 
சங்கவி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் 

ரஹீம் ஹசாலி சுய அறிமுகம்  (தம்பி ரெண்டு போட்டோ எடுத்தேன். ரெண்டிலும் கண்ணை மூடி கிட்டு தான் இருக்கீங்க) 

விழா முடிந்த பின் மேடையில்  விழா குழுவினர் 
****நன்றி - படங்கள் வீடு திரும்பல் மோகன், ரஹீம் கசாலி

23 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

////5. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தன் தமிழ் மிஸ்க்கு லவ் லெட்டர் கொடுத்து ஏரியாவையே கதி கலக்கிய தமிழ்வாசி பிரகாஷ் ( தமிழ் மிஸ் வீட்லயே தான் எந்நேரமும் குடி இருப்பாராம்)////

ஹா.. ஹா... கலாய்ச்சுட்டாராம்...

///என்னமோ டிஸ்கொத்தே கிளப்புக்கு டான்ஸ் ஆட வந்தவர் மாதிரி கசாமுசா காலேஜ் ஸ்டூடண்ட் டிரஸ் அணிந்து வந்து கலக்கி இருந்தார்.. யூத்தாம். யோவ்.. /////

அண்ணே, சென்னையில ஏதும் இண்டர்வியு அட்டென்ட் செஞ்சிங்களா? இல்ல, ட்ரெஸிங் அப்படி இருந்துச்சே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

போட்டோஸ் கொஞ்சமா போடுங்க. கம்ப்யூட்டர் ரொம்பவே தெனருது....

unknown said...

என்னால் வரமுடியவில்லையே என்னும் பொது வருத்தம் தான், இனி வரும் வருடங்களில்......

maithriim said...

தகவல் களஞ்சியமாக உள்ளது உங்கள் பதிவு, எப்பொழுதும் போலே :-)Very nice :-)

amas32

கும்மாச்சி said...

யோவ் எங்களையெல்லாம்விட்டு விழாவா? என்னய்யா இடது. இருந்தாலும் இணையத்தில் ரசித்தேன் சி.பி. நம்ப நொரண்டு கூடவும் அலைபேசியில் பேசினேன்.

விழா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

Anonymous said...

நான் அதிகம் எதிர்பார்ப்பது இரண்டாம் பாகத்தைத் தான் .
முதல் பாகத்தின் கமென்ட் பார்ட் 2 வில் காண்க !

பொ.முருகன் said...

'சென்னை'யிலேயே இருந்தும் எனக்கு தெரியாம போச்சே!! மிஸ்பண்ணிட்டேன்.

Kathiravan Rathinavel said...

ஈரோடுக்கு பக்கத்துல இருந்து சேலம்ல இருந்து வந்தாரே, கை குடுத்து பேசனாரேனு என்னை பத்தி ஒரு வார்த்தையாவது எழுதுனிங்களா?

கோவை நேரம் said...

சித்தப்பு...என்ன இது..இப்படி குப்புற தள்ளிட்டியே, நான் தான் உங்கள கவனிக்கிறேன்னு சொன்னேன்ல..

விச்சு said...

அனைத்து பதிவர்களின் போட்டோவையாவது பார்க்கும் பாக்கியம் கிடைத்ததே... நன்றி.

settaikkaran said...

தல,

பாயிண்ட்.1: கவுண்டமணி படம் போட்ட ட்விட்டர் நானில்லை. அது வேறே யாரோ? அவரு ஸ்ரேயா கூட கடலை போட்டா, என் கண்ணியத்துக்கு ஒரு குறைச்சலும் வராதுண்ணேன்! ( நான் என் சொந்த ஐ.டியிலே கடலை போடுறது வேற விஷயம்!)

பாயிண்ட்.2: மனசுக்கு வயசில்லேண்ணேன்! :-)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துக்கள் சார்... நன்றி...

anubavi raja anubavi said...

Innum neraya ethirparkiren

nellai அண்ணாச்சி said...

அருமை...

cheena (சீனா) said...

அன்பின் சிபி - நல்லதொரு நேர்முக வர்ணனை போலவே அனைத்துப் படங்களூம் விளக்கங்களும் கொடுத்து பதிவீடமை நன்று - நல்வாழ்த்துகள் சிபி - நட்புடன் சீனா

Yoga.S. said...

வணக்கம்,சி.பி. சார்!நேரலையில எல்லாரோட முகத்தையும் சரியாப் பாக்க முடியல,தேங்க்ஸ்!!!!

ananthu said...

என்ன நண்பா நிகழ்ச்சி நடைபெறும் போதே ரெடி பண்ணிட்டீங்களா ?! உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ...

ராஜி said...

அடுத்து மிக இளம் பெண் பதிவர் தூயா. கலைஞர் குடும்பமே எப்படி அரசியலிலும், ஊழலிலும் தங்கள் பங்கை சிறப்பா ஆற்றி வருகிறார்களோ அதே போல் இவங்க குடும்பமே ஒரு பிளாக் குடும்பம். தமிழ் மணத்தில் இவங்க எப்போ போஸ்ட் போட்டாலும் உடனே 7 ஓட்டுக்கள் வாங்கி 10 நிமிஷத்தில் ஹிட் ஆவதை கவனித்து நான் மிரண்டு போனேன். பின் கழுகார், குருவியார் மூலம் விசாரித்தபோது அவங்க ஃபேமிலில 7 பேர் பிளாக்கர்ஸ் என்ற தங்கமலை ரகசியம் தெரிய வந்தது.. இவரை மேடையில் கலாய்த்தோம்

>>>
தூயா உங்களை திருப்பி கலாய்ச்சதை பத்தி பதிவுல சொல்லவே இல்லை

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

சசிகலா said...

புதுசா எதாவது போட்டோஸ் தேடி வந்தேன் நல்ல ஏமாற்றம்.

கடம்பவன குயில் said...

போட்டோக்கள் பார்த்ததில் நேரில் கலந்துகொண்ட எண்ணத்தை தந்தது. நல்ல பகிர்வு. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்

Anonymous said...

சும்மா கலாய்ச்சேன் சார் , கேலியும் , கிண்டலுமான
விமர்சனப் பதிவு கலக்கல். சகோதரர் , கணவரும் வந்திருக்காரன்னும்
செக் பண்ணிக்கோங்க !

cheena (சீனா) said...

அன்பின் சிபி - பதிவர் சந்திப்பின் புகைபடங்கள் பகிர்வினிற்கும் - நல்லதொரு பதிவினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா