Saturday, August 11, 2012

PUTHIYA MUKHAM -ப்ரியாமணியின் மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFr7q5ClhKpx6Vzlt71bIfQADoeU3_pMPBWEEIG_ORm2xRdujKvO5h8sr67qsfBiu_nXu-wRmh_Zq8kWovmu6dsG7HCtED8DypObqKmQKKkIvxNymDEQrxI9Kmy0CmL3M1MGSnpDEec_Y/s400/3645720933_c10007c0e4.jpg

கேரளாவின்  சூப்பர் ஸ்டார்ல 6 வது இடத்தில் இருக்கும் பிருத்விராஜ் நம்ம ஊர் கனா கண்டேன் ஹீரோ 2009 ல நடிச்சு 130 நாட்கள் ஓடி 15 கோடி கலெக்‌ஷன் ஆகி அந்த ஆண்டின் பெஸ்ட் மசாலா என்ற பட்டம் பெற்ற படம்.. ஆல்ரெடி நம்ம தமிழ்ல ரிலீஸ் ஆன சுரேஷ் மேனன் - ரேவதி நடித்த புதிய முகத்துக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்மாளுங்க இதை தமிழ்ல தில் தில் மனதில் அப்டினு டப் பண்ணி இருக்காங்க. 


ஹீரோ பிராமணர்..  ரொம்ப சாஃப்ட் டைப்..  காலேஜ்ல படிச்சுக்கிட்டே பார்ட் டைம்ல மிருதங்கம் கத்துத்தர்றார். இவர் தன் ஃபேமிலி ஃபிரண்ட் வீட்டு பொண்ணை லவ் பண்றார். 2 சைடிலும் ஓக்கே.. 

 வில்லன் அதே காலேஜ்ல  சீனியர் ஸ்டூடண்ட்.. அவங்கப்பா ஊர்ல பெரிய கேடி. அவருக்கு சப்போர்ட்டா ஒரு போலீஸ் ஆபீசர். அந்த ஆபீசருக்கு ஒரு பொண்ணு..  அதுதான் பிரியாமணி.. பிரியாமணியை  வில்லன் லவ்வி 2 குடும்பத்துலயும் பேசி 4 வருஷம் கழிச்சு படிப்பு முடிஞ்ச பின் மேரேஜ்னு பேசியாச்சு.. பிரியாமணிக்கு வில்லன் மேல லவ் எல்லாம் இல்லை, ஆனா வீட்ல ஓக்கே சொன்னதால்  கடனுக்கு ஓக்கே சொல்றார்..


http://cinespot.net/gallery/d/25443-1/Puthiya+Mukham+Malayalam+Movie+_10_.JPG


வில்லன் ஹீரோயினை டேட்டிங்க் கூப்பிடறார்.. அவ போகலை. 4 வருஷம் கழிச்சுத்தான் எல்லாம்னு சொல்லிடறா.. ஆனா ஹீரோ கூட பைக்ல சுத்துறா.. யாராவது இதை ஜீரணீச்சுக்குவாங்களா? அன்னா ஹசாராவே அரசியல்வாதி ஆகற கால கட்டம் இது.. உடனே வில்லன் செம காண்ட் ஆகி அண்ணன் அழகிரி மாதிரி ஆள்படை பலத்தோட ஹீரோவை போட்டு நொங்கு நொங்குனு நொங்கிடறார்.. 


 சேது விக்ரம் மாதிரி ஹீரோ மனநலக்காப்பகத்துல ட்ரீட்மெண்ட் எடுத்து வர்றார்..  ஆல்ரெடி நிச்சயம் செஞ்ச தன் லவ்வர் கம் ஃபேமிலி ஃபிரண்ட் வீட்ல மேரேஜை கேன்சல் பண்ணீடறாங்க.. மாப்ளை மெண்ட்டல்னு அதுக்கு காரணம் சொல்றாங்க.. உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெடு என்ற தமிழனின் உயர்ந்த கொள்கைப்படி ஹீரோ வில்லனுக்கு நிச்சயம் ஆன பிரியாமணியை  வில்லன் கண் முன்னால கையை பிடிச்சு ( நல்ல வேளை கையை பிடிச்சாரு ) சவால் விடறார்.. என் ஆளை மேரேஜ் பண்ணிக்க முடியாதபடி நீ எப்படி பழி வாங்கினியோ அதே மாதிரி உன் ஆளை நீ மேரேஜ் பண்ணிக்க முடியாதபடி நான் பழி வாங்கறேன்..  காலேஜ் மொத்தமும் பார்த்துட்டு இருக்கு.. ஹீரோயின் கெக்கே பிக்கேன்னு சிரிக்குது.. எவனா இருந்தா எனக்கென்ன? எவனாவது தாலி கட்னா சரிங்கறது அவங்க பாலிஸி போல.. 

 இந்த கேவலமான சவால்ல ஹீரோ எப்படி ஜெயிக்கிறார்ங்கறது இந்த டப்பா படத்தோட கதை.. இந்தப்படம் அங்கே ஹிட் ஆகி இருக்குன்னா அங்கே எந்த அளவு கதைப்பஞ்சம் இருந்திருக்கனும்?http://www.zonkerala.com/movies/gallery/puthiya-mukham/meera-nandan-and-prithviraj-49.jpg

கல்லூரி வாசல் படத்தை லைட்டா உல்டா பண்ணி இருக்காங்க.. அவ்ளவ் தான்..ஹீரோ பிருத்விராஜ் மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி ரேஞ்ச்க்கு பில்டப் கொடுத்திருக்காங்க..  அவர் படத்துல 2 சீன்ல மட்டும் தான் அதை வாசிக்கற மாதிரி பாவ்லா காட்றார்..  மைதா மாவு என்று வில்லன் அவரை கிண்டல் செய்வது சரி  என்றே தோணுது.. கனா கண்டேன் படத்தில்  கலக்கலான வில்லனாக பட்டாசு கிளப்பியவரா இப்படி? சோ சேடு././ இடைவேளை வரும்போது அவர் திடீர் பாட்ஷா ஆகி 45 பேரை ஜஸ்ட் லைக் தட் தூக்கி வீசி துவம்சம் செய்வதெல்லாம் ஓவர்..


ஹீரோயின்  2 பேரு பிரியாமணி மீரா நந்தன்.. பிரியாமணி படம் பூரா பொட்டே வைக்காம என்னமோ இலவசமா ரேஷன் கடைல அரிசி போடறப்போ பணியாள் ஒரு அலட்சியம் காட்டுவானே அப்படி காமா சோமான்னு வந்துட்டுப்போறாங்க.. போனா போகுதுன்னு ஒரு டூயட் இருக்கு.. சொல்லிக்கற மாதிரி ஜொள்ளிக்கற மாதிரியோ எதுவும் இல்லை..


 மீரா நந்தன்  மொத்தமே 13 காட்சிகளில் தான் வர்றார்.. வர்ற சீன்கள் எல்லாம் ஆம்பளையையே  பார்க்காத ஆள் மாதிரி ஹீரோ மேல விழுந்து பாய்கிறார்.. ம்ஹூம்.. கேரக்டரைசேஷன் சரி இல்லை..


அன்பு பட ஹீரோதான் இதுல வில்லன்.. வந்தவரை ஓக்கே..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtqwAElKp0Na5i99FSBsz8FhUFeb7IBK9w_BuqFD_EDNvkffpQDVfi97L1Hb_pvB4R1lUaTR2QT3q6oj6tQA172h5nQP7XV4fhC0Tcv2KpOAxRO6ji6qBo7GW3-rFeuiIrfXjucc8kQTA/s1600/priyamani_hot_saree_stills_pics_01.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்1.  உன் தம்பி காலேஜ்ல இருந்த நாளை விட லாக்கப்ல இருந்த நாள் தான் அதிகம்2. டீக்கடையில் - ஹாய் கேர்ள்ஸ்.. உங்களுக்கு பால் வந்தாச்சா?


 நோ.. நாங்க டீ சொல்லி இருக்கோம்.. ( அடங்கோ)3. அந்தப்பொண்ணுக்கு நான் தான் லோக்கல் கார்டியன் மாதிரி..நீ லோக்கல்னு  அவளுக்கு தெரியுமா?4.  நீங்க மிருதங்கம் வாசிக்கறதை நான் நேர்ல பார்க்கனும்./. ( நல்ல வேளை, ஹீரோ அதுக்கு பதிலுக்கு நீ நாதஸ்வரம் வாசிச்சு நான் பார்க்கனும்னு சொல்லலை.. அடேய் அடேய் )


5. காலேஜ் பொண்ணுங்க எல்லாருக்கும் உங்க மேல தான் கண்ணு.. கண்ணடி பட்டா உடம்பு தாங்காது..6. இந்த வீட்டுல மேரேஜ் பண்ணிக்கப்போறது யாரு?எங்க 2 பேருக்கும் ஆகிடுச்சு.. மிச்சம் இருக்கறது எங்க பொண்ணு நீ தான்..


 அப்புறம் ஏன் என்னைக்கேட்காம இந்த முடிவு எடுக்கறீங்க?7. தோக்கறது சுருண்டு விழ அல்ல, நிமிர்ந்து எழ..


8. நம்ம 2 பேர்ல யாரோ ஒருத்தர் தான் உயிரோட இருப்பாங்க.. அது நிச்சயம் நீயா இருக்காது.. ( பஞ்ச் டயலாக்காம்.. )9. மண்ணையும், பொண்ணையும் வலுக்கட்டாயமா  வாங்கக்கூடாது. விருப்பப்பட்டு சந்தோஷமா வரனும்../10. தேவை இல்லாத விஷயங்கள் மனசுக்குள்ளே  கஷ்டப்படுத்தும்.. அதனாலதான் உன் கிட்டே அந்த மேட்டரை நாங்க சொல்லலை..


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/06/Priyamani-Hot-pics-19.jpg இயக்குநரிடம் சில கேள்விகள்1. ஹீரோயின் நாய் சேகரோட பொண்ணு போல.. என் நினைவு உனக்கு எப்போதும் இருக்கட்டும்னு ஹீரோ கையை பிடிச்சு நறுக்னு கடிச்சு வைக்கறா.. நல்ல வேளை கையை கடிக்குது.. அந்த பொண்ணு கேனமா? இல்லை அதி தீவிரக்காதலா? கேரக்டரைசேஷன் சரி இல்லை..  அப்படி அட்டாச்மெண்ட்டா இருக்கற பொண்ணு  திடீர்னு  பெற்றோர் வந்து “ மாப்ளை மனநிலை சரி இல்லை, வேணாம்”னு சொன்னதும் பெருசா ஏதும் எதிர்ப்பு காட்டலையே?2. இன்னொரு  ஹீரோயின் பிரியாமணி  வீட்ல பார்த்த மாப்ளைக்கு ஓக்கே சொல்லிடுச்சு.. அவன் கூட வெளீல போக மாட்டாளாம்.. ஆனா ஹீரோ பைக்ல உக்காந்து போவாளாம்.. என்ன கேனத்தனமான லாஜிக்? இது?


3. வில்லன் ரவுடித்தனம் பண்றான், அதனால அவனை பிடிக்கலைனு ஹீரோயின் க்ளைமாக்ஸ்க்கு 20 நிமிஷம் முன்னால சொல்லுது.. ஆனா அந்த வில்லன் பண்ற அதே ரவுடித்தனத்தை ஹீரோ பண்றப்ப  ஒண்ணும் சொல்லலை.. என்னய்யா இது?


4. ஹீரோ என்ன தான் பெரிய புடுங்கி ஆக மாறி இருக்கட்டும்.. ஒரு ஃபைட் சீன்ல 7 பேர் வரிசையா வர்றாங்க.. இவர் ஒரே ஒரு ஆள் மேல காலை வெச்சு எத்தறார்,... உடனே 7 பெரும் அந்தரத்துல 12 தடவை சுத்தி விழறாங்க.காமரா நல்லா அதை படம் பிடிச்சுருக்கு.. படு காமெடி சீன் அது..


5. வில்லன் பிரியாமணி பின்னால சுத்துனா அதுல ஒரு நியாயம் இருக்கு.. ஆனா அவன் எப்போ பாரு ஹீரோ போற இடத்துக்கு எல்லாம் போய் ஹீரோவை  ஃபாலோ பண்றான்.. அவன் என்ன ஹோமோவா?6. ஹீரோயின் படிச்சவ.. வில்லனை பெற்றோர் பார்த்து பேசி முடிக்கும்போதே அவன் ஒரு மொள்ளமாரின்னு தெரியும்.. அப்போ எதுவும் சொல்லாம க்ளைமாக்ஸ் டைம்ல இப்போதான் எனக்கு அவன் வில்லன்னு தெரியும் வேணாம்கறாளே?7. இந்தக்காலத்துல பட்டா போடாத நிலத்துலயே அவனவன் வேலி கட்டி சொந்தம் கொண்டாடுறான். ஆனா 2 தரப்பு வீட்டிலும் பேசி முடிவான பின்  மாப்ளை கூப்பிட்டு அவன் கூட பொண்ணு போகாம இருக்கறதுக்கு வலுவான காரணம் சொல்லப்படலை... ஆனா ஹீரோ பின்னால கூட்டணீக்கட்சி மாதிரி ஒட்டி உறவாடறார்சி பி கமெண்ட் - இந்த குப்பை படத்தை யாரும் பார்த்துடாதீங்க.. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் பார்த்தேன்https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY_TSqDEs6fIyZVWWBe2qx_15Dbx9UYAXx31kfQauFb90-JzfGH6dnxl5ER5-385OUUyhpMoDZU6nuI7t6UvZz-eDcwpRG8cVoc-pVXKPKqBmWPRquBI_PaUz-cGgYJyoh57fmbZwXl0o/s1600/priyamani-latest-spicy-hot-sexy-stills-pictures-photo-gallery-08.jpg
3 comments:

Unknown said...

இந்த படம் நான் சுமார் 2 வருடங்கள் முன்பு எர்னாகுளம் SHENOY'S THEATRE ல் கண்டேன்... மொக்கையான படம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வர வர உங்க கடமை உணர்ச்சிக்கு அளவில்லாம போய்க்கிட்டிருக்கு..

விஸ்வநாத் said...

அருமையா இருக்கு. நா கடைசி படத்த சொன்னே;